|
எருமைகள் மற்றும் பசு மாடுகளில் ஈனியல் கோளாறுகள்
சினைப்பருவத்திற்கு வராமல் இருத்தல்
நோயின் தன்மை |
|
- சினைப்பருவத்திற்கு வராமல் இருப்பது அல்லது சினைப்பருவமே ஏற்படாமல் இருப்பது
|
|
நோய்க்கான காரணம் |
- மாடுகள் சினைப்பருவத்தில் இருப்பதைக் கண்டறிய முடியாமை அல்லது சினைப்பருவ அறிகுறிகளைக் கண்டுபிடிக்கமுடியாமை
- குறைந்தபட்ச சினைப்பருவ அறிகுறிகளை மாடுகள் வெளிப்படுத்துதல் அல்லது ஊமை சினைப்பருவம்
- குறைந்த அளவு தீவனம் அளித்தல், எரிசக்தி மற்றும் புரதம் குறைவான தீவனமளித்தல், பாஸ்பரஸ், கோபால்ட், இரும்புச்சத்து,தாமிரம், அயோடின், மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் ஏ சத்துகள் பற்றாக்குறை
- மாடுகள் சினையுற்றிருப்பதை கண்டறியாமை
- மாடுகளின் சினை முட்டைப்பையில் நிலையான கார்பஸ் லுயூட்டியம் இருத்தல், கர்ப்பப்பையில் சீழ், மம்மிபைட் கரு, கரு அழிந்துவிடுதல், கோழைகள் கர்ப்பப்பையில் கட்டியிருத்தல், தண்ணீர் போன்ற திரவம் கர்ப்பப் பையில் கட்டியிருத்தல், போதுமான அளவு ஹார்மோன் இல்லாமை
- வயதான நிலை, நீண்ட நாட்களாக காணப்படும் நோய்களான காசநோய், ஜோனிஸ் நோய், போன்றவை.பருவநிலை, மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளின் தாக்கம், அதிகப்படியாக பால் கறத்தல் போன்றவையும் சினைப்பருவத்திற்கு மாடுகள் வராமல் இருப்பதற்கு உதவும் காரணிகளாகும்
- இருண்ட, முற்றிலும் அடைக்கப்பட்ட கொட்டகைகள், போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களுடன் ஊட்டச்சத்து குறைபாடும் சினைப்பருவத்திற்கு மாடுகள் வராமல் இருப்பதற்கு உதவும் இதர காரணங்களாகும்
|
|
மருத்துவ அறிகுறிகள் |
- சினைப் பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருத்தல்
|
|
நோய்த்தடுப்பு முறைகள் |
|
- சினைப்பருவ அறிகுறிகளை பார்க்காமல் இருப்பது மேலாண்மை முறையில் ஏற்படும் குறைபாடுகளில் ஒன்றாகும். இது தவிர மாடுகள் சினைப்பருவத்தில் குறைந்த நேரமே இருப்பதும் சினைப்பருவத்தைக் கண்டறியாமல் இருக்கும் காரணமாகும். கறவை மாடுகளை தினமும் மூன்று முறை சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனவா என்பதைக் கவனிக்கவேண்டும்
- சினைப்பருவத்தைக் கண்டறிய சுவர் அட்டைகள், இனப்பெருக்கச் சக்கரம், பண்ணை கவனிப்பு முறைகள், மாடுகளின் தனிப் பதிவேடுகள் போன்றவற்றை உபயோகிக்கலாம்
- மாடுகள், குறிப்பாக எருமைகள் சினைப்பருவத்தில் இருப்பதைக் கண்டறிய, இனப்பெருக்கம் செய்ய முடியாத காளைகளை உபயோகிக்கலாம்
- மாடுகள் சினைப்பருவத்தில் இருப்பதைக் கண்டறிய கொட்டகையில் போதுமான அளவு வெளிச்சம் இருக்குமாறுபார்த்துக்கொள்ளவேண்டும்
- ஊமை சினைப் பருவம், அல்லது குறைந்த சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும் நிலை போன்றவை எருமைகளில் பொதுவாக காணப்படும். ஆனால் கர்ப்பப்பை மற்றும் இதர இனப்பெருக்க மண்டல உறுப்புகளில் சினைப்பருவத்தின் மாற்றங்கள் நிகழும், ஆனால் சினைப்பருவ அறிகுறிகள் மட்டும் வெளிப்படாது அல்லது கண்டுபிடிக்கமுடியாது.இதற்கு தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு பரிசோதனை செய்து எருமைகள் சினைப்பருவத்தில் இருப்பதைக் கண்டறியலாம்
