|
சந்தை மேலாண்மை
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் |
நெல்லிற்கான முக்கிய சந்தைகள்:
கர்நாடகா:
பெங்களூர், பத்ராவதி, தேவனாகிரி, கங்காவதி, மான்விலிங்கா சுகர், ரெய்ச்சூர், டி.நரசிபூர், பங்கார்பெட், மதுரை, மங்களூர், மைசூர், டும்கூர், பெல்லாரி.
கேரளா:
எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, நெடுமுடி
தமிழ்நாடு:
தஞ்சாவூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், கோயம்புத்துார், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல். |
மத்திய மாநில கூட்டுகொள்முதல் திட்டம் |
- மத்திய அரசின் இத்திட்டப்படி மாநில அரசு விவசாயிகளிடமிருந்து உரிய முறையில் கொள்முதல் செய்து, பொது விநியோக முறைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
- மாநில நுகர்பொருள் விநியோகக் கழகம், மார்க்ஃபெட், நபெஃட், தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் டி.டி.சி.சி போன்ற நிறுவனங்கள் வழியே மாநில அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடிக் கொள்முதல் செய்கின்றது. எனினும் இந்திய உணவுக் கழகம் இதில் முக்கியப் பங்காற்றுகின்றது.
- மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் குடிமை பொருள் வழங்கு துறை மட்டுமே மத்திய அரசின் தலையீடற்ற கொள்முதலில் ஈடுபடுகின்றதுs.
- இதன் முக்கிய நோக்கம் விவசாயிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையில் நெல்லினைப் கொள்முதல் செய்வதாகும். இதனால் விவசாயிகளுக்குரிய விலை கிடைக்கச்செய்கின்றது. இந்நிறுவனம் தொகையினை வங்கிக் கணக்கு வரைவோலை மூலம் செலுத்தி விடுகின்றது
|
|
மேலே செல்க |
|
நேரடி நெல் கொள்முதல் செய்யும் நிரந்தர மையம் |
|
- நேரடி நெல் கொள்முதல் திட்டமானது தமிழ்நாடு மாநில குடிமை பொருள் வழங்கு துறையின் கீழ் இயங்குகின்றது. நெல் பயிரிடப்படும் பரப்பளவு மற்றும் பருவம் ஆகியவற்றைப் பொறுத்து இந்த நிரந்தரக் கொள்முதல் மையங்கள் அமைக்கப்படுகின்றன.
- குறுவைப் பட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லினைக் கொள்முதல் செய்ய அக்டோபர்- நவம்பர் மாதங்களிலும், சம்பா பட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லினை ஜனவரி-மார்ச் மாதம் வரையிலும் நேரடி கொள்முதல் கொள்முதல் செய்ய மையங்கள் திறக்கப்படுகின்றன.
- நுகர்ப்பொருள் விநியோகக் கழகங்கள் மூலம் மாநில அரசால் இம்மையங்களின் கொள்முதல் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.
- கொள்முதல் செய்யப்பட்ட அளவு, சரக்கு இருப்பு, தொகை, சணல் பைகளின் இருப்பு போன்றவை தினந்தோறும் நுகர்ப்பொருள் விநியோகக் கழக தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
- இந்நேரடிக் கொள்முதல் நிலையங்களில் இரசீதுகள் சர்வதேசத் தரத்தில் அளிக்கப்படுகின்றன. இரசீதில் இரசீது எண், கொள்முதல்செய்யப்பட்ட நெல் இரகம், மொத்தப் பைகளின் எண்ணிக்கை, மொத்த எடையளவு, விலை/குவின்டால், ஆதார விலை/குவின்டால், மொத்த மதிப்பு, ஈரப்பத அளவு மற்றும் விவசாயிக்குச் செலுத்தப்பட்ட மொத்தத் தொகை போன்ற அனைத்துத் தகவலும் இடம் பெற்றிருக்கும்.
- தமிழகத்தில் மொத்தம் 1300 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 353 மையங்கள் உள்ளன
நெல் தானியங்களை அறுவடை செய்தவுடன் விவசாயிகள் இம்மையங்களிலிருந்து டோக்கன் பெற்றுக் கொள்கின்றனர். இந்த டோக்கன் எண்ணைப் பொறுத்து நெல் கொள்முதல் செய்யப்படுகின்றது.
- காயவைக்கப்பட்ட நெல்லினை துாற்றுவதற்கு இலவசமாக நெல் துாற்றும் இயந்திரங்கள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு துாற்றப்பட்ட நெல்லானது ஈரப்பதம், கல் மற்றும் மண் துகள்கள் நீக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றது.இம்மையங்கள் செயல்படும் நேரம் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 வரை மற்றும் மதியம் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை.
|
|
மேலே செல்க |
நடமாடும்/பருவ காலம் சார்ந்த நேரடி கொள்முதல் மையங்கள் |
|
- தமிழ்நாடு அரசு குடிமை பொருள் வழங்கு துறையால் இவை ஆரம்பிக்கப்படுகின்றது . இந்தக் குறுகிய கால மையங்கள், நேரடி கொள்முதல் மையங்களைப் போலவே இயங்கும். இந்த மையங்கள் சில பகுதிகளில் நேரடி கொள்முதல் மையங்கள் இல்லாததால் அமைக்கப்பட்டன. மேலும் இவைகள் கொள்முதல் காலங்களில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்கவே கொண்டு வரப்பட்டன.
- ஒரு பகுதியில் ஒரு தனி விவசாயியோ அல்லது குழுவாகவோ, 300 மூட்டைகள் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு நெல் தானியங்கள் இருந்தால் நேரடி கொள்முதல் மையத்திற்கு தகவல் தெரிவித்தால் அவர்களே வந்து வாங்கிக் செல்வார்கள். பிற நேரடி கொள்முதல் மையங்களும் இவ்வாறே வயலுக்கு வந்து நெல் தானியங்களை கொள்முதல் செய்கின்றார்கள்.
|
|
|
நெல் கொள்முதல் செய்யும் மையங்கள்
தமிழ்நாடு |
|
- விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய இந்த நேரடி கொள்முதல் மையங்களை தமிழ்நாடு மாநில குடிமை பொருள் வழங்கு துறை அமைத்துள்ளது.
