முதல் பக்கம் தொடர்புக்கு  
சார்புடைய தலைப்புகள்

நெற்பயிர் சாகுபடியில் களைகளின் விளைவுகள
நெல் வயலில் களைத்தாவர இனங்கள்:
களைகள் போட்டியின் நெருக்கடியான கால கட்டம்
களை மேலாண்மை முறைகள்
ஒருங்கிணைந்த களை மேலாண்மை
சிறப்பு நடைமுறைகள்

நெற்பயிரில் களை மேலாண்மை

 

நெற்பயிர் சாகுபடியில் களைகளின் விளைவுகள்:  
  • களைச் செடிகள் என்பது தேவையில்லாத மற்றும் விரும்பத்தகாத ஒரு தாவரம். இக்களைகள் நில வளம் மற்றும் நீர் வளங்களை எடுத்துக் கொண்டு நெற்பயிரின் மகசூலை பாதிக்கிறது.
  • இக்களைச் செடிகளை,உள்ள இடத்திற்கு ,புறம்பான செடிகள் என்றும் கூறுவர்.
  • அனைத்து நிலம் மற்றும் நீர் வளங்கள் மேலாண்மைக்கு களைகளின் விளைவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயினும் குறிப்பாக நெல் சாகுபடியில் அதன் விளைவுகள் அதிகமாய் காணப்படுகிறது.
  • களைகள் மாற்று ஓம்புயிரியாக செயல்பட்டு அதிக அளவில் பூச்சிகள் மற்றும் நோய்கள் ஏற்பட காரணமாயிருக்கிறது.
  • அறுவடை செயல்திறனைக் குறைக்கிறது.
  • நிலமதிப்பை குறைக்கிறது.
  • நீர் மாசுபடுதல் ஆகிய பிரச்சனைகள் உண்டாகின்றன.
  • ஊட்டச்சத்து, நீர் மற்றும் சூரியஒளி ஆகியவை எடுத்துக்கொள்ள நெற்பயிருடன் போட்டி ஏற்படுகிறது.  இதனால் பயிர் மகசூல் மற்றும் தரம் குறைகிறது.
  • களைகளால் சேற்றுவயல் நெல்லில் மகசூல் குறைவு  -10-15 சதவிகிதம் .
  • களைகளால் மேட்டுப்பாங்கான நிலத்தில் நேரடி விதைப்பு நெல்லில் மகசூல் குறைவு -35-45 சதவிகிதம்.
  • களைகளால் சேற்றுவயல் நேரடி விதைப்பு நெல்லில் மகசூல் குறைவு  - 20-25 சதவிகிதம் .




நெல் வயலில் களைத்தாவர இனங்கள்:


புல் வகைகள்:

  • குதிரைவாலி புல்-எகினோஃலோபா கிரஸ்கலி சிற்றினம் ஹிஸ்பிருலா

  •  காட்டு நெல்-- எகினோஃலோபா  கலோனம்

  •  டார்பிடோ புல்-- பேனிகம் ரிபன்ஸ்

  •  ஹிலோ புல்- பஸ்பாலாம் கான்ஜூகேடம்

  •  பெரிய நண்டு புல்-- டிஜிடேரியா சன்ஃகுய்னாலிஸ்

  •   திப்ப ராகி- எலியூஸின் இன்டிகா

  •   காக்கைகால் புல்- டேக்டிலோக்டீனியம் ஏஜிப்டியம்

  •   கோகன் புல்-இம்ப்பரேட்டா சிலின்டிரிகா

  •   பெர்முடா புல்--சயனோபின் டேக்டைலான்

  •   கொல்லி நெல்லி-  ஒரைசா ரூஃபிபோகன

  •  பொல்லா--சக்கோலெபிஸ் இன்ட ரப்டா

  • சொவ்வெரிப்புல்லு, நரிங்கா- இஸாக்நி மிலியேஸியே

  •  ஹிப்போ புல்- எகினோஃலோபா   ஸ்டேக்னினா
கோரை வகை களைகள்:
  • பொதுவான கோரை இனம்-சைபிரஸ் டிஃபார்மிஸ்
  • குடைக்கோரை இனம்-  சைபிரஸ் இரியா
  • பூங்கோரை--ஃபிம் பிரிஸ்டைலிஸ் மிலேசியே
  • கை கீச்சி கோரை- ஸ்க்ரிபஸ் மாரிடீமஸ்
  • ஊதா நிற கோரைப் புல்- சைபிரஸ் ரோடான்டஸ்