- மக்காச்சோளம், சோளம், கம்பு போன்ற தானியங்கள் கொண்ட அடர்தீவனத்தை மாடுகளுக்கு எப்போதும் அளிப்பதை விட அதிகப்படியாக அளிக்கவேண்டும். மேலும் உலர் தீவனத்துடன் பசுந்தீவனத்தையும் அளிக்கவேண்டும்
- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தாது உப்புக்கலவையும் மாடுகளுக்கு அளிக்கலாம்
- இனப்பெருக்கம் செய்த 45-60 நாட்கள் கழித்து மாடுகள் சினையாக இருக்கின்றனவா என்பதை தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கவேண்டும்
- கர்ப்பப்பை நோய்கள் மற்றும் ஹார்மோன்களின் தூண்டுதல் போன்றவற்றிற்கு தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்
|
|
|
மாடுகள் சினை பிடிக்காமல் இருத்தல்
நோயின் தன்மை |
|
- மூன்று முறை தொடர்ந்து செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டும் சினைபிடிக்காத மாடுகள் சினைபிடிக்காத மாடுகள் என்று அறியப்படும்
- பல்வேறு காரணங்களால் இந்த நிலை ஏற்படுகிறது
|
|
நோய்க்கான காரணங்கள் |
- லுயூட்டினைசிங் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதாலும், கருமுட்டைப்பையிலிருந்து கருமுட்டைகள் சரியான சமயத்தில் வெளிவராமல் இருந்தாலோ அல்லது கருமுட்டைகளே வெளிவராமல் இருந்தாலோ மாடுகள் சினை பிடிக்காது
- கருமுட்டையில் கோளாறுகள் இருந்தாலோ அல்லது நாள்பட்ட கரு முட்டையாக இருந்தலோ மாடுகள் சினை பிடிக்காது
- உயிரோடிருக்கும் கரு முட்டையை விந்து கருவுறச் செய்யமுடியாமை
- கரு முட்டையும் விந்துவும் ஒன்றையொன்று அணுக முடியாமல் இருத்தல்
- டிரைக்கோமோனாஸ் ஃபீட்டஸ்,கேம்பைளோபாக்டர் ஃபீட்டஸ், புருசெல்லா அபார்ட்டஸ், ஐ பி ஆர் – ஐ பி வி போன்ற நோய்க்கிருமிகள் மற்றும் நோய்களால் ஏற்படும் இளம் கருச்சிதைவு
- செலினீயம் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்குறைபாட்டினால் ஏற்படும் இளம் கருச்சிதைவு
- மாடுகள் இனப்பெருக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் சுற்றுப்புறக் காரணிகளால் ஏற்படும் அயற்சியால் மாடுகளில் ஏற்படும் இளம் கருச்சிதைவு
|
|
மருத்துவ அறிகுறிகள் |
- மூன்று முறை தொடர்ந்து செயற்கை முறை கருவூட்டல் அல்லது சினை ஊசி போடப்பட்டும் மாடுகளில் சினைப்பிடிக்காமை
|
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் |
|
- மாடுகளுக்குப் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் அளிக்கவேண்டும்
- மாடுகளுக்கு தாது உப்புக்கலவையை அளிக்கவேண்டும்
- மாடுகள் சினைப்பருவத்திற்கு வரும்போது 12 -24 மணி நேரத்தில் இரண்டு முறை சினை ஊசி போடவேண்டும்
- மாடுகளின் கர்ப்பப்பையில் ஏதேனும் கோளாறுகள் இருப்பின் சினை ஊசி போடுவதைத் தவிர்த்து அவற்றுக்கு கர்ப்பப்பையில் மருந்துகளைச் செலுத்தவேண்டும்
- நோயுற்றிருக்கும் காளை மாடுகளை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது
- நோயுற்றிருக்கும் காளை மாடுகளை இனப்பெருக்கத்திற்கு உபயோகப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதால் கன்று வீச்சினை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளின் தாக்குதலைக் குறைக்கலாம்