- தமிழக அரசு, மத்திய மாநில கூட்டுகொள்முதல் திட்டத்தின் படி காவிரி டெல்டா மற்றும் பிற பகுதிகளில் நெல் கொள்முதல் செய்ய போதுமான நெல் கொள்முதல் மையங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் படி அமைத்துக்கொள்ள தமிழ்நாடு மாநில குடிமை பொருள் வழங்கு துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
- நெல் உற்பத்தி அளவைப் பொறுத்து டெல்டா தவிர பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைத்துக்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- கூட்டுறவு விற்பனை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடனுதவிச் சங்கங்கள் வழியாக கொள்முதல் செய்துகொள்ள கூட்டுறவுச் சங்கப் பதிவாளருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதாவது டெல்டா மற்றும் பிற தாலுக்கா கிடங்குகளில் (சென்னை, நீலகிரி தவிர) நெல் நேரடி கொள்முதல் மையங்கள் மூலம், மத்திய அரசின் ஆணைப்படி மேற்கொள்ளப்படுகின்றது.
- இவ்வாறு சேகரிக்கப்பட்ட நெல் தானியங்கள் பொது விநியோகத்திற்காக மத்திய அரசின் தானியக் கிடங்குகளில் மொத்தமாக சேமித்து வைக்கப்படுகின்றன.
தொடர்புக்கு:
தமிழ்நாடு மாநில குடிமை பொருள் வழங்கு கழகம் ,
தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டு அறை,
குறைகளைத் தெரிவிக்க: 094451 90660
நெல் கொள்முதல் பிரச்சனைகளுக்கு: 09445195840
முதுநிலை மண்டல மேலாளர், தஞ்சாவூர்
அலுவலகம்: 04362-235321, Private: 04362-231909
|
|
மேலே செல்க |
கேரளா |
|
- கேரள மாநில குடிமை பொருள் வழங்கு துறை (சப்ளைகோ), கேரள மாநில குடிமை பொருள் வழங்கு கழகம் மிகவும் பிரபலமாக 'சப்ளைகோ' என அழைக்கப்படுகின்றது. இது அத்தியாவசிய மற்றும் நுகர்வோர் பொருட்களின் மிக பெரிய சில்லறை விற்பனை சங்கிலி அமைப்பாக கேரள மக்களுக்கு விளங்குகிறது.
- இது கேரள அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கொள்முதல் விலையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்கின்றது.
- இதைத் தவிர 'சப்ளைகோ' கேரள பொது மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு நலன் தரக்கூடிய மற்ற திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதில் நெல் கொள்முதல் திட்டமும் ஒன்றாகும்.
- 'சப்ளைகோ' வால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலைகள் நெல் தானியங்களை நேரடியாக வயலிலிருந்து வாங்கி, அரிசியாக மாற்றி அவற்றை அண்ணப்பூர்ணா, அந்த்யோதயா திட்டங்களின் கீழ் பயன்பெறும் பொது மக்களுக்கு வழங்க அங்கீகரிக்கப்பட்ட மொத்த வணிகர்களுக்கு விற்பனை செய்கின்றனர்
- 'சப்ளைகோ' (அளிக்கும் குழு) நெல் கொள்முதல் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம், கேரள விவசாயிகள் தங்களின் நெல்லுக்கு சிறப்பான விலையைப் பெறுகின்றனர். மேலும் இத்திட்டம் தனியார் ஆலைகள் 'சப்ளைகோ'வைவிட கூடுதல் விலை அளித்து நெல் கொள்முதல் செய்யும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
- மேலும், ரேஷன் கடைகளில் குறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழேயிருக்கும் ஏழை பொதுமக்களுக்கு தரமான அரிசியை வழங்குவதை "சப்ளைகோ" உறுதிப்படுத்துகின்றது.
தொடர்பு கொள்வதற்கான முகவரி:
மேலாளர் (வணிகம்),
கேரள மாநில குடிமை பொருள் வழங்கும் கழகம் லிட்,
மாவேலி பவன், காந்தி நகர், கொச்சி - 682 020
தொலைபேசி- கட்டுப்பாட்டு அறை - 09446400441
மின் அஞ்சல் -agmc@supplycomail.com
|
|
மேலே செல்க |
|
கர்நாடகா |
|
- "A" தர நெல் வகைகளான சோனா, ராஜஹம்ஸா, ஐஆர் 64 ஆகியவை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,030/- என்று கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற பொது இரகங்கள் குவிண்டாலுக்கு, ரூ.1000/- என கொள்முதல் செய்யப்படுகிறது.
- கூடுதலாக, குறைந்த ஆதார விலையுடன் சேர்த்து, ஒரு குவின்டால் தரமான நெல்லுக்கு ரூ.100 சேர்த்து வழங்குவதாக கர்நாடகா அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதைத் தவிர மேலும், விவசாயிகளுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.10/- அதிகமாக உயர்த்தியுள்ளது.
- அறுவடை செய்த நெல்லினை குறிப்பிட்ட மையத்திற்கு கொண்டு செல்வது விவசாயிகளின் பொறுப்பாகும். பகல் வேளைகளில் விவசாயிகளின் ஆர்வத்தைப் பொறுத்து முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் நெல் இங்கு கொள்முதல் செய்யப்படுகின்றது
- மாவட்டத்தின் அனைத்து (ஐந்து) தாலுகா தலைமையகத்திலும் நெல் கொள்முதல் மையங்களை நிறுவப்படுவதற்கான செயல்களை மாவட்ட நிர்வாகம் தொடங்கி வைத்துள்ளது. சிந்தனுார் பகுதியில் இரண்டு நெல் கொள்முதல் மையங்களும், மற்றும் மற்ற தாலுகா தலைமையகமான ராய்ச்சூர், மன்வி, டியோதுர்கா மற்றும் லிங்சுகுர் ஆகிய இடங்களில் முறையே ஒரு நெல் கொள்முதல் மையமும் நிறுவப்படவுள்ளது.
- உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கும் துறைகளின் அதிகாரிகளை, மாவட்டத்தின் அனைத்து கொள்முதல் மையங்களிலிருந்தும் நெல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் சிந்தனுாரில், இரண்டு மையங்களை APMC (ஏபிஎம்சி) வளாகத்தில் ஏற்கனவே இத்துறை தொடங்கியுள்ளது.
- பெல்லாரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 கொள்முதல் மையங்களில் 7 மையங்கள் APMCக்கு சொந்தமான இடங்களில் செயல்படுகின்றன. இந்த மையங்கள் பெல்லாரி தாலுக்காவிலுள்ள பெல்லாரி, ஹகடலி, ஹகாரி பொம்மனாஹல்லி, கம்ப்லி, சிர்குப்பர் மற்றும் குர்கோடு, சிர்குப்பா தாலுக்காவிலுள்ள ஹட்ச்சோலி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. எஞ்சிய மூன்று மையங்கள் டெக்கவக்கோடா, கரூர், மற்றும் யெம்மிகனுார் ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் தேவைக்கேற்ப ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
- மின்னணு எடையிடும் இயந்திரம், ஈரப்பதம் சோதனையிடும் கருவி ஆகியவற்றை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
கர்நாடகா உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கும் கழகம்
16/1, அஹரா பவன்,
மில்லர் பன்ட் பகுதி,
வசந்த் நகர், பெங்களூரு,
கர்நாடகா 560052
தொலைபேசி எண்: 080 2226 0932
|
|
மேலே செல்க |
சந்தை தகவல் மூலங்கள் |
உற்பத்தியாளர்கள், தங்களின் உற்பத்தி பற்றி திட்டமிடுவதற்கும், சந்தை வழி உற்பத்திகளை மேற்கொள்வதற்கும், விற்பனைச் செய்தி மிகவும் முக்கியமானதாகும். இந்த செய்திகள் மற்ற வணிகர்களுக்கும் சம அளவில் தேவைப்படுகிறது.
தற்போது, இந்திய அரசானது, "விற்பனை மற்றும் தகவல் இயக்ககம்" மூலமாக வேளாண்மை விற்பனைத் தகவல் வலையமைவைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பகுதிகளில் உள்ள அனைத்து வேளாண் உற்பத்தி மொத்த விற்பனைக் கூடங்களையும் இணைப்பதால், தற்போதைய விற்பனைத் தகவல்களில் திருத்தம் ஏற்படுத்துவது பற்றிய செய்திகளை இந்த வலையமைவில் வலியுறுத்தியுள்ளனர். அங்காடியிலிருந்து பெறப்படும் விவரக் குறிப்புகளை இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதன் மூலம் காணலாம்.
நெல் விற்பனை முகமைகள்
இந்திய உணவு கழகம்,
மாநில வேளாண் விற்பனை கூட்டமைப்பு (சந்தைக் கிடங்குகள் ),
மாநில கூட்டுறவு சங்கங்கள்,
மொத்த வணிகம் செய்பவர்கள் (நெல் ஆலையாளர்கள், சில்லறை வணிகர்கள்) |
மேலே செல்க |
|
விற்பனை மற்றும் ஆய்வு இயக்ககம்
|
|
- நாட்டின் வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களின் விற்பனை வளர்ச்சியை ஒருங்கிணைத்தல். வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களின் தரம் பிரித்தலை உயர்த்துதல். குளிர்பதன சேமிப்பை ஊக்குவித்தல் .
- நாடு முழுவதும் பரவியுள்ள மண்டல அலுவலகம் (11) மற்றும் துணை அலுவலகங்கள் (37) மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே தொடர்பு ஏற்படுத்துதல்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
என்ஹச்-4 சிஜிஓ காம்ப்ளக்ஸ்-
இணையதளம்: www.agmarknet.nic.in |
இந்திய உணவுக் கழகம் |
|
- விவசாயிகளின் ஆர்வத்தைப் பாதுகாப்பதற்காக சிறந்த விலை ஆதார செயல்முறைக்கு , உணவு தானியங்களை கொள்முதல் செய்வது. பொது (அரசு) வழங்குதல் திட்டத்திற்காக, நாடு முழுவதும், உணவு தானியங்களை வழங்குதல்.
- தேசிய உணவு பாதுகாப்பை (பாதுகாப்பதற்கு) உறுதி செய்வதற்கு உணவு தானியப் பொருட்கள் காப்பு இருப்பு அளவை பராமரித்தல்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: பரக்ஹம்பா லேன், கன்னாட் இடம்,
புதுடெல்லி-110001
இணையதளம்:www.fciweb.nic.in |
|
|
மத்திய சேமிப்பு கழகம் |
|
- அறிவியல் சேமிப்பு மற்றும் கையாளும் வசதிகளை வழங்குதல்.
- பல்வேறு முகமைகளுக்கு உணவுப் பொருட்கள் கிடங்கு உள்ளமைப்புகளை கட்டுமானம் செய்வதற்காக, ஆலோசனை சேவைகள்/பயிற்சிகளை வழங்குகின்றன.
- ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான கிடங்கு வசதிகளை செய்தல்.
- சேமித்து வைக்கப்படும் பொருட்களில் பாதிப்பற்ற சேவைகளை வழங்குதல்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
4/1, சிரி நிறுவனப் பரப்பு,சிரிபோர்ட் (எதிரில்)
புதுடெல்லி - 110 016.
இணையதளம்: www.fieo.com/cwc/ |
வேளாண்மை மற்றும் பதனப்படுத்திய பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் |
|
- ஏற்றுமதி செய்வதற்காக தொழிற்துறை சார்ந்த வேளாண் பொருட்களின் பட்டியலை நிறுவுதல். சுற்றாய்வு, சந்தை நிலவர ஆய்வு , இடர்காப்பு உதவி, மற்றும் மானியத் திட்டங்களை நடத்துவதற்காக, தொழிற்சாலைகளுக்கு நிதி உதவிகளை வழங்குகின்றன.
