முதல் பக்கம் தொடர்புக்கு  

நாற்றங்கால் மேலாண்மை
நாற்றங்கால் வகைகள் மற்றும் அதன் தயாரிப்பு முறைகள்


1.    சேற்று நாற்றங்கால்
2.    பாய் நாற்றங்கால்
3.    புழுதி நாற்றங்கால்

சேற்று நாற்றங்கால்  
நாற்றங்கால் பரப்பு:
  • வழக்கமான முறையில் 1 எக்டரில் நடவு செய்ய 20 சென்ட் (800 சதுர மீட்டர்) நிலப்பரப்பை நீர்வளம் நிறைந்த இடத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
  • திருந்திய நெல் சாகுபடிமுறைக்கு நாற்றங்கால் பரப்பு 100 சதுர மீட்டர்/எக்டர் (அ) 2.5 சென்ட்/எக்டர் (அ) 1 சென்ட்/ஏக்கர் என்ற அளவில் தேவைப்படுகிறது.

wna

 

நாற்றங்கால் பாத்தி அமைத்தல்:
  • நன்கு நீர் வளம் மிகுந்த இடமாகவும், வடிகால் அமைப்பு உள்ள பகுதியாகவும் இருக்க வேண்டும். 2 முறை புழுதியுழவு கொடுக்க வேண்டும்.  பின்பு 1 டன் தொழு உரம் (அ) மக்கு எரு 20 சென்ட் நாற்றங்காலுக்கு அளிக்க வேண்டும்.
  • உரம் அளித்த பின்பு நன்கு நீர் பாய்ச்சி 2 நாளுக்கு ஈரத்தன்மை கிடைக்கும் வரை விட வேண்டும். பின்பு 2 முறை சேற்றுழவு தர வேண்டும். ஒரு வார இடைவெளியில் மறுபடியும் சேற்றுழவு கொடுக்க வேண்டும்.
  • குறைந்த வளம் கொண்ட நாற்றங்கால் மண்ணில் வளரும் நாற்றுகளை  20-25 நாட்களில் பிடுங்கி விடுவதால், 40 கிலோ டீஏபி அடியுரமாக அளிக்க வேண்டும்.இல்லையெனில் யூரியா 16 கிலோ மற்றும் சூப்பர் பாஸ்பேட் 120 கிலோ ஆகிய நேரடி உரத்தை அளிக்க வேண்டும்.
  • நிலத்தை முதல் சேற்றுழவுவிட்டு, சமப்படுத்திய பின்பு, பாத்திகள்  8-10 மீ நீளம், 2.5 மீ அகலம் கொண்டு அமைக்க வேண்டும்.2 பாத்திகளுக்கு இடையில் 30-50 செ.மீ வாய்க்கால் அமைக்க வேண்டும்.
  • முளைகட்டிய விதைகளை விதை பாத்தியின் மேல் சீராக விதைக்க வேண்டும்.
மேலே செல்க

mn
mat

2)பாய் நாற்றங்கால்:

     பாய் நாற்றங்காலில் விதைகளை திடமான மேற்பரப்பில் (கான்கிரீட் தரை/பாலிதீன் தாள்/நாற்று தட்டு)  மெல்லிய அடுக்கில் பரப்பிய மண் கலவையின்  மேல் சீராக விதைக்க வேண்டும்.  விதைத்த 14-20 நாட்களில் நடுவதற்கு, நாற்றங்கால் தயாராகிவிடும்.

நாற்றங்கால் பரப்பு :
          • தேவையான பரப்பு: 100 சதுர மீட்டர்/எக்டர் (அ) 2.5 சென்ட்/எக்டர் (அ) 1 சென்ட்/ஏக்கர்

          நாற்றங்கால் பாத்தி தயாரித்தல்:
           
                  • நன்கு நீர் வளம் மற்றும் வடிகால் அமைப்பு உள்ள இடமாக தேர்வு செய்ய வேண்டும்.
                  • மேல்பரப்பை நடு நரம்பு இல்லாத வாழை இலை (அ) பாலி எத்திலீன் தாள் (அ) இளக்கமான பொருள் (அ) சிமெண்ட் தரையிலோ மூடிவிட வேண்டும். அவ்வாறு செய்வதினால் நாற்றின் வேர் மண்ணின் அடிப்படலம் வரை ஊடுறுவாமல் தடுக்க உதவுகிறது.

                    அ) மண் கலவை தயாரித்தல்:
                              நாற்றங்காலின் ஒவ்வொரு 100 சதுர மீட்டர் அளவிற்கும் 4 கன மீட்டர் மண் கலவை தேவைப்படுகிறது.  70 சதவிகிதம் மண் + 20 சதவிகிதம் நன்கு மக்கிய  கரும்பாலைக் கழிவு/சாண எரிவாயுக்கலன் கழிவு/தொழு உரம் + 10 சதவிகிதம் தவிடு ஆகியவற்றை நன்கு கலக்க வேண்டும். 1.5 கிலோ பொடியான டை-அமோனியம் பாஸ்பேட் (அ) 2 கிலோ 17-17-17 தழைச்சத்து- மணிச்சத்து - சாம்பல்சத்து ஆகியவற்றை மண்கலவையுடன் சேர்த்து இடவேண்டும்.