அகன்ற இலை களைச்செடிகள்:

  • நீர் தாமரை- மோனோகோரியா வேஜினாலிஸ் -முட்டைவடிவ இலையுடைய குட்டைக் களைச் செடி)
  • முயல் கதிலை-  லட்விஜியா பார்விஃ ப்லோரா
  • ஆராக் கீரை- மார்ஸிலியா குவாட்ரிஃபோலியா
  • முள் கீரை வகை- அமரான்தஸ் ஸ்பைனோஸஸ்
  • அப்பக் கீரை-  அஜிரேட்ம் கொனிசாய்ட்ஸ்
  • கோழிப்பூ- செலோஸியா அர்ஜென்டியா
  • காணாங் கோழை-காமலினா பெங்காலன்சிஸ் கரிசலாங்கண்ணி-எக்லிப்டா ஆல்பா
  • பருப்பு கீரை- பசலை- போர்டுலாகா ஒலிரேசியே
  • சாரணை கீரை - ட்ரையேன்திமா போர்டுலாகேஸ்ட்ரம்
  • நீர் கிராம்பு- லட்விஜியா பெரினிஸ்
  • நாகப்பொலா-லிம்னோகேரிஸ் ஃபேலாவா
  • நெல்லிச்சீரா-நீர் மேல் நெருப்பு-அம்மேனியா பேசிஃபெர்ரா
பெரணி வகை:
  • ஆப்ரிக்கன் நீர் பெரணி - சால்வினியா மொலஸ்டா
  • நாலில்கொடியான்-மார்ஸிலியா குவாட்ரிஃபோலியா
  • அசோலா-அசோலா பின்னேடா

பாசிகள்:
  •      சன்டி- சாரா சிற்றினம்
  •      நீர் பாசி-ஸ்பைரோகைரா சிற்றினம்

  மேலே செல்க

களைகள் போட்டியின் நெருக்கடியான கால கட்டம்:  
  • களைகள் போட்டியின் நெருக்கடியான காலம் என்பது குறுகிய ஆயுட்காலம் கொண்டது. இது பயிர் வளர்ச்சி பருவத்தில் ஏற்பட்டு, களைகள் எடுக்கப்பட்டால் இலாபகரமான உற்பத்தி தரும் தன்மை கிடைக்கும்.
  • இந்த பருவத்தில் களை எடுப்பதினால் கிடைக்கும் பயிர் மகசூல் அளவு, முழு பருவத்தில் களை இல்லா நிலைகளில் கிடைக்கும் மகசூல் அளவுக்குச் சமமானதாகும்.
  • பயிர் கால அளவில் மூன்றில் ஒரு பங்கு காலம் களைகள் போட்டியின் நெருக்கடியான பருவம் ஆகும்.    


          
பயிர்கள் நெருக்கடியான காலம் (விதைப்பிற்கு பின்) நாட்கள்
நெல் (நடவு செய்த சேற்று நெல்)

மேட்டுப்பாங்கான நிலத்தின் நெல்
15-45 நாட்கள்

பயிர் காலம் முழுவதும்

 




  மேலே செல்க

களை மேலாண்மை முறைகள்:
களை அறிவியலில் பயன்படுத்தும் இரண்டு குறிச்சொற்கள் .

