முதல் பக்கம் தொடர்புக்கு


  பொது மேலாண்மை முறைகள்


கன்றுகளுக்கு சீம்பால் அளித்தல்
    colostrum feeding
    கன்றுகளுக்கு சீம்பால் அளித்தல்

  • கன்று ஈன்றவுடன் மாட்டின் மடியிலிருந்து சுரக்கும் முதல் பால் சீம்பாலாகும்.
  • சீம்பாலில் காமாகுளோபுலின்கள் எனப்படும் நோய் எதிர்ப்பு புரதங்கள் அதிக அளவு உள்ளன. இவை மாட்டினை ஏற்கெனவே பாதித்த நோய்க்கிருமிகளுக்கு எதிராக மாட்டின் உடலில் உருவாகி பால் வழியாக கன்றுகளுக்கு சென்று கன்றுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கின்றன.
  •  சீம்பாலில் சாதாரண பாலை விட 7 மடங்கு புரதச்சத்து அதிகமாகவும், மொத்த திட சத்துகள் இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது. எனவே    சீம்பால் கன்றின் தொடக்கக் கால வயதில் புரதச்சத்து மற்றும் இதர சத்துகளையும் அளிக்கிறது.
  •  நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் முக்கிய காரணிகளான தாது உப்புகளும், வைட்டமின் ‘ஏ’  சத்தும் சீம்பாலில் அதிக அளவு உள்ளது. இவற்றை சீம்பால் மூலமாக கன்று உட்கொள்ளும் போது கன்றின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது.
  • சீம்பாலிலுள்ள நோய் எதிர்ப்பு புரதங்களை சீம்பால் வழியாக கன்றுகள் எடுத்துக்கொள்ளும்போது,  கன்றுகள் அவைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினை பெறுகின்றன.
  • சீம்பால் ஒரு மலமிளக்கியாக செயல்பட்டு முதன் முதலில் கன்றின் குடலிலிருந்து சாணத்தினை வெளியேற்றவும் உதவுகிறது.
  • கன்று பிறந்து 15-30 நிமிடங்களுக்குள்ளாக கன்றுகளுக்கு முதல் தவணை சீம்பாலை அளித்து விடுவது மிகவும் நல்லது.  இரண்டாம் தவணையாக கன்று பிறந்த 10-12 மணி நேரத்திற்குள் சீம்பாலை அளிக்கவேண்டும்.
  • கன்று பிறந்து அரை மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் கன்றின் உடல் எடையில் 5-8% சீம்பாலை அளிக்கவேண்டும். பிறகு 2, 3ம் நாள் வயதில் அதன் உடல் எடையில் 10% சீம்பாலைக் கொடுக்கவேண்டும்.
  • மாட்டிலிருந்து கறக்கப்படும் அதிகப்படியான சீம்பாலை குளிர்பதனப்பெட்டியில் சேமித்து தாயற்ற கன்றுகளுக்கும் கொடுக்கலாம்.

     சீம்பாலிலுள்ள சத்துகள்

  உட்பொருட்கள்   பசு மாடுகளின் சீம்பால்  எருமை மாடுகளின் சீம்பால்  பால்

மொத்த திடச்சத்துகள்

28.30

31.0

12.86

சாம்பல்

1.58

0.9

0.72

கொழுப்புச்சத்து

0.15-1.2

4.0

4.0

லேக்டோஸ்

2.5

2.2

4.8

கேசின்

4.76

7.7

2.8

 ஆல்புமின்

1.5

3.6

0.54

குளோபுலின்

15.06

12.5

-

 மொத்த புரதம்

21.32

23.8

3.34

top

கன்றுகளைத் தாயிடமிருந்து பிரித்தல்
    Weaning
    கன்றுகளைத் தாயிடமிருந்து பிரித்தல்

  • கன்றுகளைத் தாயிடமிருந்து பிரித்து  கன்றுகளைத் தனியாக வளர்ப்பது கன்றுகளை தாயிடமிருந்து பிரித்து வளர்த்தலாகும்.
  • தற்போது கன்றுகளைத் தாயிடமிருந்து சீக்கிரம் பிரித்துவிடுவது மேலாண்மை முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • சீக்கிரமே கன்றுகளைத் தாயிடமிருந்து பிரிப்பது பண்ணையினை  நன்றாக மேலாண்மை செய்யவும் உதவுகிறது.
  • இம்முறையில் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட கன்றுகள் தனியாக கொட்டகைகளில் வளர்க்கப்பட்டு அவற்றுக்குத் தேவையான தீவன பராமரிப்பு முறைகளும், மேலாண்மை முறைகளும் பின்பற்றப்படுகின்றன.
  • இந்த மேலாண்மை முறையில் கன்றுகள் சீம்பாலை குடித்தவுடன்,  மீண்டும் தாயிடம் பால் குடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
  • ஆனால் மாட்டிடமிருந்து பாலை முழுவதும் கறந்து, போதுமான அளவு பால் கன்றுகளுக்கு தனியாக அளிக்கப்படுகிறது.
  • தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட கன்றுகள் தனியாக தட்டுகளிலோ அல்லது பால் பாட்டில் போன்ற அமைப்புடைய தட்டுகளிலிலோ பால் குடிக்க பழக்கப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு செய்வதால் தீவன மேலாண்மையும் எளிதாகிறது.
  •  தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட கன்றுகளின் உடல் எடை வாரம் ஒரு முறை எடுக்கப்பட்டு அவற்றின் உடல் எடைக்கேற்ப பால் அளிக்கப்படவேண்டும்.
top

 பண்ணை விலங்குகளை அடையாளம் காணுதல்
  • ஒரு பண்ணையிலுள்ள விலங்குகளைக் கண்டறிய பண்ணையிலுள்ள ஒவ்வொரு விலங்கையும் அடையாளம் காண்பது மிகவும் அவசியமாகும்.
பண்ணை விலங்குகளை அடையாளம் காண்பதற்கான காரணங்கள்
  • விலங்குகளின் இனப்பெருக்கத்திறனைப் பதிவு செய்வதற்காக
  • தனித்தனியாக ஒவ்வொரு விலங்கிற்கும் தீவனம் அளிக்க
  • பால் கறக்கும் போது அடையாளம் காண
  • விலங்குகளை விற்கும் போதும்,கண்காட்சிகளின் போதும், பந்தயங்களின் போதும் அடையாளம் காண
  • விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கவும், சினைப் பருவத்தில் இருப்பதைக் கண்டறியவும், மற்றும் இதர செயல்முறைகளுக்காக
விலங்குகளை அடையாளம் காணும் முறைகள்
  • கழுத்து சங்கிலி அல்லது கழுத்து கயிறு
  • கால் வளையம்
  • நெஞ்சுப்பகுதியில் தோடு போடுதல்
  • வால் பகுதியில் தோடு போடுதல்
  • சாக் அல்லது கிரீஸ் மூலம் அடையாளமிடுதல்
  • கருப்பு அல்லது வெளிர் நிற பெயிண்ட்கள் மூலம் அடையாளமிடுதல்
  • படங்கள் மற்றும் வரைபடங்கள்
  • புகைப்படம் எடுத்தல்
  • காதுகளைத் துளையிடுதல்
  • பிராண்டிங்
  • குளிர் அல்லது உறைதல் முறைகள் மூலம் அடையாளமிடுதல்
  • சூடான இரும்பு மூலம் அடையாளமிடுதல்
  • காதுகளில் அடையாளத் தோடு போடுதல்
1.காதுகளில் பச்சை குத்துதல்
  • இது ஒரு நிலையான விலங்குகளை அடையாளம் காணும் முறையாகும்.

தேவைப்படும் உபகரணங்கள்

  • பச்சை குத்தும் ஃபோர்செப்ஸ், பச்சை குத்தப் பயன்படும் எண்கள் அல்லது எழுத்துகள்
  • பச்சை குத்தப் பயன்படுத்தும் இங்க் அல்லது பசை

செயல்முறை

  • பச்சை குத்தும் ஃபோர்செப்ஸில் எண்கள் மற்றும் எழுத்துகளைப் பொருத்த வேண்டும்.
  • பச்சை குத்தும் இடத்தை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
  • பச்சை குத்தும் இடத்தை ஆல்கஹால் கொண்டு துடைக்க வேண்டும்.
  • பச்சை குத்தும் ஃபோர்செப்ஸை பச்சை குத்தும் இடத்தில் பொருத்தி, அதிலுள்ள எண்கள் மற்றும் எழுத்துகள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
  • பிறகு ஃபோர்செப்ஸை அழுத்தி ஓட்டை போட வேண்டும்.
  • பிறகு பச்சை குத்தப் பயன்படும் இங்க் அல்லது பசையினை ஓட்டையிட்ட இடத்தில் தடவ வேண்டும்.
2.காதுகளில் அடையாளத் தோடு போடுதல்
  • இது ஒரு பிரபலமான விலங்குகளை அடையாளம் காணும் முறையாகும்.

தேவையான உபகரணங்கள்

  • ஓட்டை போடும் ஃபோர்செப்ஸ், மற்றும் அடையாளத் தோடுகள்.

செயல்முறை

  • அடையாளத் தோட்டை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். ( ஒன்று அல்லது இரண்டு பகுதிகள் )
  • கால்நடைகளின் தோல் நிறத்திற்கு எதிர் நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அடையாளத் தோட்டினை ஃபோர்செப்ஸில் பொருத்த வேண்டும்.
  • காதில் தோடு போடும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.(தோடு போடும் இடம் காதின் அடிப்பகுதிக்கும் நுனிப்பகுதிக்கும் இடையில் இருக்க வேண்டும்)
  • ஓட்டை போட முடியாத தோடுகளாக இருந்தால் தோடு போடும் கருவியால் முதலில் காதில் ஓட்டை போட வேண்டும்.
  • பிறகு தோட்டினை காதில் பொருத்த வேண்டும்.
3.பிராண்டிங் அல்லது சூடு போடுதல்
  • இது ஒரு நிலையான அடையாளமிடும் முறையாகும்.

சூடான இரும்பு மூலம் சூடு போடுதல்

  • சூடான இரும்பு மூலம் அடையாளமிடுதல் ஒரு தெளிவாகக் தெரியக் கூடிய, எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு அடையாளமிடும் முறையாகும். ஏனெனில் சூடான இரும்பு கால்நடைகளின் தோலில் இருக்கும் முடியின் அடிப்பகுதியினை அழித்து விடுவதால், நிலையான எளிதில் தெரியக் கூடிய முடியற்ற தழும்பினை ஏற்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்

  • சூடு போடும் இரும்புக் கம்பி, மின்சாரம் மூலம் சூடாகும் இரும்பு, மாடுகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் கிட்டி

செயல்முறை

  • சூடு போடப் பயன்படும் உபகரணத்தை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • சூடு போடும் இரும்பினை நன்றாக சூடு படுத்த வேண்டும்.
  • சூடு போடுவதற்கு முன்னால் விலங்கினைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • சூடு போடும் இரும்பின் வெப்பநிலையினை பரிசோதிக்க வேண்டும்.
  • பிறகு சூடாக்கிய இரும்பினை கால்நடைகளின் உடல் மீது வைத்து நன்றாக ஆட்ட வேண்டும்.
  • சூடான இரும்பினை கால்நடைகளின் உடலில் 3-5 நொடிகள் வைத்திருக்க வேண்டும்.
  • சூடு போட்ட இடம் தூரத்திலிருந்து பார்க்கும் போதே கண்டு பிடிக்குமாறும், எழுத்துகளுக்கு இடையில் 2.5 செமீ இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எழுத்துகளுக்கு இடையில் இடைவெளி 2.5 செமீ இருந்தால் தான் அவற்றுக்கு நடுவிலுள்ள தோல் விழாமல் இருக்கும்.
  • சூடு போட்டதால் ஏற்பட்ட புண் சரியாக ஆண்டி செப்டின் மருந்தினைத் தடவ வேண்டும்.

உறையும் முறை மூலம் சூடு போடுதல்

  • குளிர்ந்த இரும்புத் தகடைக் கொண்டு கால்நடைகளின் தோலில் சூடு போடுவதால், அவற்றின் தோலில் உள்ள நிறமிகள் சேதமடைந்து விடுவதால் சூடு போட்ட இடத்தில் வெள்ளை நிற முடிகள் முளைக்கும். இதனால் எளிதாக கால்நடைகளை அடையாளம் காணலாம்.