                    ஆ) மண் கலவையை மரச்சட்டத்தில் நிரப்புதல்:
                          0.5 மீ நீளம், 1 மீ அகலம், 4 செ.மீ ஆழம் கொண்ட மரச்சட்டத்தை வாழை இலை அல்லது பிளாஸ்டிக் தாளின் மேல் வைத்து அதனை 4 சம பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும்.  பின்பு அம்மரச் சட்டத்தின் மேல் பரப்பு வரை மண் கலவையால் நிரப்ப வேண்டும்.

                    இ) விதையை முன்னரே முளைக்க வைத்தல்:

                           விதையை 24 மணி நேரத்திற்கு நன்கு ஊற வைத்து, வடித்து, திரும்ப 24 மணி நேரத்திற்கு காற்று புகாதவாறு மூடிய நிலையில் வைக்க வேண்டும்.  விதை முளைவிட்டு அதன் முளைவேர் 2-3 நீளம் வந்த பிறகு விதைத்து, அதனை 5 மிமீ தடிப்பு அளவு உலர் மண்ணால் மூட வேண்டும்.

மேலே செல்க

3) புழுதி நாற்றங்கால்  
நாற்றங்கால் பரப்பு
  • பரப்பு: 20 சென்ட்
  • போதுமான அளவு நீர் வசதி அல்லது கால்வாய் நீர் இல்லாத இடங்களில் இவ்வகையான நாற்றங்கால் ஏற்றது.

நாற்றங்கால் பாத்தி தயாரித்தல்
  • நன்கு உழவாழம் கிடைக்கும் வரை நிலத்தை 5-6 முறை புழுதி உழவு கொடுக்க வேண்டும். மணல் மற்றும் வண்டல் மண் கொண்ட நாற்றங்கால் பகுதிக்கு இவ்வகை நாற்றங்கால் ஏற்றது.
  • 1-1.5 மீ அகலம் கொண்ட பாத்தி மற்றும் வாய்க்கால் அமைக்கலாம்.  நிலத்தின் சரிவு மற்றும் அதன் மண்ணைப் பொருத்து அதன் நீளம் அமையும்.
  • பாத்தி அமைத்த பின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.  பின்பு 1 டன் தொழு உரம், 2.5 கிலோ மணிச்சத்து மற்றும் 2 கிலோ சாம்பல் சத்து ஆகியவை அளிக்க வேண்டும்.
  •  விதைப்பு உலர் விதைப்பாகக் கூட இருக்கலாம்.  விதைத்த பின் விதைகளை மண் அல்லது நன்கு பொடிசெய்த தொழு உரத்தினால் மூட வேண்டும்.
drydbed
  மேலே செல்க


விதை அளவு, விதைத்தரம் மற்றும் விதைநேர்த்தி முறைகள்

seed rate

விதை அளவு

திருந்திய நெல் சாகுபடிமுறைக்கு : 7-8 கிலோ/எக்டர் (அனைத்து இரகங்களும், கலப்பின வகைகளும்)

பாரம்பரிய முறை:
  • 30 கிலோ -நீண்ட கால இரகங்களுக்கு
  • 40 கிலோ- மத்திய கால இரகங்களுக்கு
  • 60 கிலோ குறுகிய கால இரகங்களுக்கு
  • 20 கிலோ-கலப்பின வகைகளுக்கு
மேலே செல்க

விதை தரம்:  
  • ஆரோக்கியமான மற்றும் வீரிய நாற்றுகள் தான் நல்ல பயிர் வளர்ச்சிக்கும் மகசூலுக்கும் வழிவகுக்கிறது.
  • நாற்றங்காலில் உற்பத்தியாகும் வீரிய நாற்றுகள்  தான்  நடவு வயலில் ஏற்படும் பூச்சித் தாக்குதலை தாங்கும் ஆற்றல் பெறுகிறது.

விதைப்புக்கு எடுக்கும் விதைகள் கீழ்கண்ட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

  • தேர்ந்தெடுத்த இரகத்தைச் சேர்ந்த சரியான, நன்கு வளரக்கூடிய   விதையாக இருக்க வேண்டும்.
  • விதைகள் சுத்தமாகவும், மற்ற விதைகளோடு கலக்காமலும் இருக்க வேண்டும்.
  • விதைகள் முதிர்ச்சியடைந்ததாகவும், நன்கு வளர்ச்சியடைந்ததாகவும், அளவு சரியானதுமாக இருக்க வேண்டும்.
  • வயதான விதையாக இருக்க கூடாது.  மேலும் நன்கு சேமிக்காத விதையாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • நன்கு முளைப்புத்திறன் கொண்ட விதையாக இருக்க வேண்டும்.

            விதைப்பதற்கு முன், விதைகளை பூசணக் கொல்லியுடன் கலந்து விதைக்க வேண்டும். இது மண் வாழ்  பூசணங்களிடமிருந்து விதைகளை பாதுகாக்க உதவுகிறது. மேலும் நாற்றுகளுக்கு தெம்பைக் கொடுக்கிறது.

