முதல் பக்கம் தொடர்புக்கு  


ஊட்டச்சத்து மேலாண்மை




ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம்

நெற்பயிரின் இயல்பான வளர்ச்சிக்கு கீழ்காணும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் (உரச்சத்து) தேவைப்படுகின்றன.

கார்பன் (கரிமம்)

தழைச்சத்து

கால்சியம்

நீரகம்

மணிச்சத்து

மெக்னீசியம்

உயிரியம்

சாம்பல்சத்து

சல்பர்

இரும்பு

துத்தநாகம்

குளோரின்

மேங்கனீஸ்

போரான்

 

தாமிரம்

மாலிப்டினம்

 

இவற்றில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் முதன்மை தாவர ஊட்டச்சத்துக்கள். கால்சியம்,  மெக்னீசியம் மற்றும் கந்தகச்சத்து ஆகியவை இரண்டாம் நிலை துணைச்சத்து. ஊட்டச்சத்துப் பொருட்கள் இரும்புச்சத்து, மேங்கனீஸ், தாமிரச்சத்து, துத்தநாகம், போரான், மாலிப்டினம் மற்றும் குளோரின் ஆகியவை நுண் ஊட்டச்சத்துப் பொருட்கள்.  முதன்மை மற்றும் துணை ஊட்டச்சத்துப் பொருட்களை முதன்மை தனிமங்கள் என்றும் கூறுவர். ஊட்டச்சத்து பொருள்களின் ஒப்பீட்டு பரவல் தன்மையைப் (அளவு) பொருத்துத்தான் இங்கு பங்கீட்டு முறை ஏற்பட்டுள்ளது.  அதன் ஒப்பு முக்கியத்துவத்தைப் பொருத்து அல்ல. நுண் ஊட்டச்சத்துக்கள் குறைந்த அளவிலேயே தேவைப்படுகின்றன. இருப்பினும், தாவர ஊட்டத்தில் முதன்மை தனிமங்களைப் போலவே இவையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

 


  தழைச்சத்து:
K Importance
  1. நெற்பயிரின் முக்கிய ஊட்டச்சத்தான தழைச்சத்து பொதுவாக நெல் உற்பத்தித் திறனை வரையீடு செய்கின்றது.
  2. இலைகளுக்கு நன்கு ஆரோக்கியமான பச்சை நிறத்தை அளித்து, தழைப்பகுதி வளர்ச்சியை மேம்படுத்துகின்றன.
  3. தழைச்சத்தானது, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துப் பொருளை பயிர்கள்  நன்கு எடுத்துக் கொள்ள உதவுகின்றது.
  4. குறைந்த அளவு தழைச்சத்து (25 கிலோ தழைச்சத்து/எக்டர்) உள்ள பகுதிகளில் “இன்டிகா” இரகங்கள் அதிகளவில் நன்கு வளர்கின்றன.
  5. அதிக அளவு தழைச்சத்து அளிப்பதால், பயிர் சாய்தல் மற்றும் அதன் தொடர்ச்சியாக மகசூல் இழப்பும் ஏற்படும்.
  6. காற்றில்லா நிலைகளில் கரிமப்பொருள் சிதைவுறுதல் ஏற்படும்போது நெற்பயிருக்குத் தேவையான தழைச்சத்தினை கரிமப்பொருளிலிருந்து எடுத்துக் கொள்கிறது.  மேலும் பயிரின் முன் வளர்ச்சி நிலைகளில் அதற்குத் தேவைப்படும் தழைச்சத்தினை, நீர் முழ்கிய மண்ணில் தழைச்சத்தின் நிலையான தன்மையான அமோனியா வடிவத்தில் பயிர் எடுத்துக் கொள்கிறது.
  7. நெற்பயிரில் தழைச்சத்து அதிகமாய் தேவைப்படும் இரு வளர்ச்சி நிலைகள்: முன் தழை வளர்ச்சி நிலை மற்றும் பூங்கொத்து உருவாகும் நிலைகள்
  8. முன் தழை வளர்ச்சி பருவத்தில் பயிருக்கு உரமளித்தால் துார்கள் உற்பத்தி அதிகரித்து, அதிக மகசூல் கிடைக்கும்.
  9. பூங்கொத்து உருவாக்க நிலை அல்லது முன் கதிர் வைக்கும் பருவத்தில் உரம் அளிப்பதால், பயிர்கள் ஒரு பூங்கொத்திற்கு அதிகமான மற்றும் கனமான நெல்மணிகளை உற்பத்தி செய்ய உதவுகின்றது.

மணிச்சத்து:  
  1. மணிச்சத்து, குறிப்பாக முன் வளர்ச்சிப் பருவத்தில் முக்கியமாகத் தேவைப்படுகின்றது.
  2. மணிச்சத்து நெற்பயிருக்குள்ளேயே இயங்கும் தன்மை கொண்டு, வேர் வளர்ச்சியைத் துாண்டுகின்றது.  (குறிப்பாக சல்லி வேர்கள்), மேலும் துார்கள் வைப்பது மற்றும் முன்னரே பூத்தல் ஆகியவற்றை மேம்படுத்துகின்றது.
  3. மண் இயற்கையாய் பெற்றிருக்கும் மணிச்சத்து போதுமானதாக இல்லையென்றாலும், நெற்பயிரின் வேர் அமைப்பு நன்கு வளர்ச்சியடையாத நிலையிலும், மணிச்சத்து கூடுதலாக தேவைப்படுகின்றது.
  4. பயிரின் முன் வளர்ச்சி நிலையில் போதுமான மணிச்சத்தை எடுத்துக் கொண்டால், பின் வளர்ச்சி நிலைகளில் மணிச்சத்து நெற்பயிருக்குள்ளேயே மறு இயங்கும் தன்மை பெற்று செயல்படுகிறது.
  5. மேலும் மணிச்சத்து நோய் எதிர்க்கும் திறனை அதிகரித்து, தானியப் பயிர்களை வலிமையாக்குகிறது.  இதனால் பயிர் சாய்தல் தன்மையை குறைக்கிறது.
  6. மேலும் பயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவு அதிகமாக தழைச்சத்து இருப்பின் அதனை மணிச்சத்து ஈடு செய்கிறது.
P Importance


  சாம்பல் சத்து:
K Importance
  1. நெற்பயிருக்கு போதுமான நோய் எதிர்க்கும் ஆற்றல், பூச்சித் தாக்குதலை தாங்கும் திறன், அதிக குளிர் மற்றும் இதர சாதகமற்ற நிலைகளைத் தாங்குவதற்கும் சாம்பல் சத்து போதுமான திறனை அளிக்கிறது.
  2. சாம்பல் சத்தானது, மாவுச்சத்து உருவாகுவதற்கும், சர்க்கரை உற்பத்தி மற்றும் இடமாற்றத்திற்கும், மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.  மாவுச்சத்து நிறைந்த பயிர்களுக்கு தனி மதிப்பை வழங்குகிறது.
  3. நொதிப் பொருள் செயற்பாட்டில் பங்கு வகிக்கிறது.
  4. ஒளிச்சேர்க்கைப் பொருள் உற்பத்தியாகவும், அவைகளை வளரும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யவும் உதவுகிறது.
  5. மற்ற ஊட்டச்த்துக்களை முறையாக எடுத்துக் கொள்ளவும் உதவுகிறது.
  6. துார்கள் வைப்பது, பயிர்ச்செடி கிளை உருவாக்கம் மற்றும் தானியத்தின் அளவு மற்றும் எடை அதிகரிக்கவும் துணைபுரிகிறது.
  7. பயிர் எடுத்துக்கொண்ட சாம்பல் சத்தில் 80  சதவிகிதம் அளவு வைக்கோலில் தான் காணப்படுகின்றது.  மணல் கலந்த மண்ணில் தான் சாம்பல்சத்தின் தேவை அதிகமாய் காணப்படுகிறது.

கால்சியம்- சுண்ணாம்புச்சத்து  
  1. பயிரில் உள்ள பெக்டினுடன் “கால்சியம்” இணைந்து “கால்சியம் பெக்டேட்” உருவாகிறது.  இவை உயிரணு சுவரின் முக்கியமான ஆக்கக் கூறாக விளங்குகிறது.
  2. காற்றில் உள்ள தடையில்லா தழைச்சத்தினை நிர்ணயிக்கவும் கரிம வடிவத்திலிருக்கும் தழைச்சத்திலிருந்து, நைட்ரேட் உருவாக்குவதற்கும் துணை புரிகின்றன. மண் நுண்ணுயிரிகளின் செயற்திறனை அதிகப்படுத்த உதவுகிறது.
  3. மேலும், சுண்ணாம்புச்சத்து சிறந்த வேர் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது.
Ca Importance


  மெக்னீசியம்:
Mg Importance
  • பச்சையத்தின் முக்கிய ஆக்கக் கூறாக விளங்குகிறது மெக்னீசியம்.
  • பொதுவாக குறைந்த அளவு மெக்னீசியமே பயிர்களுக்குத் தேவைப்படுகின்றன. அதனால் சாம்பல்சத்து பற்றாக்குறைக்கு அடுத்தே, மெக்னீசியத்தின் பற்றாக்குறை காணப்படுகிறது.


கந்தகச்சத்து:  
  1. பச்சையம் உற்பத்தி, புரதச்சேர்க்கை மற்றும் பயிர் வடிவம் மற்றும் அதன் செயல்பாட்டிற்கு கந்தகச்சத்து முக்கிய பங்களிக்கிறது.
  2. வைக்கோல் மற்றும் செடித்தண்டுகளின் முக்கிய ஆக்கக்கூறாக கந்தகம் விளங்குகின்றது.

 

S Importance

  இரும்புச்சத்து:
Fe Importance
  1. பச்சையம் சேர்க்கைக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
  2. மேட்டுப்பாங்கான நில மண்ணில் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

துத்தநாகம்:  
  1. மாவுச்சத்து உருமாற்றத்திற்கு முக்கியமானது.
  2. சர்க்கரை உட்கொள்ளும் திறனை கட்டுப்படுத்துகிறது.
  3. நெற்பயிரில் துத்தநாகத்தின் செயலானது, நொதிப் பொருளின் உலோக செயல் ஊக்கியாக விளங்குகிறது.
  4. தாழ்வான நில நெற்பயிரில் துத்தநாகத்தின் பற்றாக்குறை பொதுவாக களர்மண் குறிப்பாக சுண்ணாம்புச்சத்து நிறைந்த மண்ணில் காணப்படுகிறது.
  5. நீர் மூழ்கிய மண்ணை விட மேட்டுபாங்கான மண்ணில், மண் மற்றும் இடப்பட்ட துத்தநாகத்தின் அளவு அதிகமாய் காணப்படுகிறது.
  6. மண் அமிழ்வு ஏற்படுத்தினால், மண் கரைசலில் துத்தநாகத்தின் செறிவு குறைகிறது.
  7. ஒரு டன் நெல்லுக்கு, 30-40 கிராம் துத்தநாகத்தை நெற்பயிர் அகற்றுகிறது.

Zn Important

  போரான்:
B Importance
  1. “சர்க்கரை போரேட்” கூட்டமைப்பை உருவாக்கி சர்க்கரையை இடமாற்றம் செய்கிறது.
  2. உட்கரு அமிலச் சேர்க்கைக்கு போரான் முக்கிய பங்கு வகிப்பதால் திசுவறை உறுப்புகளாக வேறுபாடு அடைவதற்கும், உயிரணு வளர்ச்சிக்கும் உதவுகிறது.
  3. கருவுறுதல் மற்றும் வளர்ச்சிப் பொருள் மாற்றத்திலும் பங்களிக்கிறது.