|
|
|
கர்ப்பப்பையின் உட்சவ்வு அழற்சி
நோயின் தன்மை |
|
- கன்று ஈன்ற பிறகு மாடுகளின் கர்ப்பப்பையின் உட்சவ்வில் நீண்ட நாட்களாக ஏற்படும் பாக்டீரியாக்களின் தாக்கத்தால், அதில் ஏற்படும் அழற்சியே கர்ப்பப்பையின் உட்சவ்வு அழற்சியாகும்
|
|
நோய்க்கான காரணங்கள் |
- மாடுகள் காளைகளுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்யும்போதும், சினை ஊசி போடும் போதும், கன்று ஈனும் போதும், கன்று ஈன்ற பிறகும், பாக்டீரியாக்கள் கர்ப்பப்பையின் உட்சென்று அழற்சியை ஏற்படுத்துகின்றன
- பெரும்பாலான மாடுகள் கன்று ஈன்றவுடன் கர்ப்பப்பையில் பாக்டீரியாக்களின் தாக்குதலால் பாதிக்கப்படுகின்றன
- கர்ப்பப்பையின் உட்சவ்வில் அழற்சி ஏற்பட்ட மாடுகளில், அழற்சி ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் கர்ப்பப்பையிலிருந்து வெளியேற்றப்படாமல், கர்ப்பப்பையின் உட்புறதசைகளையும் பாதித்து அழற்சியை ஏற்படுத்துகின்றன
- கன்று ஈன்றவுடன் நஞ்சுகொடி முறையாக வெளியேற்றப்படாமை, கன்று வீசுதல், கன்று ஈனுவது செயற்கையாகத் தூண்டப்படுதல்,ஒன்றுக்கும் மேற்பட்ட கன்றுகளை ஈனுதல், கன்று ஈனுவதில் ஏற்படும் சிரமங்கள், அதிகப்படியான பாக்டீரியாக்கள் கர்ப்பப்பையில் இருத்தல் போன்ற இதர காரணங்களும் கர்ப்பப்பையில் அழற்சி ஏற்படுத்தும் இதர காரணிகளாகும்
|
|
மருத்துவ அறிகுறிகள் |
|
- மாடுகளின் பிறப்புறுப்பிலிருந்து வெள்ளை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் சீழ் போன்ற திரவம் வடிதல்
- இவ்வாறு வெளி வரும் திரவத்தின் அளவு, மாடுகள் சினைப்பருவத்திலிருக்கும் போது கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி திறந்திருப்பதால் அதிகமாகவும் மற்ற சமயங்களில் குறைவாகவும் இருக்கும்
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகள் மிகவும் அரிதாகவே பொதுவான நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும். சில மாடுகளில் மட்டும் பால் உற்பத்தி குறைந்து, தீவனம் எடுப்பதும் குறைவாகும்
- மாடுகளின் கர்ப்பப்பையினை பரிசோதிக்கும் போது கர்ப்பப்பை மாவு போல தொடுவதற்கு மிருதுவாக இருப்பது தெரியும்
|
நோயினைக் கட்டுப்படுத்துதல் |
|
- பல்வேறு விதமான எதிர் உயிரி மருந்துகள், ஹார்மோன்கள், நோய்க்கிருமியினை அழிக்கும் மருந்துவகள், நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டக்கூடிய மருந்துகள் போன்றவை கர்ப்பப்பையின் உட்சவ்வு அழற்சிக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படுகின்றன
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்குத் தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கவேண்டும்
|
|
|
கன்று ஈனுவதில் ஏற்படும் சிரமம்
நோயின் தன்மை |
|
- கன்று ஈனும் முதல் மற்றும் இரண்டாம் நிலைகள் நீட்டிக்கப்பட்டு மாடுகள் கன்று ஈனுவதற்கு சிரமப்படுதல் அல்லது தாய் மாட்டால் புற உதவியின்றி கன்று ஈன முடியாமல் போதல்
- கன்று ஈனுவதற்கு மாடுகள் சிரமப்படுதலே கன்று ஈனுவதில்ஏற்படும் சிரமம் எனப்படும்
