|
பிள்ளைப் பூச்சி
தாக்குதலின் அறிகுறிகள்: |
- பயிரை கடித்துவிடுவதால் பயிர் எண்ணிக்கையில் இழப்பு ஏற்படும்.
- நாற்றுக்களின் அடிப்பகுதி வெட்டப்பட்டிருக்கும்.
- நாற்றுக்கள் மோசமாக வளர்ச்சியுடன் காணப்படும்.
- நாற்றுக்கள் மடிந்துவிடும்.
- பயிர்கள் ஆங்காங்கே இல்லாமல் இருக்கும்.
- வேர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
|
 |
 |
பிள்ளைபூச்சியால் ஏற்படும் சேதம் |
பிள்ளைபூச்சியால் ஏற்படும் சேதம் |
|
மேலே செல்க |
பூச்சியை கண்டறிதல் : |
|
அறிவியல் பெயர் - கிரில்லோடால்பா ஒரியன்டேலிஸ்
- முட்டை :
முட்டைகள் நீண்ட சதுர வடிவத்திலிருந்து முட்டை வடிவமாகவும் சாம்பல் நிறத்தில் மினுமினுப்பான மேல் பரப்பும் கொண்டு காணப்படும். இவை 2.6 மிமீ நீளமுடையது. பெண் பூச்சிகளால் உருவாக்கப்பட்ட துளைகளில் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
- இளம்பூச்சிகள் :
வெள்ளை மற்றும் நீல நிறமுடைய முன் மார்பு மற்றும் கால்களைக் கொண்டது. வளரும்போது இவை சாம்பல் நிறத்திலிருந்து கருப்பு நிறத்திற்கு மாறி வெண்நிறக் குறிகளுடன் காணப்படும். சிறிய இறக்கைகளை தவிர, கடைசி நிலை இளம்பூச்சிகள் வளர்ச்சி அடைந்த பூச்சிகளைப் போலவே காணப்படும்.
- முதிர்பூச்சி :
பழுப்பு நிறத்தில், தடித்து காணப்படும். 25-40 மிமீ நீளம் அளவுடையது. சிறிய உணர்கொம்புகள் கொண்டு காணப்படும். மடங்கிய இறக்கைகள் வயிற்றுப்பகுதியின் முழுவதையும்மூடியிருக்காது. பெரிதாக உள்ள முன்கால்களும், வலிமையான பற்கள் போன்ற அமைப்புகளும் மண்ணைத் தோண்டுவதற்கு ஏற்றவாறு உள்ளது.
|
|
|
 |
 |
பிள்ளைப் பூச்சி |
 |
 |
பிள்ளைப் பூச்சி |
|
மேலே செல்க |
மேலாண்மை: |
|
- வயலில் நீர் தேங்கி இருக்குமாறு செய்வதால், மண்ணில் இருக்கும் முட்டைகளை அகற்ற முடியும்.
- வரப்பு சீர் செய்து, ஈர மண்ணின் மூலம் வரப்பைப் பூச வேண்டும். இதனால் முட்டைகளை அழிக்க முடியும்.
- வயலை சமப்படுத்துவதால் பாசன நீரை ஒரே சீராக அளிக்க முடியும்.
- பூச்சிகள் நாற்றுக்களை உண்டு சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- இயற்கை எதிரிகளான சிறு இடையுடைய குளவி வகைகள், தரை வண்டுகள், நுாற்புழுக்கள் மற்றும் பூசணங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
- பிள்ளைப் பூச்சிகள் தன் இன உண்ணி பழக்கத்தால் ஒன்றை ஒன்று தின்றுவிடும்.
- ஈரமான அரிசி தவிடு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து ஆகிய இரண்டையும் கலந்து நச்சுஇரையை தயாரித்து, வரப்புகளில் வைக்கவேண்டும்.
|
|
|
 |
 |
சரியான அளவில் நீரை நிறுத்தவும் |
குளவி |
மேலே செல்க |
|