|
தண்டழுகல் நோய்
(ஸ்கிலிரோஸியம் ஒரைசே)
தாக்குதலின் அறிகுறிகள்: |
|
|
|
- நீர் மட்டத்திற்கு அருகில் உள்ள வெளிப்புற இலையுறையின் மேல் ஒழுங்கற்ற கருப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும்.
- நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது புள்ளிகள் பெருகுகின்றன.
- நோய்த் தாக்கப்பட்ட தண்டுகள் அழுகி காணப்படும்.
நோய் தாக்கப்பட்ட தண்டுகளில் பல சிறிய வெள்ளை மற்றும் கருப்பு நிற இழைமுடிச்சுகள் மற்றும் பூசண இழைகளைக் கொண்டிருக்கும்.
- நோய் தாக்கப்பட்ட தண்டுகள் சாய்ந்தும், நிரம்பாத கதிர்களுடன் வெளிரிய தானியங்களுடனும் காணப்படும்.
- தீவிர நோய்த் தாக்குதலால், துார்கள் மடிந்துவிடுகின்றன.
- இந்நோயால் பயிர்கள் சாய்ந்துவிடும்
|
 |
 |
தண்டு அழுகல் |
தண்டு அழுகல் |
|
மேலே செல்க |
|
நோய்க் காரணி: |
|
|
 |
 |
- பூசண வித்துக்கள் சற்று கருமையாகவும், உருளை வடிவத்திலும் உறையின் வெளித்திசுக்களின் உள்ளே இருக்கும்.
- அஸ்கி குறுகலான வடிவமும், காண முடியாத சுவர்களும் இருக்கும்.
- மேலும் பூசண வித்துக்கள் முதிர்ச்சியடையும்போது நீர்த்தல் ஏற்படுகிறது.
- இழை முடிச்சுக்கள் கருப்பு நிறத்திலும், உருளையாகவும், அல்லது சற்று உருளை வடிவம் போலவும், மென்மையாகவும் காணப்படும்.
- பூசண இழைச்சிதில்கள் கருப்பாகவும், நிமிர்ந்தும் குறுக்கு சுவருடனும் இருக்கும்.
- பூசண இழைகள் கதிர் வடிவமாகவும் மூன்று குறுக்குச் சுவர்களுடனும், வளைந்தும் குறித்த பூசண வித்துக் காம்புகளின் மேல் வித்துக்கள் உருவாகும்.
|
நோய்க்காரணி-ஸ்க்ளிரோசியம் ஒரைசே |
நோய்க்காரணி-ஸ்க்ளிரோசியம் ஒரைசே |
|
மேலே செல்க |
கட்டுப்பாடு முறைகள்: |
|
|
|
- பயிர் அறுவடைக்குப்பின், வைக்கோல் மற்றும் பயிர்த் துார்கள் அல்லது மற்ற செடித்துார்களை எரித்தல் அல்லது வைக்கோலை வயலிலேயே மக்கவிடுதல்.
வயலில் நீரை வடிகட்டுவதால் வயலிலிருக்கும் பூசண இழை முடிச்சுக்களைக் குறைக்க முடிகிறது.
- சரிவிகித அளவு உரங்களைப் பயன்படுத்துதல் அல்லது உரங்களைப் பிரித்து இடுதல், இதில் அதிக சாம்பல் சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து இருக்குமாறு அளிக்க வேண்டும்.
- துார்வைக்கும் நடுமை பருவத்தில் ஃபென்டின்-ஹைடுராக்ஸைடு மற்றும் நோய் தாக்கப்பட்ட ஆரம்பநிலைகளில் திஅயாஃபனேட்-மிதைல் ஆகியவற்றைத் தெளிக்கவேண்டும்.
- ஃபெரிம்ஜோன் மற்றும் வேலிடாமைசின் (எ) போன்ற பூசணக் கொல்லிகளைத் தெளிக்கவேண்டும்.
|
 |
 |
ஃபென்டின் ஹைட்ராக்சைடு |
சுண்ணாம்பு கலந்த உரம் |
மேலே செல்க |
|