- கால்நடைகளின் வகைகள் மற்றும் இனங்களைப் பொருத்து அவற்றில் குட்டி ஈனுவதில் சிரமம் ஏற்படுவது வேறுபடும்
- மாட்டினங்கள் இந்த நிலையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன
- முதல் முறை கன்று ஈனும் மாடுகள், பல முறை கன்று ஈன்ற மாடுகளை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன
- அதிக எடையுள்ள காளைக் கன்றுகள், இரட்டைக் கன்றுகள், நிறைய குட்டி போடும் விலங்கினங்களில் குறைந்த அளவு குட்டிகள் உருவாதல், போன்றவை கால்நடைகள் குட்டி ஈனுவதில் சிரமங்களை ஏற்படுத்துகின்றன
- சினையுற்றிருக்கும் மாடுகளில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே கன்று ஈன்றால் அவற்றின் கர்ப்பப்பையின் சுருக்கம் பாதிக்கப்படுவதாலும்,கர்ப்பப்பையில் கன்றுகளி்ன் அமைப்பு முறையற்று இருப்பதாலும் கன்று ஈனுவதில் சிரமம் ஏற்படுகிறது
- நீண்ட சினைப் பருவத்தின் காரணமாக கருவிலிருக்கும் கன்றுகளின் அதிகப்படியான வளர்ச்சி, ஓரே இடத்தில் மாடுகளை கட்டி பராமரித்தல்,அதிக தீவனமளித்தல், குறைந்த தீவனம் அளித்தல், மிகக் குறைந்த வயதிலேயே இனப்பெருக்கம் செய்தல் போன்ற பல காரணங்களாலும் கன்று ஈனுவதில் சிரமம் ஏற்படுகிறது
|
|
நோய்க்கான காரணங்கள் |
- இரட்டைக் கன்று உருவாதல், நஞ்சுகொடியில் அதிகப்படியான தண்ணீர் தேங்குதல், கருவில் இருக்கும் கன்றுகளின் தோலுக்கடியில் நீர்கோர்த்து உப்பிக் காணப்படுதல்
- வளரும் கிடேரிகளுக்கு முறையற்ற தீவனமளிப்பதும், அவற்றின் உடல் எடை அதிகரிக்காமல், இடுப்பெலும்புகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது
- சிறிய இடுப்பெலும்புகள், முறையாக வளர்ச்சியடையாகத இனப்பெருக்க மண்டலம், கன்று ஈனும் போது கன்றுகளை வெளித்தள்ள போதுமான அளவு சக்தி இல்லாமை
- குறைந்த அளவு வளர்ச்சியடைந்த,குறைந்த அளவு தீவனமளிக்கப்பட்டு, நோய்த்தாக்குதலுக்குள்ளான அல்லது ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி அடையாத இனப்பெருக்கவயதடைந்த கிடேரிகள்
- அளவுக்கு அதிகமான தீவனமளித்து உடலில் அதிகப்படியான கொழுப்பு குறிப்பாக இடுப்புப்பகுதியில் அதிகப்படியாகக் கொழுப்பு சேர்ந்திருப்பதால் மாடுகளில், குறிப்பாக கிடேரிகளில் கன்று ஈனுவதில் சிரமம் ஏற்படுகிறது
- அதிகப்படியாக தீவனமளிப்பதால் கருவிலிருக்கும் கன்றுகளின் உடல் எடை அதிகரித்து கன்று ஈனுவதில் சிரமம் ஏற்படுகிறது
- உடற்பயிற்சியின்றி சினையுற்ற மாடுகளை ஒரே இடத்தில் கட்டி பராமரிப்பதால், கர்ப்பப்பை முறுக்கம் ஏற்பட்டு,கர்ப்பப்பை சுருங்கி விரிவது பாதிக்கப்படுகிறது
- சினையுற்றிருக்கும் மாடுகளின் கர்ப்பப்பையில் ஏற்படும் நோய்க்கிருமிகளின் தொற்று காரணமாகவும் கன்று ஈனுவதில் சிரமம் ஏற்படுகிறது
- கன்று ஈனும் போது கன்றினை வெளித்தள்ளுவதில் சிரமம், இனப்பெருக்க மண்டலக் குழாய் சிறிதாக இருத்தல், கருவிலிருக்கும் கன்றின் அளவு பெரியதாக இருத்தல், அல்லது கர்ப்பப்பையில் கன்றுர இருக்கும் அமைப்பு மாறியிருத்தல் போன்ற காரணங்களாலும் கன்று ஈனுவதில் சிரமம் ஏற்படுகிறது
|
|
மருத்துவ அறிகுறிகள் |
|
- Difficulty in giving birth.