தாமிரச்சத்து:  
  1. “பிளாஸ்டோசையனின்” (தாமிரச்சத்து கொண்ட புரதம்) என்பதின் முக்கியக்கூறு தாமிரம்.
  2. சில உயிர்வழி நொதிப் பொருள்களின் முக்கியக் கூறாகும்.
  3. இனப்பெருக்க வளர்ச்சிக்கு முக்கியமானது.
  4. வேர் வளர்ச்சிப் பொருள் ஆக்கம் மற்றும் புரதச்சத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது.

Cu important

  மாங்கனீஸ்:
Mn important
  1. மாங்கனீசு,  நைட்ரேட் குறுக்கம் மற்றும் நிறைய சுவாச நொதிகளின் செயற் ஊக்கியாகும்.
  2. ஒளிச்சேர்க்கையின் போது உயிரியம் பரிமாற்றத்திற்கு மாங்கனீசு  தேவைப்படுகிறது.
  3. மாவுப் பொருள் மற்றும் தழைச்சத்து ஆக்கநிலைகுழைவில் பங்களிக்கும் நொதிப் பொருள் அமைப்புகளுடன் செயலாற்றுகிறது.
  4. மண் இயற்கையாய் பெற்றிருக்கும் மாங்கனீசு சத்து போதுமானதாக இருக்கும்.

சிலிக்கான்:  
  1. நெற்பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  2. பயிர் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறனுக்கு முக்கிய தனிமமாக சிலிக்கான் விளங்குகிறது.
  3. உயிரற்ற மற்றும் உயிரிலுள்ள நோய்களின் தாக்குதலுக்கு சில பயிர்கள் இலக்காகும் தன்மையை சற்றே குறைக்கும் ஆற்றல் பெற்றது.
  4. சிலிக்கான் அளிப்பதால், பயிரின் வலிமை மற்றும் விறைப்புத் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.  இதனால் சிறந்த நெற்பயிர் மகசூல் கிடைக்கிறது.
  5. பயிர் வேர்கள் சிலிக்கான் சத்தை, சிலிக்கான்  அமிலமாக எடுத்துக் கொள்கிறது.
  6. நீரில் உள்ள சிலிக்கான் அமிலத்தை வேர்கள் உறிஞ்சிக் கொள்ளும் அளவும் சிலிக்கான் சத்தை  நெற்பயிர் எடுத்துக் கொள்ளும் அளவும் சமமனாது.  அதிக அளவு நீராவிப் போக்கு இருந்தால், சிலிக்கான் சத்தை எடுத்துக்கொள்ளும் அளவும் அதிகமாகும்.

Si Important
  மேலே செல்க


ஊட்டச்சத்து குறைபாடுகள்

ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் நச்சுத்தன்மைகள்:


  தழைச்சத்து:







N Def

N Tox

LCC
பற்றாக்குறை அறிகுறிகள்:

    • குறைவான பயிர் வளர்ச்சி மற்றும் மஞ்சள் நிறமுடைய பயிர்ச்செடிகள்.
    • முழு பயிர்ச் செடியின் முதிர்ந்த இலைகள் மஞ்சளான பச்சை நிறமுடன் காட்சியளிக்கும்.
    • முதிர்ந்த இலைகளும் சில சமயங்களில் அனைத்து இலைகளும் மங்கிய பச்சை நிறமாக மாறும்.
    • பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் நுனியில் தோன்றும்.  பின் இலை நடு நரம்பு வழியாக படிப்படியாக சென்று முழு இலையும் இறந்து விடும்.
    • இலை நுனிகள் பசுமை சோகையுடன் தெரியும். இலைகள் குறுகலாக, குட்டையாக, நிமிர்ந்த, எலுமிச்சை மஞ்சளான பச்சை நிறத்துடன் தோன்றும்.

    நிவர்த்தி முறைகள்:
    • தழைச்சத்தை குறைவாக ஏற்கும் பண்புடைய இரகங்களுக்கு அதிக அளவிலான தழைச்சத்து இடக்கூடாது.
    • ஒவ்வொரு பயிர் வகைக்கும் தகுந்த பயிர் இடைவெளியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
    • பிரித்து கொடுக்கும் எண்ணிக்கை மற்றும் தழைச்சத்து அளிப்பதன் கால அளவு ஆகியவற்றை பயிர் நிலைநாட்ட முறையைப் பொருத்து ஒழுங்குப்படுத்த வேண்டும்.
    • வயலை நீர்ப் பெருக்குடன் வைக்க வேண்டும். இதனால் தழைச்சத்து மறுநிலை நிறுத்தலை தடுக்க முடிகிறது. ஆனால் உரமிட்ட பின், வரப்புகளின் வழியாகஏற்படும் நீர் வெளியோடலில் தழைச்சத்து இழப்பு ஏற்படாமல் தடுக்க  வேண்டும்.
    • பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து அளவைவிட 25 சதவிகிதம் அதிகமாக மண்வழி உரமிடுதல் மூலம் அளிக்க வேண்டும்.
    • இலைவழி உரமிடுதல் மூலம் யூரியா 1 சதவிகிதத்தை வார இடைவெளியில்  பற்றாக்குறை  அறிகுறிகள் மறையும் வரை அளிக்க வேண்டும்.

நெற்பயிரில் இலைவண்ணஅட்டையை பயன்படுத்தி தழைச்சத்து மேலாண்மை:

  1. நெற்பயிரில் மஞ்சள் நிறமுடைய இலைகள் தோன்றுவது, தழைச்சத்து பற்றாக்குறையை காட்டுகிறது. மஞ்சள் தன்மையின் பரப்பைப் பொருத்து தழைச்சத்தின் அளவை தீர்மானிப்பது சற்று கடினம்.
  2. பயிருக்குத் தேவையான குறிப்பிட்ட அளவு தழைச்சத்தை,
  3. இலைவண்ணஅட்டையை பயன்படுத்தி  கணக்கீடு செய்யலாம்.
    இலை வண்ணஅட்டையில் 6-7 பச்சைநிற வண்ணக்கோடுகள் இருக்கும். முதல் கோடு மங்கிய பச்சை நிறம் கொண்டது மற்றும் கடைசி வண்ணக்கோடு (6 வது அல்லது 7 வது) கரும்பச்சை நிறமும் இடைப்பட்ட கோடுகள் (2 முதல் 5 வரை) மாறுபட்ட பச்சைநிற செறிவுடனும் காணப்படும்.

இலை வண்ணஅட்டையை பயன்படுத்துதல்:

  1. முழுவதும் விரிந்த நோயற்ற இலையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது நெற்பயிரில் மேலிருந்து கீழ் மூன்றாவது இலையான குறியீடு இலையை இலை வண்ணம் மதிப்பீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் வயலில் 10 செடிகளிலிருந்து மொத்தம் 10 இலைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. இலை வண்ணஅட்டையில் உள்ள வண்ணக் கோடுகளுடன் தேர்ந்தெடுத்த இலைகளின் நடுப்பகுதியை வைத்து, வண்ணப் பொருத்தம் பார்க்க வேண்டும். இம்முறையை காலை வேளையில் (8-10 மணிக்குள்) மேற்கொண்டு நிறச்செறிவை (இலை வண்ண அட்டை மதிப்பு) மதிப்பீடு செய்ய வேண்டும்.
  3. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நபர்களின் மூலம் இலை வண்ணச் செறிவை ஒவ்வொரு முறையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.
  4. இலை வண்ணஅட்டையில் உள்ள இரு வண்ணக் கோடுகளுக்கிடையே இலையின் நிறம் பொருந்தினால், பின் இரண்டு கோடுகளுக்கும் சராசரி மதிப்பை கணக்கிட வேண்டும்.
  5. நெல் நடவு செய்த வயலில் நடவு செய்து 14 நாட்களில் இலை வண்ணத்தை மதிப்பீடு செய்யத் துவங்கலாம். மற்றும் நேரடி விதைப்பு நெல்லில் விதைத்து 21 நாட்களில் தொடங்கி பூத்தல் துவக்கம்/கதிர் உருவாகும் நிலைவரை 7-10 நாட்கள் இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும்.
  6. நெல் ரகத்தைப் பொருத்து இலை வண்ணஅட்டையின் அளவீடு எண் மதிப்பு(LCC critical value) வேறுபடும்.  இலை வண்ணஅட்டையின் அளவீடு எண் மதிப்பு, குறைந்த தழைச்சத்துஏற்புத்திறன் இருக்கும் இடத்தில் 3.0 ஆக இருக்கும்.  தமிழ்நாட்டில் குறைந்த தழைச்சத்து ஏற்புத்திறன் கொண்ட வெள்ளைப் பொன்னி இரகத்தில் இலை வண்ணஅட்டையின் அளவீடு எண் மதிப்பு(LCC critical value) 3.0 ஆகவும், மற்ற ரகங்கள் மற்றும் கலப்பின வகைகளில் 4.0 ஆகவும் இருக்கும்.
  7. 10 மாதிரி இலைகளில், இலை வண்ணஅட்டையின் அளவீடு எண் சராசரி மதிப்பை கணக்கிட வேண்டும்.  பத்து இலைகளின் வண்ணஅட்டை அளவீடு எண் சராசரி மதிப்பு (அல்லது) 5 அல்லது அதற்கும் அதிகமான இலைகளின் வண்ணஅட்டை அளவீடு எண் சராசரி மதிப்பும், அந்த ரகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலை வண்ணஅட்டை அளவீடு எண் சராசரி மதிப்பைவிட குறைவாக இருப்பின், பயிரின் வளர்ச்சி மற்றும் அதன் நிலைகளை பொருத்து தழைச்சத்தை மேலுரமாக அளிக்க வேண்டும்.
  8. 6 அல்லது அதற்கு அதிகமான இலைகளின் மதிப்பு, குறிப்பிட்ட அளவீடு எண் சராசரி மதிப்பைவிட குறைவாக இருப்பின், வறட்சி பருவத்தில் தழைச்சத்தை எக்டருக்கு 35 கிலோ என்ற அளவிலும், குளிர்காலத்தில் 30 கிலோ என்ற அளவிலும் அளிக்க வேண்டும். அளவீடு எண் மதிப்பைவிட இம்மதிப்பு அதிகமாக இருப்பின் அந்த வாரத்தில் தழைச்சத்து மேலுரமாக அளிக்கத் தேவையில்லை. 

நன்மைகள்:

  • எளிதான மற்றும் விவசாயிகளால் சுலபமாக பயன்படுத்தக் கூடியவை.
  • குறைவான விலை.
  • மண்ணின் தழைச்சத்து அளவு மற்றும் பயிரின் தேவையைப் பொறுத்து தழைச்சத்து அளிப்பின் தேவையை நிர்ணயிக்க உதவுகிறது.
  • தழைச்சத்து மேலுரமாக அளிக்கும் காலத்தை நிர்ணயிக்க முடிகிறது.
  • எக்டருக்கு 20-40 கிலோ தழைச்சத்தை சேமிக்க முடிகிறது.
  • தழைச்சத்து பயன்படுத்தும் திறன் அதிகப்படுகிறது.

தழைச்சத்தின் நச்சுத்தன்மை அறிகுறிகள்:

    • பயிர்கள் கரும்பச்சை நிறத்தில் காணப்படும்.
    • அதிகமான இலைத் தொகுதிகள்.
    • வளர்ச்சி குன்றிய வேர் அமைப்புகள்.
    • பூத்தல் மற்றும் விதை உருவாக்கத்தில் தடை ஏற்படும்.

தழைச்சத்தின் மூலப்பொருட்கள்:

தொழு உரம், பசுந்தாள் எரு, உயிர் உரங்கள் (ரைசோபியம், அசோலா, அசோஸ்பைரில்லம், அசடோபேக்டர்), ஆமணக்கு புண்ணாக்கு, யூரியா, டை அமோனியம் பாஸ்பேட், அம்மோனியம் நைட்ரேட், அம்மோனியம் சல்பேட் ஆகியவை தழைச்சத்து வளங்கள் நிறைந்தவை.