உப்புக்கரைசலைப் பயன்படுத்தி விதையின் தரத்தை உயர்த்துதல்:

  • 10 லி தண்ணீரை 15 லிட்டர் கொள்திறம் கொண்ட வாளியில் எடுத்துக்கொண்டு நல்ல தரம் வாய்ந்த புது முட்டையை அந்நீரில் போட வேண்டும்.  அந்த முட்டை தண்ணீரில் மூழ்கி கீழே சென்றடையும்
  • வணிகத்தரம் வாய்ந்த உப்பை கொஞ்சம் கொஞ்சமாக நீரில் போட்டு கரைய விட வேண்டும். உப்புத் தண்ணீரின் அடர்த்தி உயர உயர, முட்டை கீழிலிருந்து மேல்நோக்கி வரும்.
  • முட்டையின் மேற்பரப்பு உப்புக் கரைசலுக்கு மேல் தெரிந்த பிறகு, உப்பு (சோடியம் குளோரைடு) போடுவதை நிறுத்தி விட வேண்டும்.
  • இந்த உப்புக்கரைசலுடன் 10 கிலோ விதையை போட வேண்டும்.
  • அப்போது அடர்த்தியில்லாத(சப்பை-பொக்கு)விதைகள் இக்கரைசலின் மேற்பரப்பில் மிதக்கும்.
  • கரைசலின் மேற்பரப்பில் மிதக்கும் விதைகளை அகற்றி விட வேண்டும்.
  • மூழ்கி இருக்கும் மிச்ச விதைகளை 2-3 முறை தண்ணீரில் நன்கு  கழுவி பின் விதைக்க வேண்டும்.
seed quality
  மேலே செல்க

nbp

விதை நேர்த்தி:
வகைகள்
    1. ஈர விதை நேர்த்தி
    2. உலர் விதை நேர்த்தி

அ. ஈர விதை நேர்த்தி
  • 1கிலோ விதைக்கு கார்பன்டசிம்/ டிரைசைக்லோஜோல்/ பைரோகுய்லான் 2 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து 10 மணி நேரம் ஊற வைத்து பின் அதிக நீரை வடிகட்ட வேண்டும்.
  • இந்த மாதிரியான ஈர விதை நேர்த்தி நாற்று பருவத்திலிருந்து 40 நாட்கள் வரை குலைநோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் பயிரை பாதுகாக்கிறது.  உடனடியாக விதைக்க நேரிட்டால் ஊறிய விதைகளை முளை கட்டுவதற்காக சாக்குப் பையில் கட்டி 24 மணி நேரத்திற்கு இருட்டில் வைக்க வேண்டும்.
  • சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸூடன் விதை நேர்த்தி: விதைகளை சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸூடன் 10 கிராம்/கிலோ என்ற அளவில் கலந்து 1 லிட்டர் தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.  அதிக நீரை வடிகட்டி, 24 மணி நேரத்திற்கு வைத்து முளைகட்டிய பிறகு எடுத்து விதைக்கவும்.
  • அசோஸ்பைரில்லத்துடன் விதை நேர்த்தி:  அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட் (600 கிராம்/எக்டர்) மற்றும்  பாஸ்போபேக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம்/எக்டர்) அல்லது அசோபாஸ் 6 பாக்கெட்  (1200 கிராம்/எக்டர்) ஆகியவற்றோடு போதுமான அளவு தண்ணீர் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும்.
  • உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகள் உயிர் உரத்துடன் ஒத்துப்போகக் கூடியது.  அதனால் இவ்விரண்டையும் கலந்து விதை ஊற வைக்க பயன்படுத்தலாம். பூசணக்கொல்லி மற்றும் உயிரியல் முறை கட்டுப்பாடு காரணிகள் இரண்டையும் கலக்கக் கூடாது.

ஆ. உலர் விதை நேர்த்தி:
பூசணக்கொல்லியுடன் விதை நேர்த்தி:

விதைகளை கேப்டான் (அ) திரம் பூசணக் கொல்லியுடன் 4 கிராம்/கிலோ விதை என்ற அளவில் விதைப்பதற்கு 24 மணி நேரம் முன்னதாகவே கலந்து வைக்க வேண்டும்.  இம்முறையானது நாற்றுகளுக்கு 40 நாட்கள் வரை குலைநோய்  போன்ற நோய்கள் தாக்காமல் பாதுகாக்கிறது.

மேலே செல்க


மேலாண்மை முறைகள்

நாற்றங்கால் மேலாண்மை கால அட்டவணை: மேலே செல்க

நாட்கள்

செயல்கள்

3-5

களை நிர்வாகம் (தேவைப்பட்டால்)

10-20

பூச்சி/நோய்கள் மேலாண்மை செயல்பாடுகள்

15

டை அமோனியம் பாஸ்பேட்  அடிஉரமாக அளிக்காத போது இந்நாளில் 40 கிலோ டை அமோனியம் பாஸ்பேட்  மேல் உரமாக அளிக்க வேண்டும்.

25-35

நாற்றுகளை பிடுங்குதல்
குறுகிய கால ரகத்தில்--25 நாட்களில்
மத்திய கால ரகத்தில் -30 நாட்களில்
நீண்ட கால ரகத்தில் -35 நாட்களில்
திருந்திய நெல் சாகுபடிமுறையில்-14 நாட்களில்
* நாற்று பிடுங்குவதற்கு முதல்நாள், கனமான களிமண் நிலமாக இருந்தால் 20 கிலோ ஜிப்ஸம் அளிக்க வேண்டும்.



water management
நீர் நிர்வாகம்
சேற்று நாற்றங்கால் முறை:
  • விதைத்து 18-24 மணி நேரம் கழித்து நீரை வடித்துவிட வேண்டும்.
  • 3-5 நாட்களில் போதுமான நீரை அளித்து மண்ணை  முழுவதும்  ஈரமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். 5 வது நாளுக்குப் பிறகு நாற்றுகளின் உயரத்தைப் பொருத்து நீர் அளவை 1.5 செ.மீ அளவு உயர்த்த வேண்டும்.
  • அதன் பிறகு 2.5 செ.மீ ஆழம் வரை நீர் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

    பாய் நாற்றங்கால் முறை:
  • பூவாளியைப் பயன்படுத்தி தேவைப்படும் போது (இரண்டு அல்லது மூன்று நாளுக்கு  ஒரு முறை) நாற்றங்காலுக்கு நீர் ஊற்ற வேண்டும். மண்ணை எப்பொழுதும் ஈரமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம்.
  • விதைத்து ஆறு நாட்களுக்குப் பிறகு பாய் நாற்றங்காலில் நீர் மெல்லிய படலமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • நடுவதற்கு நாற்றுகளைப் பிடுங்கும்போது 2 நாட்களுக்கு முன்னரே நீரை வடித்து விட வேண்டும்.