- Calf limbs or face protrude from the vulva.
- Animal attempts strong forces and unable delivers calf
|
நோயினைக் கட்டுப்படுத்துதல் |
|
- தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டும்
- கிடேரிகளை அவற்றி்ன் வயதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அவை போதுமானஅளவு உடல் எடை அடைந்தால் மட்டுமே இனப்பெருக்கத்திற்கு அனுமதிக்கவேண்டும்
- சினை மாடுகள் கன்று ஈனும் போது அவற்றை கூர்ந்து கவனிக்கவேண்டும். அப்போது தான் கன்று ஈனுவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் தகுந்த உதவிகளை அளிக்கமுடியும்
- கர்ப்பப்பை நோய் மற்றும் கன்று இறப்பினை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் இனப்பெருக்கத்தின் போது பசு மற்றும்காளை மாடுகள் நோய்த்தொற்று இல்லாமலும் பார்த்துக் கொள்ளவேண்டும்
|
|
|
|
கர்ப்பப்பை முழுவதும் வெளித்தள்ளுதல்
நோயின் தன்மை |
|
- This is expulsion of uterine mass through the vagina.
- It is a common complication of third stage of labour.
- It is more common in pluriparous than primiparous animals.
- This condition is most commonly seen in cow than other animals.
|
|
நோய்க்கான காரணங்கள் |
- சுருங்கும் தன்மையற்ற கர்ப்பப்பை
- கன்று ஈன்றவுடனோ அல்லது கன்று ஈனும்போதோ மாடுகளில் ஏற்படும் அதிகப்படியாக முக்கும் தன்மை
- கர்ப்பப்பையின் முனையில் நஞ்சுகொடி தங்குதல்
- குளிர்காலத்தில், ஒரே இடத்தில் கட்டியிருக்கும் மாடுகளில் இந்நிலை பொதுவாக ஏற்படுகிறது
- கன்று ஈனும்போது அதிகப்படியான அழுத்தத்தில் கன்றினை மாடுகள் வெளித்தள்ளுதல்
- மாடுகளின் வயிற்றுப்பகுதி மிகப்பெரியதாக இருத்தல் அல்லது அவற்றின் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பின் காரணமாக ஏற்படும் அதிகப்படியான அழுத்தம்
- வயிற்றின் உட்பகுதியில் ஏற்படும் அழுத்தம்
- கர்ப்பப்பையின் மெதுவான சுருங்கும் நிலை
- குறைந்த அளவு ஊட்டச்சத்து அளிக்கப்பட்ட, குறைந்த வளர்ச்சியுடைய, மெலிந்த கிடேரிகளில் இந்நிலை பொதுவாக ஏற்படுகிறது
- சினைக்காலத்தின் கடைசி 2-3 மாதங்களில் நஞ்சு கொடியால் சுரக்கப்படும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜெனிக் ஹார்மோன்
|
|
மருத்துவ அறிகுறிகள் |
|
- மாடுகள் படுக்கும் போது மாடுகளின் பிறப்புறுப்பின் உட்சவ்வு துருத்திக் கொண்டு இருத்தல்
- மாடுகள் நின்று கொண்டிருக்கும்போது, வெளித்தள்ளப்பட்ட கர்ப்பப்பை மாடுகளின் கால் முட்டி வரை தொங்கிக் கொண்டு இருத்தல்
- கர்ப்பப்பையில் ஒட்டியிருக்கும் நஞ்சுகொடி, மற்றும் கர்ப்பப்பையின் உட்சவ்வு வெளியே தெரிதல்