- பட்டியலிட்ட பொருட்களுக்கு ஏற்றுமதியாளர்களை பதிவு செய்தல்.
- பட்டியலிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக அதன் தர நிலை மற்றும் தனிகுறிப்பீடு ஆகியவற்றை பொருந்த செய்தல்.
- இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்காக ஆய்வு மேற்கொள்ளுதல்.
- பட்டியலிடப்பட்ட பொருள்களின் தொகுப்பை உயர்த்துதல்.
- ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி மற்றும் அட்டவணையிட்ட பொருட்களின் வளர்ச்சியை நிறுவுதல்.
- பட்டியலிடப்பட்ட பொருட்களின் விற்பனையை உயர்த்துவதற்காக, புள்ளியியல் சேகரிப்பு மற்றும் விளம்பரப் படுத்தலை மேற்கொள்ளுதல்.
- அட்டவணையிட்ட பொருட்களைச் சார்ந்த தொழிற்துறைகளின் பலவகை நோக்குகளில் பயிற்சி வழங்குதல்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
4/1 சிரி நிறுவனப் பரப்பு.
ஸ்ரீபோர்ட் புதுடெல்லி-110016
இணையதளம்: www.fieo.com/cwc/ |
|
|
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் |
|
- வேளாண் பொருட்களின் உற்பத்தி, பதனிடுதல், விற்பனை, சேமிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றை மேற்கொள்வதற்கான நிகழ்ச்சிகளை திட்டமிடுதல், வலியுறுத்துதல் மற்றும் நிதியுதவி அளித்தல்.
- முதன்மை, மண்டல, மாநில மற்றும் தேசிய அளவு கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு நிதியுதவிகளை வழங்குதல். இதன் செயல்கள்;
- வேளாண்மை உற்பத்தியின் தொழில் செயல்முறைகளை வளர்ச்சி செய்வதற்காக,குறைந்த பட்ச மூலதனத் தொகை மற்றும் நடப்பு மூலதன நிதி ஆகியவற்றை வழங்குகின்றனர்.
- பங்கு மூலதனக் கூறுகளை வலிமைப் படுத்துதல் மற்றும்
- போக்குவரத்து வாகனங்களை வாங்குதல்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
4, சிரி நிறுவனப் பரப்பு, புதுடெல்லி-110016
இணையதளம்: www.ncdc.nic.in |
இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டிணைப்பு |
|
- இந்திய அரசு மத்திய முதன்மை முகமை மூலம் பயறு வகைகள், சிறு தானியம் மற்றும் எண்ணெய் வித்துக்களை விலை நிர்ணயத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்கிறது.
- சேமிப்பு வசதிகளை வழங்குதல்.
- இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டிணைப்பின் நுகர்வோர் விற்பனைப் பிரிவு, டெல்லி அதன் சில்லரை விற்பனை (பஜார்) ஒருங்கமைவு மூலம் தினசரித் தேவைக்கேற்ப நுகர்வோரின் பொருட்களை வழங்கி சேவை செய்கின்றன.
- உள்நாட்டு வாணிபத்திற்காக பயறுவகைகள், பழங்கள் ஆகியவற்றை பதனிடுகின்றன.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: நேஃபட்வீடு, சித்தார்தா என்கிலேவ், புது டெல்லி – 110014
இணையதளம்: www.nafed-india.com |
|
|
வெளிநாட்டு வாணிபத்தின் முதன்மைச் செயலாளர் |
|
- பல்வேறு வணிகச் சரக்குகளை ஏற்றுமதி/இறக்குமதி செய்வதற்கான வழிமுறைகளை வழங்குகின்றன.
- வேளாண் வணிகச் சரக்குகளின் ஏற்றுமதியாளர்களுக்கு இறக்குமதி-ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்குதல்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
உட்யாக் பவன்,
புது டெல்லி.
இணையதளம்: www.nic.in/eximpol |
வணிக அறிவுத் திறன் மற்றும் புள்ளியியல் முதன்மைச் செயலாளர் |
|
விற்பனை சார்ந்த குறிப்புகளை சேகரித்து, தொகுத்து, பரப்புதல். அதாவது, ஏற்றுமதி-இறக்குமதி குறிப்புகள், உணவு தானியங்களின் உள் மாநில இயக்கங்கள், ஆகியவைகளின் குறிப்பீடுகள்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
1, கெளன்சில் வீடு சாலை
கொல்கத்தா -1 |
|
|
பொருளியல் மற்றும் புள்ளியியல் முதன்மைச் செயலாளர் |
|
- வேளாண்மைக் குறிப்பீடுகளைத் தொகுத்து வளர்ச்சி மற்றும் திட்டமிடுதல் மேற்கொள்ளுதல்.
- வெளியீடு மற்றும் இணையதளம் மூலமாக விற்பனை அறிவுத்திறனைப் பரப்புதல்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
சாஸ்த்ரி பவன், புது டெல்லி
இணையதளம்: www.agricoop.nic.in |
வேளாண் உற்பத்திப்பொருள் விற்பனை வாரியம் |
|
- பொருள்களின்வரத்து, நடைமுறையிலுள்ளவிலை மற்றும்பொருள்களின் விற்பனை விலை ஆகியவற்றைப்பற்றிய தகவல்களை வழங்குதல்
- மற்ற சந்தை வாரியம் அல்லது இணைந்த குழுமங்களுக்கு விற்பனைத் தகவல்களை வழங்குகின்றன. பயிற்சிகள்.
- சுற்றுலாமற்றும்பொருட்காட்சிகளை அமைத்தல்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
சாஸ்த்ரி பவன், புது டெல்லி
இணையதளம் : www.agricoop.nic.in
|
|
|
மாநில வேளாண்மை விற்பனை வாரியம் |
|
- மாநிலத்தில்விற்பனைசீரியக்கத்தைஅமல்படுத்துகின்றனர்.