புழுதி நாற்றங்கால் முறை:
  • போதுமான நீரை அளித்து மண்ணை  முழுவதும்  ஈரமாக வைத்துக் கொள்ளுதல் நல்லது.

மேலே செல்க

உர நிர்வாகம்  
சேற்று நாற்றங்கால் முறை
  • 25 நாட்கள் ஆன பிறகு நாற்றுகள் நடுவதற்கு தயாராகி விடும். நாற்றுகளைப் பிடுங்குவதற்கு 10 நாட்கள் முன்னரே டை அம்மோனியம் பாஸ்பேட் உரம் அளிக்க வேண்டும்.
  • விதைத்து 10 வது நாளில்,  மண் களிமண்நிலமாக  இருந்தால் ஒரு சென்ட் நிலத்திற்கு 4 கிலோ ஜிப்ஸம், மற்றும் 1 கிலோ டை அம்மோனியம் பாஸ்பேட் அளிக்க வேண்டும்.

பாய் நாற்றங்கால் முறை;

      போதுமான வெப்பம் மற்றும் நீர் இருந்தாலும் கூட நாற்றுகள் மஞ்சள் நிறத்துடன் (தழைச்சத்துப் பற்றாக்குறை) காணப்படும்.  எனவே 0.5 சதவிகிதம் யூரியா (1.5 கிலோ யூரியா/300 லிட்டர் தண்ணீர்/100 சதுர மீட்டர்) என்ற அளவில் நாற்றுகளின் மேல் தெளிக்க வேண்டும்.

 

nutrient management
  மேலே செல்க

weed management

களை மேலாண்மை:

தாழ்வான நாற்றங்காலில் உள்ள களைகளை கட்டுப்படுத்த  முளைக்கும் முன் களைக்கொல்லிகளான (பிரிட்லாக்லோர் + சேப்ணர் @
0.3 கிலோ/எக்டர்) ஆகியவற்றை விதைத்து 3 (அ) 4 வது  நாளில் தெளிக்க வேண்டும்.  வளர்ந்த களைகளை கைக்களை மூலம் நீக்கவும்.

  மேலே செல்க

பூச்சி மேலாண்மை:  
நாற்றங்கால் பூச்சிகள்:
  1. படைப்புழு (ஸ்போடோப்டீரா மெளரீஸியா)
  2. இலைப்பேன் (ஸ்டென்கீட்டோதிரிப்ஸ் பைபார்மிஸ்)
  3. பச்சைத் தத்துப் பூச்சி (நெப்போடெட்டிக்ஸ் வைரஸ்ஸன்ஸ் நெ. நிக்ரோபிக்டஸ், நெ.சின்க்டிசெப்ஸ்)
  4. நெல் கூண்டுப்புழு (நிம்புலா டிபன்டாலிஸ்)
 

படைப்புழு (ஸ்போடோப்டீரா மெளரீஸியா) :

தாக்குதல் அறிகுறிகள்:

  • புழுக்கள் நாற்றுகளை அதிகளவில் வெட்டித் தின்னும்.
  • அதிக தாக்குதலின் போது மாடு புல் மேய்ந்த நிலம் போல் காட்சியளிக்கும்.
  • புழுக்கள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக அருகேயுள்ள வயல்களுக்குச் செல்லும்.


தாக்கும் முறை:

  • புழுக்கள்  மாலை நேரங்களில் வயல்களுக்கு அதிக  அளவில் சென்று அடுத்த நாள் காலை வரை நெல் இலைகளை வெட்டித் தின்று சேதப்படுத்தும்.  மீண்டும் பகல் நேரத்தில் மறைந்துவிடும்.
  • இப் புழுக்கள்  கூட்டமாக சென்று ஒரு வயலில் தின்ற பிறகு அடுத்த வயலுக்குச் செல்லும். அதிக தாக்குதலுக்குப் பிறகு, மாடு மேய்ந்த நிலம் போல்  வயல் காட்சியளிக்கும்.
  • பாதிக்கப்பட்ட செடிகள் காய்ந்துவிடும்.  புழுதி நிலத்தை விட வடிகால் இல்லாத  சதுப்பு நில பயிரை எளிதில் தாக்கிவிடும்.
  • ஜூலை-செப்டம்பர் மாதங்களில் சேதம் அதிகமாய் காணப்படும்.
army worm


பூச்சியை அடையாளம் காணுதல் :

  • முட்டை: இலையில் உருண்டையான, வெள்ளை நிற முட்டைகள்  கூட்டமாக  , சாம்பல் நிற இழைகளால் மூடப்பட்டு காணப்படும்.