  •    களைக் கட்டுப்பாடு மற்றும்
  •    களை மேலாண்மை
    • பயிர்கள் இலாபகரமாக வளர களைச் செடிகளின் தாக்கத்தைக் குறைப்பதே களைக் கட்டுப்பாடு ஆகும்.
    • களை மேலாண்மை என்பது தடுத்தல், அடியோடு களைகளை அழித்தல், சீரான முறையில் கட்டுப்படுத்தல், களைச் செடிகள் தாக்குதலை கட்டுப்படுத்தல், அதன் வளர்ச்சியை அடக்குதல், களைகள் விதை உற்பத்தியை தடுத்தல் மற்றும் களைகளை முழுவதும் அழித்தல் ஆகியவற்றை உணர்த்தும்.



வருமுன் காப்பு-தடுப்பு முறைகள்:
  • களைகள் தாக்காத நெல் விதை இரகத்தை உபயோகித்தல்.
  • களைகள் தாக்காதவாறு விதை பாத்திகள் அமைத்தல்.
  • சுத்தமான கருவிகள் மற்றும் இயந்திரம் பயன்படுத்தல்.
  • சுத்தமான பாசன கால்வாய் மற்றும் வரப்புகள் அமைத்தல்.
  • நீண்டகாலம் வாழ்கின்ற களைகளின் தழை உறுப்புகளை நீர் மூலம் எடுத்து வராமல் தடுத்தல்.

அடியோடு அழிக்கும் முறைகள்:

இரண்டு முறைகள் பின்வருமாறு

  • களைகளின் சிற்றினத்தை அறிமுகத்தின் தொடக்க நிலையிலேயே  அழித்தல்.

  • புதைந்த செயலற்ற விதைகள், நீர் பெருக்கத்தினால் மீண்டும் முளைக்கும் தன்மையுடைய விதைகளானதை அழித்தல்.

 


கட்டுப்பாடு முறைகள்:

உழவியல் முறைகள்:

  • வயலை தயாரிக்கும் போது 10-15 செ.மீ ஆழத்தில் களைகளை மண்ணுக்குள் புதைக்க வேண்டும்.  இதனால் களை வளர்ச்சியை தடுக்க முடிகிறது.
  • தாழ்வான நிலப்பகுதியில் நெல் பயிரின் களை மேலாண்மைக்கு வெள்ளப் பாசனம் மற்றும் தீவிர சேற்றுழவை மேற்கொள்ளலாம்.
  • இரு பயிர் வளர்ப்பு முறைகளான நெல்-அசோலா மற்றும் நெல்-பசுந்தாள் உரம் சாகுபடி அதிக களைப்பயிர் தாக்குதலைக் குறைக்கிறது.
  • கோடைகால உழவு மற்றும் பின் மழைக் காலத்தில் பாசனம் செய்த மானாவாரிப் பயிர் சாகுபடி முறைகளால், களை தாக்குதலை குறைக்க முடிகிறது.
  • 1.8கிராம்/சிசி என்ற அளவில்  மண்  இட்டு கெட்டிப்பு செய்து, மண் இறுக்கம் செய்வதினால், சேற்றுவயல் நேரடி விதைப்பு இடங்களில் களைகளின் தாக்குதலை குறைக்க முடிகிறது.
  • நடவுமுறை: சிறந்த களைக்கட்டுப்பாட்டு முறைக்கு நாற்றை பிரித்து நடவு வயலில் நடுதல் முறை மேற்கொள்ளப்படுகிறது.
  • சிறந்த வீரியத்தன்மையுடையநாற்றுக்கள், இலை பரப்பு வளர்ச்சி, முன் வளர்ச்சி வீதம் மற்றும் தூர்கள் வைக்கும் திறனுடைய சிறந்த பயிர்வகையை தேர்வு செய்து நட வேண்டும். பயிர் அடர்த்தி குறைவாக விட்டு நெருக்கமான முறையை பின்பற்றுவதால், களை முளைப்பு மற்றும் அதன் வளர்ச்சியைக்  குறைக்க முடிகிறது.


மேலே செல்க


கைக்களை கட்டுப்பாட்டு முறை:

  •   வயல்களிலிருந்து கைக்களை மூலம் களைகளை அகற்ற வேண்டும்.  அகற்றிய களைகளை வரப்புகளின் மேல் குவிக்கலாம் அல்லது சில களைச் செடிகளை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம்.
  • கைக்களை சற்று சிரமமானதாகவும், நேரம் அதிகமாய் செலவு செய்வதாகவும், சற்று செலவு கூடுதலாக இருப்பினும், பெரும்பாலும் நெற் பயிரில் கைக்களை முறையே அதிகமாய் பயன்படுத்துகின்றனர்.