- குறிப்பிட்டவேளாண்உற்பத்திபொருளைவிற்பனை செய்வதற்காக உள்ளமைப்பு வசதிகளை அளித்தல்.
- விற்பனைக் கூடங்களில் வேளாண் உற்பத்திப் பொருட்களை தரம் பிரித்தல்.
- தகவல் சேவைகளுக்காக அனைத்து விற்பனைக் குழுக்களையும் இணைந்து செயல்படுத்தச் செய்தல்.
- நிதி நிலை மோசமாக இருக்கும் அல்லது கடன் மற்றும் நன்கொடை தேவையிலிருக்கும் விற்பனைக் கூட குழுக்களுக்கு உதவுகின்றன.
- விற்பனைத் திட்டத்தில் உள்ள தவறான நடத்தைகளை அகற்றுதல்.
- மாநிலத்திலுள்ள அனைத்து அங்காடிக் குழுக்களை ஒன்றிணைக்க, விற்பனை சார்ந்த தகவல்களை வழங்குகின்றன.
- வேளாண்மை விற்பனை சார்ந்த பாடங்களில் கருத்தரங்கு, பணிமனை மற்றும் கண்காட்சிகளை அமைத்தல் மற்றும் வேளாண்மை விற்பனைப் பற்றி பல கோணங்களில் விவசாயிகளுக்கு பயிற்சிகளை வழங்குதல். மேலும் இந்த வாரியம் வேளாண் சார்ந்ததொழில்களையும் வலியுறுத்துகின்றன.
|
கிசான் தொலைபேசி சேவை மையங்கள் |
|
- விவசாயிகளுக்கு, வல்லுநர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
- இலவச தொலைபேசி இணைப்புகள் மூலம் நாடு முழுவதும் இம்மையங்கள் செயல்படுகின்றனy.
- நாடு முழுவதும் பொதுவான நான்கு இலக்க எண்.1551 என்ற எண் இம்மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
(புது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், சண்டிகர் மற்றும் லக்னெள) |
|
மேலே செல்க |
வேளாண் விற்பனை - சார்புடைய இணையதள இணைப்புகள் |
|
மேலே செல்க |
விற்பனை - செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை |
செய்ய வேண்டியவை |
- நெல்லை தகுந்த முதிர்ச்சிப் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.
- தேவையான காலத்திற்கு, நெல்லை கொட்டகத்தில் உலர்த்த வேண்டும்.
- கதிரடித்தல் மற்றும் நெல் துாற்றுதல் போன்ற நடவடிக்கைகளை சிமெண்ட் தரையில் மேற்கொள்ள வேண்டும்.
- சந்தைத் தவல்களை www.agmarknet.nic.in போன்ற இணையதளம், செய்தித்தாள், தொலைக்காட்சி, வேளாண் உற்பத்திப் பொருள் விற்பனை வாரிய அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலமாக அறிந்து கொண்டு பின் நெல்லை விற்பனை செய்ய வேண்டும்.
- நெல் விலைகளில் ஏற்ற தாழ்வுகளை தடுக்க எதிர்கால வணிகம் மற்றும் ஒப்பந்த வணிகம் போன்ற வசதிகளை பயன்படுத்த வேண்டும்.
- நெல் உற்பத்திக்கு சிறந்த விலையைப் பெற ஒப்பந்த விற்பனையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அறுவடை செய்த நெல் தானியங்களை சேமித்து வைத்து பின் தகுந்த/ஏற்ற விலை வரும் போது விற்பனை செய்ய வேண்டும்.
- மிதமிஞ்சிய உற்பத்தி ஏற்பட்ட நிலையில் ஆதரவு விலைத்திட்டத்தை பயன்படுத்த வேண்டும்.
- அறுவடைக்குப்பின் சிறந்த, செயல்மிக்க மற்றும் முறையான தொழிற்நுட்பத்தை கடைபிடித்து அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளைத் தடுக்கவேண்டும்.
- விற்பனையில் அதிக லாபம் கிடைப்பதற்காக துரித மற்றும் திறனுள்ள விற்பனை வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- மலிவான மற்றும் ஏதுவான போக்குவரத்து முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- போக்குவரத்து மற்றும் சேமிப்பின் போது நெல் / அரிசியின் தரம் மற்றும் அளவை பாதுகாக்க நன்கு மூட்டை கட்டி வைக்க வேண்டும்.
- தானிய இழப்புகளை குறைப்பதற்காக பைகளில் (மூட்டை) நெல்லை எடுத்துச் செல்ல வேண்டும்.
|
செய்யக் கூடாதவை |
- தானியம் உதிர்தல் மற்றும் அரிசியில் விரிசல் போன்ற பிரச்சனைகள் அறுவடை தாமதமாக செய்வதால் ஏற்படுகின்றன.
- ஆலைப் பதப்படுத்தலின்போது தானியங்கள் உடைதலைத் தடுக்க தானியமணிகளை மிகுதியாக உலர வைத்தலைத் தவிர்க்க வேண்டும்.
- நெல்லை தரம் பிரித்து விற்க வேண்டும். தரம் பிரிக்காமல் விற்பதினால், குறைவான விலையே கிடைக்கும்.
- உற்பத்தி செய்த நெல்லை, விலையின் போக்கு பற்றிய தகவல்களை சேகரிக்காமல் விற்பனை செய்யக் கூடாது.
- விலையில் ஏற்ற இறக்கம் அல்லது மிதமிஞ்சிய உற்பத்தி போன்ற தருணங்களில் நெல்லை விற்பனை செய்யக் கூடாது.
- எதிர்கால தேவையினை அறியாமலும், மதிப்பீடு செய்யாமலும் நெல் உற்பத்தி செய்ய கூடாது.