மணிச்சத்து:  

பற்றாக்குறை அறிகுறிகள்:

  • பயிர்கள் குறைந்த துார்களுடன், வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இலைகள் குறுகலாக, குட்டையாக, மிகவும் நிமிர்ந்து, “அழுக்கு” கரும்பச்சை நிறமுடன் இருக்கும்.
  • முதிர்ந்தஇலைகள்,பழுப்பானசிவப்புநிறமாகமாறி,பின் ஊதா நிற வளர்ச்சியுடன் காணப்படும்.
  • தண்டுகள் மெல்லியதாக நுாற்புக்கதிர் வடிவத்தில் காணப்படும்.
  • குறைந்ததுார்கள் வைப்பு/குறைவான கிளை வைத்தல்.
  • குறைவான வேர் வளர்ச்சி.

நிவர்த்தி முறைகள்:

  • விதை முலாம்பூசுதல் அல்லது நாற்று நனைப்பாக “பாஸ்போபாக்டீரியா”
    வை மண்ணில் அளிக்க வேண்டும்.
  • மணிச்சத்து உரத்தை பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக, ஒரு எக்டருக்கு 15-30 கிலோ அளவில் அளிக்க வேண்டும்.
  • மண்ணின் கார அமில நிலை அளவு குறைவாக இருந்தால், வயலில் நீர்தேக்குவதற்கு முன் “ராக் பாஸ்பேட்டை” துாவி விட வேண்டும்.

மணிச்சத்தின் மூலப்பொருட்கள்:

தொழு உரம், உயிர் உரங்கள் (மணிச்சத்து கரைப்பான்கள்) ஆமணக்கு புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, சூப்பர்பாஸ்பேட் (ஒன்று),
சூப்பர்பாஸ்பேட் (இரண்டு), சூப்பர்பாஸ்பேட் (மூன்று), சுரங்கத்தாது கசடு,  முசோரி டை அமோனியம் பாஸ்பேட் ,அமோனியம் பாஸ்பேட் (க்ரோமர்).


மணிச்சத்து நச்சுத்தன்மை: (மிகுதியான மணிச்சத்து அளித்தலால்
ஏற்படும் தீங்கு)

    • மண்ணிலே நிலைத்து விட்டு , நெற்பயிருக்கு கிடைக்கப் பெறாது.
    • துத்தநாக சத்து பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

P Def

P tox

  சாம்பல் சத்து :
K Def

K tox

பற்றாக்குறை அறிகுறிகள்:

    • செடிகள் மஞ்சள் நிறம் கலந்து, கரும்பச்சையாக இருக்கும்.
    •  முதிர்ந்த இலைகளின் நுனியில், பழுத்த இலை ஓரம் மற்றும் பழுத்து காய்ந்த புள்ளிகள், காணப்படும்.
    • துரு போன்ற பழுப்பு நிற புள்ளிகள் பூங்கொத்தின் மேல் காணப்படும்.நெல்மணி உருவாக்கம் குறைவாக இருக்கும்.
    • வலிமையிழந்த தண்டுகள், பயிர் சாய்தலை உண்டாக்கும்.

நிவர்த்தி முறைகள்:

    • பரிந்துரைக்கப்பட்ட சாம்பல்சத்து அளவைவிட 25 சதவிகிதம் அதிகமாக மண் வழி அளித்தல்.
    • 1 சதவிகிதம் பொட்டாசியம்குளோரைடை  இலைவழி மூலம் அளித்தல்.
    • எரிப்பதற்கு முன் வைக்கோலை வயலில் நன்கு பரப்பி விட்டு,பின் ஒன்றுதிரட்ட வேண்டும்.  எரிந்த வைக்கோல் குவியலிலிருந்து வரும் சாம்பலை வயல் முழுவதும் தூவிப்பரப்ப வேண்டும்.

    சாம்பல் சத்தின் மூலப்பொருட்கள்:

    தொழு உரம், ஆமணக்கு புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு, மூரியேட் ஆப் பொட்டாஸ், பொட்டாசியம் சல்பேட்.

    மிகுதியான சாம்பல் சத்து அளிப்பதால் ஏற்படும் சேதம்:

    1. சாம்பல்சத்து தனிமத்தை மிகுதியாக அளிப்பதால் பயிர் முதிர்ச்சி தாமதம் அடைகிறது.
    2. மேலும், இதனால் சுண்ணாம்புச்சத்து, மக்னீசியச்சத்து மற்றும் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.


சுண்ணாம்புச்சத்து:  
பற்றாக்குறை அறிகுறிகள்:
    • மெல்லிய இளம் இலைகள், வெண்மையான அல்லது வெளிறிய நிறத்துடன் மடிந்து மற்றும் சுருண்ட நுனிப்பகுதியுடன் காணப்படும்.
    • இலையின் பக்க ஓரத்தில் காய்ந்த புள்ளிகள் காணப்படும்.       
    • முதிர்ந்த இலைகள் பழுப்பாக மாறி இறந்துவிடும்.
    • வளர் நுனிகள் வளர்ச்சி குன்றி இறந்துவிடும்.

நிவர்த்தி முறைகள்:
  1. குறைந்த சுண்ணாம்புசத்து செறிவு கொண்ட  மண்ணில், சுண்ணாம்புச் சத்து இழப்பை ஈடு செய்ய தொழு உரம் அல்லது வைக்கோல் (மண்ணில் அமிழ்த்தி அல்லது எரித்து) ஆகியவற்றில் ஒன்றை அளிக்க வேண்டும்.
  2. கால்சியம் குளோரைடு அல்லது கால்சியம் இலைவழி தெளிப்பு கொடுத்தால் தீவிர கால்சியம்-சுண்ணாம்பு பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்யலாம்.
  3. அதிக கார அமில நிலை கொண்ட சுண்ணாம்புப் பற்றாக்குறை உள்ள மண்ணுக்கு ஜிப்சம் அளிக்க வேண்டும்.(எ.கா) களர் நிலம் மற்றும் அதிக சாம்பல் சத்துள்ள மண்ணில்.
  4. அமில மண்ணின்  கார அமில நிலை மற்றும் சுண்ணகம் தேவையை அதிகரிப்பதற்கு ஜிப்சம்  அளிக்க வேண்டும்.
  5. ஜிப்சம்  அளிக்கும் போது “சோடியம் ஹைட்ரோ கார்பனேட்” நிறைந்த நீரால் ஏற்படும் விளைவுகளை மட்டுப்படுத்த “பைரைட்” அளிக்க வேண்டும்.

    கால்சிய சத்தின் மூலப்பொருட்கள்:

    தொழுஉரம், கால்சியம்குளோரைடு, ஜிப்சம், டோலமைட், சுண்ணாம்பு, பைரைட்ஸ், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட், மூன்று சூப்பர் பாஸ்பேட்.


Ca def


  மெக்னீசியம்:

Mg Def


பற்றாக்குறை அறிகுறிகள்:
    • இலை பசுமை சோகை ஏற்பட்டு வெண்நுனியுடன் காணப்படும்.
    • வெளிறிய நிறமுடைய பயிர்களில் முதிர்ந்த இலைகள் ஆரஞ்சு-மஞ்சள் நிறமுடன் நடு இடை நரம்பு பசுமை சோகையுடனும், பின் இளம் இலைகளிலும் இத்தாக்குதல் காணப்படும்.
    • தீவிர தாக்குதலில் பசுமை சோகை ஏற்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாகி இறுதியில் முதிர்ந்த இலைகள் காய்ந்த புள்ளிகளுடன் காணப்படும்.
    • இலைகள் நிலையற்று, பின் வாடி வதங்கி இறந்துவிடும்.
    • கதிர்க்கிளைகளின் எண்ணிக்கை குறைந்து, மணிகளின் தரம் குறைந்துவிடும்.

நிவர்த்தி முறைகள்:
  1. மெக்னீசியம் பற்றாக்குறை அறிகுறிகளை விரைந்து திருத்துவதற்கு, கரையும் மெக்னீசியப் பொருட்களான “கீசிரைட்” அல்லது மெக்னீசியம் குளோரைடு” அளிக்க வேண்டும்.
  2. மெக்னீசியம் நிறைந்துள்ள திரவ உரங்களை இலைவழி அளிப்பு மூலமாக தரவேண்டும்.(எ.கா. மெக்னீசியம் குளோரைடு  2 சதவிகிதம்)

மெக்னீசியத்தின் மூலப்பொருட்கள்:
தொழு உரம், மெக்னீசியம் குளோரைடு , டோலமைட்.

கந்தகம்:  
பற்றாக்குறை அறிகுறிகள்:
    • முழு பயிரும் மஞ்சள் அல்லது வெளிறிய பச்சை நிறமுடன் காணப்படும்.
    • இளம் இலைகளில் பசுமை சோகை ஏற்பட்டு முழு இலையும் வெளிறிய பச்சை நிறத்துடன் தோன்றும். இலை நுனிகள் காய்ந்த புள்ளிகளுடன் காட்சியளிக்கும்.
    • பயிரின் கீழ் பகுதி இலைகளில் காய்ந்த புள்ளிகள் இருக்காது.
    • இலைகள் வெளிறிய மஞ்சள் நிறத்துடன் தோன்றும்.
    • (இலை) தழை வளர்ச்சிப் பருவத்தில் கந்தகம் பற்றாக்குறை ஏற்பட்டால் பயிர் மகசூலில் பாதிப்பு ஏற்படும்.

      நிவர்த்தி முறைகள்:
  1. வைக்கோலை முழுவதும் அகற்றி எரிப்பதை விட அதனை மண்ணுக்குள்ளேயே புதைத்தல் சிறந்தது. எரித்தலின்போது வைக்கோலில் உள்ள 40-60 சதவிகிதம்   கந்தகம் வீணாகிறது.
  2. அறுவடைக்குப்பின், பயிரற்ற காலத்தில் கந்தக உயிர்வளி ஏற்றம் வீதத்தை அதிகரிக்க, உலர் பண்படுத்தல் - கோடை உழவுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
  3. எக்டருக்கு 15-20 கிலோ கந்தகம் அளிப்பது நீடித்த பயனைத் தருகிறது. இதனால் அடுத்தடுத்து வரும் இரண்டு நெற்பயிர்களுக்குத் தேவையான கந்தகத்தை  மண் வழங்குகிறது.

கந்தக சத்தின் மூலப்பொருட்கள்:

அம்மோனியம் சல்பேட், பொட்டாசியம் சல்பேட் , ஜிப்சம்,சிங்கிள்சூப்பர்பாஸ்பேட், மற்றும் கந்தகம் பூசப்பட்ட யூரியா.

S def

S tox

  இரும்புச்சத்து:
Fe Def

Fe Tox

பற்றாக்குறை அறிகுறிகள்:

    • இலை நரம்பிடைப்பகுதி மஞ்சளாகுதல்.
    • மொத்த இலைகள் மற்றும் முளைத்தெழும் இலைகளில் பசுமை சோகை ஏற்படுதல்.
    • முழு பயிர்ச் செடியும் சோகை ஏற்பட்டு மஞ்சளாகுதல்.

நிவர்த்தி முறைகள்:

நெல் வரிசைக்கு இடையில், திண்ம இரும்பு சல்பேட் (30 கிலோ /எக்டர்) அளிக்க வேண்டும் அல்லது  அதனை வீசித் துாவி விட வேண்டும்.

இரும்பு சல்பேட் கரைசலை,இலைவழி அளிப்பாக 2-3 முறைகள் 2 வார இடைவெளியில் (2-3 சதவிகிதம் கரைசல்) அளிக்க வேண்டும்.