தேவையான உபகரணங்கள்

  • சூடு போடும் இரும்பினைத் தயராக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • திரவ நைட்ரஜன் அல்லது திட ஐஸ் (திட கார்பன் டை ஆக்சைடு) மூலம் இரும்பினைக் குளிர்வித்துக் கொள்ள வேண்டும்.
  • சூடு போடுவதற்கு முன்பாக கால்நடைகளை நன்றாகக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • சூடு போடும் இடத்திலுள்ள முடியை நறுக்கி விட வேண்டும். பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்து பிறகு ஆல்கஹால் தடவ வேண்டும்.
  • முடியினை நறுக்கியுள்ள இடத்தில் குளிர்வூட்டப்பட்ட இரும்பினை வைத்து தோலில் சமமாக படுமாறு சீரான அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  • சூடு போடும் நேரம் 30 செகண்டுகள் முதல் 1 நிமிடம் வரை
4.காதுகளை நறுக்குதல்
  • இந்த அடையாளமிடும் முறை பன்றிகள் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகளுக்கு அடையாளமிடப் பின்பற்றப்படுகிறது.
  • கால்நடைகளின் காதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆங்கில எழுத்து ‘வி’ வடிவத்தில் கத்தரிக்கோல் அல்லது அதற்கான உபகரணத்தைப் பயன்படுத்தி நறுக்கி அடையாளமிடப்படுகிறது.
  • எடுத்துக்காட்டாக வலது காதின் அடிப்பகுதியில்  நறுக்கப்பட்டிருந்தால் எண் 1, இடது காதின் அடிப்பகுதியில் நறுக்கப்பட்டிருந்தால் எண் 3.
top

ஆண்மை நீக்கம் செய்தல்
    Castration
    ஆண்மை நீக்கம் செய்தல்

  • ஆண் விலங்குகளை இனப்பெருக்கம் செய்ய முடியாமல் செய்தல் ஆண்மை நீக்கம் செய்தலாகும்.
  • இந்தியாவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட காளைகள் விவசாய வேலைகளுக்குப் பொதுவாக உபயோகப்படுத்தப்படுகின்றன.
  • நெல் விளையும் பகுதிகளில் எருமைகள் வேலைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • வேலைக்காக உபயோகப்படுத்தப்படும் காளை மாடுகள் மற்றும் எருமைக்காளைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யவேண்டும்.

ஆண்மை நீக்கம் செய்வதற்கான காரணம்

  • விலங்குகளை அமைதிப்படுத்த
  • விலங்குகளின் உடல் எடையினை விரைவில்  அதிகரிக்கச்செய்யவும், அவற்றின் இறைச்சியின் தரத்தினை மேம்படுத்தவும் ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.
  • முறையற்ற இனப்பெருக்கத்தினைத் தடுக்க
  • இனப்பெருக்க உறுப்புகளின் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க
  • வேலைக்காகப் பயன்படுத்தப்படும் மாடுகளில், அவற்றின் கழுத்துகள் நீண்டு, வண்டிகளைப் பொருத்தும் மாடுகளின் முதுகின் மேற்பகுதி  நன்றாக அமையவும் ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.

ஆண்மை நீக்கம் செய்யும் முறைகள்

1. பர்டிசோ முறை

  • இம்முறை இரத்தம் வெளியேறாத ஆண்மை நீக்க முறையாகும். பர்டிசோ ஆண்மை நீக்கக் கருவி மூலம் ஆண்மை நீக்கம் செய்யும்போது விரைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்பெர்மாட்டிக் குழாயினை நசுக்கி விடுவதால் விரைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு  விரைகள் சுருங்கி விந்துகளின் உற்பத்தி தடை செய்யப்படுகிறது.
  • ஆண்மை நீக்கம் செய்வதற்கு முன்பாக முதலில் கால்நடைகளை அசையாமல் நன்றாகக் கட்ட வேண்டும்.
  • விரைப்பையின் ஒரு பக்கமாக விரைப்பைக்குச் செல்லும் குழாய்ப் பகுதியை நகர்த்தி, விரைகளுக்கு 3-5 செமீ மேற் பகுதியில் பர்டிசோ ஆண்மை நீக்கக் கருவி மூலம் ஸ்பெர்மாட்டிக் கார்ட் எனப்படும் விரைகளுக்குச் செல்லும் குழாயினை நசுக்கி விட வேண்டும்.
  • பிறகு முதலில் நசுக்கிய இடத்திற்கு ஒரு செமீ கீழ் மீண்டும் நசுக்க வேண்டும்.
  • இது ஒரு பாதுகாப்பான, விரைவான, நுண்கிருமிகளின் தாக்குதல் குறைவாக ஏற்படக்கூடிய ஒரு ஆண்மை நீக்க முறையாகும்.

2.திறந்த முறை அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்தல்

  • இம்முறையில் விரைப்பையினை அறுவை சிகிச்சை மூலம் திறந்து, விரைகளை அகற்றிவிட்டு அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட புண்ணை ஆண்டிசெப்டிக் மருந்து தடவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • இளங்காளைகளில் பொதுவாக ஸ்பெர்மாட்டிக் காரட் பகுதியினை முறுக்காமல் நறுக்கப்படுகிறது. ஆனால் வயது முதிர்ந்த இளங்காளைகளில் ஸ்பெர்மாட்டிக் கார்ட் பகுதியினை முதலில் நன்றாக முறுக்கி விட்டுப் பிறகு நறுக்கப்பட வேண்டும்.

3. எலாஸ்டேட்டர் அல்லது ரப்பர் வளையம் முறை

  • இம்முறையில் உறுதியான ரப்பர் வளையம் கன்றுகளின் இளம் வயதிலேயே ஸ்பெர்மாட்டிக் கார்ட் பகுதியைச் சுற்றிப் பொருத்தப்படுகிறது.
  • இந்த ரப்பர் வளையத்தால் ஏற்படும் தொடர்ந்த அழுத்தத்தின் காரணமாக விரைகள் அளவில் சிறியதாகி விடும். பிறகு ரப்பர் வளையம் கீழே விழுந்து விடும்.
  • எலாஸ்டேட்டர் மூலம் ஆண்மை நீக்கம் செய்வது கன்றுகளுக்கு அதிக வலியினை ஏற்படுத்தும் என்பதால் இம்முறை பொதுவாக  பின்பற்றப்படுவதில்லை.
top

 கொம்பு நீக்கம் செய்தல் அல்லது கொம்பினைத் தீய்த்தல்
    Disbudding
    கொம்பு நீக்கம் செய்தல் அல்லது கொம்பினைத் தீய்த்தல்

  • கன்றுகளின் கொம்புகளின் வளர்ச்சியினை இளம் வயதிலேயே நிறுத்துவதற்கு  கொம்பின் குருத்துப்பகுதி அழிக்கப்பட்டு விடுகிறது. இதற்கு கொம்பு நீக்கம் செய்தல் என்று பெயர்.
  • கறவை மாடுகளில் கொம்புகள் இருப்பதால் மாடுகளுக்கிடையே சண்டை ஏற்படும்போது அவை முட்டிக்கொண்டு காயம் ஏற்படுவதால் பண்ணையாளருக்கு அதிகப்படியான நஷ்டம் ஏற்படுகிறது.
  • மேலும் கொம்புடன் இருக்கின்ற மாடுகள், அவைகளை பராமரிப்பவர்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும். மாறாக கொம்பற்ற மாடுகளைக் கையாளுவது எளிது.
  • கொம்புகளை நீக்குவதால் கொம்புப் பகுதியில் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பும் குறைவு.
  • கொம்பு நீக்குவதற்கான சரியான வயது – கன்றின் முதல் 15-20 நாட்கள்.

கொம்பு நீக்கம் செய்யும் முறைகள்

சூடான இரும்பு மூலம் கொம்பு நீக்கம் செய்தல்

  • மின்சாரம் மூலம் இயங்கும் கொம்பு தீய்ப்பதற்கென வடிவமைக்கப்பட்ட இரும்பு கம்பியின் உதவியால்  எல்லாக் காலநிலைகளிலும் இரத்தம் வராமல் கொம்புகளைத் தீய்க்க முடியும்.
  • மின்சாரம் மூலம் இரும்புக்கம்பி சூடாக்கப்பட்டு  அதன் வெப்பநிலை 1000 டிகிரி பாரன்ஹீட் இருக்குமாறு கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வெப்பநிலைக்கு, சூடான இரும்பு தகடினை கொம்பு முளைக்கும் இடத்தில் 10 நொடிகள் வைக்கும்போது கொம்புக் குருத்தின் திசுக்கள் அழிந்துவிடுகின்றன.
2.எலாஸ்டேட்டர் முறை
  • இம்முறையில் தடிமனான ஒரு ரப்பர் வளையம் கொம்பின் அடிப்பகுதியில் பொருத்தப்படுகிறது.
  • இதனால் கொம்புக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மெதுவாக கொம்பு விழ ஆரம்பிக்கும். சிறிய கொம்பு மொட்டுகள் 3-6 வாரம் கழித்தும், பெரிய கொம்புகள் 2 வாரம் கழித்தும் கீழே விழுந்து விடும்.
  • இது ஒரு வலி ஏற்படுத்தக்கூடிய முறையாகும். எனவே கொம்பின் நீளம் 5-10 சென்டிமீட்டருக்கும் மேல் உள்ள மாடுகளில் கொம்பு நீக்கம் செய்ய இம்முறை பயன்படுகிறது.
3. இரசாயன முறை
  • காஸ்டிக் சோடா அல்லது காஸ்டிக் பொட்டாஷ் போன்ற ரசாயனங்கள் கொம்பினைத் தீய்க்கப் பயன்படும் பொதுவான ரசாயனங்களாகும்.
  •  மேற்கூறிய இந்த ரசாயனங்கள் பசை போன்றோ அல்லது கரைசலாகவோ கிடைக்கின்றன.
  •   முதலில் கொம்புக்குருத்துப் பகுதியைச் சுற்றி இருக்கும் முடிகளை வெட்டி விட வேண்டும். பிறகு வேசலினை  தடவ வேண்டும். வேசலின் தடவுவதால் கண்கள் ரசாயனங்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.
  • தற்போது இந்த ரசாயனத்தினை கொம்பு குருத்தின் மீது  இரத்தம் வரும் வரை நன்றாக தேய்க்க வேண்டும்.
4. கொம்பு நீக்கம் செய்யப் பயன்படும் இரம்பம் அல்லது கிளிப்புகள் மூலம் கொம்பு நீக்கம் செய்தல்
  • வயது முதிர்ந்த அல்லது வயதான மாடுகளுக்கு கொம்பு நீக்கம் செய்யும் போது இந்த முறை பின்பற்றப்படுகிறது.
  • ஆனால் இம்முறையில் கொம்பு நீக்கம் செய்யும் போது அதிகப்படியாக இரத்தம் வெளியேறும்.
  • அதிகப்படியாக இரத்தம் வெளியேறுவதைத் தடுக்க கொம்புக்கு செல்லும் கொம்புத் தமனி இரத்தக்குழாயை பருத்தி நூல் அல்லது பட்டு நூலால் கட்டி விட வேண்டும்.
  • இவ்வாறு தமனியைக் கட்ட அறுவை சிகிச்சையின் போது உபயோகிக்கும் ஊசியை எடுத்துக் கொண்டு அதில் நூலைக் கோர்த்து தமனிக் குழாய் அடியில் குத்தி நூலை வெளியே இழுத்துக் கட்ட வேண்டும்
  • இம்முறை மூலம் கொம்பு நீக்கம் செய்யும் போது கொம்பின் அடிப்பகுதியினைச் சுற்றி அரை இஞ்ச் அளவிற்கு தோலை எடுத்து விட வேண்டும். இவ்வாறு தோலை எடுத்தால் மட்டுமே கொம்பின் வேர்ப்பகுதியை அடைந்து, கொம்பின் வேர்ப்பகுதியோடு சேர்த்து  கொம்பை நீக்க முடியும்.
top

