|
நெற்பயிர் சாகுபடித் திட்டம்
|
பயிர் வளர்ப்புமுறைப்பாங்கு என்பது குறிப்பிட்டநிலத்தில், ஒரு வருடத்தில், வரிசை முறையில் பயிர் மற்றும் தரிசுவிடல் ஆகியன அமையும் முறை ஆகும். பண்ணையில் வளரும் அனைத்து பயிர் வளர்ப்புமுறைப் பாங்குகளும், பயிர் சாகுபடித் திட்டமாகும். மேலும் பயிர் சாகுபடித் திட்டம் என்பது,பண்ணை வளங்கள், இயல்நிலை, உயிரியல், தொழில்நுட்ப இயல் மற்றும் சமூக இயல் காரணிகள் அல்லது சுற்றுச்சுழல் ஆகியவற்றோடு ஒருங்கிணைந்து,சேர்ந்து செய்யும் செயல்களை உள்ளடக்கும் முறையாகும். தொடர் சாகுபடித் திட்டம் இதில் ஒரே வயலில், அறுவடை செய்த உடனே தொடர்ச்சியாக முன் விளைந்த பயிரையே அடுத்த பயிராக பயிரிடுதல். நெல் சாகுபடியில் இது ஒரு விதமான பல பயிர் சாகுபடி முறை. கலப்புப் பயிர் சாகுபடி:-ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான இரகங்களைப் பயிரிட்டு, வரிசை அமைவு முறையின்றி ஒன்று சேர்த்தல். இதில் ஊடுபயிர் போட்டி அதிகமாகக் காணப்படும். ஒரு பயிர் சாகுபடி த் திட்டம்:தொடர்ந்து சில வருடங்களுக்கு அதிக பரப்பளவு கொண்ட நிலத்தில் நெற்பயிரையே தொடர்ந்து பயிரிடுதல். கட்டைப்பயிர் வளர்த்தல்:தீவிர பயிர் சாகுபடியின் ஒரு முக்கியமான முறையாக, அறுவடைக்குப் பின்னும் பயிர்கட்டைகளை வயலிலேயே விட்டுவிட்டு, அதிலிருந்து புது பயிர் உருவாக்குதலே கட்டைப்பயிர் வளர்த்தல் முறையாகும். தொடர்பயிர் நடவுத் திட்டம்:முதற்பயிர் நிலைத்திருக்கும் போதே இரண்டாம் பயிரை நடுதல். இவ்வாறு செய்வதினால் முதற்பயிர் அறுவடையின்போது இரண்டாம் பயிர் முற்றிலும் வளர்ந்துவிடும். |
|
மேலே செல்க |
தமிழ்நாட்டின் நெற்பயிர் சாகுபடித் திட்டங்கள்: | |
தொடர் சாகுபடித் திட்டம்:
பாசன ஆயக்கட்டு பரப்புகள்:
நன்கு நீர்பாயும் பரப்புகள் (வடிமுனைக் கிணறு):-
ஏரிப்பாசனப் பரப்புகள்:
|
|
மானாவாரி பரப்புகள்: மேட்டுப்பாங்கான நெல்/சிறு தானியங்கள்/ பயறு வகை / நிலக்கடலை/ பருத்தி/ மிளகாய் (செப்டம்பர்-பிப்ரவரி) |
|
இரக கலப்புப்பயிர்த் திட்டம்:
|
|
மேலே செல்க |
கர்நாடகாவில் நெற்பயிர் சாகுபடித் திட்டம்: | |
ஒரு பயிர் சாகுபடி முறை:
கர்நாடகாவின் துங்கபத்ரா திட்டப்பரப்பு, நெல் - நெல் ஒரு பயிர் சாகுபடி முறையினால் தான் நெல் சாகுபடி ஓங்கி நிற்கிறது. தொடர் சாகுபடித் திட்டம் கர்நாடகாவின் தெற்கு நடுநிலை மண்டலத்தின் நெல் சார்ந்த பயிர்த் திட்டங்கள் பின்வருமாறு: இம்முறை நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்பைத் தருகிறது. மேலும், கர்நாடகா மலைப்பகுதிகளில் இருக்கின்ற பருவவாரி தரிசு நிலம், தொழிலாளர்கள் மற்றும் எஞ்சிய ஈரத்தன்மையினை உபயோகித்துக் கொள்ள உதவுகிறது. முதன்மை பயிர் மகசூலில் 76-350 சதவிகிதம் மகசூலை கட்டைப்பயிர் தருகிறது. கட்டைப் பயிரில் முதன்மை பயிரைவிட 24 சதவிகிதம் குறுகிய வளர்ச்சிக்காலமும் 59 சதவிகிதம் அதிக கொள் மகசூலும் கிடைக்கிறது. மல்நாடு பகுதியில் கட்டைப்பயிர் வளர்த்தல்:
|
|
மேலே செல்க |
கேரளாவின் நெற்பயிர் சாகுபடித் திட்டங்கள்: | |||||||||||||||||||||||||||||||||||||
தொடர் சாகுபடித் திட்டம் :
|
|||||||||||||||||||||||||||||||||||||
ஊடுபயிர் திட்டம் : தாழ்வான நிலத்தில் (பகுதி உலர்) விதைப்பு நெல்லுடன் தட்டைப் பயறுவகையை (12.5 கிலோ/எக்டர்) என்ற அளவில் நெல்லுடன் ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் பசுந்தாள் உரமாக செயல்படுகிறது. தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும், நெல்வயல், நீரில் மூழ்கிவிடின் 6 வாரங்களான தழைப்பருவத்தில் இருக்கும் தட்டைப்பயறு அழுகி தானாக மண்ணில் புதைந்து விடும். இதனால் மண்ணுக்கும் போதுமான பசுந்தழை உரத்தை அளிக்கிறது. இத்தகைய தட்டைப்பயறு சாகுபடி பகுதி உலர் நெல்லில் களை அழுத்தத்தையும் குறைக்கிறது.
|
|||||||||||||||||||||||||||||||||||||
தொடர்பயிர் நடவுத் திட்டம் : பயறு வகையின் விதைகளை தனியாகவோ, கலந்தோ, நெல் வயலில் அறுவடைக்கு 21 நாட்கள் முன்னரே நீர் தேங்கிய நிலையில் வீசிவிதைத்து பின் நீரை வடித்தபின் செய்வதே தொடர்பயிர் சாகுபடியாகும். நெற்பயிர் அறுவடைக்குப்பின் வயலில் எஞ்சிய ஈரத்தன்மை மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொண்டு, விதைத்த பயறு விதைகள் அறுவடை வரை நன்கு வளர முடிகிறது. நெற்பயிர் முதிர்ந்த நிலையில் பயறுவிதைகள், கொண்டைக்கடலை, பட்டாணி போன்ற விதைகளை விதைக்க வேண்டும். இம்முறையினால் நேரம் சேமிப்பு, பணம் சேமிப்பு (நில தயாரிப்புக்கு செலவளிப்பது) ஏற்படுகிறது. தொடர்பயிர் சாகுபடி முறை மேட்டுபாங்கான மற்றும் தாழ்வான, நெற்பயிர் வளர்ப்பு பகுதிகளில் வழக்கமாக உள்ளது.
|
|||||||||||||||||||||||||||||||||||||
மேலே செல்க |