அமில உரங்களை (எ.கா) யூரியாவுக்கு பதிலாக அம்மோனியம் சல்பேட் ) அதிக கார நிலை  உள்ள மண்ணில் பயன்படுத்த வேண்டும்.

குறைந்த இரும்புச் சத்து உள்ள மண்ணில்,அதனை தாங்கும் திறன் கொண்ட ரகங்களை வளர்க்க வேண்டும்.

இரும்புச்சத்தின் மூலப் பொருட்கள்:

கரையும் பெர்ரஸ் சல்பேட் (20-33 சதவிகிதம் இரும்பு) பெர்ரஸ்  அம்மோனியம் சல்பேட் (14 சதவிகிதம் இரும்பு) மற்றும் இரும்புத் துகள்கள் (5-14 சதவிகிதம் இரும்பு)

இரும்பின் நச்சுத்தன்மை:

நச்சியல்பு அறிகுறிகள்:
            முதிர் இலைகளில், மேலிருந்து கீழ்நோக்கி சிறிய பழுப்பு புள்ளிகள், அமைந்திருக்கும் அல்லது மொத்த இலைகளும், ஆரஞ்சு-மஞ்சள் நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக மாறுதல்.
            வேர் பகுதிகளில் கருப்பு பூச்சுடன் (மேற்படலம்) காணப்படும்.

நிவர்த்தி முறைகள்:
            அமில மண்ணில் கார அமில நிலையை உயர்த்துவதற்கு, மேற்பரப்பு மண்ணில் சுண்ணாம்பு இடவேண்டும்.  இரும்புசத்து தன்மை குறைதலை தடுப்பதற்கு மேற்பரப்பு மண்ணில் மத்திய பருவ வடிகாலுடன் சேர்த்து எக்டருக்கு 100-200 கிலோ மாங்கனீசுஆக்சைடை மண்ணில் இட வேண்டும்.


துத்தநாகம்:  

பற்றாக்குறை அறிகுறிகள்:

    • மேல் பகுதி இலைகளில் புழுதி போன்ற பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
    • வளர்ச்சி குன்றிய பயிர் செடிகள்.
    • துார்கள் வைப்பது குறைந்து, பூங்கிளை மலட்டுத் தன்மையும் காணப்படும்.
    • இளம் இலைகளின் இலையடிப்பாகம் பசுமை சோகை ஏற்பட்டு பழுப்பு நிறமாக மாறுதல். முதிர் இலைகளில் பொட்டு/கொப்புளம் போன்ற  புள்ளிகள்அல்லது கீறுகளுடன் காணப்படும்.

நிவர்த்தி முறைகள்:
  1. நாற்றங்கால் விதைப்பாத்திகளில் ஜின்க் சல்பேட்டை வீசித் துாவ வேண்டும்.
  2. துத்தநாக ஆக்சைடு நீர்மத்தில் (2-4 சதவிகிதம்) நாற்றுக்கள் நனைத்தல் அல்லது விதைகளை ஊற வைக்க வேண்டும்.
  3. வயலில் பசுந்தாள் உரம் (6.25 டன்/எக்டர்) அல்லது செறிவூட்டிய தொழு உரம் அளித்திருந்தால், 12.5 கிலோ/எக்டர் ஜின்க் சல்பேட்டை அளிப்பதே போதுமானது.
  4. நடவு செய்வதற்கு முன், 25 கிலோ ஜின்க் சல்பேட்டை  50 கிலோ மணலுடன் கலந்து அளிக்க வேண்டும். 
  5. எக்டருக்கு 5-10 கிலோ துத்தநாகத்தை, ஜின்க் சல்பேட்டாக  அளிப்பது, இலைவழி தெளிப்பாக 0.5-1.5 சதவிகிதம் ஜின்க் சல்பேட்டை துார் வைக்கும் பருவத்தில் (நடவு செய்து 25-30 நாட்களுக்குள்) 10-14 நாட்கள் இடைவெளியில் 2-3 முறைகள் தொடர்ந்து அளிக்க வேண்டும்.
  6. துத்தநாக துகள்களை (எ.கா துத்தநாகம்-இடீடிஏ-EDTA) இலைவழி அளிப்பாக பயன்படுத்த வேண்டும்.

    துத்தநாகத்தின் மூலப்பொருட்கள்:

    ஜின்க் சல்பேட், ஜின்க் கார்பனேட், ஜின்க் குளோரைடு, துத்தநாக துகள்கள், ஜின்க் ஆக்சைடு.

    துத்தநாக நச்சுத்தன்மை அறிகுறிகள்:

    மிகுதியான துத்தநாகம், பயிர்களில் பொதுவாக இரும்புசத்து பற்றாக்குறை சோகையை உருவாக்குகிறது.


Zn def

Zn tox

  அலுமினியம்:
Al Tox

பற்றாக்குறை அறிகுறிகள்:

  1. இலைகளில் ஆரஞ்சு-மஞ்சள் நிறமுள்ள நரம்பிடை சோகை ஏற்பட்டு பின் இலைநுனி காய்ந்தும், இலை ஓரம் கருகியும் காணப்படும்.

  2. தீவிர அலுமினியம் நச்சியல்பு இருப்பின், சோகை ஏற்பட்ட பரப்புகளில் காய்தல் ஏற்படும்.

  3. அலுமினியம் பற்றாக்குறைக்கு இலக்காகும் பயிர் வகைகள் வளர்ச்சி குன்றியும், வேர்கள் உருமாற்றத்துடனும் காணப்படும்.

நிவர்த்தி முறைகள்:
  1. நீரை தேக்கி நிறுத்தியபின், அதன் கார அமில நிலை அதிகரிக்கும் வரை, பயிர் நடவு செய்தலை தாமதமாக செய்ய வேண்டும்.  (அலுமினியத்தை செயல் இழக்கச் செய்வதற்கு)
  2. அலுமினியம் தாக்கத்தை தாங்கும் பயிர் வகைகளான (ஐஆர் 43, கோ 37, மற்றும் பாஸ்மதி 370) ஆகிய இரகங்களை நட வேண்டும். இவைகள்,இலைப்பகுதிகளில் குறைந்த அளவு அலுமினியம் சத்தை தேக்கி ,  அலுமினியம் இருக்கும் மண்ணின்,கால்சியம் மற்றும் மணிச்சத்து பயன்பாட்டை அதிகரிக்கிறது..
  3. ஒரு எக்டருக்கு 1-3 டன் சுண்ணாம்பு அளித்து அதன் கார அமில நிலையை உயர்த்த வேண்டும்.


போரான்:  
பற்றாக்குறை அறிகுறிகள்:
    • இளம் இலைகளின் இலைநுனிகள் வெள்ளையாகவும் சுருண்டும் காணப்படும்.
    • பயிர் உயரம் (வளர்ச்சி) குன்றி குட்டையாகக் காணப்படும்.
    • வளர்பகுதிகள் இறந்து, தீவிர பற்றாக்குறையின்போது புதிய சிறு துார்கள் வெளிப்படுதல்.
    • போரான் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பயிர்கள், பூங்கொத்து உற்பத்தி செய்ய முடியாது.

நிவர்த்தி முறைகள்:
  1. மிகுதியான மண் அரிப்பு ஓட்ட த்தையும்,நீர்க்கசிவையும் தடுக்க வேண்டும்.
  2. போரான் பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்வதற்கு போரானை கரைதிறன் வடிவத்தில் (போராக்ஸ்) (0.5-3 கிலோ/எக்டர்) என்ற அளவில் அளிக்க வேண்டும். நடுவதற்கு முன் வீசித் துாவுதல் மற்றும் மண்ணில் இடுதல், நெற்பயிரின் தழைப்பருவ வளர்ச்சியின்போது மேலுரமாக அளித்தல் அல்லது இலைவழி போரான் அளித்தல் வேண்டும்.

    போரான் மூலப்பொருட்கள்:
     போராக்ஸ்,நீரற்ற போராக்ஸ், போரான் உரம்

     போரான் நச்சுத்தன்மை:

    நச்சுத்தன்மை அறிகுறிகள்:

  1. முதன்மை அறிகுறிகளாக முதிர்ந்த இலைகளின் நுனிப்பகுதி மற்றும் இலை ஓரப்பகுதி சோகையுடன் காணப்படும்.

  2. கரும்பழுப்பு நிறத்தில் நீள்வட்ட வடிவமான புள்ளிகள் சோகையான  இலைப்பகுதிகளில், 2-3 வாரத்திற்குப் பின் தோன்றும்.  இதனைத் தொடர்ந்து இலைகள் பழுப்பு நிறமாகி பின் காய்ந்துவிடும்.'

  3. பூங்கொத்து உருவாதலின் போது காய்ந்த புள்ளிகள் அதிகமாகக் காணப்படும்.

    நிவர்த்தி முறைகள்:
  1. போரான் நச்சுத்தன்மையை தாங்கும் இரகங்களைப் பயிரிடுதல், (எ.கா, ஐஆர் 42, ஐ ஆர் 46, ஐஆர் 48 மற்றும் ஐஆர் 54).
  2. குறைந்த போரான் அளவு கொண்ட மேல்தள நீரை பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
  3. மண் உலர்வாக இருக்கும்போது உழவு செய்தல்.  அதனால் மேற்பரப்பு மண்ணில் போரான் படிய உதவுகிறது.குறைந்த அளவு போரான் உள்ள நீரை  மண்ணில் கசியச் செய்ய வேண்டும்.


B def

B Tox

  தாமிரம்:
பற்றாக்குறை அறிகுறிகள்:
    • இலை நடுநரம்பின் இரு பக்கங்களிலும் சோகை ஏற்பட்ட கோடுகள் காணப்படும்.
    • இலை நுனிகளில் கரும்பழுப்பு நிற காய்ந்த தழும்பு (புண்) போல் ஏற்படும். இலைகள் நீல் பச்சை நிறத்துடனும், இலைநுனி அருகில் சோகையுடனும் காணப்படும்.
    • புது இலைகள் சுருளாது மேலும் இலைகளின் வெளி நுனிப் பகுதி ஊசி போன்ற தோற்றம் அளிக்கும்.
    • துார்கள் உற்பத்தி குறைந்து, பூங்கிளை மலட்டுத் தன்மை அதிகரிக்கும்.

நிவர்த்தி முறைகள்:
  1. நாற்றை நடுவதற்கு முன் நாற்றின் வேர்களை நடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் 1 சதவிகிதம் தாமிர சல்பேட்  நீர்மத்தில் நனைய விட வேண்டும்.
  2. அமில மண்ணில் அதிக சுண்ணாம்பு அளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிகமாய் அளித்தால் தாமிரம் எடுத்துக்கொள்ளும் அளவு குறைந்துவிடும்.
  3. தாமிர பற்றாக்குறை உள்ள மண்ணில், நீண்டகாலம் மண்ணில் தாமிர பாதுகாப்புக்காக தாமிர ஆக்சைடு அல்லது தாமிர சல்பேட் (5 வருட இடைவெளியில் ஒரு எக்டருக்கு 5-10  கிலோ தாமிரம்) வீசி அளித்தல் அல்லது மண்ணுக்குள் இடுதல் முறையில் அளிக்க வேண்டும்.

தாமிரத்தின் மூலப்பொருட்கள்:
தாமிர ஆக்சைடு, தாமிர சல்பேட்.

மாங்கனீஸ்:  
பற்றாக்குறை அறிகுறிகள்:
    • வெளிறிய சாம்பல் நிறமுடைய பச்சையான நரம்பிடை சோகை இலை நுனியிலிருந்து இலையடிப்பாகம் வரை பரவியிருக்கும்.
    • பின்னர், காய்ந்த பழுப்பு நிறப் புள்ளிகள் வளர்ந்து இலைகள் கரும்பழுப்பு நிறமாக மாறிவிடும்.
    • புதிதாக வெளிவரும் இலைகள், குட்டையாக, குறுகி, மங்கிய பச்சை நிறத்துடனும் இருக்கும்.
    • பற்றாக்குறை ஏற்பட்ட பயிர்ச் செடிகள் குட்டையாகவும், குறைந்த இலைகளுடனும், எடை குறைந்தும், காணப்படும்,  மேலும் துார்கள் உற்பத்தியின் போது சிறிய வேர்கள் அமைப்புகளே இருக்கும்.