அதிகப்படியான மடிக்காம்பினை நீக்குதல்
  • பொதுவாக மாடுகளின் மடியில் சரியான இடைவெளியில், ஒரே அளவுள்ள நான்கு காம்புகள் இருக்கும். சில மாடுகளில் மட்டும் ஒன்று அல்லது இரண்டு அதிகப்படியான காம்புகள் இருக்கும். இவ்வாறு இருக்கும் அதிக எண்ணிக்கையிலான காம்புகள் மூலம் பால் வராது இல்லையேல் சில சமயம் சொட்டுச்சொட்டாக பால் வரும்.
  • இவ்வாறு அதிகப்படியாக உள்ள காம்புகளை கன்றுகள் 6 மாத வயதை அடைவதற்கு முன்பாக நீக்கி விட வேண்டும்.
  • கன்றினை நன்றாக கட்டுப்படுத்திய பிறகு, மடிப்பகுதியைக் கழுவி, டிங்சர் அயோடின் மூலம் கிருமி நீக்கம் செய்து, அதிகப்படியாக உள்ள மடிக்காம்புகளை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை கத்தரிக்கோல் மூலம் நறுக்கி விடலாம்.
  • அதிகப்படியாக உள்ள காம்புகளை நறுக்கிய பிறகு, அந்த இடத்தில் டிங்சர் தடவ வேண்டும். வயதான கிடேரிகளில், காம்புகளை நறுக்கிய இடத்தில் இரத்தம் வருவதைத் தடுக்க தையல் போட வேண்டும்.
top

மாடுகள் மற்றும் எருமைகளின் பல் அமைப்பு மற்றும் வயதைக் கண்டறிதல்
விலங்குகளின் வயதைக் கண்டறிவது கீழ்க்கண்ட காரணங்களுக்கு அவசியமாகும்.
  • கால்நடைகளின் உடல் நன்றாக இருப்பதற்கான சான்றிதழ் வழங்க
  • கால்நடைகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவதற்கு
  • கால்நடைகளின் இனப்பெருக்க நிலையினை அறிந்து கொள்ள
  • கால்நடைகளின் விலையினை மதிப்பிட
கால்நடைகளின் வயதைக் கீழ்வருமாறு கண்டறியலாம்
  • கால்நடைகள் பிறப்புப் பதிவேடு மூலம்
  • பல் அமைப்பு
  • கொம்பு வளையங்கள்
  • கால்நடைகள் கன்று ஈன்ற எண்ணிக்கை
மாடுகளுக்கான பல் அமைப்பு
  • பால் பற்கள்; 0/4 0/0 3/3 0/0
  • நிரந்தரப் பற்கள் ; 0/4 0/0 3/3 3/3

பிறக்கும் போது: கன்றுகள் பிறக்கும் போது பொதுவாக அவற்றுக்கு 8 வெட்டும் பற்களும், மூன்று முன் கடவாய்ப் பற்களும் இருக்கும். இந்த பல் அமைப்பை கன்றுகளின் ஈறுகளைத் தொடுவதால் கண்டறிய முடியும்.

ஒரு மாத வயதில்: எட்டு தற்காலிக வெட்டும் பற்களும் முளைக்க ஆரம்பிக்கும். மூன்று முன் கடவாயப் பற்களும் வெளியே வந்து தேய ஆரம்பித்திருக்கும்.

ஆறு மாத வயதில்: பற்கள் தாடையில் நன்றாகப் பொருந்தி, ஒன்றன் மேல் ஒன்று மோதாமல் இருக்கும்.

ஒரு வருட வயதில்: ஆறு மாதத்திற்கும் ஒரு வயதிலும் உள்ள பல் அமைப்பின் வித்தியாசம் என்னவென்றால் ஒரு வயதில் கன்றுகளின் தற்காலிக வெட்டும் பற்கள் தேய்ந்திருப்பது நன்றாகத் தெரியும்.

இரண்டு வருட வயதில்: மத்தியிலுள்ள தற்காலிக வெட்டும் பற்கள் நிரந்தர வெட்டும் பற்களால் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். மேலும் முதல் இரண்டு கடவாய்ப் பற்கள் முளைக்க ஆரம்பித்திருக்கும்.

21/2 முதல் 3 வருட வயதில்: நடுவிலுள்ள தற்காலிக வெட்டும் பற்கள் நிரந்தரப் பற்களால் மாற்றப்பட்டிருக்கும்.

3-31/2 வருட வயதில்: ஓரத்திலுள்ள தற்காலிக வெட்டும் பற்கள் நிரந்தரப் பற்களால் மாற்றப்பட்டிருக்கும்.

நான்கு வருட வயதில்: ஓரத்திலுள்ள தற்காலிக வெட்டும் பற்கள் நிரந்தரப் பற்களால் மாற்றப்பட்டிருக்கும்.

4-5 வருட வயதில்: பற்களின் வெட்டும் விளிம்புகள் தேய ஆரம்பித்திருக்கும். மேலும் பற்கள் தாடையில் நன்றாகப் பொருந்தியிருக்கும்.

ஆறு வருட வயதில்: ; பற்களின் மேற்பகுதி நன்றாகத் தேய ஆரம்பித்து, அதன் வேர்ப்பகுதி வெளியில் தெரிய ஆரம்பிக்கும்.

பத்து வருட வயதில்: பற்களின் மேற்பகுதி நன்றாகத் தேய்ந்து போய், அவற்றின் மேற்பகுதி சிறிதளவு மட்டுமே தெரியும்.

12-14 வருட வயதில் : பற்களின் விளிம்புகள் மட்டுமே தெரியும்.

கொம்புடைய மாட்டினங்களில் அவற்றின் உத்தேசமான வயதை, கொம்புகளின் அடிப்பகுதியிலுள்ள வளையங்களை வைத்துக் கணக்கிட முடியும். முதல் வளையம் 2 வருட வயதிலும், பிறகு வருடத்திற்கு ஒரு முறை ஒரு வளையமும் கொம்பில் உருவாகும்.