சேற்று நடவு நெல்:

• கையால் இழுத்தல் அல்லது களைக் கருவிகளான களைக்கொத்து, மண்வெட்டி அல்லது கறுக்கரிவாள் பயன்படுத்துதல்.

• நடவு செய்து 15-40 நாட்களுக்குள் ஒன்று அல்லது இரண்டு முறை கைக்களை எடுக்கப்பட வேண்டும்.

திருந்திய நெல் சாகுபடி:

    • நெற்பயிரில் சுழலும்-கோனோ களை எடுக்கும் கருவியைப் பயன்படுத்திய பின் எஞ்சிய களைகளை கைக்களை மூலம் அகற்றுதல் வேண்டும்.

    மானாவாரி நெல்:

      • முளைத்து 15-21 நாட்களுக்குள் முதல் கைக்களை எடுக்க வேண்டும்.
      • முதல் களை எடுத்து 30-45 நாட்களில் இரண்டாம் கைக்களை எடுக்க வேண்டும்.

இயந்திர முறை களைக் கட்டுப்பாடு:

    இயந்திரங்களை பயன்படுத்தி இயற்கை தகர்வு முறைகளான களைகளை இழுத்தல், தோண்டுதல், உழுதல் மற்றும் வெட்டுதல் ஆகிய முறைகளின் மூலம் களைச் செடிகளை அழித்தல்.

நடவு செய்யப்பட்ட சேற்று நெல்:

    • நடவு செய்து 15 நாட்களுக்குப் பிறகு 10 நாட்கள் இடைவெளியில் சுழல் –கோனோ களையெடுக்குங் கருவியைப் பயன்படுத்தலாம்.
    • இவ்வாறு கருவியைப் பயன்படுத்துவதால் களையெடுக்க வேலையாட்களின் தேவையை குறைக்க முடிகிறது.  மேலும் மண் மற்றும் வேர் மண்டலத்திற்கு காற்றோட்டம் கிடைக்கிறது.  வேர்களின் செயலினை நீட்டிப்பு செய்து, தானிய நிரப்புதலின் தன்மையை அதிகரிக்கிறது. இதனால் தானிய மகசூலும் உயர்வடைகிறது.

    மேட்டுப்பாங்கான நிலத்தில் உலர் விதைப்பு நெல்:

      • விதைத்து 20-45 நாட்களுக்குள் 2-3 முறைகள் களைக்கொத்து அல்லது சிறிய பலுகுகளை பயன்படுத்தியோ தொடர்ந்து ஊடுஉழவுசெய்ய வேண்டும்.

      திருந்திய நெல் சாகுபடி :

      • சுழல் களையெடுக்குங் கருவி அல்லது திருகு முறை கருவியைப் பயன்படுத்தல்.
      • நடவு செய்து 10-15 நாட்களில் 7-10 நாட்கள் என்ற இடைவெளியில், வரிசைகள் மற்றும் செடிகளின் இரு திசையிலும் களையெடுக்குங்கருவியை முன்னும், பின்னும், குறுக்கும், நெடுக்குமாய் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதினால் களைச்செடிகளை மண்ணில் புதைப்பதோடு மண்ணுக்கு காற்றோ ட்டமும் கிடைக்கிறது.
      • நெற்பயிரில் வேர்ப்பகுதியின் பக்கத்திலுள்ள களைகளை நீக்க கைக்களையும் இம்முறையில் தேவைப்படுகிறது.


மேலே செல்க


இரசாயன முறை களைக்கட்டுப்பாடு:

    • பொதுவாக களைக்கொல்லி எனப்படும் இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துவதே இரசாயன முறை களைக்கட்டுப்பாடு எனப்படுகிறது. களைக்கொல்லி இடுவது, களைகள் மேலாண்மைக்கு முக்கிய செயல் ஊக்கம் அளிப்பதாகவும், நேரத்தை குறைத்து பயன் விளைவிக்கும் தன்மையுடையதான முறையாகவும் விளங்குகிறது.