நிவர்த்தி முறைகள்:

  1. நெற்பயிர் வரிசை வழியாக பாத்திகளின் மேல், மாங்கனீஸ் சல்பேட் அல்லது மென்மையாக அரைத்த மாங்கனீஸ் ஆக்சைடு (5-20 கிலோ மாங்கனீஸ்/எக்டர்) அளிக்க வேண்டும்.
  2. மாங்கனீஸ் பற்றாக்குறையை (1-5 கிலோ மாங்கனீஸ்/எக்டர்/200 லிட்டர் நீர்/எக்டர்) விரைவாக சரி செய்வதற்கு இலைவழியாக மாங்கனீஸ் சல்பேட்டை அளிக்க வேண்டும்.
  3. அமிலம் உருவாக்கும் உரங்களான அமோனியம்சல்பேட்டை  யூரியாவிற்கு பதிலாக அளிக்க வேண்டும்.

    மாங்கனீஸ் மூலப்பொருட்கள்:: மாங்கனீஸ் சல்பேட், மாங்கனீஸ் ஆக்சைடு.

    மாங்கனீஸின் நச்சுத்தன்மை:

    நச்சுத்தன்மையின் அறிகுறிகள்:
    • நரம்புகளுக்கிடையே மஞ்சளான பழுப்பு நிறமுடைய புள்ளிகள் தோன்றி பின் மொத்த நரம்பிடை பகுதிகளிலும் விரிவடைகின்றது.
    • இடைநிலை இலைப்பரப்புகள் மற்றும் இலையுறைகளின் நரம்புகளில் பழுப்பு புள்ளிகள் காணப்படும்.
    • நடவு செய்து எட்டு வாரங்களில் இலை நுனிகள் காய்ந்துவிடும்.
    • இளம் இலைகளின் சோகை அறிகுறிகள் (மேல் இலைகள்) இரும்புப் பற்றாக்குறை சோகையின் அறிகுறிகளைப் போலவே இருக்கும்.
    • வளர்ச்சி குன்றிய பயிர்கள், துார்கள் உற்பத்தி குறைவு மற்றும் மலட்டுத் தன்மை ஆகியவை ஏற்பட்டு நெல் மகசூலைக் குறைக்கிறது.

    நிவர்த்தி முறைகள்:
  1. உயிரியமாக்கிகளைப் (ஆக்சிடண்ட்ஸ் - எ.கா.கால்சியம்பெராக்ஸைடு) பயன்படுத்தி விதைப்பூச்சு செய்வதால் விதை முளைக்கும் திறனை உயர்த்துகிறது.  மேலும் உயிரிய அளிப்பை அதிகரித்து நாற்றுகள் வெளி வருதலையும் மேம்படுத்துகிறது.
  2. செயலுள்ள மாங்கனீஸின் செறிவைக் குறைக்க, அமில மண்ணில் சுண்ணாம்பு அளிக்க வேண்டும்.
  3. மண்ணில் அமோனியா இருப்பின் மாங்கனீஸ் எடுத்துக்கொள்ளும் திறன் குறைய வாய்ப்புள்ளது.


Mn def

Mn tox

  சிலிக்கான்:
Si Def பற்றாக்குறை அறிகுறிகள்:
    • இலைகள் மற்றும் தண்டுகள், மென்மையாகவும் வாடி வதங்கியும் காணப்படும். இதனால் பயிர்களுக்கிடையே  நிழலிடம் அதிகரிக்கிறது.
    • ஒளிச்சேர்க்கை செயலை குறைக்கிறது.
    • தீவிர சிலிக்கான் பற்றாக்குறை ஏற்படும்போது ஒரு சதுர மீட்டருக்கான பூங்கொத்து எண்ணிக்கையை குறைகிறது. மேலும் பூங்கொத்திலுள்ள நிரம்பிய கதிர்க் கிளைகளின் எண்ணிக்கையையும் குறைகிறது.
    • சிலிக்கான் பற்றாக்குறை உள்ள செடிகள், குறிப்பாக தண்டு சாய்தலுக்கு இலக்காகும்.

நிவர்த்தி முறைகள்:
  1. சிலிக்கான் பற்றாக்குறையை விரைவாக திருத்துவதற்கு, குருணை வடிவ சிலிக்கான் உரங்களான கால்சியம்சிலிக்கேட் (120-200 கிலோ/எக்டர்) மற்றும் பொட்டாசியம்சிலிக்கேட் (40-60 கிலோ/எக்டர்) ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
  2. நீண்ட கால சிலிக்கான் பற்றாக்குறையை தடுப்பதற்கு நெல் அறுவடையைத் தொடர்ந்து வைக்கோலை வயலில் இருந்து அகற்றாமல் அப்படியே விட்டுவிட வேண்டும்.  நெற்பயிர் வைக்கோல் (5-6 சதவிகிதம் சிலிக்கான்) மற்றும் நெல் உமி (10 சதவிகிதம் சிலிக்கான்) ஆகியவற்றை சுற்றுச்சுழற்சி செய்ய வேண்டும்.
  3. அதிக தழைச்சத்து உரம் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் மகசூல் அதிகரித்து, தழைச்சத்து மற்றும் சிலிக்கான் முழுவதுமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.மேலும், மிகுதியான தழைப்பகுதி வளர்ச்சி, வைக்கோலில் உள்ள சிலிக்கானின் செறிவைக் குறைக்கிறது.

சிலிக்கானின் மூலப்பொருட்கள்:
கால்சியம்சிலிக்கேட்,பொட்டாசியம்சிலிக்கேட், வெடிமருந்து உலைக்கசடு.


சோடியம்

சோடியம் நச்சுத்தன்மை:
நச்சுத்தன்மையின் அறிகுறிகள்:

இலைகள் குட்டையாக, குறுகிய மற்றும் எளிதில் உடையும் தன்மை கொண்டதாக இருக்கும்.
இலைகள் முதலில் கரும்பச்சைநிறமாக இருக்கும்.பின்பு வெளிறிப்போய் மஞ்சள் நிறத்திலிருந்து இளஞ்சிவப்பு நிறமாக மாறி பின் காய்ந்துவிடும்.

நிவர்த்தி முறைகள்:

ஜிப்சம் (100-200 கிலோ/எக்டர்) மண் வழியாக அளித்தல் பின் நீர்மூலம் அரித்து வெளியேற்றுதல்.


சல்பைடு:

நச்சுத்தன்மையின் அறிகுறிகள்:

    • முளைத்தெழும் இலைகளில் இலை நரம்பிடை சோகை ஏற்படும்.
    • முரடான, அடர்த்தியற்ற, நன்கு பழுத்த நிறத்திலிருந்து கருப்பு நிறமான வேர்கள்.
    • புதிதாக வேரோடு எடுக்கப்பட்ட நெற்பயிர் சரியான வேர் வளர்ச்சி அமைப்புகள் இன்றி காணப்படும். மிகுதியான கருப்பு வேர்கள் இருக்கும்.
    • நோய்களின் தாக்கத்தை அதிகரிக்கும்.

நிவர்த்தி முறைகள்:
மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் மக்னீசியம் உரங்களை அளிக்க வேண்டும். குறைந்த இரும்புச்சத்து உள்ள மண்ணில் நீர்க்கந்தகத்தை, இரும்பு கந்தகமாக பெயர்ச்சி முடக்க மடைவதை அதிகரிக்க இரும்பு (உப்புகள் அல்லது ஆக்சைடுகள்) அளிக்க வேண்டும். அதிக  சிலிக்கான் செறிவுத் தன்மையுடைய மண்ணில், தொடர்ச்சியான வெள்ளப் பாசனத்தை தவிர்த்து, இடைவிட்ட நீர்ப் பாசனத்தை அளிக்க வேண்டும். அறுவடைக்குப் பின்,  பயிர் இல்லாத காலங்களில் ,உலர்நில பண்படுத்தல் மேற்கொள்ள வேண்டும். இதனால் தரிசுநில கந்தகம் மற்றும் இரும்பு உயிர்வளி ஏற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

மேலே செல்க

கரிம எருக்கள்:

(1) பசுந்தாள் உரமிடுதல்:
(2) உயிர் உரங்கள்:
(3) உரமிடுதல்:


கரிம எருக்கள்:
பசுந்தாள் உரமிடுதல்:  

பசுந்தாள் உரங்கள்

விதை அளவு (கிலோ/எக்டர்)

பசுந்தாள் அங்கக உயிர்ப் பொருள் (டன்/எக்டர்)

சித்தகத்தி (செஸ்பேனியா ஸ்பீசியோசா)

30-40

15-18

தக்கைப்பூண்டு (செஸ்பேனியா அக்யூலேடா)

50

25

மணிலா அகத்தி (செஸ்பேனியா ரோஸ்ட்ரேட்டா)

40

20

சணப்பை (க்ரோட்டலேரியா ஜன்க்சியா)

25-35

13-15

கொளுஞ்சிசெடி (டெஃப்ரோசியா பர்ப்யூரியா)

15-20

6-7


greenmanure

  பசுந்தழை உரங்கள்

Glyricidia Pungam

Neem Sesbania grandiflora

  • கிளைரிசிடியா (கிளைரிசீடியா மேக்யூலேடா -கிளைரிசீடியா செப்பியம்)
  • புங்கம் (டெர்ரீஸ் இன்டிகா -பொங்கமியா கிலேப்ரா)
  • ஐபோமியா கார்னியா
    வேம்பு  (அசாடிரேக்டா இன்டிகா)
  • செஸ்பேனியா கிரேன்டிஃப்ளோரா

பசுந்தாள் உரமிடுதலின் நன்மைகள்:
    • பசுந்தாள் உரம் மண் வடிவத்தை மேம்படுத்தி மண் நயத்தை செம்மைப்படுத்துகிறது.
    •  மண் மேற்படல பாசிகள் மற்றும் நுண்ணியிரிகளின் செயல்திறனைத் துாண்டி, அதனால் நெற்பயிரின் மண்ணில் காற்றோட்டத்தை மேம்படுத்துகிறது.
    • வேர் முடிச்சுகளில் தழைச்சத்து நிலையாக்க நுண்ணுயிரியான “ரைசோபியத்தை” செயல்படச் செய்து வளிமண்டல தழைச்சத்தை (60-100 கிலோ தழைச்சத்து /எக்டர்) நிலையாக்குகிறது.
    • கடின மண்ணை எளிதில் பொடியாக்கச் செய்கிறது.  இதனால் காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதி எளிமையாக உள்ளது.
    • நெல்லின் புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்து அதிகரிக்கிறது.

உயிர் உரங்கள்:
  1. ன்மை விளைவிக்கும் நுண்ணியிரிகளை, விதைகள், வேர் அல்லது மண்ணில் உயிர் உரமாக அளிக்கும் போது, குறிப்பாக, உயிரியல் செயல்பாட்டுத் திறன் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துப் பொருள்களை செயல் படச் செய்கிறது. மேலும் நுண் தாவர வளத்தை உயர்த்துவதோடு மண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
  2. உயிர் உரங்கள், சுற்றுப்புற நண்பனாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாகவும் விளங்குகிறது.
    ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துக்களின் பகுதியாக மட்டும் இல்லாமல், குறைந்த விலையுடையதாகவும் இருக்கிறது உயிர் உரங்கள்:
  3. நெற்பயிருக்கு பயன்படுத்தும் உயிர் உரங்கள் -அசோலா நீலப்பச்சைப்பாசி, அசட்டோபேக்டர் , அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா, பாஸ்பேட் கரைப்பான்கள் மற்றும் மைக்கோரைசா ஆகியவை ஆகும்.