பற்களின் வகை

முளைக்கும் வயது

முதல் மத்திய வெட்டும்பற்களின் ஜோடி

2-2 ½ வயது

இரண்டாம் மத்திய வெட்டும்பற்களின் ஜோடி

3 வயது

மூன்றாம் மத்திய வெட்டும்பற்களின் ஜோடி

4 வயது

நான்காம் மத்திய வெட்டும்பற்களின் ஜோடி

4 ½ வயது

பற்களின் வகை

முளைக்கும் வயது

முதல் கடைவாய் பற்கள் ஜோடி

2 வயது

இரண்டாம் கடைவாய் பற்கள் ஜோடி

2 ½ வயது

மூன்றாம் கடைவாய் பற்கள் ஜோடி

3 வயது

நான்காம் கடைவாய் பற்கள் ஜோடி

3 ½ வயது

ஐந்தாம் கடைவாய் பற்கள் ஜோடி

4 வயது

ஆறாம் கடைவாய் பற்கள் ஜோடி

4½ வயது

உள்நாட்டின மாட்டினங்களில் அவற்றின் 41/2 வயதில் எல்லாப் பற்களும் முளைத்து விடும்

top

 மாடுகளை ஒரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லுதல்
  • ஆரோக்கியமான மாடுகளை மட்டுமே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் இதற்கு முன்னால் ஒரு தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரிடம் கால்நடைகளின் உடல் நலம் நன்றாக இருக்கிறது என்ற சான்றிதழைப் பெற வேண்டும்.
  • இளங் கன்றுகளை மற்ற வயது முதிர்ந்த மாடுகளிடமிருந்து தனியாகப் பிரித்து ஓட்டிச் செல்லவேண்டும். சினையுற்றிருக்கும் மாடுகளை மற்ற மாடுகளிடமிருந்து தனியாகப் பிரித்து ஓட்டிச் செல்ல வேண்டும்.
  • நோய் தாக்குதலுக்குள்ளான பகுதியிலிருந்து கால்நடைகளை மற்றொரு பகுதிக்கு ஓட்டிச் செல்லும்போது அதற்கென உள்ள அலுவலர்களிடமிருந்து முறையான ஒப்புதல் பெற்ற பிறகே மாடுகளை ஓட்டிச் செல்ல வேண்டும்.
  • போக்குவரத்தின் போது கால்நடைகளை மனிதாபிமான முறையில் கையாள வேண்டும்.
  • போக்குவரத்தின் போது கால்நடைகளுக்கு போதுமான அளவு தீவனம், வைக்கோல் அல்லது பசுந்தீவனத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.
  • மாடுகளை மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வாகனங்கள் சுத்தமாக இருக்கின்றனவா என்பதையும், அவற்றின் தரை, பக்கவாட்டுச் சுவர்களில் ஏதேனும் சேதம் உள்ளதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். மேலும் வாகனங்களில் ஏதேனும் ஆணிகள் அல்லது இதர கூர்மையான பொருட்கள் நீட்டிக் கொண்டிருக்கின்றனவா என்பதையும் பரிசோதிக்க வேண்டியது அவசியமாகும்.
  • கால்நடைகள் போக்குவரத்திற்குப் பயன்படும் வாகனங்களில் கிருமி நாசினிக் கரைசல் தெளிக்கவேண்டும்.
  • மாடுகள் படுப்பதற்கேற்றவாறு வைக்கோலை வாகனத்தின் தரையில் 5 செமீ உயரத்திற்கு பரப்பி வைக்கவேண்டும். இவ்வாறு வைப்பதால் போக்குவரத்தின் போது மாடுகளுக்கு காயம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
  • போக்குவரத்தின் போது மாடுகளின் கால்களைக் கட்டக்கூடாது.
  • மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் கீழ்க்கண்ட தகவல்கள் அடங்கிய லேபிள்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
    • கால்நடைகளின் வகை மற்றும் எண்ணிக்கை
    • கால்நடைகளை அனுப்பியவர் மற்றும் கால்நடைகளைப் பெற்றுக்கொள்பவரின் பெயர் மற்றும் முகவரி
    • கால்நடைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய தீவனத்தின் அளவு
    • கால்நடைகளைப் பெற்றுக்கொள்பவருக்கு கால்நடைகள் எடுத்துச்செல்லும் ரயில் அல்லது வாகனத்தைப் பற்றிய தகவல்களும், வாகனங்கள் எந்த நேரத்திற்கு வந்து சேரும் என்பதைப் பற்றிய தகவல்களைப் பற்றி முன்பே தெரிவிக்க வேண்டும்.
    • மாடுகளை வாகனங்களில் 12 மணி நேரத்திற்கு மேல் எடுத்துச் செல்லும் போது ஒரு பணியாள் எப்போதும் வாகனத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவர் மாடுகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
    • மாடுகள், செம்மறியாடுகள், ஆடுகள் போன்ற கால்நடைகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அவற்றை கீழே இறக்கி தண்ணீர் அளிக்க வேண்டும். செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளை கீழே உட்காருவதற்கு அல்லது படுப்பதற்கு பணியாள் அனுமதிக்கக்கூடாது.
    • மேற்கூறிய பொதுவான செயல்பாடுகளைத் தவிர்த்து சில கால்நடைகளுக்கு போக்குவரத்தின் போது சிறப்பான கவனமும் தேவைப்படும். தவிரவும் கால்நடைகளை எடுத்துச் செல்லும் போக்குவரத்தைப் பொறுத்து அவைகளுக்கு அளிக்கப்படும் கவனிப்பும் வேறுபடும்.
ரயில் மூலம் கால்நடைகளை எடுத்துச் செல்லும் போது கவனிக்க வேண்டியவை
  • கால்நடைகளை பயணியல் ரயில் மூலம் மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும். ரயில் போக்குவரத்து இல்லாத சில இடங்களில் சிறப்பு முன்னேற்பாடுகளைச் செய்த பிறகு குதிரைகளை மட்டும் சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்லலாம்.
  • மாடுகளை எடுத்துச் செல்லும் ரயில் பெட்டிகளை, குதிரைகள், குதிரைக் குட்டிகள், கழுதைகள் மற்றும் அவற்றின் குட்டிகளோடு எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் போது அகல ரயில் பாதை ரயில் பெட்டிகளில் 6 விலங்குகளுக்கு மேலும், மீட்டர் ரயில் பாதை ரயில் பெட்டிகளில் 4க்கு மேலும், குறுகிய ரயில் பாதை பெட்டிகளில் 3க்கு மேலும் எடுத்துச் செல்லக்கூடாது.
  • ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் இரண்டுக்கு மேற்பட்ட விலங்குகளை எடுத்துச் செல்லும் போது இரண்டு பணியாட்கள் இருக்க வேண்டும்.
  • ரயிலில் கால்நடைகளை ஏற்றும் போது அவை ஒன்றையொன்று பார்த்துக்கொள்ளுமாறு கட்ட வேண்டும்.
  • கால்நடைகளுக்கு காயம் ஏற்படாமல் இருக்க ரயில் பெட்டிகளின் தரையில் வைக்கோலை 6 செமீ உயரத்திற்கு பரப்ப வேண்டும்.
  • கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தை பெட்டியின் நடுப்பகுதியில் வைக்க வேண்டும்.
  • கால்நடைகளுக்கு நன்றாக காற்றோட்டம் இருக்குமாறு செய்வதற்கு ரயில் பெட்டிகளின் மேற்பகுதி திறந்து இருக்குமாறும் நன்றாகப் பொருந்துமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • கால்நடைகளை ஏற்றிச் செல்லும் பெட்டிகளின் கதவுகளில் கம்பிகள் நன்றாக வெல்டு செய்யப்பட்டு, ரயில் என்ஜினில் இருந்து வரும் நெருப்பு கங்குகள் உள்ளே சென்று தீப்பிடிக்காத வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பெட்டியின் பக்கவாட்டிலும் இரண்டு உருளைகள் ஒன்று 60-90 செமீ உயரத்திலும், மற்றொன்று 100-110 சென்டி மீட்டர் உயரத்திலும் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
  • விலை உயர்ந்த விலங்குகளான குதிரைகள், கழுதைகள், ஆண் குதிரைகள், ஓட்டப்பந்தயக் குதிரைகள், குட்டிகளுடன் இருக்கும் குதிரைகள் போன்றவற்றை ஈஎச் அல்லது ஈஎச்எச் பெட்டிகளில் எடுத்துச் செல்ல வேண்டும். இப்பெட்டிகள் ரயில்வேயால் வழங்கப்படும்.
மாடுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லுதல்
  • மாடுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓட்டிச் செல்லும் போது அவை இவ்வாறு போக்குவரத்திற்கு தகுதியானவை, என்ற சான்றிதழும், அவற்றிற்கு நுண்ணுயிரி மற்றும் தொற்று நோய்களின் தாக்குதல் இல்லை என்ற சான்றிதழும் இருக்க வேண்டும். இந்த சான்றிதழ் இல்லையெனில் கால்நடைகளைப் பெற்றுக்கொள்பவர் கால்நடைகளை பெற்றுக் கொள்ள மாட்டார். ரயில் பெட்டிகளில் மாடுகளுக்கு அளிக்கப்பட வேண்டிய இட அளவு 2 சதுர மீட்டர்களுக்குக் கீழ் இருக்கக்கூடாது. பசியோடும், தண்ணீர் தாகத்தோடும் மாடுகள் இருந்தால் அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓட்டிச் செல்லக்கூடாது. சினைக்காலத்தின் கடைசி நிலையில் இருக்கும் மாடுகளை இளம் மாடுகளுடன் சேர்த்து ஓட்டிச் செல்லக் கூடாது. இவ்வாறு சினை மாடுகளைத் தனியாக ஓட்டிச் செல்வதால் மாடுகளுக்கிடையே நசுக்குதல் தவிர்க்கப்படும்.
மாடுகளை ரயில் மூலம் எடுத்துச் செல்லுதல்
  • ரயில் பெட்டிகளில் ஒரு மாட்டிற்கு அளிக்கப்படும் இட அளவு இரண்டு சதுர மீட்டர்களுக்குக் குறைவாக இருக்கக்கூடாது.
  • வாகனங்களிலிருந்து மாடுகளை ரயில் பெட்டிகளில் ஏற்றும் போது தகுந்த கயிறுகள் மற்றும் நடை மேடைகள் இருப்பது அவசியம்.
  • ரயில் பெட்டிகளின் கதவுகள் கூட சில சமயங்களில் கால்நடைகளை ரயில் பெட்டிகளில் ஏற்றும் போதும் இறக்கும் போதும் நடை மேடையாகப் பயன்படுத்தலாம்.
  • மாடுகளுக்குப் போதுமான அளவு தீவனம் மற்றும் தண்ணீரை அளித்த பிறகே அவற்றை ரயில் பெட்டிகளில் ஏற்ற வேண்டும்.
  • கடைசி சினைக்காலத்தில் இருக்கும் மாடுகளை மற்ற மாடுகளுடன் சேர்த்து ரயில் பெட்டியில் எடுத்துச் செல்லக்கூடாது. இவ்வாறு எடுத்துச் செல்வதால் மாடுகளுக்கிடையே நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
  • ரயிலில் எடுத்துச் செல்லும் கால்நடைகளுக்குத் தேவையான தீவனம், உலர்தீவனம் போன்றவை போதுமான அளவு ரயிலில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ரயில் பெட்டிகளில் போதுமான அளவு காற்றோட்டம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • ரயில் மூலம் மாடுகளை எடுத்துச் செல்லும் போது ஒரு அகல ரயில் பாதை ரயில் பெட்டியில் 10 வயது முதிர்ந்த மாடுகளுக்கு மேலும் 15 கன்றுகளுக்கு மேலும் கொண்டு செல்லக்கூடாது. மீட்டர் ரயில் பாதையில் செல்லும் ரயிலில் ஒரு பெட்டியில் 6 வயது முதிர்ந்த மாடுகளுக்கு மேலும், 10 கன்றுகளுக்கு மேலும் கொண்டு செல்லக்கூடாது. குறுகிய ரயில் பாதை ரயில் பெட்டிகளில் நான்கு வயது முதிர்ந்த மாடுகளுக்கு மேலும், ஆறு கன்றுகளுக்கு மேலும் கொண்டு செல்லக்கூடாது.
  • கால்நடைகள் ஏற்றிச் செல்லப்படும் ஒவ்வொரு பெட்டியிலும்  குறைந்தது ஒரு பணியாள் இருக்க வேண்டும். ரயில் பெட்டிகளுக்கு இணையாக மாடுகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். மேலும் மாடுகள் ஒன்றையொன்று பார்த்துக்கொள்ளுமாறு ரயில் பெட்டிகளில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
  • ரயில் பெட்டியின் தரைப் பகுதியில் 6 செமீ உயரத்திற்கு வைக்கோலைப் பரப்பி வைக்க வேண்டும். இதனால் மாடுகள் படுக்கும் போது அவற்றுக்கு காயம் ஏற்படுவதைத் தடுக்கலாம்
  • ரயில் பெட்டியின் மத்தியில் போக்குவரத்தின் போது கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனத்தை வைக்க வேண்டும்.
  • கால்நடைகளுக்குப் போதுமான அளவு காற்றோட்டம் அளிக்க ரயில் பெட்டியின் மேற்பகுதியிலுள்ள கதவின் நெருக்கமான கம்பிகள் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கம்பிகள் நெருக்கமாக இருப்பதால் என்ஜினில் இருந்து வரும் நெருப்புக் கங்குகள் மாடுகள் கட்டியிருக்கும் பெட்டிக்குள் நுழைந்து தீப்பிடிப்பதைத் தடுக்கலாம். மாடுகள் இருக்கும் ரயில் பெட்டி ரயிலின் மத்தியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • ரயில் பெட்டியின் இரண்டு புறங்களிலும் இரு உருளைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்று 60-80 செமீ உயரத்திலும் மற்றொன்று 100-110 செமீ உயரத்திலும் இருக்க வேண்டும்.
  • கறவை மாடுகளை ரயிலில் கொண்டு செல்லும் போது ஒரு நாளைக்கு இரண்டு முறை பால் கறக்க வேண்டும். கன்றுகளுக்குப் போதுமான அளவு பால் கொடுக்க வேண்டும்.
  • மாடுகளைப் பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். பகல் நேரங்களில் அவற்றை பெட்டிகளில் இருந்து இறக்கி தீவனம், தண்ணீர் அளித்து, போதுமான ஓய்வும் அளிக்க வேண்டும். பால் கறக்கும் கறவை மாடுகளாக இருந்தால் பாலையும் கறந்து விட வேண்டும்.
மாடுகளை சாலைகள் மூலம் வாகனங்களில் கொண்டு செல்லுதல்
  • சாலைகள் மூலம் மாடுகளைக் கொண்டு செல்வதன் முக்கிய அம்சம் என்னவென்றால் மாடுகள் இருக்கும் இடத்திலேயே அவற்றை வாகனங்களில் ஏற்றி, நேரடியாக சந்தைக்கு எடுத்துச் செல்லலாம்.
  • வாகனங்களில் செல்வதால் மாடுகளை திரும்பத்திரும்ப கையாள வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் அவற்றை தொந்தரவும் செய்யும் வாய்ப்பும் குறைவு. மேற்கூறிய  காரணங்களால் மாடுகளில் உடல் எடை குறைவு ஏற்படுவதும் சாலை போக்குவரத்தில் இல்லை.
  • ஆனால் மோசமான சாலைகள், நீண்ட தூரம் பிரயாணம் செய்தல் போன்றவை ரயில்களை விட சாலை வழிப் போக்குவரத்திற்கு ஒரு கிலோமீட்டர் கடக்க ஆகும் செலவு அதிகம்.
  • சரக்கு வாகனங்களில் மாடுகளை எடுத்துச் செல்லும் போது கீழ்க்கண்ட செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • மாடுகளை ஏற்றிச் செல்வதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அவற்றின் பக்க வாட்டில் பேட்கள் பொருத்தப்பட்ட  வாகனங்களை மாடுகளை எடுத்துச் செல்ல உபயோகப்படுத்த வேண்டும்.
  • சாதாரண சரக்கு வாகனத்தில் மாடுகளை எடுத்துச் செல்லும் போது அவற்றின் தரையில் கயிற்று நாரால் ஆன தரை விரிப்பு அல்லது மரப்பலகை போன்றவற்றைப் பொருத்துவதால் மாடுகள் வழுக்கி விழாமல் தடுக்கலாம்.
  • எந்தவொரு சரக்கு வாகனத்திலும் 6க்கு மேற்பட்ட மாடுகளை ஏற்றிச் செல்லக்கூடாது.
  • ஒவ்வொரு சரக்கு வாகனத்திலும் ஒரு பணியாள் இருக்கவேண்டும்.
  • மாடுகளை சரக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லும் போது மற்ற பொருட்களை ஏற்றக்கூடாது.
  • மாடுகளை பயமுறுத்தக்கூடாது. மாடுகள் வாகனத்தின் எஞ்சினை நோக்கி இருக்குமாறு கட்டப்பட்டிருக்க வேண்டும்.
top