    தமிழ்நாடு மற்றும் கேரளா:

    நடவு செய்யப்பட்ட சேற்று நெல்:

    களைகள் முளைக்கும் முன் பயன்படுத்தும் களைக்கொல்லிகள்:

    • களை முளைக்கும் முன், புயூட்டாக்லோர் 1.25 கிலோ/எக்டர் (அ) அனிலோஃபாஸ் 0.4கி/எக்டர், தியோபென்கார்ப் 50 சதவிகிதம் இசி @ 2 கிலோ/எக்டர் (1 கி செயல்படுபொருள்/ எக்டர்), பென்டிமெத்தலின் 30 சதவிகிதம் இசி @ 4.5 கி/எக்டர் (1.5கிசெயல்படுபொருள் /எக்டர்) என்ற களைக்கொல்லிகளை மேற்கூறிய அளவில் அளிக்க வேண்டும்.  மாறாக களைக்கொல்லி கலவையாக, புயூட்டாக்லோர் 0.6 கிலோ + 2,4 டீஈஈ 0.75கி/எக்டர் (அ) அனிலோபாஸ் +2,4 டிஈஈ “(ரெடி மிக்ஸ்)” 0.4 கிலோ/எக்டர் என்ற அளவில் 30-35 நாட்களில் முதல் கைக்களைக்குப் பிறகு அளிக்க வேண்டும்.  இதனால் அதிக அளவில் களைகளைக் கட்டுப்படுத்த முடிகிறது.
    •   களைக்கொல்லி அளிக்கும் நாளன்று (நடவு செய்து 3-4 நாட்களுக்குப் பிறகு) களைக் கொல்லியை 50 கிலோ உலர் மணலுடன் கலந்து, நடவு செய்து மூன்றாவது நாளில் மெல்லிய நீர்ப்படலம் இருக்கும் நிலத்தில் சீராக அளிக்க வேண்டும். அடுத்த 2 நாட்களுக்கு வயலில் நீர் வடியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புதுப்பாசனம் அளிக்கக்கூடாது.

     


களைகள் முளைத்தபின் அளிக்கும் களைக்கொல்லிகள்:

    • அகன்ற இலையுடைய களைச்செடிகள் மற்றும் கோரைகள் அதிகமாய் இருக்கும் இடத்தில், 2-4, டி-சோடியம் உப்பு (ஃபெர்னோக்சோன் 80 சதவிகிதம் நனையும் தூள்) 1.25 கி/எக்டர் 625 லிட்டர் தண்ணீரில் கரைத்து, அதிக கொள்ளளவு மருந்து  தெளிப்பான் கொண்டு தெளித்தல் வேண்டும். இம்முறையை நடவு செய்து 3 வாரங்களுக்குப் பிறகு, களைச்செடிகள்  3-4 இலையுடைய பருவத்தில் இருக்கும்போது தெளிக்க வேண்டும்.

    சேற்று விதைப்பு நெல்:
    கீழ்வரும் ஏதேனும் ஒரு களைக்கொல்லியை தெளிக்க வேண்டும்

    • பியூட்டாக்லோர் 50 சதவிகிதம் இசி @ 2.5 கி /எக்டர் (1.25 கிலோ செயல்படுபொருள் /எக்டர்) அல்லது தியோபென்கார்ப் 50 சதவிகிதம் இசி@ 2 கி/எக்டர் (1.00 கி செயல்படுபொருள்/எக்டர்) என்ற அளவில் விதைத்து 6-9 நாட்களில் தெளிக்க வேண்டும்.