அசோலா:  

    • அசோலா என்பது நன்னீர்  பெரணி.
    • அசோலா 0.5 - 1 டன்/எக்டர் (அங்கக உயிர்ப் பொருள்) நெற்பயிரில் இருமுறைகளில் உபயோகிக்கலாம்.  ஒன்று  பயிர் நடவு செய்வதற்கு முன் பசுந்தாள் உரமாக அளித்தல் அல்லது நடவு செய்து 7 நாட்களில் இரு பயிர் சாகுபடியாக அசோலாவை இடுதல்.
    • அசோலா முழுமையாக மட்கியபின் (8-10 நாட்கள்) நெற்பயிருக்கு தழைச்சத்து உரத்தை அளிக்கிறது.
    • இரசாயன உரத்தைவிட ,40 வது நாளில் அசோலா இடுவது, கார்பன்-நைட்ரஜன் விகிதத்தையும் அதிகரித்து, மணிச்சத்து இருப்பையும்அதிகப்படுத்தி, மண்ணை மேம்படுத்துகிறது.



  நீலப்பச்சைப் பாசி:
Blue green
    • நீலப் பச்சை பாசிகள் ஒளிச்சேர்க்கைதன்மைமிக்க, நுண்ணியிரிகள். இவை வளிமண்டல நைட்ரஜனை நிலைக்க வைக்கும் தன்மை கொண்டது.
    • நடவு செய்து 10 நாட்களில் இதனை 10 கிலோ/எக்டர் என்ற அளவில் நெற்பயிரில் அளிக்க வேண்டும்.  “பாசியாகுதல்” தன்மை  நெல் தானியம் மற்றும் வைக்கோலின் தழைச்சத்து அளவை அதிகரிக்கிறது.  மேலும் மண் வளத்தையும் மேம்படுத்துகிறது.
    • 1 எக்டருக்கு 20-30 கிலோ தழைச்சத்தை நீலப்பச்சைப்பாசி  அளிக்கிறது.

அசட்டோபேக்டர்:  

  • “அசட்டோபேக்டர்” என்பது தனித்தியங்கும் நைட்ரஜன் நிலையாக்க நுண்ணுயிரி ஆகும். இவற்றை மண் அல்லது நாற்று அல்லது விதை ஆகியவற்றின் மூலம் நெற்பயிருக்கு வழங்கலாம்.

Azotobacter

  அசோஸ்பைரில்லம்:

நெற்பயிர் நாற்றுகள் அல்லது விதைகளை “அசோஸ்பைரில்லத்துடன்” சேர்த்து பயன்படுத்துவதால், முன்னரே துார்கள் உருவாக்கம் மற்றும் நெற்பயிர் வளர்ச்சி அதிகப்படுகிறது. மேலும் அறுவடையின் போது தானிய நிரப்புதலின் அளவை அதிகரித்து, தானிய எடையையும் அதிகரிக்கிறது.


பாஸ்போபேக்டீரியா:  
  • அதிக அளவிலான பாஸ்பரஸ்  உரத்தை மண்ணில் அளிக்கும் போது அதனை செடிகள் (பயிர்கள்) எடுத்துக் கொள்ளாதவாறு கரையாத வடிவ பாஸ்பரஸாக மாற்றுகிறது.
  • 20-25 சதவிகிதம் பாஸ்பரஸ் மட்டுமே பயிர்களுக்குக் கிடைக்கிறது. இந்த கரையா பாஸ்பரஸ் மற்றும் கிடைக்கப் பெறாத பாஸ்பரஸ் பயிரால் உபயோகிக்கப் படுவதில்லை.
  • கரையாமல் இருக்கும் பாஸ்பரஸை (மணிச்சத்து) கரையச் செய்யும் நுண்ணுயிரே “பாஸ்போபேக்டீரியா” எனப்படுகிறது.
  • பாஸ்போபேக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் கரிம அமிலம் மண்ணிலுள்ள கரையா (நிலைத்த) வடிவ பாஸ்பரஸை கரைத்து, பயிர்கள் எடுத்துக் கொள்ள உதவுகிறது.

Phosphobacteria

அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா, அசிட்டோபாக்டர்--பாக்கெட்டுகளின் எண்ணிக்கை/எக்டர்:
பாக்கெட்டுகளின் எண்ணிக்கை/எக்டர்:

அளிக்கும் முறை

பாக்கெட்டுகளின் எண்ணிக்கை/எக்டர்

விதை நேர்த்தி

5

நாற்றங்கால்

10

நாற்று நனைத்தல்

5

நடவு வயல் (மண்வழி அளிப்பு)

10

மொத்தம்

30



  மைக்கோரைசா:
Mychorriza
  1. யற்கையாக தாழ்வான பகுதிகள், மற்றும் மேட்டுப்பாங்கான நெல்லில் காணப்படும். “மைக்கோரைசா” மண்ணில்செயல்பட்டு,  நெற்பயிருக்குத் தேவையான பாஸ்பரஸை கிடைக்கப்பெறச் செய்கிறது.
  2. மேலும் இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துப் பொருள்களை வழங்குகிறது.
  3. “என்டோமைக்கோரைசா” என்பது கட்டுப்பட்ட கூட்டு வாழ் உயிரிகள். மேலும் இவை ஒரு வகை சிற்றினத்தின் பூசண வித்துக்களோடு சேர்த்து உட்புகுத்தப்பட்ட உயிர் உள்ள பயிர்களில் தான் இதனை பாதுகாக்க முடியும்.  இவ்வாறு உட்புகுத்தப்பட்ட உயிர் உள்ள பயிரின்வேர்பகுதிகளை  மண்ணோடு சேர்த்துசேகரித்து எடுக்க வேண்டும்.
  4. குறிப்பிட்ட “மைக்கோரைசா பூசணத்தால்” கடினமாக தாக்கப்பட்ட வேர் அங்கக உயிர்ப் பொருள், அடுத்திருக்கும் பாத்திகளுக்கும் உயிர்க்காரணிப் பொருளாக விளங்குகிறது.

 


பாஸ்பேட் கரைப்பான்கள்:  
      இம்மாதிரியான உயிர் உரங்கள் மண்ணில் இருக்கும் பாஸ்பேட்டை கரைத்து தாழ்வான மற்றும் மேட்டுப்பாங்கான நெல்லுக்கு எளிதாக கிடைக்கும் வடிவத்தில் அளிக்கிறது. நுண்ணுயிரிகளான பேசில்லஸ்
மெகாதீரியம்-பாஸ்பேடிகம், பேசில்லஸ் பாலிமிக்ஸா, சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸ், சூடோமோனாஸ் ஸ்ட்ரையேட்டா மற்றும் பூசணங்களான பென்சீலியம் டிஜிடேட்டம், ஏஸ்பெர்ஜில்லஸ் நைகர், ஏஸ்பெர்ஜில்லஸ் அவமோரி ஆகியவை பாஸ்பேட்டை தீவிரமாக கரைக்கும் தன்மை கொண்டவை.

Phosphate solubiliser

  உயிர் உரங்களை அளிக்கும் முறைகள்:
dipseed
  • உயிர்உரங்கள்அனைத்தும்,நுண்ணுயிரிகலவைபொருள்களாக வழங்கப்படுகிறது.
  • சாக் பவுடர்,பழுப்பு நிலக்கரி அல்லது துாள் கரி, பகுதிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
  • பகுதிபொருள்கொண்ட நுண்ணுயிரிகலவைபொருள்களை கீழ்வரும் முறைகள் மூலம்  பயிருக்கு வழங்கப்படுகிறது.
    • விதை நேர்த்தி
    • நாற்று வேர் நனைத்தல் மற்றும்
    • நடவு வயலில் இடுதல்

விதை நேர்த்தி:  
    • ஒரு பாக்கெட் நுண்ணுயிரிகலவைபொருளை 200 மி.லி அரிசி கஞ்சியுடன் கலந்து கூழ் மருந்தாக்கிக் கொள்ளவும்.
    • ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை இந்த கூழ் மருந்துடன் கலக்கவும். இதனால் விதைகளின் மேல் நுண்ணுயிரிபொருள்கள் சீராக மேற்படலம் ஏற்படும். பின்னர் இதனை 30 நிமிடங்கள் நிழலில் உலர வைக்க வேண்டும்.
    • நிழலில் உலர்த்தப்பட்ட விதைகளை 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும்.
    • ஒரு பாக்கெட் (200 கிராம்) நுண்ணுயிரிப் பொருள் 10 கிலோ விதைகளை நேர்த்தி செய்ய போதுமானது.

seed_ treatment

  நாற்று வேர் நனைத்தல்:
seed dip
    • நாற்றங்காலிலிருந்து பிரித்து வயலில் நடும் நெற்பயிருக்கு இம்முறையைப் பயன்படுத்த வேண்டும்.
    • 2 பாக்கெட் நுண்ணுயிரிப் பொருளை 40 லிட்டர் நீருடன் கலக்க வேண்டும்.
    • ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுக்களை எடுத்து அதன் வேர்களை இந்த கரைசலில் 5-10 நிமிடங்கள் நன்கு நனைத்து பின் நட வேண்டும்.

நடவு வயலில் நேரடியாக அளித்தல்:  

4 பாக்கெட் நுண்ணுயிரிப் பொருளை, நன்கு வறண்ட, பொடி செய்த தொழு உரத்துடன் (20 கிலோ) கலந்து ஒரு ஏக்கர் நடவு வயலில் நடவு செய்வதற்கு முன் வீசித் துாவி விட வேண்டும்.

FYM

  நுண்ணுயிர் உரங்களை கலந்து அளித்தல்:
soilapp

பாஸ்போபாக்டீரியாவைஅசோஸ்பைரில்லத்துடன்கலக்கலாம்.  நுண்ணுயிரிகளை சம அளவில் கலந்து மேற்கூறிய முறைகளில் அளிக்க வேண்டும்.


பசுந்தாள் உரமிடுதல் செயல்முறைகள்:
தமிழ்நாடு:  
    • 20 சென்ட் நாற்றங்காலில், நன்கு மக்கிய தொழு உரம் அல்லது இயற்கை உரத்தை 1 டன் அளவில் அளித்து உலர் மண்ணில் நன்கு சீராக  உரத்தை பரப்பிவிட வேண்டும்.
    • நடவு வயலில், தொழு உரம்/இயற்கை உரத்தை 12.5 டன்/எக்டர் அல்லது பசுந்தழை உரம் 6.25 டன்/எக்டர் என்ற அளவில் அளிக்க வேண்டும்.
    • பசுந்தாள் உரப்பயிர் விதை (20 கிலோ/எக்டர்), விதைக்கப்பட்டால், பசுந்தாள் உரமிடும் இயந்திரம் அல்லது இழுவை இயந்திரத்தை (டிராக்டர்) பயன்படுத்தி 15 செ.மீ ஆழத்திற்கு பசுந்தாள் உரத்தை நன்கு மண்ணுள் அமிழ்த்தி கலக்கி விட வேண்டும்.
    • பசுந்தாள் உரத்திற்கு பதிலாக கரும்பாலைக் கழிவு அல்லது மட்கிய தென்னை நார்க்கழிவை பயன்படுத்தலாம்.