கிருமி நீக்கம் செய்தல்
    Disinfection
    கிருமி நீக்கம் செய்தல்

  • ஒரு இடத்தில் உள்ள நோய் உருவாக்கும் கிருமிகளை அழிப்பது கிருமி நீக்கம் எனப்படும். மேலும் கிருமி நீக்கம் செய்வதால் அந்த இடத்தில் நோய் உண்டாக்கும் கிருமிகள் இல்லாமல் இருக்கும்.
  • கிருமி நாசினி, கிருமிகளைக் கொல்லும் பொருட்கள், ஆன்டிசெப்டிக் போன்றவை நுண்கிருமிகளையும், அவற்றின் ஸ்போர்களையும் கொல்லக் கூடியவை.
  • கிருமி நீக்கம் பொதுவாக ரசாயனங்கள், வாயுக்கள் மற்றும் இதர இயற்பியல் முறைகளில் செய்யப்படுகிறது.
கிருமிநீக்கத்தின் வகைகள்
  • இயற்பியல் முறையில் கிருமி நீக்கம் செய்தல்
  • ரசாயன முறையில் கிருமி நீக்கம் செய்தல்
  • வாயுக்கள் மூலம் கிருமி நீக்கம் செய்தல்
இயற்பியல் முறையில் கிருமி நீக்கம் செய்தல்
  • ஆக்சிடேசன் முறை மூலம் நுண்கிருமிகளின் புரதங்களை செயலிழக்கச் செய்வதால் வெப்பநிலையானது ஒரு கிருமி நீக்க முறையாகும்.
  • வெப்பமானது இரண்டு முறைகளில் கிருமி நீக்கம் செய்யப் பயன்படுகிறது.
  • 1.உலர் வெப்பம் 2. ஈர வெப்பம்
உலர் வெப்பம்
  • உலர் வெப்பமானது தீப்பிழம்பாக கொட்டகைகளின் தரைகள், சுவர்கள் மற்றும் இதர இடங்களின் மீது பாய்ச்சப்படுகிறது.
ஈர வெப்பம்
  • ஈர வெப்பமானது உலர் வெப்பத்தினை விட செயல்திறன் அதிகம் வாய்ந்தது.
  • ஈர வெப்பமானது உபகரணங்கள், பாத்திரங்கள் போன்றவற்றைக் கிருமி நீக்கம் செய்ய மிகவும் ஏற்றதாகும்.
கதிர்வீச்சு முறை
  • சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்களின் காரணமாக சூரிய ஒளியானது ஒரு நல்ல கிருமி நாசினியாக குறிப்பாக பாக்டீரியாக்களைக் கொல்வதில் சிறந்ததாக இருக்கிறது.
  • புரூசெல்லா போன்ற பாக்டீரியாக்கள் சூரிய ஒளியில் 4-5 மணி நேரம் இருக்கும்போது கொல்லப்பட்டு விடுகின்றன. செயற்கையாக வடிவமைக்கப்பட்ட புற ஊதாக் கதிர்கள் வெளியிடும் விளக்குகளும் கிருமி நீக்கம் செய்யப் பயன்படுகின்றன.
வடிகட்டுதல்
  • இம்முறை காற்று, தண்ணீர், இதர உயிரியல் பொருட்களில் கிருமிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.
உலர வைக்கும் முறை
  • இம்முறையில் நுண்கிருமிகளிலிருந்து ஈரப்பதத்தை எடுத்து விடுவதால் அவை இறந்து விடுகின்றன. உலர வைக்கும் நேரம் பல்வேறு விதமான நுண்கிருமிகளுக்கு வேறுபடும்.
ரசாயன முறையில் கிருமி நீக்கம் செய்தல்
  • இரசாயன முறையில் கிருமி நீக்கம் செய்வது கால்நடை மருத்துவத்தில் பெரும்பாலாக உபயோகப்படுத்தப்படும் ஒரு செயல்முறையாகும். ஏனெனில் இரசாயனக் கரைசல்களை எளிதில் தயாரிக்க முடியும்.
  • இரசாயனங்கள் விலை குறைந்தவை, மேலும் இவற்றின் செயல்திறன் மிகவும் அதிகமாக இருக்கும்.
  • நல்ல தரமான கிருமிநாசினி கறைகளை ஏற்படுத்தாதவை. மேலும் கிருமிநாசினிக் கரைசல்கள் தெளிக்கப்பட்ட பொருட்களில் சேதம் ஏற்படுவதில்லை.
  • கிருமி நாசினிக் கரைசல்கள் விரும்பத்தகாத வாசனைகளையும் ஏற்படுத்துவதில்லை.
  • பொதுவாக உபயோகப்படுத்தப்படும் கிருமி நாசினிக் கரைசல்கள் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு வகைக்குள் சேரும்.
அமிலங்கள் மற்றும் காரங்கள்
  • உதாரணம்; போரிக் அமிலம் (4-6%)
  • சோடியம் ஹைட்ராக்சைடு (1, 2 and 5%) மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு (சுண்ணாம்பு நீர்)  போன்றவை  கால்நடை பண்ணைகளில் உபயோகப்படுத்தப்படும் கிருமி நாசினிகளாகும்
  • கால்சியம் ஹைட்ராக்சைட் (சுண்ணாம்பு நீர், சுண்ணாம்புக் கலவையின் தெளிந்த நீர்)
ஆல்டிஹைட்
  • 5-10  சதவிகித  ஃபார்மால்டிஹைடு கரைசல் கால்நடைப் பண்ணைகளில் தரையினை கிருமி நீக்கம் செய்யப்பயன்படுகிறது
  • 2% குளுட்டரால்டிஹைடு கரைசல் கால்நடைப் பண்ணைகளிலுள்ள   உபகரணங்களை கிருமி நீக்கம் செய்யப்பயன்படுகிறது
டிடர்ஜென்ட்கள் மற்றும் சோப் கரைசல்கள்
  • டிடர்ஜென்ட்கள் மற்றும் சோப் கரைசல்கள் கழுவுவதற்குப் பயன்படுகின்றன. இவை பண்ணைகளில் உள்ள அழுக்கு, எண்ணெய் பசை போன்ற கிருமிநாசினிக் கரைசல்களின் செயல்பாட்டைக் குறைக்கும் பொருட்களை பண்ணையிலிருந்து நீக்கப் பயன்படுகின்றன.
  • குவாட்டினரி  அம்மோனியம் பொருட்களான செட்டாவ்லான், சேவ்லான் மற்றும் இதர சோப்புகள் பண்ணைகளைக் கழுவுவதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன.
ஹேலோஜன்ஸ்
  • இப்பொருட்கள் கால்நடை மருத்துவத்திலும், பால் பண்ணைகளிலும் கிருமி நீக்கம் செய்யப் பயன்படுகின்றன.
  • குளோரின் மற்றும் ஐயோடின் போன்ற ஹேலஜன்கள் நுண்கிருமிகளில் ஆக்சிடேசன் முறையை ஏற்படுத்துவதால் கிருமிகள் அழிந்து விடுகின்றன.
  • குளோரின் வாயு, ஹைப்போ குளோரைட், கரிம குளோரமைன்கள் போன்றவை பொதுவாக உபயோகப்படுத்தப்படுகின்றன.
  • பிளீச்சிங் பவுடர் (கால்சியம் ஹைப்போ குளோரைட்) பொதுவாக உபயோகப் படுத்தப்படும் கிருமி நாசினியாகும்.
மெட்டாலிக் பொருட்கள்
  • காப்பர் சல்பேட் ( ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி கிராம் வீதம்) உபயோகப்படுத்தப்படுகிறது.
ஆக்சிடைசிங் பொருட்கள்
  • பொட்டாசியம் பர்மாங்கனேட் ( ஒரு லிட்டர் தண்ணீரில் 1-2 மில்லி கிராம் வீதம்) உபயோகப்படுத்தப்படுகிறது.
பீனால்கள்
  • பீனால்களில் கிரசால் (3-5%), லைசால் (3-5%), தைமால், டார் அமிலங்கள் மற்றும் ஹெக்சாகுளோரோபீன் போன்றவை உபயோகப்படுத்தப்படுகின்றன.
  • பீனால் (0.5 % முதல் 5 %) என்ற அளவில் கால்நடை மருத்துவத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது.
சோடியம் கார்போனேட்
  • சோடியம் கார்போனேட் (2.5-4%) கால்நடைப் பண்ணையில் உள்ள கட்டிடங்களை கிருமி நீக்கம் செய்யப் பயன்படுகிறது.
பிளீச்சிங் பவுடர் (குளோரினேட்டட் லைம்)
  • பிளீச்சிங் பவுடர் வெள்ளையான தூளாகக் கிடைக்கிறது.
  • ஒரு கிலோ பிளீச்சிங் பவுடருடன் 25 லிட்டர் தண்ணீரைக் கலந்து கால்நடைப் பண்ணைகளில் ஏற்படும் விரும்பத்தகாத வாசனையினைப் போக்க கிருமி நாசினியாகப் பயன்படுத்தலாம்.
சோடியம் ஹைப்போ குளோரைட்
  • இது பிளீச்சிங் பவுடரைப் போன்றது.
  • கரிமப் பொருட்கள் இருக்கும் போது சோடியம் ஹைப்போ குளோரைட் ஒரு நல்ல கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
குயிக் லைம் (கால்சியம் ஆக்சைடு)
  • புதிதாகத் தயாரிக்கப்பட்ட லைம் ஒரு நல்ல கிருமிநாசினியாகும்.
  • இறந்த கால்நடைகளைப் புதைக்கும் புதைகுழிகளிலும், நேரடியாக நிலத்தில் தெளிக்கும் கிருமி நாசினியாக கால்சியம் ஆக்சைடு பயன்படுகிறது.
கால்சியம் ஹைட்ராக்சைடு
  • கால்சியம் ஹைட்ராக்சைடு கிருமி நாசினி, 5 சதவிகித பீனாலுடன் கலந்து பண்ணைச் சுவர்களை வெள்ளையடிக்க உபயோகப்படுத்தப்படுகிறது.
வாயு கிருமி நாசினிகள்
  • பார்மலின் வாயு
  • ஓசோன் வாயு
  • கிரசால் வாயு
top

புதிதாக வாங்கப்படும் கால்நடைகளை பிரித்து வைத்துப் பராமரித்தல்
    Quarantine
    புதிதாக வாங்கப்படும் கால்நடைகளை பிரித்து வைத்துப் பராமரித்தல்

  • கால்நடைப் பண்ணைக்கு புதிதாக வாங்கும் மாடுகளை, பண்ணையிலுள்ள மற்ற மாடுகளுடன் உடனடியாக சேர்த்து பராமரிக்காமல், புதிதாக வாங்கப்பட்ட மாடுகளுக்கு நோய் ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக  அவற்றைத் தனியாகப் பிரித்து பராமரிப்பது  கால்நடைப்பண்ணைகளில் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான மேலாண்மை முறையாகும்.
  • நோய்க்கிருமி ஒரு மாட்டினுள் நுழைந்ததற்கும், நோய் அறிகுறிகள் வெளியே தெரிவதற்கும் இடையுள்ள இடைவெளி காலத்தினை அளவாகக் கணக்கில் கொண்டு, புதிதாக வாங்கப்பட்ட மாடுகளை தனியாக பராமரிக்கவேண்டும்.
  •  பொதுவாக, 30-40 நாட்கள் (குறைந்த பட்சம்) வரை புதிதாக வாங்கிய மாடுகளை தனியாக பிரித்து பராமரிக்கவேண்டும்.  ஆனால் சில நோய்களுக்கு (குறிப்பாக வெறிநோய்) போன்றவற்றிற்கு தனிமைப்படுத்தும் காலம் 6 மாதங்களாகும்.
  • புதிதாக வாங்கப்படும் மாடுகளும், கால்நடை கண்காட்சி போன்றவற்றிற்கு ஓட்டிச் செல்லப்பட்ட மாடுகளும் தனியாகப் பிரித்து பராமரிக்கப்படுகின்றன.
  •  மேற்கூறிய வகை மாடுகளைப் தனியாகப் பராமரிப்பதற்கான கொட்டகை பண்ணை வாயிலிலேயே அமைக்கப்படவேண்டும்.
  • மாடுகளைத் தனியாகப் பிரித்து பராமரித்த 25-26ம் நாள் அவற்றின் உடல் மீது இருக்கும் புற ஒட்டுண்ணிகளையும், குடலில் இருக்கும் அக ஒட்டுண்ணிகளையும் நீக்க தகுந்த சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.
top

நோயுற்ற மாடுகளைத் தனியாக கட்டிப் பராமரித்தல்
  • நோய்களின் தாக்கத்தின்போது நோயுற்ற மாடுகளையும் அவற்றுடன் பராமரிக்கப்பட்ட மாடுகளையும், நோயற்ற மாடுகளிலிருந்து பிரித்து பராமரிப்பது ஒரு முக்கியமான மேலாண்மை முறையாகும்.
  •  ஆரோக்கியமாக இருக்கும் மாடுகளின் கொட்டகையிலிருந்து, நோயுற்ற மாடுகளைக் கட்டி பராமரிக்கும் கொட்டகை தனியாக, தொலைவில் இருக்கவேண்டும்.
  •  இவ்வாறு தனியாக கொட்டகை இல்லாத பட்சத்தில், நோயுற்ற மாடுகளை கொட்டகையின் ஒரு ஓரத்தில், மற்ற நோயில்லாத மாடுகளிடம் இருந்து பிரித்து தனியாகக் கட்டிப் பராமரிக்கவேண்டும்.
  • நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு தீவனம் அளிக்கும் மற்றும் இதர பராமரிப்பு வேலைகளைச் செய்யும் ஆட்கள் தனியாக இருக்கவேண்டும். மேலும் நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படும் உபகரணங்களும் தனியாக இருக்கவேண்டும்.
  • இவ்வாறு இல்லாத பட்சத்தில், முதலில் நோயினால் பாதிக்கப்படாத மாடுகளுக்கான பராமரிப்பு வேலைகளை முடித்தபின்பு, நோயுற்ற மாடுகளுக்கான பராமரிப்பு வேலைகளைச் செய்யவேண்டும்.
  • நோயுற்ற மாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படும் உபகரணங்களை தகுந்த கிருமி நாசினி கொண்டு கிருமி நீக்கம் செய்த பின்பே மற்ற  மாடுகளுக்கு உபயோகிக்கவேண்டும்.
  • நோயுற்ற மாடுகளைக் கவனித்த பிறகு பணியாட்கள் தங்களுடைய கால்கள், கைகள் மற்றும் கம்பூட்கள் போன்றவற்றை ஆண்டிசெப்டிக் மருந்துகள் மூலம் கழுவி பிறகு தங்களுடைய ஆடைகளை மாற்றி விட வேண்டும்.
  •  நோயுற்ற மாடுகள் முற்றிலும் குணமடைந்த பின்பே, அவற்றை மற்ற நோயில்லாத மாடுகளுடன் கட்டி பராமரிக்க வேண்டும்.
top