- இவ்வாறு தொங்கிக்கொண்டிருக்கும் கர்ப்பப்பையின் வெளித்தள்ளப்பட்ட பகுதியில் தூசுகள், இரத்தத்திட்டுகள், சாணம், வைக்கோல் போன்றவை ஒட்டிக்கொண்டிருக்கும்
- கர்ப்பப்பை வெளியே தள்ளப்பட்டு 4-6 மணி நேரம் ஆகியிருந்தால் கர்ப்பப்பை வீங்கி, அளவில் பெருத்துக் காணப்படுதல்
- கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி பிறப்புறுப்பின் அருகில் இருத்தல்
- கன்று இல்லாத கர்பப்பையின் பகுதி வயிற்றின் உள்ளே இருத்தல்
- மாடுகள் அயர்ந்து, வலியுடன், மூச்சு விடும் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுதல்
- கர்ப்பப்பையில் செல்லும் இரத்தக்குழாய்கள் கிழிந்து அதிலிருந்து இரத்தம் வெளியேறுவதாலும், குடல் பகுதி பாதிக்கப்படுவதாலும் இந்நிலையால் பாதிக்கப்பட்ட மாடுகளில் இறப்பு ஏற்படுகிறது
- கண்களின் உட்சவ்வு மற்றும் வாய் உட்சவ்வு வெளிறிக் காணப்படுதல், மூச்சு விடும் போது வலியால் ஏற்படும் சத்தம், அதிக சோர்வாக காணப்படுதல், எழ முடியாமை போன்றவை கர்ப்பப்பை வெளித்தள்ளுவதன் அபாயகரமான அறிகுறிகளாகும்
|
|
பரிந்துரைக்கப்பட்ட முதலுதவி |
|
- கர்ப்பப்பை வெளித்தள்ளப்பட்ட மாடுகள் மற்ற மாடுகளிலிருந்து தனியாக பிரித்து பராமரிக்கப்பட வேண்டும்
- வெளித்தள்ளப்பட்ட கர்ப்பப்பையின் பகுதிகள் இதர பொருட்களால் அசுத்தமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
- சிகிச்சை அளிக்கும் வரை வெளித்தள்ளப்பட்ட கர்ப்பப்பை பகுதியினை சுத்தமான ஈரத்துணியால் சுற்றி வைக்கவேண்டும்
- வெளித்தள்ளப்பட்ட கர்ப்பப்பையினை உள்ளே தள்ளி, பிறப்புறுப்பினை தையல் போட்டு சிகிச்சை அளிக்கவேண்டியிருப்பதால், சிகிச்சை அளிப்பதற்கு தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்
|
|
|
மாடுகளின் கர்ப்ப்பை முறுக்கேறுதல்
நோயின் தன்மை |
|
- சினையுற்றிருக்கும் மாடுகளின் கர்ப்பப்பை அதன் நீள வாக்கில் முறுக்கேறிக் கொள்ளுவது கர்ப்பப்ப முறுக்கேறுதலாகும். பசு மாடு மற்றும் எருமைகளில் கர்ப்பப்பை முறுக்கேறுதல் அதிகம் ஏற்படுகிறது
- அதிக முறை கன்று ஈன்ற மாடுகள் முதல் முறை கன்று ஈனும் மாடுகளை விட இந்நிலையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன
|
|
நோய்க்கான காரணங்கள் |
- மாடுகள் அடிக்கடி படுத்த எழுந்திருப்பது இந்நிலை ஏற்பட ஒரு முக்கிய காரணமாகும்
- மாடுகள் சினையுற்றிருக்கும் போது கருவில் இருக்கும் கன்றினைச் சுற்றியிருக்கும் திரவம் குறைவாக இருத்தல், மாடுகள் திடீரெனக் கீழே விழுந்து புரளுதல், போன்றவையும் கர்ப்பப்பை முறுக்கேறுவதற்கான காரணங்களாகும்
- சினையுற்றிருக்கும் மாடுகளை ஒரே இடத்தில் கட்டிப் பராமரிப்பதும் கர்ப்பப்பை முறுக்கேறுவதற்கான மற்றொரு காரணமாகும்