- அறுவடை செய்த உடனே நெல் தானியங்களை விற்கக் கூடாது. ஏனெனில் அச்சமயத்தில் அதிக அளவு உற்பத்தியின் காரணமாக விலை மிகவும் குறைவாகவே காணப்படும்.
- அறிவியல் அல்லாத சேமிப்புமுறைகளில் நெல் தானியங்களை சேமித்து வைக்கக் கூடாது. இதனால் நெல் தானியங்களின் அளவீடு மற்றும் தரம் கெடுதலுக்கான வாய்ப்பு உள்ளது.
- மிதமிஞ்சிய உற்பத்தி போன்ற தருணங்களில் உள்ளூர் வணிகர்களுக்கு தானியங்களை விற்பனை செய்யக் கூடாது.
- உற்பத்தியாளர்கள் நீண்ட விற்பனை வழித்தடத்தைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
- நெல் இழப்புகளை ஏற்படுத்தும் போக்குவரத்து முறையையோ, அல்லது போக்குவரத்துக்கு அதிக செலவாகும் முறையையோ தேர்ந்தெடுக்கக் கூடாது.
- ஏற்றுமதிவழி முறைகளில் குறைபாடுகள் வைக்கக் கூடாது
|
மேலே செல்க |
விற்பனை வழிகள்/தடங்கள் |
நெல் விற்பனையில் உள்ள முக்கியமான விற்பனை வழித்தடங்கள் கீழ்வருமாறு.
- உற்பத்தியாளர் - நெல் ஆலையாளர் - மொத்த விற்பனையாளர்-சில்லறை வணிகர் - நுகர்வோர்
- உற்பத்தியாளர் - தரகர் - ஆலையாளர் - மொத்த விற்பனையாளர் -சில்லறை வணிகர் - நுகர்வோர்
- உற்பத்தியாளர் - வணிகர் -ஆலையாளர் -மொத்த விற்பனையாளர் -சில்லறை வணிகர் -நுகர்வோர்
- உற்பத்தியாளர் -மொத்த விற்பனையாளர் (நெல்) - ஆலையாளர் - மொத்த விற்பனையாளர் (அரிசி) -சில்லறை வணிகர் -நுகர்வோர்
- உற்பத்தியாளர் -ஆலையாளர்-சில்லறை வணிகர் -நுகர்வோர்.
- உற்பத்தியாளர் - ஆலையாளர் -நுகர்வோர்.
- உற்பத்தியாளர் - கொள்முதல் முகமை - (இந்திய உணவு குழுமம்/மாநில அரசு/கூட்டுறவு சங்கங்கள்) – ஆலையாளர் (இந்திய உணவு நிறுவனம்/கூட்டுறவு சங்கங்கள்/தனியார்) - பங்கீட்டு முகமை (மாநில அரசு) - நியாய விலை/ரேஷன் கடை -நுகர்வோர்.
விற்பனை வழித்தடங்களை தேர்ந்தெடுக்கும் முறை
- நெல்/அரிசி விற்பனையில் பலவகை விற்பனை வழிகள் உள்ளன, சிறந்த வழியை பின்வருமாறு தேர்வு செய்யலாம்.
- உற்பத்தியாளருக்கு சிறந்த பலன் தரும் வழியே சிறந்ததாகக் கருதப்படுகிறது.
- போக்குவரத்துச் செலவு.
- வணிகர், தரகர், மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர் போன்ற இடைபட்டவர்களால் பெறப்படுகிற தரகு மற்றும் சந்தை வரம்புகள்.
- நிதி வளங்கள்.
- குறைந்த சந்தை செலவு கொண்ட குறுகிய விற்பனை வழித்தடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
|
மேலே செல்க |
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி |
ஏற்றுமதி வழிமுறைகள் :
- இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்து அதன் குறியீட்டு எண்ணைப்பெற வேண்டும். (இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து பதிவு எண்ணைப் பெறுவதற்கு முறையான வடிவில் (குறியீட்டு எண் CNX) விண்ணப்பிக்க வேண்டும். பின் இந்த எண்ணை அனைத்து ஏற்றுமதி விண்ணப்பங்களிலும் குறிப்பிட வேண்டும்.
- இறக்குமதி-ஏற்றுமதி குறியீட்டு எண்ணை (IEC) வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பொது இயக்குனரிடமிருந்து (DGFT) பெற வேண்டும்.
- இறக்குமதி-ஏற்றுமதி செய்ய விருப்பம் உள்ளவர்கள் உறுப்பினர் சான்றிதழ் பெறுவதற்கு வேளாண்மை மற்றும் பதனிட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் (APEDA) பதிவு செய்ய வேண்டும்.
- அரசிடமிருந்து பல்வேறு நன்மைகளைப் பெறுவதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.
- பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு, வேளாண்மை மற்றும் பதனிட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் பதிவு செய்து ஒதுக்கீட்டுச் சான்றிதழ் பெற வேண்டும்.
- பாஸ்மதி அல்லா மற்ற அரிசி ஏற்றுமதிக்கு, இந்த கழகத்துடன் பதிவு செய்து சான்றிதழ் பெறத் தேவையில்லை. (ஏற்றுமதியாளர்கள் மட்டும் பதிவு செய்தல் வேண்டும்).
- பதிவு செய்து ஒதுக்கீட்டுச் சான்றிதழைப் பெறுவதற்கு, ஏற்றுமதியாளர்கள் அவர்களின் ஏற்றமதி விவரம் மற்றும் ஒப்பந்தத்தை கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
- பதிவு மற்றும் ஒதுக்கீட்டு சான்றிதழ் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு மறுபதிவு செய்ய வேண்டும். பதிவு மற்றும் ஒதுக்கீட்டுச் சான்றிதழ் நிலையான ஆதாரச் சான்றாகும். உண்மைப் பத்திரத்தைத் தொலைத்துவிட்டு போலிச் சான்றிதழ்களை வழங்க இயலாது.
- ஏற்றுமதியாளர்கள் அதன் பின் தங்களின் ஏற்றுமதி ஆணைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.ஆய்வு நிறுவனங்கள் மூலம் பொருட்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டு பின் சான்றிதழ் வழங்கப்படும்.