குடற்புழு நீக்கம் செய்தல்
    deworming
    குடற்புழு நீக்கம் செய்தல்

  • கன்றுகளின் முதல் வார வயதில் அவற்றுக்கு குடற்புழு நீக்கம் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.
  • கன்றுகளின் முதல் வார வயதில் 10 கிராம் பைப்பரசின் அடிப்பேட் மருந்தினை அவற்றுக்கு கொடுப்பதன் மூலம்  அஸ்கேரியாஸிஸ் புழுக்களின் தாக்குதலிலிருந்து  கன்றுகளை குறிப்பாக,  எருமைக் கன்றுகளைப் பாதுகாக்கலாம்.
  • முதல் ஆறு மாத வயதில் கன்றுகளுக்கு மாதம் ஒரு முறையும், ஆறு மாதத்திற்கு பின்பு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
  • தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படியே குடற்புழு நீக்க மருந்துகளையும், அவற்றின் அளவுகளையும் தேர்வு செய்யவேண்டும்.
  • குடற்புழு நீக்க மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட அளவினை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உபயோகிப்பதைத் தவிர்த்தால் இவ்வாறு உபயோகிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறையும்.
top

தடுப்பூசி அளித்தல்
    Vaccination
    தடுப்பூசி அளித்தல்

  • மாடுகளுக்கும் கன்றுகளுக்கும் நோய்களின் தாக்குதலைத் தடுக்கவும் அவற்றிலிருந்து பாதுகாக்கவும்  தடுப்பூசி அளித்தல் அவசியமான மேலாண்மை முறையாகும்.
  • கன்றுகளின் முதல் நான்கு மாத வயதில் அவற்றுக்கு தடுப்பூசி அளிக்க ஆரம்பிக்கவேண்டும்.
  • அடைப்பான் நோய், கன்று வீச்சு நோய், சப்பை நோய், தொண்டை அடைப்பான் நோய் மற்றும் கோமாரி நோய் போன்ற மாடுகளைத் தாக்கும் முக்கியமான நோய்களுக்கு எதிராக கறவை மாடுகளுக்கு தடுப்பூசி அளிக்கவேண்டும்.
  • தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு தடுப்பூசிகளை,  அவை அளிப்பதற்கேற்ற கால நிலைகளில் மாடுகளுக்கு போடவேண்டும்.
  • தடுப்பூசிகளை வாங்கும் போது அதை எந்த தேதி வரை  உபயோகிக்கலாம் என்று பார்த்து வாங்கவேண்டும். தடுப்பூசிகளை வாங்கிய பின்பு தடுப்பூசி பாட்டிலை பனிக்கட்டியில் (ஐஸ்) வைத்து இருக்கவேண்டும் அல்லது குளிர்பதனப்பெட்டியில் வைத்திருக்கவேண்டும்.
கன்றுகளுக்கான தடுப்பூசி அட்டவணை

 தடுப்பூசி

 தடுப்பூசி அளிக்கும் வயது

கோமாரி நோய்

  • முதல் தடுப்பூசி  - 2 to 4  ம் மாதம்
  • இரண்டாம் தடுப்பூசி -  முதல் தடுப்பூசி அளித்து 2-4 மாதங்களுக்குப் பிறகு
  • பின்பு வருடம் இருமுறை

  கன்று வீச்சு நோய்

4-8 ம் மாதம்

  சப்பை நோய் (முதல் தடுப்பூசி)

தாயிடமிருந்து பிரிப்பதற்கு எட்டு வாரங்களுக்கு முன்பாக (6ம் மாதம்)

அடைப்பான் நோய்,  சப்பை நோய் (இரண்டாம் தடுப்பூசி) மற்றும் தொண்டை அடைப்பான் நோய்

6 ம் மாதம்

வயது முதிர்ந்த மாடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை

 தடுப்பூசி

 தடுப்பூசி அளிக்கும் காலம்

 கோமாரி நோய்

 ஜனவரி முதல் பிப்ரவரி

  கன்று வீச்சு நோய் 

மார்ச் முதல் ஏப்ரல்

  அடைப்பான் நோய்

 ஏப்ரல் முதல் மே

 கோமாரி நோய் ( வருடம் இரு முறை )

ஜூன் முதல் ஜூலை

  சப்பை நோய்

  ஆகஸ்ட் முதல் செப்டம்பர் (  பருவ மழைக்கு முன்பாக )

தொண்டை அடைப்பான்

 செப்டம்பர் முதல் அக்டோபர்

top

நோயுற்ற மாடுகளைத் தனியாகப் பராமரித்தல்
    Isolation of Sick Animals
    நோயுற்ற மாடுகளைத் தனியாகப் பராமரித்தல்

  • நோயினால் பாதிக்கப்பட்ட அல்லது நோய் பாதிப்புக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மாடுகளை பண்ணையிலுள்ள மற்ற ஆரோக்கியமான மாடுகளிடமிருந்து தனியாகப் பிரித்துப் பராமரிக்க வேண்டும்.
  • இவ்வாறு மாடுகளைத் தனியாகப் பிரித்துப் பராமரிக்கும் கொட்டகை மற்ற பண்ணைக்கொட்டகைகளிலிருந்து தனியாக இருக்கவேண்டும்.
  • ஆரோக்கியமான மாடுகளின் கொட்டகையிலிருந்து உயரமான இடத்தில் நோயுற்ற மாடுகளைப் பராமரிக்கும் கொட்டகை இருக்கக்கூடாது.
  • நோயுற்ற மாடுகளைப் பராமரிக்கத் தனியாக கொட்டகை இல்லாதபட்சத்தில் நோயுற்ற  கால்நடைகளை கொட்டகையில் ஒர மூலையில் ஆரோக்கியமான கால்நடைகளிலிருந்து தொலைவில் இருக்குமாறு கட்டிப் பராமரிக்கவேண்டும்.
  • நோயுற்ற கால்நடைகளைப் பராமரிக்கும் வேலையாட்களும், நோயுற்ற கால்நடைகளைப் பராமரிக்க உபயோகப்படுத்தப்படும் வாளிகள் மற்றும் இதர பொருட்கள் ஆரோக்கியமான கால்நடைகளைப் பராமரிக்க உபயோகப்படுத்தக்கூடாது. இதற்குப் பிறகு நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உபயோகப்டுத்தப்படும் உபகரணங்களை கிருமிநீக்கம் செய்தவுடன்தான் ஆரோக்கியமான கால்நடைகளுக்கு உபயோகப்படுத்தவேண்டும்.நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பராமரிப்போர் தங்களுடைய கைகளை சுத்தமாக கிருமி நாசினிக் கரைசலில் கழுவிய பிறகு, தங்களுடைய ஆடைகளை மாற்றிக்கொண்டு ஆரோக்கியமான மாடுகளைப் பராமரிக்கச் செல்லவேண்டும்.
  • நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகள் முழுவதும் குணமடைந்த பிறகு அம்மாடுகளை ஆரோக்கியமான மாட்டுக்கொட்டகைக்கு ஓட்டிச்  சென்று பராமரிக்கலாம்.
top

 மாடுகளைச் சரியான சமயத்தில் இனப்பெருக்கம் செய்தல்
  • சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும் மாடுகளை மட்டுமே இனவிருத்திக்கு அனுமதிக்கவேண்டும்.
  • சினைப்பருவத்தின் மத்தியில் மாடுகளுக்கு இனவிருத்தி செய்வது அவை சினையாகும் விகிதம் அதிகரிக்க உதவும்.
  • காலையில் சினைப்பருவ அறிகுறிகள் காணப்பட்டால், மாலையிலும், மாலையில் சினைப்பருவ அறிகுறிகள் காணப்பட்டால்  அடுத்த நாள் காலையிலும் இனப்பெருக்கம் செய்யவேண்டும்.
  • மாடுகளை நோயற்ற காளைகளுடன் மட்டுமே இனப்பெருக்கம் செய்யவேண்டும் அல்லது சினை ஊசி போடலாம்.
  • தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டே மாடுகளுக்கு சினை ஊசி போட வேண்டும்.
top

சரியான நேரத்தில் சினைப்பரிசோதனை
    சரியான நேரத்தில் சினைப்பரிசோதனை

  • மாடுகளுக்கு சினை ஊசி போட்ட அல்லது காளையுடன் சேர்த்த 60-90 நாட்களுக்குள்  சினைப்பரிசோதனை செய்யவேண்டும்.
  • தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டே சினைப்பரிசோதனை செய்யவேண்டும்.
  • இவ்வாறு சரியான சமயத்தில் சினைப்பரிசோதனை செய்வதால், சினையுற்ற மாடுகளுக்குத் தேவைப்படும் தீவனம் மற்றும் இதர பராமரிப்பு முறைகளை அளிக்கமுடியும்.
  • மேலும் சினையற்ற மாடுகளை அடுத்த சினைப்பருவத்தின் போது இனப்பெருக்கம் செய்யவும் சினைப்பரிசோதனை வழிவகை செய்கிறது.
  • சரியான சமயத்தில் சினைப் பரிசோதனை செய்வதால் கன்று ஈனும் இடைவெளி குறைவதுடன், உற்பத்தியும்  அதிகரிக்கிறது.
top

 மாடுகளுக்கு காப்பீடு செய்தல்
  • மாடுகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு, திடீரென மாடுகள் இறந்து விடும் போதோ அல்லது எதிர்பாராத விபத்துகளால் மாடுகளை இழந்து விடும் போது, மாடுகளை காப்பீடு செய்வது விவசாயிகளைப் பாதுகாக்கிறது.
  • கலப்பின மாடுகளை வளர்க்கும் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் மற்றும் அதிக பால் உற்பத்தி அளிக்கும் மாடுகள் மற்றும் எருமை மாடுகளை வளர்க்கும் விவசாயிகளும், காப்பீடு செய்வதற்கு தகுதியானவர்கள்.
  • வெள்ளம், புயல் மற்றும் பஞ்சம், நில நடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள், நோய் தாக்குதல், அறுவை சிகிச்சைகள், வேலை நிறுத்தம், தீவிரவாதம்  போன்ற சமயங்களில் மாடுகள் இறந்து விடுவதற்காக காப்பீடு செய்து கொள்ளலாம்.
  • மாடுகளின் அப்போதைய சந்தை விலை முழுவதற்கும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
  • பொது (ஜெனரல்) இன்சூரன்ஸ் நிறுவனம், நியூ இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போன்றவை மாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீட்டினை அளிக்கின்றன.
  • மாடுகளை காப்பீடு செய்வதற்கு, மாடுகளை வைத்திருக்கும் விவசாயிகள் அவர்களுக்கு அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவரையோ அல்லது தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரையோ அல்லது கால்நடை பராமரிப்புத்துறையினை அணுக வேண்டும்.
top

    இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்துதல்
    Disposal of Carcass
    இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்துதல