    • பிரிட்டிலாக்லோர் + சேஃப்னர்(சோடிட்) 50 சதவிகிதம் இசி @ 2.25 கிலோ/எக்டர் (0.45 கி செயல்படுபொருள் /எக்டர்) என்ற அளவில் விதை விதைத்து 3-5 நாட்களில் தெளிக்க வேண்டும்.  தொடர் அளிப்பாக விதை விதைத்து 20 நாட்களுக்குப்பிறகு, 2,4 டீ 3.8 சதவிகிதம் இசி @ 3.04கி/எக்டர்(0.8 கி செயல்படுபொருள் /எக்டர்) என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

    • குதிரைவாலி புல் சிற்றினத்தை கட்டுப்படுத்த சைஹலோஃபாப் ப்யூடைல் 10 சதவிகிதம் EW @ 0.8 கிலோ/எக்டர் (0.8கி செயல்படுபொருள் /எக்டர்) என்ற அளவில் விதை விதைத்து 15 -18 நாட்களில் தெளிக்க வேண்டும்.

    உலர் விதைப்பு நெல்:

    களை முளைக்கு முன் அளிக்கும் களைக்கொல்லிகளில் பின்வரும் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.  தியோபென்கார்ப் 50 சதவிகிதம் இசி @ 3 கி/எக்டர் (1.5 கிலோ செயல்படுபொருள் /எக்டர்), பியூட்டாக்லோர் 50 சதவிகிதம் இசி @ 2.5 கிலோ/எக்டர் (1.25 கிலோ செயல்படுபொருள் /எக்டர்), ஆக்ஸிஃபுலூரோபென் 4 சதவிகிதம் இசி @ 6 கி /எக்டர் (0.15 கி செயல்படுபொருள்/எக்டர்), பென்டிமிதலின் 30 சதவிகிதம் இசி @ 4.5 கிலோ/எக்டர்) (1.50 கிலோ செயல்படுபொருள் /எக்டர்),பிரிட்டிலாக்லோர் 50 சதவிகிதம் இசி @ 3.75 கிலோ/எக்டர் (0.75 கிலோ செயல்படுபொருள் /எக்டர்) என்ற அளவில் விதை விதைக்கும் நாளிலோ அல்லது விதைத்து ஆறு நாட்களிலோ தெளிக்க வேண்டும்.

கர்நாடகாவிற்கு பரிந்துரைக்கப்பட்டவை:

நடவு செய்து 20-40 நாட்களில் முதல் கைக்களை எடுக்க வேண்டும். மேலும் விதைத்து 20-40 நாட்கள் ஆன பயிரிலும், ஊன்றி விதைத்த நெற்பயிரிலும் கைக்களை எடுத்தல் மேற்கொள்ள வேண்டும். 


களைக்கொல்லி

அளவு
(எக்டர்)

களைக்கொல்லி அளிக்கும் காலம்

குறிப்பு

நடவு செய்த சேற்று நெல்:

 

 

2-4-டீ சோடியம் உப்பு 80 சதவிகிதம்

2.5 கிலோ

நடவு செய்து 3-4 வாரங்களுக்குப் பிறகு

இருவிதையிலையுடைய களைகள் மற்றும் ஓராண்டு புல் வகைகளையும் கட்டுப்படுத்த முடிகிறது.

ப்ரொபனில் 35 இசி

7.5 லி

1 (அ) 2 இலைப் பருவ தழையுடைய களைச் செடிகள்

ஒருவிதையிலை மற்றும் இரு விதையிலையுடைய களைகளையும் கட்டுப்படுத்துகிறது.

பியூட்டோக்லோர் 5 சதவிகிதம் ஜி

30 கி

நடவு செய்து 5-7 நாட்களுக்குப் பிறகு குருனைகளை வீசி தூவுதல் வேண்டும்

-

2-4 டீ எத்தில் எஸ்டர் 5 சதவிகிதம் ஜி

 

15 ஜி

நடவு செய்து 5-7 நாட்களுக்குப் பிறகு களைக்கொல்லியை தெளிக்க வேண்டும்

-

அனிலோகார்டு

1.5

நடவு செய்து 5-7 நாட்களுக்குப் பிறகு களைக்கொல்லியை தெளிக்க வேண்டும்

-

தயோபென்கார்ப் 50 இசி

4.0 லி

நடவு செய்து 5 நாட்களுக்குள்

 