FYM_n
Green_ Manure

  கேரளா:
Cowpea_k
  • வயல் உழவின் போது தொழு உரம் அல்லது இயற்கை உரம் அல்லது பசுந்தழை உரம் @  5 டன்/எக்டரை சேர்த்து மண்ணுள் நன்கு செல்லுமாறு உழவு செய்ய வேண்டும்.
  • தாழ்வான நில புழுதி விதைப்பு (பகுதி பாசன நெல்) நெல்லுடன் எக்டருக்கு 12.5  கிலோ தட்டைப் பயிறு விதையை ஊடுபயிராக பயிர் செய்வதால் இது பசுந்தாள் உரமாக பயன்படுகிறது.
  • தென்மேற்கு பருவ மழை தொடக்கத்தின் போது, நெல் வயல் நன்கு மூழ்கிவிடும். அச்சமயத்தில் ஆறு வாரங்களான தட்டைப்பயிறு அதன் செயல் மிகுந்த தழைப்பருவத்தில் இருப்பது அழுகல் ஏற்பட்டு தானாகவே மண்ணுள் புதைந்து விடுகிறது.
  • இதனால் மண் கூடுதலான அளவு பசுந்தாள் உரத்தைப் பெறுகிறது.
    இம்முறையான தட்டைப்பயிறு வளர்ச்சி பகுதி பாசன நெல்லில் களைகளின் அழுத்தத்தையும் குறைக்கிறது.

கர்நாடகா:  
சாலில்இட்டு விதைத்த நெல்:
  1. நெல் விதையுடன் பசுந்தாள் உர பயிரான (10 கிலோ/எக்டர் அளவு) சணப்பை விதைகளையும் கலந்து விதைத்தல்.
    பயிர் மிதிக்கும் முறை (ஹோட்டா செயல்முறை-பிலேங்கிங்) பின்பற்றுதல் விதைத்து 40 நாட்களுக்குப்பிறகு நீர் தேக்கமுறை இருப்பின் சணப்பைப்பயிர் மண்ணுள் சென்று எளிதாக மக்குதல் ஏற்பட்டு மண்ணுக்குத் தேவையான கரிம எருப் பொருளை அளித்து மண் வளத்தைப் பாதுகாக்கிறது.
    அல்லது
    ஹோட்டா செயல்முறையைப் பயன்படுத்தி பசுந்தழை உரமான யூப்படோரியம்/பார்த்தீனியம்/கேசியா மற்றும் இதர களை பசுந்தழை பொருள்களை 5 டன்/எக்டர் என்ற அளவில் இரண்டு நெற்பயிர் வரிசைகளுக்குக்கிடையே அளித்தல் வேண்டும்.
    சிறந்த மகசூலைப் பாதுகாக்க 50 சதவிகிதம் ஊட்டச்சத்தை மட்டுமே இம்முறை அளிக்கிறது.

நடவுசெய்த நெல்:

நெற் பயிர் நடவு செய்வதற்கு எட்டு வாரங்களுக்கு முன்னர், பரிந்துரைக்கப்பட்ட முழு மணிச்சத்து உரத்தை அளிக்கும் போது அதனுடன் “செஸ்பேனியா ரோஸ்ட்ரேட்டா” (மணிலா அகத்தி 25 கிலோ/எக்டர்) பசுந்தாள் உர விதைகளையும் சேர்த்து விதைக்க வேண்டும். பின்பு “ஹோட்டா செயல்முறை” (பிலேங்கிங்) மூலம் விதைத்து 7 வாரத்திற்குப் பின் பசுந்தாள் உரத்தை மண்ணுள் செலுத்த வேண்டும். பசுந்தாள் உரத்தை, பரிந்துரைக்கப்பட்ட 50 சதவிகிததழைச்சத்துடன் மண்ணுள் செலுத்தி ஒரு வாரத்திற்குப் பின், நாற்றுக்களை வயலில் நடவு செய்ய வேண்டும்.

Incor_ Sesbania

Sow _sunhemp
  மேலே செல்க

 

தேவையான உர அளவுகள்:

(1) தேவையான உர அளவுகள

இப் பொருள்கள் குளிர் மண்ணிலும் விரைவாக செயல்படக் கூடியவை. மேலும் செயற்கை உரங்கள் மலிவானவை.  பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும், மண்ணுக்குப் போதுமான ஊட்டச்சத்தை வழங்கவும்  குறிப்பாக மகசூல் குறைப்புக் காரணிகளை சரிசெய்யவும் செயற்கை உரங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது.


அ) தமிழ்நாடு
சேற்றுழவிட்டு நடவு செய்யப்பட்ட தாழ்வான பகுதி நெல்:
 

பொதுவான பரிந்துரை அளவு (கிலோ/எக்டர்) – 150:50:50

உரம் அளிக்கப்படும் பயிர் நிலைகள்

பிரித்து இடும் அளவு
(கிலோ/எக்டர்)

நேரடி உரம்
(கிலோ/எக்டர்)

தழைச்
சத்து

மணிச்
சத்து

சாம்பல் சத்து

யூரியா

சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

அடியுரம்

37.5

50

12.5

81.38

312.50

20.75

அதிக துார் விடும் பருவம்

37.5

-

12.5

81.38

-

20.75

பூங்கொத்து துவக்க நிலை

37.5

-

12.5

81.38

-

20.75

பூட்டைப் பருவம்
(கதிர்ப் பருவம்)

37.5

-

12.5

81.38

-

20.75

நாற்றங்காலில், கடைசி சேற்றுழவிற்கு முன், “டை அமோனியம் பாஸ்பேட்” (40 கிலோ-DAP) அடியுரமாக அளிக்க வேண்டும்.  விதைத்து 20-25 நாட்களில் நாற்றுக்களை பிரித்து நடவு வயலில் நடவு செய்யலாம்.  சேற்று மண்ணில் வேர் அறுந்து விடல் பிரச்சினையாக இருப்பின், ஜிப்சம் 4 கிலோ மற்றும் “டை அமோனியம் பாஸ்பேட் (DAP) 1 கிலோ ஆகிய இரண்டையும் விதை விதைத்து 10 நாட்களில் இட வேண்டும்.


சேற்றுவயல் நேரடி விதைப்பு நெல், நஞ்சையில் புழுதி விதைத்த இறவை நெல் மற்றும் மேட்டுப்பகுதி மானாவாரி நெல்:  

பொதுவான பரிந்துரை அளவு (கிலோ/எக்டர்) – 50:25:25

உரம் அளிக்கப்படும் பயிர் நிலைகள்

பிரித்து இடும் அளவு  (கிலோ/எக்டர்)

நேரடி உரம் (கிலோ/எக்டர்)

தழைச் சத்து

மணிச் சத்து

சாம்பல் சத்து

யூரியா

சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

அடியுரம்

12.5

25

6.25

27.13

156.25

10.38

அதிக துார் வைக்கும் பருவம்

12.5

-

6.25

27.13

-

10.38

பூங்கொத்து துவக்க  நிலை

12.5

-

6.25

27.13

-

10.38

பூட்டைப் பருவம் (கதிர் வைக்கும் பருவம்)

12.5

-

6.25

27.13

-

10.38


பகுதி பாசன அமைப்பு - நஞ்சையில் புழுதி விதைத்த இறவை நெல்:  

பொதுவான பரிந்துரை அளவு (கிலோ/எக்டர்) –:75:25:37.5

உரம் அளிக்கப்படும் பயிர் நிலைகள்

பிரித்து இடும் அளவு  (கிலோ/எக்டர்)

நேரடி உரம் (கிலோ/எக்டர்)

தழைச்
சத்து

மணிச்
சத்து

சாம்பல் சத்து

யூரியா

சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

அடியுரம்

18.75

25

9.375

40.69

156.25

15.56

அதிக துார் வைக்கும் பருவம்

18.75

-

9.375

40.69

-

15.56

பூங்கொத்து துவக்க நிலை

18.75

-

9.375

40.69

-

15.56

பூட்டைப் பருவம் (கதிர் வைக்கும் பருவம்)

18.75

-

9.375

40.69

-

15.56


(ஆ) கேரளா:
 

நிலம்/பகுதியின்
வகை

இரகம்

பரிந்துரைக்கப்பட்ட உர அளவு (கிலோ/எக்டர்)

நேரடி உரம் (கிலோ/எக்டர்)

தழைச் சத்து

மணிச் சத்து

சாம்பல் சத்து

யூரியா

சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

மேட்டுப்பாங்கான நிலம் (மோடன்)

பிடிபீ 28, 29, 30

40

20

30

86.80

125.00

49.80

குறுகிய கால இரகங்கள்

60

30

30

130.20

187.50

49.80

நஞ்சை நிலம் (அனைத்து பகுதிகளும்)

குறுகிய கால இரகங்கள்

70

35

35

151.90

218.75

58.10

மத்திய கால இரகங்கள்

90

45

45

195.30

281.25

74.70

கோல் நிலங்கள்

குறுகிய கால இரகங்கள்

90

35

45

195.30

218.75

74.70

மத்திய கால இரகங்கள்

110

45

45

238.70

281.25

74.70

கட்டுகாம்பல் மற்றும் பொன்னனி கோல் நிலங்கள்

மத்திய கால இரகங்கள்

110

45

55

238.70

281.25

91.30

உரம் அளிக்கும் நிலைகள்:
1. குறுகிய கால இரகங்களுக்கு, தழைச்சத்தை 3 சம அளவாகப் பிரித்து, அடியுரம், அதிக துார்விடும் பருவம் மற்றும் தீவிர பூங்கொத்து உருவாக்க நிலை ஆகிய மூன்று நிலைகளிலும்  அளிக்க வேண்டும்.  பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து உரத்தை முழுவதுமாக அடியுரமாக அளித்தல் வேண்டும். சாம்பல் சத்து உரத்தை இரண்டு சம அளவாகப் பிரித்து அடியுரமாகவும், தீவிர பூங்கொத்து உருவாக்க நிலைகளிலும் அளிக்க வேண்டும்.
2. மத்திய கால மற்றும் நீண்ட கால இரகங்களில் தழைச்சத்தை இரு சம அளவாகப் பிரித்து, அடியுரமாகவும், தீவிர பூங்கொத்து உருவாக்க நிலைகளிலும் அளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து உரத்தை முழுவதுமாக அடியுரமாக அளிக்க வேண்டும். சாம்பல் சத்து உரத்தை இரு சம அளவாக பிரித்து, அடியுரமாகவும், வீரிய பூங்கொத்து உருவாக்க நிலைகளிலும் அளிக்க வேண்டும்.
3. நேரடி விதைப்பு நெல்லில், விதை விதைத்து  ஒரு வாரத்திற்குப்பின் அடியுரம் அளிக்கவேண்டும்.


(இ) கர்நாடகா:
 

 

மண்டலம்

பரிந்துரைக்கப்பட்ட
உர அளவு (கிலோ/எக்டர்)

நேரடி உரம் (கிலோ/எக்டர்)

உரம் அளிக்கும் காலம்

தழைச்
சத்து

மணிச்
சத்து

சாம்பல்
சத்து

யூரியா

சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

1, 2, 8

100

50

50

217.00

312.50

91.30

தழைச்சத்து-50 சதவிகிதம்-நடவு செய்வதற்கு முன் .
25 சதவிகிதம்-நடவு செய்து 30 நாட்களில். 25 சதவிகிதம்- பூங்கொத்து உருவாக்க நிலையில். மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் துத்தநாகம் ஆகியவை முழு அளவையும் அடியுரமாக அளிக்க வேண்டும்.