- பின் ஏற்றுமதிப் பொருட்கள் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லபடும்.
- ஏதாவது ஒரு காப்புறுதி நிறுவனத்திலிருந்து கடல் சார்ந்த காப்புறுதியைப் பெற வேண்டும்.
- பொருட்களை கிடங்குகளில் வகைப்படுத்தி, ஏற்றுமதி-இறக்குமதி வரி நிறுவனம் கப்பலை அனுமதிப்பதற்கும் கப்பல் போக்குவரத்து இரசீதைப் பெறுவதற்கும் பொருட்களை அகற்றி, அனுப்பும் செயலியைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
- கப்பல் போக்குவரத்து இரசீதை, "ஒதுக்கி அனுப்பும்" இயக்கி ஏற்றுமதி இறக்குமதி வரி வீட்டில் சமர்பிக்க வேண்டும். அங்கு இந்த இரசீதுகள் சரிபார்க்கப்பட்டு அதனை உயர் அதிகாரிக்கு அனுப்பி ஏற்றுமதிக்காக, வண்டியில் எடுத்துச் செல்லும் உத்தரவைப் பெற வேண்டும்.
- கப்பலில் ஏற்றிய பிறகு, கப்பல் தலைவர், பொருள் ஏற்றியதற்கான இரசீதை துறைமுக அதிகாரியிடம் கொடுப்பார். அவர் துறைமுக விலையை கணக்கிட்டு, ஒதுக்கி அனுப்பும் இயக்கியிடமிருந்து பெற்றுக் கொள்வர்.
- கட்டணத்தை செலுத்தியபிறகு, "ஒதுக்கி அனுப்பும் இயக்கி" பொருள் ஏற்றியதற்கான சீட்டை துறைமுக அதிகாரியிடம் கொடுத்து குறிப்பிட்ட ஏற்றுமதியாளருக்கு ஏற்றுமதிக்கான இரசீதைத் தயாரித்து பெறுகின்றார்.
- பின் அந்த இயக்கி குறிப்பிட்ட ஏற்றுமதியாளரிடம் அந்த இரசீதைக் கொண்டு சேர்க்கின்றார்.
- ஏற்றுமதியாளர்கள், ஆதாரச் சான்றுகளைப் பெற்ற பிறகு, வணிகத் துறையிடமிருந்து, பொருட்கள் அனைத்தும் இந்தியப் பிறப்பிடம் கொண்டது எனக் குறிப்பிட்டு, பிறப்பிடச் சான்றிதழைப் பெறுகின்றனர்.
- ஏற்றுமதியாளர்கள் இறக்குமதியாளரிடம், கப்பல் சென்றடையும் நாள், கப்பலின் பெயர், பொருள் ஏற்றியதற்கான சீட்டு, நுகர்வோர் விலை விபரப் பட்டியல், பொருட்குவியலின் பட்டியல் ஆகிய விபரங்களைப் பற்றி தகவலை அறிவிப்பார்.
- ஏற்றுமதியாளர்கள் தங்களின் அனைத்து ஆதாரச் சான்றுகளையும் வங்கியில் கொடுத்து சரிபாரிக்க வேண்டும். வங்கியானது நன்மதிப்பு அசல் விண்ணப்பத்துடன் இந்த சான்றுகளை சரிபார்க்கச் செய்வர்.
- சரிபார்த்தபின், வங்கி ஆதாரச் சான்றுகளை வெளிநாட்டு இறக்குமதியாளர்களுக்கு அனுப்பி வைப்பர். அங்கு இதனை வைத்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
- சான்றுகளைப் பெற்ற பிறகு, இறக்குமதியளார் வங்கி மூலமாக பணத்தைச் செலுத்தி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு GR (ஜிஆர்) படிவத்தை அனுப்பி வைப்பார். இது ஏற்றுமதி வரவுத்தொகையை உணர்வதற்கான சான்றாகும்.
- கடமை குறைபாட்டுத் திட்டத்திலிருந்து பல்வேறு நன்மைகளை பெறுவதற்காக ஏற்றுமதியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
|
மேலே செல்க |
ஏற்றுமதியாளர்கள் |
வரிசை எண் |
ஏற்றுமதியாளர்கள் |
1. |
குமரகுரு ஹைடெக் நெல் நிறுவனங்கள் (தொழிற்துறைகள்)
புழுங்கல் அரிசி, பகுதி வேக வைத்த அரிசி, பொன்னி அரிசி, பச்சரிசி, ஆவியில் வேக வைத்த அரிசி, மெருகேற்றிய (பளபளப்பாக்கப்பட்ட) அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதியாளர்கள்.
முகவரி:116, சென்னிமலை ரோடு, காங்கயம், ஈரோடு, இந்தியா
இணையதளம் : http://www.kumaraguruhitecriceindustries.com |
2. |
(எஸ்விஎம்) அக்ரோ ஃபுட்ஸ் (வேளாண்மை உணவுகள்)
பொன்னி அரிசி, இட்லி அரிசி, ரோஸ்மட்டா அரிசி, சிவப்பரிசி, பச்சரிசி மற்றும் ஆவியில் வேக வைத்த அரிசி, இந்திய அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதியாளர்கள்.
முகவரி: 39, Point Caree Street, Nellithope, Pondicherry India
இணையதளம் : http://www.nelmani.com |
3. |
சிஎல் இன்டெர்நேஷனல்
பாஸ்மதி அரிசி, பாஸ்மதியல்லா மற்ற அரிசியின் ஏற்றுமதியாளர்கள்.
முகவரி: 43/41 மேற்கு பஞ்சாபி பாக்ஹ்
இணையதளம் : http://www.1121basmatirice.com |
4. |
பூம் பையிங் பிரைவேட் லிமிடெட் (தனியார் நிறுவனம்) - இந்தியா
அரிசி ஏற்றுமதியாளர்கள்.