  • புழு : மங்கிய பச்சை நிறத்துடன் அதில் பக்கவாட்டில் மஞ்சள் நிற வரிகளுடன் காணப்படும்.  பின் அந்நிறம் கரு பழுப்பு நிறம் அல்லது சாம்பல் நிற பச்சையாக மாறி பக்கவாட்டில் அரைவட்ட வடிவமான கருப்பு புள்ளியுடன் காணப்படும்.

  • கூட்டுப் புழு  : மண்ணில் கூடு கட்டியது போல் இருக்கும்.  கூடு, கரு பழுப்பு நிறமாக 16-17 மிமீ நீளத்துடன் காணப்படும்.

  • முதிர்பூச்சி:
    அந்துப்பூச்சி   அளவான வடிவத்துடன் தடித்து இருக்கும்.  இறக்கையில் அடர் பழுப்பு நிற முக்கோண வடிவ புள்ளிகள் காணப்படும்.  பின் இறக்கை பழுப்பான வெள்ளை  நிறத்துடன் மெல்லிய கருப்பு வரிகள் கொண்டிருக்கும்.

larva


மேலாண்மை செயற்திட்டங்கள்:

உழவியல் முறை:

  • நாற்றங்காலை நன்கு பாசனம் செய்வதால் மறைந்திருக்கும் புழுக்கள் மேல்பரப்பிற்கு வரும்.  அதனை பறவைகள் கொத்திச் சென்றுவிடும்.
  •  பாசனநீருடன் மண்ணெண்ணெய் கலப்பதால் புழுக்கள் மடிந்து விடும்.
  • வாத்துக்களை வயலில் விடுவதன் மூலம் அது புழுக்களை உட்கொண்டு புழுவை கட்டுப்படுத்தும்.

இரசாயன முறை:

  • நாற்றங்காலில் தண்ணீரை வடிகட்டி பின் குளோர்பைரிபாஸ் 20 இ.சி, 80 மி.லி அல்லது டைகுளோர்வாஸ் 35 இ.சி 80 மி.லி கலக்கி மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
ducks

மேலே செல்க

இலைப்பேன்: (ஸ்டென்கீட்டோதிரிப்ஸ் பைபார்மிஸ்)


தாக்குதல் அறிகுறிகள்:

  • விதைப்பு/நடவிற்கு பின் முதல் 23-25 நாட்கள் நாற்றங்கால் நிலையில் பயிர் இலைப்பேன்  தாக்குதலுக்கு மிகவும்  இலக்காகும்.
  • தாக்கப்பட்ட இலைகளின் நுனி நீளப்போக்கில் சுருண்டு ஊசி போன்ற வளர்ச்சியைக் கொடுத்து பின்பு வெள்ளையாக மாறிவிடும். கடுமையான நிலையில் கீழ் இலைகள் மஞ்சள் நிறமாகவும் மாறிவிடும்.
  • தாக்குதல் மிதமாக இருந்தால்  ஊசி போன்ற இலை, மூன்றுக்குக் குறைவாக இருக்கும். தாக்குதல் தீவிரமாக இருந்தால்  ஊசி போன்ற இலை மூன்றுக்கு மேல் இருக்கும்.  மேலும் கீழ் இலைப்பகுதி, வெளிறி,  சோகையுடனும் காய்ந்தும் காணப்படும்.
  • அதிக மழை பொழிவின்போது தாக்குதல் குறைந்துவிடும்.

ducks


தாக்கும் முறை:
     தாய்ப்பூச்சி மற்றும் இளம் உயிரி இரண்டும் இளம்  இலைகளை தாக்கி தாவரச் சாற்றை உறிஞ்சி விடும்.  இறுதியில் மஞ்சள் நிற கோடுகள் அல்லது வெள்ளி நிற கீறுகள் உள்ளது போல் இலைகள் காட்சியளிக்கும். பின், இலைகள் நீளப்போக்கில் சுருண்டு நுனியிலிருந்து கீழ் நோக்கி காய்ந்துவிடும். சில சமயத்தில், நாற்றங்கால் முழுவதும் காய்ந்து நாற்றுகள் உருவாகாமல் போய்விடும். மேலும் நடவு செய்த பயிர் கூட முன் நிலையிலேயே காய்ந்து  விடும்.

பூச்சியை  அடையாளம் காணுதல் :

பூச்சியின் நிலைகள்:

  • முட்டை(Egg): தண்டை நோக்கியிருக்கும் இளம் இலைகளில் முட்டைகள் காணப்படும். முட்டைகள் நிறமற்றதாகவும் பின் வளரும் நிலையில் வெளுத்த மஞ்சள் நிறம் போலவும் காணப்படும். .
  • இளம் குஞ்சு (Nymph):       புதிதாக பொரித்த குஞ்சுகள் நிறமற்றதாக  இருக்கும்.  ஆனால் பின் மஞ்சள் வெள்ளை நிறமாக மாறிவிடும். பின்னர் கால்கள், தலை மற்றும் உணர்கொம்புகள் உருவாகும்.
  • கூட்டுப் புழு (Pupa): சுருண்ட இலைகளுக்குள் தான் கூண்டுப் புழுவாதல் நடைபெறும்.  புடைவளர்ச்சி மற்றும் இறக்கைகள் நன்கு காணப்படும்.
  • முதிர்பூச்சி: Adult:
  • பூச்சி 1 மி மீ நீளம் கொண்டதும், நல்ல பழுப்பிலிருந்து கருப்பு நிறமாக மாறி பறக்கும் இறக்கைகளுடன் இருக்கும். ஆண் பூச்சி பெண் பூச்சியைவிட சிறியதாகவும், மிகுந்த மெல்லிய தோற்றத்துடனும், காணப்படும். இவை கன்னி இனப்பெருக்கம் செய்யும் வகையைச் சேர்ந்தவை. ஆண் பூச்சிகள்  குறைவாக காணப்படும்


மேலாண்மை செயற்திட்டம்:

உழவியல் முறை:

    • 1-2 நாட்கள் இடைவிட்டு பயிர்  மூழ்க நீர் கட்டச் செய்ய வேண்டும்.
    • நாற்றுகளின் மேல் ஈரத்துணியைப் போட்டு இழுக்க வேண்டும்.