  • இறந்து போன கால்நடைகளின் உடல் மூலம் மனிதர்களுக்கும், இதர கால்நடைகளுக்கும் நோய்கள் பரவுவதைத் தடுப்பதே, இறந்த கால்நடைகளின் உடலை முறையாக அப்புறப்படுத்துவதன் நோக்கமாகும்.
  • இறந்த கால்நடைகளின் உடலை, எரித்தோ அல்லது புதைத்தோ அவற்றை முறையாக அப்புறப்படுத்தலாம் அல்லது அவற்றின் உடலை அப்புறப்படுத்துவதற்கென்று தனியாக இருக்கும் இடங்களுக்கோ அவற்றை அனுப்பலாம்.
இறந்த கால்நடைகளைப் புதைத்தல்
  • கால்நடைகளைப் புதைப்பதற்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புதைக்கும் இடம் கிணறு மற்றும் இதர நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கக்கூடாது. புதைக்கும் இடத்தில் கால்நடைகளை புதைக்கும் நிலத்திற்கு அடியில் குறைந்தது 6 அடியில் மண் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • இறந்த மாடுகளின் உடலை தோலை உறிக்காமல், அதன் மீது போதுமான அளவு சுண்ணாம்பு அல்லது இதர கிருமி நாசினிகளைத் தெளித்து புதைக்கவேண்டும்.
  • இறந்த கால்நடைகளை புதை குழிக்குள் போடும் போது அவற்றின் முதுகுப் பகுதி கீழேயும், கால் மேலேயும் இருக்குமாறு குழிக்குள் போடவேண்டும்.
  • அடைப்பான் நோயினால் இறந்த மாடுகளைத் தவிர மற்ற இறந்த மாடுகளின், தோலில் கத்தியினால் கீறி விட வேண்டும்.
  • சிறிய கால்நடைகளின் உடல் ஊண் உண்ணும் பிராணிகளான நரிகள் மற்றும் நாய்கள் போன்றவற்றை ஈர்க்கும் என்பதால், கால்நடைகளின் உடல்களின் மீது கோல் தார் போன்ற கிருமி நாசினிகளைத் தெளிப்பதால் அவை டிடர்ஜென்ட்களாக போதுமான கால அளவிற்கு செயல்படும்.
இறந்த கால்நடைகளின் உடலை எரித்தல்
  • இறந்த கால்நடைகளின் உடலை எரிப்பதில் நான்கு முறைகள் உள்ளன.
    அவையாவன
    • குழியில் வைத்து எரித்தல்
    • தரை மட்டத்தில் வைத்து எரித்தல்
    • எரியூட்டும் துப்பாக்கி மூலம் எரித்தல்
    • அழிப்பானில் வைத்து எரித்தல்
குழியில் வைத்து எரித்தல்
  • பெரிய மாடுகளைப் புதைப்பதற்கு ஏழு அடி நீளமும், நான்கு அடி அகலமும், 18 இஞ்ச் ஆழமும் உடைய குழியினை வெட்ட வேண்டும்.
  • இந்த குழிக்குப் பக்கத்தில் 9 இஞ்ச் ஆழம் மற்றும் 9 இஞ்ச் அகலமுடைய ஒரு கால்வாயினை வெட்ட வேண்டும். இந்த கால்வாயின் அடிப்பகுதி குழியின் அடிப்பகுதியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • புதைகுழியில் நெருப்பை மூட்டுவதற்கும், உலர்வாக வைப்பதற்காகவும் இந்தக் கால்வாய் பயன்படுகிறது.
  • புதை குழியில் கீழ்க்கண்டவாறு தீ மூட்டப்படுகிறது.
  • பாரபினில் நனைத்த வைக்கோலைக் கால்வாய் முழுவதும் நிரப்ப வேண்டும்
  • பிறகு பெரிய விறகுகளை வைக்க வேண்டும். இதற்கு நடுவில் இரும்பு உருளைகளை வைக்கவேண்டும். இரும்பு உருளைகளை வைப்பதால் காற்றோட்டம் கால்வாயில் ஏற்படுகிறது. மேலும் கால்வாய் அடைக்காமலும் இருக்கிறது.
  • புதைகுழியின் அடிப்பகுதியை மெல்லிய விறகுகளால் நிரப்ப வேண்டும்.
  • பிறகு பெரிய விறகுகளை அடுக்க வேண்டும்.
  • இவற்றின் மீது பாரபினை ஊற்ற வேண்டும்.
  • பிறகு கரித்துண்டுகளைப் போட வேண்டும்.
  • பிறகு வைக்கோலைப் பற்ற வைக்க வேண்டும்.
தரையின் மீது வைத்து எரித்தல்
  • புதைகுழி வெட்டுவதற்கு நிலம் ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும், அதாவது நிலம் தண்ணீர் தேங்கும்தன்மையுடையதாக இருந்தாலும், வேலையாட்கள் குறைவாக இருந்தாலும் இறந்த கால்நடைகளைத் தரையின் மீது வைத்து எரியூட்டலாம்.
  • 5 அடி நீளம், 9 இஞ்ச் அகலம் மற்றும் 9 இஞ்ச் ஆழமுடைய இரண்டு இணையான கால்வாய்கள் காற்று வீசும் திசையில் எரியூட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் வெட்டப்பட வேண்டும்.
  • இந்தக் கால்வாய்களின் மீது இறந்த கால்நடையின் உடலை வைக்கவேண்டும்.
  • பிறகு இறந்த கால்நடையின் உடலைச் சுற்றி கரித்துண்டுகளைப் போட வேண்டும்.
  • பிறகு மரத்துண்டுகளை கால்நடையின் உடலைச் சுற்றி அடுக்க வேண்டும். மரத்துண்டுகளை பாரபினால் நனைக்க வேண்டும்.
  • பிறகு வைக்கோலைப் போட்டு வைக்கோல் மீது பாரபினை ஊற்றி எரியூட்ட வேண்டும்.
எரியூட்டும் துப்பாக்கி மூலம் எரியூட்டுதல்
  • இம்முறையில் இறந்த கால்நடைகளை எரிக்க குழியோ அல்லது கால்வாய்களோ தேவைப்படுவதில்லை. இம்முறையில் இறந்த கால்நடைகளை ஒரு இரும்பு அட்டை மீது வைத்து, அதிகத் திறன் வாய்ந்த நெருப்பினை வைத்து இறந்த கால்நடையின் உடல் எரிக்கப்படுகிறது.
  • எரியூட்டும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை, எரியூட்டும் நேரம் ஆகியவை இறந்த கால்நடையின் உடல் அளவினைப் பொறுத்து அமைகிறது.
top

     கறவை மாட்டுப் பண்ணையின் தினசரி நடவடிக்கைகள்
நேரம் (மணி)   பண்ணை நடவடிக்கைகள்

03.00-03.30

1.

பால் கறக்கும் கறவை மாடுகளை சுத்தம் செய்தல்

03.30-05.00

1.

பால் கறப்பதற்கு முன்பாக மாடுகளுக்கு தினசரி அளிக்க வேண்டிய அடர் தீவனத்தில் பாதியை அளித்தல்

 

2.

பால் கறத்தல்

05.00-05.30

1.

கறந்த பாலை கேன்களில் அடைத்து, பால் பதப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்புதல் மற்றும் பால் பதப்படுத்தும் நிலையங்களில் இருந்து காலிக் கேன்களைப் பெற்றுக்கொள்ளுதல்

 

2.

பால் கறக்குமிடத்தைக் கழுவி கிருமி நீக்கம் செய்தல்

05.30-08.00

1.

கறவை மாட்டுக்கொட்டகையினை சுத்தம் செய்தல்

 

2.

பால் கறக்கும் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களை அளித்தல்

 

3.

பண்ணையினை சுத்தம் செய்தல்

 

4.

நோயுற்ற மாடுகளைத் தனிமைப்படுத்துதல்

 

5.

சினைப்பருவத்திலிருக்கும் மாடுகளை தனியாகப் பிரித்து சினை ஊசி போடுதல்

 

 

குறிப்பு; ஒவ்வொரு 12-14 மாடுகளுக்கு ஒரு பால் கறப்பவரை நியமித்தல். காலை 8 மணி அளவில் பால் கறப்பவர்கள் வேலையினை முடித்து விட்டு சென்று விடுவர். மற்ற பண்ணை வேலையாட்கள் பண்ணையில் வேலை செய்ய வருவார்கள்.

08.00-12.00

1.

கன்றுகளை சுத்தம் செய்தல், கன்று ஈன்ற மாடுகள், வேலைக்காகப் பயன்படுத்தப்படும் காளைகள், காளை மாட்டுக் கொட்டகை போன்றவற்றை சுத்தம் செய்தல்

 

2.

கன்றுகள், சினையுற்ற மாடுகள் மற்றும் காளைகளுக்கு தினமும் அளிக்கும் அடர் தீவனத்தில் பாதியளவு அளித்தல்

 

3.

காளை மாடுகளுக்கு உடற்பயிற்சி மற்றும் உடலின் மேற்பகுதியை முறையான சீப்புகள் கொண்டு சுத்தம் செய்தல்

 

4.

நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளித்தல்

 

5.

சினைப்பருவத்தில் இருக்கும் மாடுகளுக்கு சினை ஊசி போடுதல்

 

6.

பண்ணையிலுள்ள எல்லா மாடுகளுக்குத் தேவைப்படும் பசுந்தீவனத்தை அறுவடை செய்து, நறுக்கி மாடுகளுக்குப் போடுதல். எல்லா மாட்டுக் கொட்டகைகளிலும் உள்ள தீவனத்தொட்டியில் பசுந்தீவனத்தை நிரப்புதல்

 

 

குறிப்பு; எல்லா மாடுகளையும் குளிர்காலத்தில் காலையில் 9 மணி முதல் 2 மணி வரையும், வெயில் காலத்தில் காலை 6 – 10 மணி வரையும், பிறகு மாலையில் 5 – 7  மணி வரையும் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லுதல்

12.00-13.00

1.

பண்ணையாட்களுக்கான மதிய உணவு இடைவேளை மற்றும் ஓய்வு

13.00-15.00

1.

கால்நடைப் பண்ணையில் உள்ள இதர வேலைகளான மாடுகளை அடையாளம் கண்டுபிடிக்க வேண்டிய செயல்முறைகள், தடுப்பூசி அளித்தல், அடர் தீவனம் தயாரித்தல், பண்ணை வேலிகளை சரிபார்த்தல், மாடுகள் ஓய்வெடுக்கும் கொட்டகையினை அமைத்தல், தண்ணீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை கழுவி,சுண்ணாம்பு அடித்தல், மாடுகளின் சாணத்தை அப்புறப்படுத்துதல் அல்லது உரமாக்குதல், ஊறுகாய்ப்புல் தயாரித்தல், வைக்கோல் தயாரித்தல், மாட்டுக்கொட்டகைகளில் தகுந்த பூச்சிக் கொல்லிகளை அடித்தல், மாடுகளின் பின்னங்கால்பகுதியிலும், கால்களிலும் அதிகப்படியாக வளர்ந்த முடியினை வெட்டி விடுதல், மாடுகளின் தோலை சீப்பு கொண்டு சீவுதல், கன்றுகளுக்கு கொம்பு நீக்கம் செய்தல், அதிகப்படியாக வளர்ந்த குளம்புகளை வெட்டுதல், மாடுகளை விற்பது, வாங்குவது, அவற்றைக் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது, கண்காட்சிக்காக கால்நடைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பழக்குதல்

 

 

மாட்டுப் பண்ணையின் மேலாளர் பண்ணையில் செய்யவேண்டிய வேலைகளை முன்னதாகவே திட்டமிட்டு வாரம் முழுவதும் அவற்றை செய்வதற்காக யோசித்து திட்டமிட வேண்டும். சில வேலைகளைச் செய்ய நீண்ட நேரமாவதுடன் அதிக எண்ணிக்கையிலான வேலையாட்களும் தேவைப்படுவர்.

 

 

பால் கறப்பவர்கள் பிற்பகல் 2.30 மணிக்கு வந்து மாலை 5.30 வரை இருப்பார்கள். அப்போது மற்ற பொதுவான வேலைகள் செய்யும் வேலையாட்கள் வேலை செய்ய மாட்டார்கள்.

14.30-15.00

1.

கறவை மாடுகளை பால் கறப்பவர்கள் கழுவுவார்கள்.

15.00-16.30

1.

பால் கறப்பதற்கு முன்பாக மீதமுள்ள ஒரு நாளைக்கு அளிக்கப்படும் தீவனத்தில் பாதியை மாடுகளுக்கு அளிப்பார்கள்.

 

2.

பால் கறத்தல்

 

3.

கன்றுகளை சுத்தம் செய்தல், சினை மாடுகள் கன்று ஈன்றதை சரிபார்த்தல், கறவை வற்றிய மாடுகள், காளை மாட்டுக் கொட்டகைகளைச் சுத்தம் செய்தல். மீதமுள்ள அடர் தீவனத்தைக் கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும், காளை மாடுகளுக்கும்  அளித்தல்

16.30-17.00

1.