- சினையுற்றிருக்கும் மாடுகளின் கர்ப்பப்பையின் சுருங்கி விரியும் திறன் பாதிக்கப்பட்டு, நஞ்சு கொடியில் குறைந்த அளவு நீர் இருப்பது, கர்ப்ப பை சுவர்கள் விறைப்பின்றி இருப்பது, கர்ப்பப்பையின் கன்றினைத் தாங்காத மற்றொரு பகுதி சிறியதாக இருப்பது, விறைப்பின்றி இருக்கும் கர்ப்பப்பையின் மத்திய தசைப்பகுதி போன்றவையும் கர்ப்பப்பை முறுக்கேறுவதற்கான இதர காரணங்களாகும்
- மாடுகளின் பெரிய அடி வயிறுப்பகுதி குறிப்பாக எருமை மாடுகளில் இருப்பதும் கர்ப்பப்பை முறுக்கேறுவதற்கான மற்றொரு காரணமாகும்
- கொம்புகளால் சினை மாடுகள் தள்ளப்படுதல், மற்ற மாடுகளால் தள்ளப்படுதல், மாடுகள் மேயும்போது ஏற்படும் வேகமான எதிர்பாராத அசைவு, வயிறு உப்பியதால் மாடுகள் உருளுதல்,வயிற்று வலி போன்றவையும் கர்ப்பப்பை முறுக்கேறுவதற்கான இதர காரணங்களாகும்
- சினை மாடுகளை ஓரிடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு ரயில் மூலமாகவோ அல்லது வாகனங்கள் மூலமாக சாலை வழியாக எடுத்துச்செல்லுவதால் ஏற்படும் அதிகப்படியான வலிமையான முறையற்ற இயக்கங்கள் போன்றவையும் மாடுகளில் கர்ப்பப்பை முறுக்கேறுவதற்கான இதர காரணங்களாகும்
|
|
மருத்துவ அறிகுறிகள் |
- அடிவயிற்றில் ஏற்படும் வலி, தீவனம் எடுக்காமல் இருத்தல், மலச்சிக்கல், அசை போடாமல் இருத்தல், அமைதியின்றி இருத்தல்,பற்களைக் கடித்தல், வாலை முறுக்கிக்கொள்ளுதல் போன்றவை கர்ப்பப்பை முறுக்கிக் கொள்வதன் அறிகுறிகளாகும்
- பிறப்புறுப்பின் மேல் இதழ் இழுத்துக்கொண்டு இருத்தல்
- பால் மடி அடிவயிற்றில் ஒட்டியிருத்தல்
- பிறப்புறுப்பில் வீக்கம் காணப்படுதல்
|
நோய்த்தடுப்பு முறைகள் |
|
- சினை மாடுகளை தனியாகக் கட்டிப் பராமரிக்கவேண்டும்.சினை மாடுகளைக் கையாளும்போது அதிக கவனம் வேண்டும்
- சினை மாடுகள் உருளாமலும், குதிக்காமலும், அடிக்கடி படுத்து எழுந்திருக்காமலும், கீழே விழாமலும் பார்த்துக் கொள்ளவேண்டும்
- சினை மாடுகளை ஓரிடத்திலிருந்த்து மற்றோர் இடத்திற்கு ஓட்டிச் செல்வதைத் தவிர்க்கவேண்டும்
- மாடுகளுக்கிடையே சண்டை போடுவதையும், அவை முட்டிக்கொள்வதையும் தடுக்கவேண்டும்
|
|
நோயினைக் கட்டுப்படுத்துதல் |
- தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு இந்நிலைக்கு சிகிச்சை அளிக்கவேண்டும்
- கர்ப்பப்பை முறுக்கேறிய சினை மாடுகளை கால்நடை மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் உருட்டி கர்ப்பப்பை முறுக்கேற்றத்தை நீக்கலாம்
- நோய் முற்றிய நிலையில் மாடுகளுக்கு சிசேரியன் அல்லது கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்
|
|
|
மாடுகளில் நஞ்சுக்கொடி தங்குதல்
நோயின் தன்மை |
|
- கன்று ஈன்றவுடன் மாடுகளில் ஏற்படும் ஒரு முக்கியமான நோய் நஞ்சுகொடி தங்குதலாகும்