    இரசாயன முறை:

    • நாற்றங்காலில் பின்வரும் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.

    • பாஸ்போமிடான்  40 எஸ்.எல் - 50 மி.லி

    • மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்.எல் - 40 மி.லி

    •  டைகுளோர்வாஸ்          35 இ.சி -    80 மி.லி

    உயிரியல் முறை:

    • இரை விழுங்கி இலைப்பேன், பொறிவண்டு, நாவாய்ப் பூச்சி, செம்பலினிடு வண்டு ஆகியவை உயிரியல் கட்டுப்பாடு காரணிகளானதால் புழுக்கள் மற்றும் தாய்ப்பூச்சிகளினை உட்கொள்ளும் திறனுடையது.

மேலே செல்க

பச்சைத் தத்துப்பூச்சி:
(நெப்போடெட்டிக்ஸ் வைரஸ்ஸன்ஸ்,நெ.சின்டிசெப்ஸ், நெ.நைக்ரோபிக்டஸ்)


தாக்குதல் அறிகுறிகள்:

  • இலையின் நுனியிலிருந்து கீழ் நோக்கி மஞ்சளாகும். இப்பூச்சிகள் துங்ரோ வைரஸ், நெல் மஞ்சள் குட்டை வைரஸ், நிலை உறுதியற்ற மஞ்சள்வைரஸ் போன்ற  நோய்களைப் பரப்புகின்றன.


தாக்கும் முறை:
         

  • இளம் பூச்சி மற்றும் தாய்ப்பூச்சி இரண்டும் செடியின் இலை மற்றும் இலையுறை பாகத்திலிருந்து சாறுகளை உறிஞ்சுகின்றன.
  • மிதமான சேதம் செடியின் வீரியம் மற்றும் இனப்பெருக்கத் துார்களின் எண்ணிக்கையை குறைக்கின்றன. மிகுந்த தாக்குதலினால் செடி வாடி இறுதியில் முழுவதும் காய்ந்து விடுகிறது. உறிஞ்சுதல் மற்றும் முட்டையிடுதல் ஆகியவற்றின் மூலம் தாவரங்கள் முன்னரே பூஞ்சாண மற்றும் நுண்ணுயிர்கள் பரவுதலுக்கு உள்ளாகின்றன.
  • மேலும் இப்பூச்சிகள், நெல் மஞ்சள் வைரஸ், நிலை உறுதியற்ற மஞ்சள்வைரஸ், மஞ்சள்குட்டைவைரஸ் போன்ற  நோய்களைப் பரப்புகின்றன.
  • மற்றும் நெல் துங்ரோ வைரஸ் (குறுகிய கால சாறு உறிஞ்சலினால் துங்ரோ நோய் பரவுகிறது) ஆகிய நோய்களைப் பரப்புகின்றன.


பூச்சியின் நிலைகள்:

  • முட்டை:  வெண்பச்சை நிற மெல்லிய முட்டைகள் இலைத்தாளின் நடுநரம்பு அல்லது நெல் உறை அல்லது பச்சைப் புள்ளிகள் மேல் படிந்திருக்கும். ஒரு வரிசையில் 10-15 என்று கூட்டமாக வைத்திருக்கும்.
  • இளம் குஞ்சு : மெல்லிய உடலுடையது, மஞ்சள் வெள்ளை நிறம் கொண்டது.  மெதுவான அதன் நிறம் பச்சையாக மாறும்.5 வளர்நிலைகளை கொண்டது. பின்பு 18-20 நாட்களில் பூச்சியாக மாறிவிடும்.
  • முதிர்பூச்சி:
    பூச்சிகள் 3-5 மி.மீ நீளம், நல்ல பச்சையான கருப்பு வரிகள் உடையது. ஆப்புக் கேடய வடிவமுடையது. சிறப்பு மூலை விட்டக்கோடு அசைவு கொண்டது. முன் இறக்கையில் நடுவில் கருப்பு புள்ளி உடையது ஆண் பூச்சி. ஆனால் பெண் பூச்சியில் இது கிடையாது. ஜூலை-செப்டம்பரில் இப்பூச்சி வேகமாக இயங்கும் ஆற்றலுடையது.
  • வாழ் நாட்கள்: பெண் பூச்சி 50-55 நாட்கள் வாழக் கூடியவை.


மேலாண்மை செயற்பாடுகள்:

 உழவியல் முறை:

    • எதிர்ப்புத்திறனுள்ள இரகமான ஐ ஆர் 50, சிஆர் 1009, கோ 46, பிடிபீ 2 மற்றும் பிடிபீ18, ஆகிய இரகங்களை பயன்படுத்தலாம்.  கூண்டு விளக்கு கம்பம் இருக்கும் இடத்தில் நாற்றங்கால் அமைக்கக்கூடியது.
    • வேப்பம் புண்ணாக்கு 12.5 கிலோ/20 சென்ட் என்ற அளவில் நாற்றங்காலுக்கு அடியுரமாக இடவேண்டும்.

