முதல் பக்கம் தொடர்புக்கு  

கர்நாடகாவின் நெல் இரகங்கள்


           

குறுகிய கால இரகங்கள்:
பருவம் : காரீப் (ஏப்ரல்-செப்டம்பர்), ராபி(அக்டோபர்- டிசம்பர்) , கோடைக்காலம் /ஜெய்டு (ஜனவரி-மார்ச்)
இரகங்கள் கால அளவு தகுந்த மண்டலங்கள் சிறப்பியல்புகள்
மது
120-125
வடகிழக்கு நிலைமாறு மண்டலம், வடகிழக்கு வறண்ட மண்டலம், வடக்கு வறண்ட மண்டலம்
அதிக மகசூல், குளிர்ச்சியைத் தாங்கும் தன்மை தானியங்கள் மத்திய காலயான ஒடுங்கிய மென்மையானது. குருத்துப்பூச்சி, நுண்ணுயிர் இலைக்கருகல் நோய் மற்றும் குலைநோயை மிதமாக எதிர்க்கும் சக்தி கொண்டது. கோடை கால நடவுக்கு ஏற்றது. மகசூல்ஆற்றல்: 55-60 குவிண்டால்/எக்டர்
மாண்டியா ராணி
130-135
வடகிழக்கு நிலைமாறு மண்டலம், வடகிழக்கு வறண்ட மண்டலம், வடக்கு வறண்ட மண்டலம்,வடக்கு நிலைமாறு மண்டலம்
பகுதி குட்டையான, அதிக துார்களுடைய குறுகிய கால இரகம், மேம்பட்ட சன்ன ரக அரிசி
ஜோதி
125-130
வடக்கு நிலைமாறு மண்டலம்
குட்டையான, நீளமான தடிப்பான சிவப்பு நெல் தானியங்கள்.குலைநோயை எதிர்க்கும் ஆற்றல் பெற்றது. புகையான் தாக்குதலுக்கு இலக்காகும்.
மகாவீர்
110-115

கரையோர மண்டலம்

காரீப் பருவத்தில் தென் கனரா மற்றும் வட கனரா பகுதியில் குறித்த இடத்தில் தோன்றுகின்ற ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலுக்கு உள்ளான மேட்டுபாங்கான இடத்திற்கு ஏற்றது. அறுவடை செய்தபிறகு 15 நாட்களுக்கு விதையுறக்கப் பண்பு இருக்கும். மத்திய காலயான தானியம் மற்றும் அதன் விதை சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனைக்கொம்பன் ஈ யினை எதிர்க்கும் சக்தி பெற்றது. கரையோர பகுதிகளின் விவசாயிகள் இந்த இரகத்தைதான் விரும்புகின்றனர்.மகசூல் தன்மை - 30 குவிண்டல்/ எக்டர்.
சக்தி
120-125
கரையோர மண்டலம்
பகுதி நெருக்கமான பழக்கத்தைக் கொண்ட குட்டை இரகம். குட்டையான தடிப்பான மணிகளை தாங்குகிறது. ஆனைக்கொம்பன் ஈ யினை எதிர்க்கும் சக்தி கொண்டது. வறட்சி தாங்குதல் மற்றும் குலைநோய் தாங்கும் தன்மையைக் கொண்டது.
அம்ரூத்
105-110
வடக்கு நிலைமாறு மண்டலம்
மானாவாரி மேட்டுப்பாங்கான நிலத்துக்கு ஏற்றது. தானியங்கள் நீளமான தடிப்பானவை.