பென்டிமித்தலின் 30 இசி

3.3லி

நடவு செய்து 3-5 நாட்களுக்குள்

 

ஆக்ஸிடியாஜன் 25 இசி

1.0லி

நடவு செய்து 3-5 நாட்களுக்குள்

 

ஊன்றி விதைத்த நெல்:

 

 

 

புரொப்பனில் 35 இசி

7.5 லி

விதைத்து 4 வாரங்களுக்குப் பிறகு களைச்செடிகள் மேல் தெளிக்க வேண்டும்

ஒரு விதையிலை மற்றும் இரு விதையிலையுடைய களைச்செடிகளை கட்டுப்படுத்த உதவுகிறது

பியூட்டாக்லோர் 50 இசி

3.0 லி

விதைத்து 5 நாட்களுக்குள்

 

பென்டிமித்தலின் 30 இசி

3.3 லி

விதை விதைத்து 5 நாட்களுக்குள்

புல்இனக் குடும்பத்தைச் சேர்ந்த களைச்செடிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

உயிரியல் முறைக்களைக் கட்டுப்பாடு:

    • உயிரினங்களான பூச்சிகள், நோய் உயிரி, தாவரவுண்ணி மீன்கள், நத்தைகள் அல்லது சமமாக போட்டியிடும் செடிகள் ஆகியவை பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துவதே உயிரியல் முறைக் கட்டுப்பாடு எனப்படுகிறது.
    • இம்முறையில் களைகளை முற்றிலுமாக அழிக்க முடியாது.ஆனால் அதன் எண்ணிக்கையை குறைக்கலாம்.ஹிர்ச் மன்னீல்லா ஸ்பினிகெளடேடா எனப்படும் ஒரு வகையான வேர்நூற்புழு மேட்டுப்பாங்கான நிலத்திலுள்ள களைகளைக் கட்டுப்படுத்துகிறது.
    • “பேக்ட்ரா வெருடனா” - அந்துப் பூச்சி, கோரைச் செடியான (சைப்பரஸ் ரொடான்டஸ்) என்ற களைச் செடியை அழிக்கிறது.
    • “லுடிவிஜியா பர்விஃபுலோரா” -முயல் கதிலை என்ற களைச்செடி  அல்டிகா சைனேனியா (நீலநிற வண்டு) என்ற பூச்சியால் முற்றிலும் அழிக்கப்படுகின்றது.

  மேலே செல்க

ஒருங்கிணைந்த களை மேலாண்மை:  

   
ஒருங்கிணைந்த களை மேலாண்மை என்பது களை மேலாண்மையின் கூட்டு செயற்முறைகள், களை என்ணிக்கையை குறைத்தல் மற்றும் சுற்றுப்புறத் தன்மையைப் பாதுகாத்தல் ஆகியவற்றைக் குறிக்கின்றன.  விவசாயிகளின் இலாபத்தை மேம்படுத்துவதும், சுற்றுப்புறத்தைப் பாதுகாத்தலும் மற்றும் பயன்படுத்துவோரின் விருப்புத் தேர்வுக்கேற்ப செயல்படுவதும் ஒருங்கிணைந்த களை மேலாண்மையின்  கொள்கைக் கோட்பாடுகள்.


ஒருங்கிணைந்த களை மேலாண்மையின் முதன்மை கூறுகள்:

  • களைகளை மேற்பார்வையிடுதல், களை தாவரத்தில் ஏற்படும் நிலை மாற்றம், ,எதிர்ப்புத்திறனுள்ள களைகள் மற்றும் புது களைகள் அறிமுகமாதல்.
  • சுற்றுப்புற பாதுகாப்பிற்கு ஏற்ற சூழ்நிலை அமைவு, உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்.
  • ஒருங்கிணைந்த களை மேலாண்மை முறைக்கு ஏற்ற குறைந்த செலவு உழவியல் தொழில் நுட்பங்கள்.
  •  அகலமான விதைப்பாத்தி
  •  சரிவிகித செயற்கை உரம்  உபயோகிப்பு
  •  அதிக பயிர் எண்ணிக்கை
  •  ஊடுசாகுபடி/தொடர் பயிர் சாகுபடி
  •  போட்டிக்குரிய பயிர் வகைகளைப் பயன்படுத்தல்
  • குறைந்த அளவு துணை களைக்கொல்லிகளைப் பயன்படுத்தல்.