இரசாயன முறை:

  • கீழ்காணும்  ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டும்.
                கார்போஃபூரான் 3 ஜி 3.5 கிலோ (அ)
                ஃபோரேட் 10 ஜி 1.0 கிலோ (அ)
                குயினால்ஃபாஸ் 5 ஜி 2.0 கிலோ


  மேலே செல்க

நெல் கூண்டுப்புழு
(நிம்புலா டிபங்டாலிஸ், பைரெளஸ்டிடே, லெபிடோப்டிரா)

தாக்குதல் அறிகுறிகள்:

  • புழுக்கள் இலையின் பசுமையான திசுக்களை சுரண்டி உண்டுவிடும்.  பின்பு இலைகள் வெண்மையான காகிதம் போல் மாறிவிடும்.
  • , இலை நுனிப் பகுதியை நீளப்போக்கில்  வெட்டி சேதம் செய்து, குழல் வடிவக் கூடுகளாக மாற்றி, துார்களைச் சுற்றி மிதக்கும்.
  •  நீரின் மேல் குழல் வடிவ  இலைக்கூடுகள் மிதக்கும்.


தாக்கும் முறை:
    

    புழுக்கள்  இலையின் ஒரு பகுதியைக் கடித்து நீளப்போக்கில் சுருட்டி பின்பு குழல்வடிவ இலைக்கூடு அமைப்பாக மாற்றி உள்ளே தங்கிக் கொள்ளும்.  பின் இலையின் பச்சை பாகத்தை உட்கொள்ளும்.  கூடுகள் தண்ணீரில் மிதக்கும்.

பூச்சியின் நிலைகள்:

  • முட்டை : முட்டைகள் மென்மையான இளமஞ்சள் நிறமுடன், வட்டத்தகடு போன்ற, , ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். தண்ணீரில் மிதக்கும் இலைகளின் அடிப்பாகத்தில் இது முட்டையிடும்.
  • புழு : மங்கிய ஒளி கசியும் பச்சை நிறமுடன் ஆரஞ்சு நிற தலை கொண்டது.  உடம்பின் இரு பக்கங்களிலும் இழை வடிவமுடைய செவுள் கொண்டிருக்கும்.  இச்செவுள் பகுதி நீர் நிலையில் இருக்க உதவுகிறது.
  • கூட்டுப்புழு : இலை உறைக்கூட்டுக்குள் இது கூண்டுப்புழுவாக மாறும்.  புதிய கூட்டுப்புழு பால் வெண்மையாக இருக்கும். பின் மங்கிய மஞ்சளாக  நிறம் மாறிவிடும்.
  • முதிர்பூச்சி: வெள்ளை நிறத்துடன், மங்கிய பழுப்பு நிற அலை போன்ற குறிகளுடன் காணப்படும். இப்பூச்சி சிறிதான அந்துப்பூச்சியாகும்.  வெள்ளை இறக்கையுடன் மங்கிய பழுப்பு நிற அலை குறிகளுடன் காணப்படும். பெண்பூச்சி ஆண்

 மேலாண்மை செயற்பாடுகள்:

உழவியல் முறை:

    • நாற்றங்காலில் உள்ள நிலையான நீரில் 250 மி.லி மண்ணெண்ணெய் கலக்குதல் வேண்டும்.
    • கயிற்றைக்கொண்டு மிதந்து கொண்டிருக்கும் இலைக்கூடுகளை கீழ் விழச்செய்து, நீரை வடிகட்டி, கூடுகளை அகற்றி வேண்டும்.
    • குழல்வடிவ இலைக்கூடுகளை  சேகரித்து அழிக்க வேண்டும்.


இரசாயன முறை:

  • கீழ்காணும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டும்.
    மோனோக்ரோட்டோபாஸ் 36 எஸ் எல் 40 மி.லி (அ)
    குயினால்ஃபாஸ் 25 இசி 80 மி.லி

  மேலே செல்க



நோய் மேலாண்மை:
நாற்றங்கால் நோய்கள்: 

1.   குலைநோய் - பைரிகுலேரியா ஒரைசா
2.   பழுப்புப்  புள்ளி நோய்  - ஹெல்மின்தோஸ்போரியம்  ஒரைசா
நெல் துங்ரோ வைரஸ் நோய்:
1.   நெல் துங்ரோ பேசில்லிஃபார்ம் வைரஸ்
2.   நெல் துங்ரோ உருண்டை –ஸ்பெரிக்கல் வைரஸ்)


நெல் குலைநோய்:(பைரிகுலேரியா ஒரைசா)

அறிகுறிகள்:

  • நோய்கள் நாற்றங்காலில் தொடங்கி அனைத்து வளர்ச்சிப் பருவங்களிலும் நெற்பயிரைத் தாக்குகிறது.  இலை, கதிரின் கழுத்துப் பகுதி மற்றும் கணுப்பகுதிகளில் அதிக அளவில் தாக்குகின்றன.
  • இலையில் சிறு புள்ளிகளாகத் தோன்றி பின்னர் நீள் வடிவத்தில் பெரிதாகி சாம்பல் நிற மையப்பகுதியைக் கொண்டிருக்கும். (0.5 -1.5 செ.மீ நீளம்,
    0.3-0.5 செ.மீ அகலம்).
  • பல புள்ளிகள் ஒன்றுகூடி பின் பெரிய ஒழுங்கற்ற திட்டுப்பகுதிகளாய்க் காணப்படும்.