மேலே செல்க

மத்திய கால இரகங்கள் :
பருவம் : காரீப் (ஏப்ரல்-செப்டம்பர்), ராபி(அக்டோபர்- டிசம்பர்) , கோடைக்காலம் /ஜெய்டு (ஜனவரி-மார்ச்)
இரகங்கள் கால அளவு தகுந்த மண்டலங்கள் சிறப்பியல்புகள்
ஜெயா
140-150
வடகிழக்கு நிலைமாறு மண்டலம் , வடகிழக்கு வறண்ட மண்டலம் ,வடகிழக்கு வறண்ட மண்டலம் , வடக்கு நிலைமாறு மண்டலம்,மலை மண்டலம்
குட்டை (82 செ.மீ) தானியங்கள், நீளம் தடிப்பு, வெள்ளை, மிதமாக நுண்ணுயிர் இலைக்கருகல் நோய், இலையுறை கருகல் நோய், துங்ரோ நச்சுயிரி நோய், ஆனைக்கொம்பன் ஈ ஆகிய நோய்கள், பூச்சிகளுக்கு இலக்காகும்.குலைநோயை எதிர்க்கும் சக்தி பெற்றது. ,மகசூல்: 50-60 குவிண்டால்/எக்டர்.
ராசி
125-130
வடகிழக்கு நிலைமாறு மண்டலம்,வடகிழக்கு வறண்ட மண்டலம்,வடக்கு நிலைமாறு மண்டலம்
மானாவாரி மேட்டுப்பாங்கான நிலைக்கு ஏற்றது. பகுதி குட்டை (90-95 செ.மீ) தானியங்கள் மத்திய கால தட்டை, வெள்ளை குலைநோயை எதிர்க்கும் சக்தி கொண்டது. துங்ரோ நச்சுயிரி நோய்க்கு மிதமான எதிர்க்கும் திறன் கொண்டது.மகசூல்: 56 குவிண்டால்/எக்டர்.
பிரகாஷ்
140-145
வடகிழக்கு நிலைமாறு மண்டலம், வடகிழக்கு வறண்ட மண்டலம், வடக்கு வறண்ட மண்டலம்
மேம்பட்ட அதிக மகசூல்தரும் இரகம். காரீப் பருவம் மற்றும் கோடைக்காலப்பயிர் சாகுபடியில் ஏரி, கிணறு மற்றும் கால்வாய், பாசன முறையில் பயிரிட ஏற்ற இரகம். பச்சை தத்துப் பூச்சியை எதிர்க்கும் சக்தி கொண்டது. குருத்துப் பூச்சி நுண்ணுயிர் இலைக்கருகல் நோய்களுக்கு மிதமான எதிர்க்கும் திறன் கொண்டது. புகையான், ஆனைக்கொம்பன் ஈ, துங்ரோ நச்சுயிரி நோய் ஆகிய தாக்குதலுக்கு இலக்காகும். காரீப் பருவத்தில் ஒரு எக்டருக்கு 40 குவிண்டால்கள் மற்றும் கோடைப்பருவத்தில் ஒரு எக்டருக்கு 50-60 குவிண்டால்கள் என்ற அளவில் மகசூல் கிடைக்கும்.
ஐ ஆர் - 20
130-145
வடகிழக்கு நிலைமாறு மண்டலம், வடகிழக்கு வறண்ட மண்டலம், வடக்கு வறண்ட மண்டலம்
பகுதி குட்டை (100-110 செமீ) தானியங்கள்- நடுத்தரமான ஒடுங்கிய மென்மையானது. நுண்ணுயிர் இலைக்கருகல் நோய், பச்சைத் தத்துப்பூச்சி, நெல் துங்ரோ நச்சுயிரி நோய், இலையுறைக் கருகல் ஆகியவற்றை மிதமாக எதிர்க்கும் சக்தி கொண்டது. மகசூல்: 50-55 குவிண்டால்/எக்டர்
புஷ்பா
125-135
வடகிழக்கு நிலைமாறு மண்டலம், வடகிழக்கு வறண்ட மண்டலம், வடக்கு வறண்ட மண்டலம்
மத்திய காலக்காலம், அதிக மகசூல் தரும் ரகம், நீளமான ஒடுங்கிய மென்மையான தானியம்.
மங்களா
105-130
வடகிழக்கு நிலைமாறு மண்டலம், வடகிழக்கு வறண்ட மண்டலம், வடக்கு வறண்ட மண்டலம், வடக்கு நிலைமாறு மண்டலம், மலை மண்டலம்
அதிக மகசூல், குறுகிய கால இரகம், குளிர்ச்சியைத் தாங்கும் தன்மை பெற்றது.
கர்ணா
130-135
வடகிழக்கு நிலைமாறு மண்டலம், வடகிழக்கு வறண்ட மண்டலம், வடக்கு வறண்ட மண்டலம், வடக்கு நிலைமாறு மண்டலம், மலை மண்டலம்
காவேரியின் கால்வாய்ப்பாசனப் பகுதிகளுக்கு ஏற்ற ரகம். இது பகுதி ஒடுங்கிய மென்மையான, வெள்ளைக்கரு கொண்ட, ஒளிகசியும் இரகமான ஐஆர் 20 வகையை அளிக்கிறது. பொதுவாக நோய்கள், பூச்சிகளைத் தாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது. மகசூல்ஆற்றல்: 42 குவிண்டால்/எக்டர்.
அவினாஷ்/காமா-318
135-145
வடக்கு வறண்ட மண்டலம், வடக்கு நிலைமாறு மண்டலம்
 