கறந்த பாலை கேன்களில் அடைத்து பால் வண்டிகளில் ஏற்றி பால் பதனிடும் மையங்களுக்கு அனுப்புதல் மற்றும் காலையில் அனுப்பிய காலி கேன்களைப் பெற்றுக் கொள்ளுதல்

 

2.

பால் கறக்கும் இடத்தை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்தல்

 

3.

கன்றுகளுக்கும், பால் வற்றிய மாடுகளுக்கும், காளை மாடுகளுக்கும் பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனமளித்தல்

17.00-18.30

1.

பால் கறக்கும் மாடுகளின் கொட்டகையினை சுத்தம் செய்தல்

 

2.

பால் கறக்கும் மாடுகளுக்கு பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் அளித்தல்

 

3.

பண்ணையினைச் சுத்தம் செய்தல்

18.30-03.00

 

இரவு நேரக் காவலாளி பணியில் இருத்தல்

top

     மாட்டுப் பண்ணைகளில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்
    Record Maintenance
    மாட்டுப் பண்ணைகளில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்
    இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்துதலஇறந்த கால்நடைகளை அப்புறப்படுத்துதல
  • தினசரி கால்நடைகள் இருப்பு பதிவேடு
  • கன்று பிறப்பு அல்லது கன்று ஈன்ற தகவல் பற்றிய பதிவேடு
  • கன்று அல்லது இளங் கால்நடைகள் பற்றிய பதிவேடு
  • பண்ணையிலுள்ள வயதடைந்த கால்நடைகள் பற்றிய பதிவேடு
  • இனப்பெருக்க அல்லது செயற்கை முறை கருவூட்டல் பற்றிய பதிவேடு
  • எடை அல்லது வளரச்சி பதிவேடு
  • பால் உற்பத்தி மற்றும் விநியோகப் பதிவேடு
  • விற்பனை அல்லது கழிவு பதிவேடு
  • தீவனம் அல்லது தீவன இருப்பு பதிவேடு
  • புதிதாக வாங்கப்பட்ட கால்நடைகள் பதிவேடு
  • கால்நடைகளின் நலப் பதிவேடு
  • இறப்புப் பதிவேடு
பதிவு முக்கியத்துவம்
  • கறவை மாட்டுப் பண்ணைகளில் வேலைகளை முறைப்படுத்தி செயல்படுத்த, சரியான திட்டமிடலும், எல்லா மூலப்பொருட்களையும் ஒருங்கிணைத்து சங்கிலி போன்று தொடர்ச்சியாக செயல்படுவதை உறுதி செய்வதும் அவசியமாகும்.
  • இதற்காக தினசரி திட்டமிடுதலும், ஒருங்கிணைப்பும், செயல்படுத்துதலும், மதிப்பிடுதலும் மனதில் வைத்துக்கொண்டு செயல்படுத்துவது முக்கியமான நோக்கமாக இருக்கவேண்டும்.
  • இவ்வாறு கறவை மாட்டுப்பண்ணையில் தினசரி வேலைகளைத் திட்டமிட்டு செயல்படுத்த பண்ணை மேலாளருக்கு பண்ணையின் அனைத்து செயல்பாடுகளும், மற்ற விவரங்களும் தெரிந்திருக்க வேண்டும். இந்த விவரங்களை பண்ணையில் பராமரிக்கப்படும் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கப் பதிவேடுகள் மற்றும் இதர பதிவேடுகளைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
மாட்டுப் பண்ணையில் பதிவேடுகளைப் பராமரிப்பதன் உபயோகங்கள்
  • உற்பத்தி செய்யும் திறனுக்கேற்ப  பண்ணையிலுள்ள ஒவ்வொரு மாடும், பதிவேடுகளைக் கொண்டு கண்டறியப்பட வேண்டும்.
  • மாடுகளின் உற்பத்தித் திறனைப் பதிவு செய்து அதற்கேற்ப அவற்றிற்கு தீவனம் அளிக்கப்பட வேண்டும்.
  • பதிவேடுகளைப் பராமரிப்பதன் மூலம் உற்பத்தி குறைவாக இருக்கும் மாடுகளை பண்ணையிலிருந்து கழிப்பதற்கும், உற்பத்தி அதிகம் கொடுக்கும் மாடுகளை தேர்ந்தெடுத்து பண்ணையில் பராமரிப்பதற்கும் வழிவகை ஏற்படுகிறது.
  • பண்ணையில் மாடுகளுக்கு செய்யப்படும் தீவன மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை மற்றும் இதர மேலாண்மை முறைகளின் செயல்திறனை, பதிவேடுகளில் பதிவு செய்யப்படும்  மாடுகளின் உற்பத்தித் திறனைக் கொண்டு கணக்கிட முடியும்.
  • மாடுகள் மற்றும் இதர கால்நடைகளை அவற்றின் உற்பத்தித்திறனைப் பதிவு செய்து வைப்பதன் மூலம் அவற்றின் சந்தை விலையையும் அதிகரிக்க வழிவகை செய்கிறது.
பதிவேடுகளின் மற்ற உபயோகங்கள்
  • பல்வேறு வகையான மாட்டினங்களின் உற்பத்தித் திறனை ஒப்பிடலாம்.
  • இனப்பெருக்க முறைகளின் மூலம் அதிக உற்பத்தி செய்யும் உயர்ரக மாட்டினங்களைக் கண்டறிய முடியும்.
  • மாட்டுப்பண்ணை மற்றும் மாட்டினங்களைப் பதிவு செய்வதை நன்றாக செயல்படுத்த முடியும்.
  • தேவைக்கேற்ற ஆராய்ச்சி, முன்னேற்றத் திட்டங்கள், போன்றவற்றைத் திட்டமிட்டு செயல்படுத்தலாம்.
  • கறவை மாட்டுப் பண்ணை மேலாளர் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் பால் உற்பத்தி செய்யும் வழி முறைகளை அறிந்து கொள்ள பதிவேடுகள் வழி வகுக்கும்
  • பதிவேடுகள் திட்டமிடுபவர்களுக்கும், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும், கால்நடைகளை இனப்பெருக்கம் செய்பவர்களுக்கும், விரிவாக்கத் துறையினருக்கும் போதுமான அளவு விவரங்களை அளிக்கின்றன
top

 கால்நடைகளின் தீய பழக்கங்கள், அவற்றைக் கட்டுப்படுத்துதலும் தடுத்தலும்
1. கண்களை உருட்டுதல்
  • கண்களுக்கு முன்னால் எந்தப் பொருளும் இல்லையென்றாலும் மாடுகள் கண்களை உருட்டிக் கொண்டிருத்தல்
  • தனியாக கிட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மற்றும் நீண்ட நேரம் நகராமல் இருக்கும் கன்றுகள் இந்த பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன
2. நாக்கைச் சுழற்றுதல்
  • வாயில் எந்தப் பொருளும் இல்லாவிட்டாலும் கூட மாடுகள் தங்களது நாக்கை வெளியே நீட்டியும் உள்ளே மடக்கிக் கொண்டும் இருத்தல்
  • இந்த நிலை எல்லா வயதான  மற்றும் எல்லா இனத்தைச் சேர்ந்த மாடுகளில் காணப்படுகிறது. ஆனால் இளம் வயதான மாடுகளும், பிரவுன் ஸ்விஸ் இனத்தினைச் சேர்ந்த மாடுகளிலும் இந்த தீய குண நலன் அதிகமாகக் காணப்படுகிறது
  • குறைந்த அளவு உலர் தீவனம் அளிக்கப்படுதல், தொடர்ந்து ஓரிடத்திலேயே அடைக்கப்பட்டிருப்பது, மரபு ரீதியாகத் தொடருதல் போன்ற காரணங்கள் இந்த தீய பழக்கவழக்கத்திற்குக் காரணமாக இருக்கின்றன
  • அதிகப்படியான உலர் தீவனமளிப்பது, நாக்கைச் சுற்றி ஒரு உலோக வளையத்தை போடுவது போன்றவை இந்த பழக்கத்தை மாற்றும் முக்கியமான செயல்முறைகளாகும்
3. தங்களுடைய முடி மற்றும் உரோமத்தை நக்கி உண்ணுதல்
  • பெரும்பாலான இளங்கன்றுகள் தனித்தனியான இடங்களில் அல்லது கிட்டிகளில் அடைக்கப்பட்டிருக்கும் போதும், தாயிடமிருந்து சீக்கிரமாகப் பிரித்து விடும் போதும், அவற்றின் உடலையே நக்குவதால் உடல் மீதுள்ள முடி வாய்க்குள் சென்று அசையூண் வயிற்றில் பந்து போல உருண்டு விடும்
  • இந்தப் பழக்கம் கூட்டமாகக் கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கன்றுகளை விட தனியாக அடைக்கப்பட்டிருக்கும் கன்றுகளில் அதிகமாகக் காணப்படுகிறது.
4. திடப் பொருட்களை நக்குதல் மற்றும் உண்ணுதல்
  • புதிதாகத் தாய் மாட்டிடமிருந்து பிரிக்கப்பட்ட கன்றுகள், சுவர்கள், கொட்டகையிலுள்ள இரும்பு தடுப்புகள் போன்றவற்றை சப்பவும், நக்கவும் செய்யும்.
  • இதனைத் தடுக்க நல்ல தரமான அடர் தீவனத்தையும், உலர் தீவனத்தையும் அளிக்க வேண்டும். மேலும் கொட்டகையிலுள்ள மரப்பகுதிகளில் கிரசோட் பெயிண்ட் பூச வேண்டும்.
5. கன்றுகளுக்கிடையே ஊட்டிக் கொள்ளுதல்
  • தாய் மாட்டிடமிருந்து பிரிக்கப்பட்ட கன்றுகள் தங்களுடைய உடம்பை நக்கிக்கொள்ளும் அல்லது கொட்டகையிலுள்ள பொருட்களை நக்கும் அல்லது மற்ற கன்றுகளை நக்கும்.
  • பொதுவாக இந்தப் பழக்கம் உள்ள கன்றுகள் மற்ற கன்றுகளின் தொப்புள் பகுதி, ஆணுறுப்பின் முன்பகுதி, விரைப்பை, மடி மற்றும் காதுகளை நக்கும்.
6. வயது முதிர்ந்த மாடுகள் மற்ற மாடுகளிடமிருந்து பாலைக் குடித்தல்
  • வயது முதிர்ந்த கறவை மாடுகள் அல்லது காளைகள் மற்ற கறவை மாடுகளின் மடியிலிருந்து பாலைக் குடிப்பது தீய பழக்கமாகும்.
  • தங்களுடனேயே பராமரிக்கப்படும் மாடுகளிலிருந்தோ அல்லது மற்ற  பால் கறக்கும் மாடுகளிடமிருந்தோ அவை பாலைக் குடிக்கும்.
top

கறவை மாட்டுப் பண்ணையின் பொருளாதாரம் (ஒரு வருடத்திற்குப் பத்து மாடுகள்)
    I. உத்தேசங்கள்
    • ஒரு நாளைக்குப் பத்து லிட்டர் பால் உற்பத்தி செய்யும் கறவை மாட்டின் விலை ரூ.15,000/-.
    • ஒரு மாட்டிற்குத் தேவைப்படும் இடவசதி – 50 சதுர அடி, அதற்கான கொட்டகை கட்டும் செலவு – ஒரு சதுர அடிக்கு ரூ.150 வீதம், ஒரு மாட்டிற்குத் தேவைப்படும் உபகரணங்களுக்கான செலவு – ரூ.600/-.
    • ஒரு வருடத்திற்கு ஒரு வேலையாளுக்கு ஆகும் செலவு – ரூ.15000/-.
    • மாடுகளின் மதிப்பில் 5% அவற்றிற்குக் காப்பீடு செய்வதற்கான செலவு.
    • ஒவ்வொரு மாட்டிற்கும் பால் கறக்கும் போது 4 கிலோ அடர்தீவனமும், பால் வற்றிய காலத்தில் இரண்டு கிலோ அடர் தீவனமும் அளிப்பது.
    • ஒரு கிலோ அடர் தீவனத்தின் விலை ரூ.8/-
    • இரண்டு ஏக்கர் நிலத்தில் தீவிர முறையில் பசுந்தீவனத்தை சாகுபடி செய்து மாடுகளுக்கு அளித்தல்
top