- கன்று ஈன்றவுடன், மாடுகளின் கர்ப்பப்பையில் கன்றினைச் சுற்றியிருக்கும் நஞ்சுகொடி கர்ப்பப்பையிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் வெளியேற்றப்படாததன் காரணமாக நஞ்சுகொடி தங்குதல் ஏற்படுகிறது
- நஞ்சுகொடி மாடுகளின் கர்ப்பப்பையில் கன்று ஈன்று 8-12 மணி நேரத்திற்குள் வெளித்தள்ளப்படாமல் இருந்தால் அது நோய்க்குறியாகக் கருதப்படுகிறது
|
|
நோய்க்கான காரணங்கள் |
- சினைக்காலத்தின் போது நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்ட கர்ப்பப்பை
- ஹார்மோன்களின் குறைபாட்டால் குறிப்பாக ஆக்சிடோசின் போன்ற ஹார்மோன்களின் குறைபாட்டால் கர்ப்பப்பையின் சுருங்கும்தன்மை பாதிக்கப்படுதல்
- வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு
- புரோஜெஸ்டீரோன் மற்றும் அதிகப்படியான கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் சினைக்காலத்தின் கடைசிப் பகுதியில் அதிகமாக சுரப்பதாலும் இந்நிலை ஏற்படுகிறது
- கர்ப்பப்பை சுருங்காமை நிலையினை ஏற்படுத்தும் நோய்களின் தாக்குதலாலும் நஞ்சுகொடி தங்குதல் ஏற்படுகிறது
- மாடுகள் ஒரே இடத்தில் கட்டியிருத்தல், உடற்பயிற்சி இல்லாதது போன்ற காரணங்களும் நஞ்சுகொடி வெளித்தள்ளாமல் போவதற்கான சூழ்நிலைகளாகும்
|
|
மருத்துவ அறிகுறிகள் |
- கன்று ஈன்று 12 மணி நேரமான பின்பும் நஞ்சுகொடி வெளியேற்றப்படாமல், மாடுகளின் பிறப்புறுப்பிலிருந்து தொங்கிக் கொண்டு இருத்தல்
- பாதிக்கப்பட்ட மாடுகள் தீவனம் எடுக்காமல் சோர்ந்து காணப்படுதல்
- கன்று ஈன்று 24 மணி நேரம் கழித்தும் நஞ்சுகொடி வெளியேற்றப்படாததால் அது அழுக ஆரம்பித்து மாடுகளின் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுதல்
|
|
நோயினைக் கட்டுப்படுத்துதல் |
- தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு நஞ்சுகொடியினை கையால் எடுத்து சிகிச்சை அளிக்கலாம்
- கால்நடை மருத்துவரின் வருகைக்கு முன்பாக மாடுகளின் பிறப்புறுப்பில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும் நஞ்சுகொடியினை கட்டி விடுவதால் அது மாடுகளின் கால் மற்றும் மண்ணில் மோதுவது தடுக்கப்படும்
- கன்று ஈன்ற 24-48 மணி நேரத்திற்குள் நஞ்சு கொடி வெளியேற்றப்படாமல் இருப்பின் கையால் அதனை எடுக்கலாம்
- கன்று ஈன்று 48 மணி நேரத்திற்கு மேல் ஆனால், கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி மூடத்தொடங்கிவிடுமாகையால் கையால் நஞ்சுகொடியினை எடுப்பது நல்லதல்ல.
- மாடுகளுக்கு காய்ச்சல் இருப்பின் நஞ்சுகொடியினை கையால் எடுக்கக் கூடாது
- நஞ்சுகொடியினை எடுத்தவுடன் மாடுகளுக்கு டெட்டனஸ் டாக்சாய்ட் ஊசியினைப் போடுவதால் டெட்டனஸ் வருவது தடுக்கப்படுகிறது
|
|
|
|