சேற்று விதைப்பு நெல்:

  • களைமுளைக்கு முன் அளிக்கும் களைக்கொல்லிகளான பிரிட்டிலாக்லோர் 0.75 கி/எக்டர் (அ) புயூட்டாக்லோர் 1.0கி/எக்டர் என்ற அளவில் விதைத்து 8 வது நாளில் அளிக்க வேண்டும். (அ) பிரிட்டிலாக்லோர் + சேஃப்னார் (சாப்ட்) 0.45 கி/எக்டர் விதைத்து 3-4 நாட்களில் அளிக்க வேண்டும்.  இதைத் தொடர்ந்து விதைத்து 40 நாளில் முதல் கைக்களை எடுக்க வேண்டும்.

  • மாறாக களை முளைத்தபின், அல்மிக்ஸ் 4 கிராம்/எக்டர்+ 0.2 சதவிகிதம் ஒட்டும்திரவத்தை சேர்த்து, விதைத்து 20 நாட்களில் தெளிக்க வேண்டும்.  தொடர்ந்து விதை விதைத்து 40 வது நாளில் முதல் கைக்களை எடுக்க வேண்டும்.

மானாவாரி நெல்:

  • விதைத்து 5 நாட்களில் பென்டிமித்தலின் 1.0 கி/எக்டர் (அ) நனைக்கும் நாளன்று பிரிட்டிலாக்லோர் +சேஃப்னர் (சோபிட்) 0.45 கிலோ/எக்டர் மழை பெய்யும் தினமென்று அளிக்க வேண்டும்.  இதனைத் தொடர்ந்து விதைத்து 30-35 நாட்களில் முதல் கைக்களை எடுக்க வேண்டும்.


  மேலே செல்க

  சிறப்பு நடைமுறைகள்:




   குட்டநாடு போன்ற சில பரப்புகளில், தற்போதைய வருடங்களில் காட்டு நெல் அபாயமாக மாறிக்கொண்டு வருகிறது. கீழ்காணும் உழவியல் முறைகள் காட்டு நெல்லினால் ஏற்படும் பாதிப்பினை வெகுவாக கட்டுப்படுத்துகிறது.

  • உலர் விதைகளை 20 சதவிகிதம் கால்ஸியம் பெராக்சைடுடன் 4% பசை பொருளான கரைசலை கலந்து விதைமுலாம் கொடுக்க வேண்டும்.  பூசிய விதைகளை வயலில் 10-15 செ.மீ அளவு நீர் இருக்குமாறு பாசனம் செலுத்தி பின் வீசி விதைத்தல் முறையில் விதைக்க வேண்டும்.

  • காட்டு நெல் முளைப்பைத் தடுக்க 10-12 நாட்களுக்கு நீர் அளவை பராமரிக்க வேண்டும்.

  •  வயலில் நீரை வடிகட்டி, நாற்று வேகமாய் வளர்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து மற்றும் சாம்பல்சத்தினை அளிக்க வேண்டும்.

    சல்வினியா மொலஸ்டா (ஆப்ரிக்கன் பயல்) கட்டுப்பாடு:

    • நஞ்சை நிலத்தில் நடவு செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே சல்வினியா மண்ணில் நன்கு கலங்குமாறு உழவு செய்ய வேண்டும்.  இவ்வாறு செய்வதால் களைகள்  கட்டுப்படுவதுடன் மண் வளமும் அதிகரிக்கிறது.
    • இரசாயன முறைக் கட்டுப்பாட்டில், பேராகுவட் 42 சதவிகிதம் டிபி@ 3.15 கிலோ/எக்டர் (0.75 கிலோ செயல்படுபொருள் /எக்டர்) என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

  மேலே செல்க