எம்டியூ 1001/விஜிதா
130-135
வடக்கு நிலைமாறு மண்டலம்
பகுதி குட்டையான (115 செ.மீ) தானியங்கள்: மத்திய காலயான ஒடுங்கிய மென்மையான தானியம், புகையான மற்றும் குலைநோய்களை தாங்கிக் கொள்ளும் தன்மை பெற்றது. மகசூல்: 97 குவிண்டால்/எக்டர்
பிரகதி
130-135
வடகிழக்கு நிலைமாறு மண்டலம், வடகிழக்கு வறண்ட மண்டலம், வடக்கு வறண்ட மண்டலம்
ஐ ஆர் 20 இரகத்தின் பகுதி குட்டையான நெல் வளர்ப்புத் தன்மை மத்திய காலயான ஒடுங்கிய மென்மையான ஒடுங்கிய மென்மையான, வைக்கோல் நிற தானியங்களை தாங்குகிறது. நெல் வெள்ளைக் கருவுடையது. மத்திய காலயான துார்களை உடைய ரகம், இறுக்கமாக தாவர வளரமைப்பை கொண்டது. இது பாசனம் செய்த பரப்புகளில் காரீப் பருவம் மற்றும் கோடைப்பருவத்திற்கு பரிந்துரைக்கப்பபடுகிறது.
மண்டிய விஜயா
140-145
வடக்கு நிலைமாறு மண்டலம்
ஆழமில்லாத தாழ்வானப் பகுதியில் மானாவாரி நெல்ரது உயரமான, மத்திய காலயான ஒடங்கிய மென்மையுடைய தானியங்களைக் கொண்டது. மகசூல்: 55-60 குவிண்டால்/எக்டர்
பல்குணா
135-140
கரையோர மண்டலம்
பகுதி குட்டையான இரகம். பச்சைத்தண்டு மற்றும் இலைத்தொகுதியைக் கொண்டது. நீளமான மெல்லிய தானியங்களைக் கொண்டது. அதிக மகசூல் தரும் இரகம். ஆனைக்கொம்பன் ஈ யினை எதிர்க்கும் திறன் பெற்றது. அடி நிறமாக்கம் இல்லை.

மேலே செல்க

நீண்ட கால இரகங்கள்:
பருவம் : காரீப் (ஏப்ரல்-செப்டம்பர்)
இரகங்கள் கால அளவு தகுந்த மண்டலங்கள் சிறப்பியல்புகள்
அபிலாஷ்
155-165
வடக்கு நிலைமாறு மண்டலம், மலை மண்டலம்
பகுதி குட்டையான (105-110 செ.மீ) தானியங்கள்: தடிப்பான பெருங்குறுணை மகசூல்: 35-40 குவிண்டால்/எக்டர்.
இண்டன்
160-170
வடக்கு நிலைமாறு மண்டலம், மலை மண்டலம்
குலைநோயினை எதிர்க்கும் சக்தி பெற்றது. இம்மாநிலத்திலுள்ள மலைப்பரப்புகளுக்கு ஏற்ற இரகம்.
ஹேமாவதி
160-170
மலை மண்டலம்
சிக்மகலுார், சிமோகா, ஹசான் மாவட்டத்தில் உள்ள தாலுகாவின் மலை மண்டலத்தின் தாழ்வான நிலப்பகுதிக்கு ஏற்றது. இன்டனின் இணைப்பு இலைக்காம்புகுலை நோய் மற்றும் கதிர்க்காம்புகுலைநோயினை தாங்கும் தன்மை பெற்றது. இன்டனைப் போலவே இந்த இரகத்தின் தானியமும் வெள்ளையாகவும், மத்திய காலயான சன்னரக அரிசியாய் இருக்கும். குறைந்த காற்றுாட்டு அழுத்தம் காரணமாக இன்டனை விட இவ்வகை 10 சதவிகிதம் அதிகமாக 24.2 குவிண்டல் / எக்டர் மகசூலைத் தருகிறது. தற்காலிக அமிழ்வு நிலையில் 33 சதவிகிம் அதிக மகசூல் கிடைக்கிறது. இன்டனை விட இந்த இரகம் நல்ல சமையல் தன்மையை கொண்டது.

மேலே செல்க

வறட்சியை தாங்கும் சிறப்பு இரகங்கள்
  • குமேரு - வறட்சியை தாங்கி வளரக் கூடிய இந்த ரகம், கர்நாடகாவின் மலை பகுதிகளில் மழைக் காலங்களில் பயிரிட ஏற்றது.
  • சாரி - வறட்சியை தாங்கி வளரக் கூடிய இந்த ரகம், மிக நீண்ட வைக்கோலை தரக்கூடியது. இந்த வைக்கோல் கால்நடை தீவனமாகவும், இதர பயன்பாடுகளுக்கும் மிக ஏற்றது.
  • கயாமி – வறட்சி மற்றும் மண்ணின் உவர் தன்மையை தாங்கக்கூடிய கர்நாடகாவின் பாரம்பரிய ரகமான கயாமி, ருசிமிக்க புழுங்கல் அரிசியை தயாரிக்க ஏற்றது.
  • மோராடா - வறட்சி மற்றும் மண்ணின் உவர் தன்மையை தாங்கக்கூடிய இந்த ரகம், ருசிமிக்க, பெரிய, சிவப்பு நிற தானிய மணிகளை தரும். விரைவில் வளரக்கூடிய இந்த ரகம், கர்நாடகாவின் மூன்று பருவத்திற்கும் ஏற்றது.
  • கலாமி – மருத்துவ குணம் கொண்ட இந்த ரகம், கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் பயிரிட ஏற்றது. மண்ணின் உவர் தன்மையை தாங்கி வளரும் கடினத்தன்மை கொண்ட ரகம்.
  • ஜோலகா – மண்ணின் களர் தன்மையை தாங்கி வளரும் இந்த ரகம், கர்நாடகாவின் கடலோரப்பகுதிகளில் பாரம்பரியமாக பயிரிடப்படுகிறது. மிக நீண்ட வைக்கோலை தரக் கூடிய ரகம் இது.

மேலே செல்க