மேலாண்மை செயற்திட்டங்கள்:

  • அதிகளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும்.
  • நோய்களை தாங்கும் தண்மை கொண்ட இரகங்களான (பல்குணா, சுவர்ணமுகி, சுவாதி, பிரபாத், கோ 47, ஐஆர் 64, ஐஆர் 36, ஜெயா) ஆகிய இரகங்களை பயிரிடலாம்.
  • சூடோமோனாஸ் துகள் கலவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து  விதை நேர்த்தி செய்து விதைத்தால் குலைநோய் குறைகின்றது.    நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை தண்ணீரை தேக்க வேண்டும்.  2.5 கிலோ சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் தூளை தேங்கியிருக்கும் தண்ணீரில் கலக்க வேண்டும். நாற்றின் வேர்பகுதியை
    அதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடுதல் வேண்டும்.
  • ஒரு கிலோ விதைக்கு 2.0 கிராம் என்ற அளவில் கேப்டான் அல்லது கார்பன்டசிம்  அல்லது திரம் ஆகிய, ஏதோ  ஒன்றோடு விதை நேர்த்தி
    செய்ய வேண்டும்.
  • ஒரு லிட்டர் தண்ணீரில் டிரைசைக்ளோசோல் 1 கிராம் அல்லது
    எடிபென்பாஸ் 1 மி.லி அல்லது கார்பன்டசிம் 1.0 கிராம் என்ற அளவில்  
    கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

 

மேலே செல்க
 
பழுப்புப்புள்ளி நோய்: : (ஹெல்மின்தோஸ்போரியம் ஒரைசே)

இதனை,நெல்லின் எள் வடிவ இலைப்புள்ளி, அல்லது ஹெல்மின்தோஸ்போரியோசிஸ் அல்லது பூசண கருகல் நோய் என்றும் அழைக்கலாம்.

அறிகுறிகள்:

    • இந்நோய் நாற்றங்கால் மற்றும் நடவு வயல் இரண்டையும் தாக்குகிறது.
    • இளநாற்றுகளில் கருகல் நோயை ஏற்படுத்தும்.
    • இலையுறைகளின் மேல் காணப்படும் புள்ளிகள் பழுப்பு நிறத்தில் எள்
      போன்று நீள்வட்ட வடிவில் இருக்கும்.  நோய் முற்றிய நிலையில் அவை இணைந்து அழிந்த திசுக்களைக் கொண்ட பெரிய  திட்டு வடுக்களை உண்டாக்குகிறது.
    • நோய் முற்றிய நிலையில் 50 சதவிகிதம்  வரை மகசூல் குறைவு ஏற்படுகிறது.


மேலாண்மை முறைகள்:

    • நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான கோ 20, ஐஆர் 24,
      மற்றும் பத்மா ஆகிய ரகங்களை  பயிரிடுதல்.
    • நோயற்ற விதைகளை தேர்வு செய்து நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.
    • ஒரு கிலோ விதைக்கு கேப்டான்/திரம் 2.0 கிராம் என்ற அளவில் கலந்து
      விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
    • மேன்கோஜிப் (2.0 கிராம்/லிட்டர்) அல்லது எடிபென்பாஸ் (1 மி.லி/லிட்டர்)
      என்ற அளவில்  கலந்து  தெளிக்க வேண்டும்.
மேலே செல்க
 
  நெல் துங்ரோ நச்சுயிரி நோய்:
  1. நெல் துங்ரோ பெசில்லிஃபார்ம் நச்சுயிரி
  2. நெல் துங்ரோ உருண்டை (ஸ்பெரிக்கல்) நச்சுயிரி
    நோய் பரப்பும் காரணி: பச்சைத் தத்துப் பூச்சி


அறிகுறிகள்:

  • துங்ரோ நோயால் தாக்கப்பட்ட நெற்பயிர்கள் அளவில் சிறுத்து வளர்ச்சி குன்றி காணப்படும். துார்கள் உருவாகும் அளவும் குறைந்துவிடும்.
  • இலைகள் மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறம் வரையிலான பல்வேறு நிறங்களில் காணப்படும்.  இலையில் துருப்பு பிடித்தது போன்ற கொப்புளபுள்ளிகளும் காணப்படும்.
  • இலைகள் நிறம் மாறுதல், இலை நுனியிலிருந்து தொடங்கி இலைப்பரப்பு அல்லது இலையின் கீழ்பாகம் வரை தென்படும்.


மேலாண்மை செயற்திட்டம்:

  • நோய் பரப்பும் காரணி- பச்சைத் தத்துப்பூச்சியை கண்காணித்து பிடிப்பதற்கு விளக்குப் பொறி வைத்தல் வேண்டும்.
  • இலை மஞ்சளாவதை தடுக்க 2 சதவிகிதம் யூரியாவை 2.5 கிராம்/லிட்டர் மேன்கோஜிப் உடன் கலந்து தெளிக்க வேண்டும்.
  • நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட, இரகங்களான கோ 45, கோ 48, சுரேகா, விக்ரமார்யா, பரணி, ஐஆர் 36 ஆகிய ரகங்களை  பயிரிடுதல்.
  • நாற்றங்காலில் நச்சுயிரி தாக்குதல் குறைவாக இருந்தால், கார்போஃயூரான் குருணை 1 கிலோ/எக்டர் என்ற அளவில்  இடுவதன் மூலம் நோய் பரப்பும்காரணி- பச்சைத் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
மேலே செல்க