முகவரி: E-986, சி.ஸி.பார்க்., புதுடெல்லி, இந்தியா
இணையதளம் : http://www.boombuying.net |
5. |
ஜெனி ரிச் இந்தியா வேளாண் வணிக நிறுவனம்
எண்ணெய் எடுக்கப்பட்ட அரிசித் தவிடு ஏற்றுமதியாளர்கள்
முகவரி: 139, சி.ஜி.ஈ.காலனி, துாத்துக்குடி, இந்தியா
இணையதளம் : http://www.jenirich.com |
6. |
குலாம் மற்றும் குலாம்
அரிசி ஏற்றுமதியாளர்கள்
முகவரி: பிஎம்சீ 3-4, பி.டீ. மெல்லோ சாலை,கடியல் கோடி (எதிரில்), மும்பை, இந்தியா
இணையதளம் : http://www.gulsafe.in |
7. |
ஹார்டுகோர் கார்பரேஷன்
அரிசி, பாஸ்மதி அரிசி, பாஸ்மதி அல்லா மற்ற அரிசி, மசூரி அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதியாளர்கள்.
முகவரி: ஹார்டுகோர் கார்பரேஷன், அலுவலகம் எண்:4, சோர்டியா சன்குல், நாசிக் சாலை நாசிக் - 422 101, இந்தியா
இணையதளம் : http://www.hcagroexports.com |
8. |
லட்சுமி அரிசி மற்றும் பருப்பு ஆலை
பாஸ்மதி அரிசி, பாஸ்மதி அல்லா மற்ற அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதியாளர்கள்.
முகவரி: 79, தானிய சந்தை, லத்வா 136 132, இந்தியா
இணையதளம் : http://www.rice-exporter.com |
9. |
குருநானக் அரிசி ஆலை
பாஸ்மதி அரிசி, இந்தியன் பாஸ்மதி அரிசி, நீண்ட தானிய பாஸ்மதி அரிசி, மென்மையாக்கப்பட்ட அரிசி, அரிசி தானியமணி, குட்டை தானிய பாஸ்மதி அரிசி, இடைரக தானிய பாஸ்மதி அரிசி, உலர் பாஸ்மதி அரிசி, பொன் பாஸ்மதி அரிசி, நருமண பாஸ்மதி அரிசி, சூப்பர் பாஸ்மதி அரிசி, வெள்ளை பாஸ்மதி அரிசி, சமைக்கும் அரிசி மற்றும் சாதா பாஸ்மதி அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதியாளர்கள்.
முகவரி: வில்லேஜ் சாக் மொஹமது, ஆர்.எஸ்.புரா, ஜம்மூ, இந்தியா
போன் : 91-192-3274143 கைப்பேசி எண் : +91-9419101452 தொலைநகல் : 91-192-3274143
இணையதளம் : http://www.halrice.net |
10. |
ஜோதி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம்
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி சேவையை வழங்குகின்றனர்.
தொழில்வகை : சேவை அளிப்பவர்கள்/ உற்பத்தியாளர்கள்/ மொத்த விற்பனையாளர்கள்/ ஏற்றுமதியாளர்கள்/ இறக்குமதி செய்பவர்கள்
முகவரி: 305, ஈசுவரன் வட்டம், அனிரி ராசமங்களம், வேலூர் மாவட்டம், திருப்பத்துார்,தமிழ்நாடு, இந்தியா
இணையதளம் : http://www.jothiexports.in |
11. |
கே-& பீ ஏற்றுமதியாளர்கள்
பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர்கள் Rice
தொழில் வகை : ஏற்றுமதியாளர்கள்/உற்பத்தியாளர்கள்/
முகவரி: எண்.70, 7 வது வீதி, அன்னை சிவகாமி நகர் எண்ணூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இணையதளம் : http://www.kandbexports.com |
12. |
எஃப் ஜி ஹச் நிறுவனங்கள்
அரிசி, பாஸ்மதி அரிசி, நீண்ட தானிய பாஸ்மதி அரிசி , பகுதி வேக வைத்த புழுங்கல் அரிசி, பாஸ்மதி அல்லா மற்ற அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதியாளர்கள்
தொழில் வகை : ஏற்றுமதியாளர்கள்
முகவரி: 9, முதல் வட்டாரம், கண்ணதாசன் நகர், சென்னை, தமிழ்நாடு,இந்தியா
இணையதளம் : http://www.fghenterprises.com |
13. |
காரோ இம்பெக்ஸ்
பாஸ்மதி அரிசி, 1121 பாஸ்மதி அரிசி, நீண்ட தானிய பாஸ்மதி அரிசி, பிரீமியம் பாஸ்மதி அரிசி, புசா பாஸ்மதி அரிசி, சூப்பர் பாஸ்மதி அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதியாளர்கள்.
தொழில் வகை : ஏற்றமதியாளர்கள்/உற்பத்தியாளர்கள்/மொத்த விற்பனையாளர்கள்
முகவரி:1, ஜேசீ தளம், பாலாஜி நகர்,முதல் வீதி, நங்கநல்லுார், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இணையதளம் : http://www.caroimpex.com |
14. |
ஸ்ரீ ராஜஸ்தான் டிரேடர்ஸ் (வணிகர்கள்)
பாஸ்மதி அரிசி, புசா பாஸ்மதி அரிசி, சுப்ரீம் தர பாஸ்மதி அரிசி, இந்தியன் அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதியாளர்கள்.
தொழில்வகை : ஏற்றுமதியாளர்கள்/மொத்த விற்பனையாளர்கள்/உற்பத்தியாளர்கள்
முகவரி: 10, அயலுார் முதிய முதலி வீதி, கொண்டித் தோப்பு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
இணையதளம் : http://www.srirajasthantraders.com |
15. |
ராசி ஏற்றுமதியாளர்கள்
அரிசி ஏற்றுமதியாளர்கள்.
தொழில் வகை : ஏற்றுமதியாளர்கள்
முகவரி:கோபால் நகர், திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா |
மேலே செல்க |
|