3

150

75

75

325.50

468.75

124.50

தழைச்சத்து 50 சதவிகிதம் நடவு செய்வதற்கு முன். 25  சதவிகிதம் - நடவு செய்து 30 நாட்களில். 25 சதவிகிதம் -பூங்கொத்து உருவாக்க நிலையில். மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் துத்தநாகம் ஆகியவற்றை முழு அளவையும் அடியுரமாக அளிக்க வேண்டும்

9

75

75

90

162.75

468.75

149.40

தழைச்சத்து 50 சதவிகிதம்- நடவு செய்வதற்கு முன். 25  சதவிகிதம் - விதைத்த 30 நாட்களில். 25 சதவிகிதம் -55 -வதுநாட்களில் அளிக்க வேண்டும். மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் துத்தநாகம் ஆகியவற்றை முழு அளவையும் அடியுரமாக அளிக்க வேண்டும்

10

75

75

90

162.75

468.75

149.40

தழைச்சத்து (1/3) மூன்றில் ஒரு பங்கு நடவு செய்வதற்கு முன் அளிக்க வேண்டும். 1/3  - நடவு செய்து 30நாட்களிலும், மீதமுள்ள 1/3 -55 ஆவதுநாட்களிலும் அளிக்க வேண்டும்.  மணிச்சத்து மற்றும், துத்தநாகம் முழு அளவையும் அடியுரமாக அளித்தல்.  சாம்பல் சத்து-1/2 (பாதி அளவை) நடவு செய்வதற்கு முன்னும் மீதி அளவை 55 ஆவதுநாட்களிலும் அளிக்க வேண்டும்.

8 மற்றும் 9 (சாலில் விதைத்த நெல்)

100

50

50

217.00

312.50

91.30

தழைச்சத்து (1/3) - விதை விதைத்து 20 நாட்களில், 1/3 - விதைத்து 40, நாட்களிலும் மீதமுள்ள 1/3 - பூங்கொத்து உருவாக்க நிலையிலும் அளிக்க வேண்டும்.  மணிச்சத்து, சாம்பல்சத்து மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் முழு அளவையும் அடியுரமாக அளிக்க வேண்டும்.

 மண்டலம் 1          -  வட கிழக்கு நிலை மாறு மண்டலம்
மண்டலம் 2             -  வட கிழக்கு வறட்சி மண்டலம்
மண்டலம் 3             -  வடக்கு வறட்சி மண்டலம்
மண்டலம் 4             -  மத்திய வறட்சி மண்டலம்
மண்டலம் 5             -   கிழக்கு வறட்சி மண்டலம்
மண்டலம் 6             -   தெற்கு வறட்சி மண்டலம்
மண்டலம் 7              -  தெற்கு நிலை மாறு மண்டலம்
மண்டலம் 8              - வடக்கு நிலைமாறு மண்டலம்
மண்டலம் 9               - மலை (குன்று) மண்டலம்
மண்டலம் 10              -  கடற்கரை மண்டலம்

(2) உரம் அளிக்கும் முறை
மண் வழி உரம் அளித்தல்:
 

1. அடியுரம் அளித்தல்:

1. பரிந்துரைக்கப்பட்ட 25 சதவிகிதம் அளவான தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தை அடியுரமாக அளிக்க வேண்டும்.
2. மணிச்சத்தை முழுவதுமாக அடியுரமாக அளித்து பின் மண்ணுக்குள் உட் செலுத்த வேண்டும்.
3. 25 கிலோ ஜிங்க் சல்பேட்டை 50 கிலோ உலர் (வறண்ட) மணலுடன் கலந்து நடவு செய்வதற்கு முன் வயலில் அளிக்க வேண்டும்.
4. இறுதி உழவின்போது எக்டருக்கு 500 கிலோ ஜிப்சம் (கால்சியம் மற்றும் கந்தக ஊட்டச்சத்துக்கள்) அளிக்க வேண்டும்.

2. மேலுரமிடுதல்:
பரிந்துரைக்கப்பட்ட 25 சதவிகிதம் தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஒவ்வொன்றையும் தீவிர துார் வைக்கும் பருவத்திலும், பூங்கொத்து உருவாக்க நிலையிலும், பூட்டைப்பருவத்திலும் (கதிர்விடும் பருவம்) மேலுரமாக அளிக்க வேண்டும்.

soil application

  நெற்பயிரில் இலைவழி உரஊட்டம்:
foliar application of nutrients

1. அண்மைக் காலங்களில் இலைவழி உரங்கள் என அழைக்கப்படும் கரையும் உரங்களான “பாலிஃபீடு” உரம் மற்றும் “மல்டி- கே” ஆகியவற்றை நெல் விளையும் மாநிலங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
2. பாலிஃபீடுஉரத்தில் (19:19:19) என்ற விகிதத்தில், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.  மேலும் ஆறு நுண்ணுாட்டப் பொருள்களான இரும்பு, மாங்கனீஸ், போரான், தாமிரம், துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் ஆகியவையும் உள் அடங்கியுள்ளன.  ஆனால் மல்டி- கே வில் 13:0:40 என்ற விகிதத்தில் தழைச்சத்து, மற்றும் சாம்பல் சத்து அடங்கியுள்ளன.
3. மேற்கண்ட உரங்கள் அனைத்தும் முழுவதுமாக நீரில் கரையும் தன்மையுடையதால் இலைவழி உரம் அளிப்பு மூலம் பயிருக்குத் தேவையான உரங்களை வழங்குகிறது.
4. இவ்வுரங்களில் சோடியம், குளோரைடு போன்ற எந்த விதமான மாசுக்களும் இல்லை. 100 சதவிகிதம் ஊட்டச்சத்துக்களே நிரம்பியுள்ளன. மேலும் இந்த ஊட்டச்சத்துக்கள் இலைகளின் மூலம் எளிதாக உறிஞ்சிக் கொள்ளக் கூடியவை.
5. நீண்ட வறட்சி காலம் உள்ள சமயங்களில், மண் ஈரத்தன்மை குறைவாக இருக்கும்போது, உரங்களை அளிப்பதால் எந்த பயனும் இல்லை.  இதேபோல, வெள்ளப்பெருக்கு நிலைகளிலும் தொடர் மழையின் காரணமாக உரங்களை மண்ணில் அளிக்க முடியாது. இதுபோன்ற சில சூழ்நிலைகளில் கரையும் தன்மையுடைய உரங்களை அளிப்பதால், சத்து பற்றாக்குறை போன்ற சில ஆபத்துக்களிலிருந்து பயிரை பாதுகாக்க முடிகிறது. மேலும் இடர்பாடு மேலாண்மையிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
6. கரையும் உரங்களை இலைவழி மூலம் அளித்தல், நெல் பயிர் பூத்தல் மற்றும் தானிய (மணி) உருவாக்க முக்கிய நிலைகளிலும் அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வறட்சி மற்றும் நீர் சூழ்ந்த சில சிக்கலான நிலைகளில், தழைச்சத்து உரத்தை இலைவழி உரமாக தெளிக்க வேண்டும்.
7. விசைத் தெளிப்பானைப் பயன்படுத்தி 15 சதவிகிதம் செறிவு கொண்ட யூரியாவை குறைந்த கொள்ளளவு மருந்து தெளிப்பு முறையில் அளிக்க வேண்டும் அல்லது 5 சதவிகிதம் செறிவுடன் அதிக கொள்ளளவு மருந்து தெளிப்பான் மூலம் அளிக்கலாம். இம்முறையினால் ஒருமுறை, 1 எக்டருக்கு அளிக்கும் அளவு 15 கிலோவாக குறைகிறது.
8. அனைத்து இரகங்களுக்கும், யூரியா (10 கிராம்/லிட்டர்) + டை அம்மோனியம் பாஸ்பேட்-DAP (20 கிராம்/லிட்டர்) + பொட்டாசியம் குளோரைடு (10 கிராம்/லிட்டர்) ஆகியவற்றை நெற்பயிர் பூங்கொத்து உருவாக்கத்தின் போதும், 10 நாட்களுக்குப்பின்பும், இலைவழி உரமாக  அளித்தல் வேண்டும்.
9. பற்றாக்குறை அறிகுறிகள் தோன்றினால், ஜிங்க் சல்பேட் 0.5 சதவிகிதம் + 1 சதவிகிதம் யூரியாவை இலைவழி அளிப்பு மூலம் 15 நாட்கள் இடைவெளியில் துத்தநாகம் பற்றாக்குறை அறிகுறிகள் மறையும் வரை அளித்தல் வேண்டும்.


பயிர் வளர்ச்சி ஊக்கிகள்:  
  1. “பிரேசினோஸ்டீராய்ட்ஸ்” 0.3 பிபிஎம் இலைவழி தெளிப்பாக நெற்பயிர் பூங்கொத்து உருவாக்கத்தின் போதும், பூத்தல் பருவத்தின் போதும் அளிப்பது தானிய மகசூலை அதிகரிக்கின்றது.
  2. வீசி விதைத்து நடவு செய்தல் முறையில் வேர் உருவாக்கத்தை அதிகரிப்பதற்கு, வேர்களை 25 பிபிஎம் ஐபீஏ இன்டோல் ப்யூட்ரிக் அமிலத்தில் ஊறவைத்து பின் நடுதல் சிறப்பாக இருக்கும்.
  3.  சிறந்த வேர் உருவாக்கத்தைத் தூண்டுவதற்கு, “தயாமின்” கரைசலில் வேர்களை 16 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
spraying of growth regulator
  மேலே செல்க

  ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்
greenmanure

இரசாயன உரங்கள் அளித்தலைக் குறைத்து வேறுபட்ட பல தாவர ஊட்டச்சத்துப் பொருட்களை இணைந்து அளித்து அதன் செயல்திறனை மேம்படுத்துவதே ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தின் முக்கிய குறிக்கோளாகும். தாவர ஊட்டச்சத்துக்களின் மூலப் பொருட்கள் பின்வருமாறு:

    • உரங்கள்
    • கரிம எருக்கள்
    • பசுந்தாள் உரம்
    • பயிர்க் கழிவுகள்
    • உயிர் உரங்கள் மற்றும்
    • தொழிற்சாலைக் கழிவுகள்/சமமான சதவிகிதத்தில் இருக்கும் மண் திருத்தும்-பாங்குபடுத்தும் பொருள்கள்,  குறிப்பிட்ட நெல் சூழ்நிலை அமைவிற்கு தகுந்த மற்றும் கிடைக்கக்கூடிய தன்மையுடைய பொருள்களைப் பொருத்து அமையும்.


ஊட்டச்சத்தின் மூலப் பொருட்கள்:
    • கரிம எரு/மக்கிய உரம் - 12.5 டன் தொழு உரம்
    • பசுந்தாள் உரம்/பசுந்தழை எரு/பயிர்க் கழிவுகள் 6.25 டன்/எக்டர்
    • உரங்கள்-பயிர்சாகுபடிசூழ்நிலைஅமைவைப்பொருத்து, பரிந்துரைக்கப்பட்ட அளவு ஊட்டச்சத்து உரங்களை அளித்தல்

உயிர் உரங்கள்
    • அசோலா- பசுந்தாள் உரமாக @ 6 டன்/எக்டர் என்ற அளவிலும், இருபயிர் சாகுபடியாக (0.5 டன்/எக்டர்) நடவு செய்து 7 நாட்களில் அளித்தல்.
    • நீலப்பச்சைப் பாசிகள் - நடவு செய்து பத்து நாட்களில் (10 கிலோ/எக்டர்)
    • அசட்டோபேக்டர்/அசோஸ்பைரில்லம்/பாஸ்போபாக்டீரியா - 10 பாக்கெட்டுகள் (மண் வழி அளித்தல்)
    • அசோபாஸ் - 20 பாக்கெட்டுகள் (மண் வழி அளித்தல்)

நுண் ஊட்டச்சத்துக்கள்:
  1. நாற்று நடவு செய்வதற்கு முன் 25 கிலோ ஜிங்க் சல்பேட்டை 50 கிலோ உலர் மணலுடன் கலந்து வயலில் அளிக்க வேண்டும்.
  2. பசுந்தாள் உரம் (6.25 டன்/எக்டர்) அல்லது ஊட்டமேற்றிய தொழு உரம் அளிக்கப்பட்டிருந்தால், 12.5 கிலோ ஜிங்க் சல்பேட்/எக்டர் என்ற அளவில் அளிப்பதே போதுமானது.
  3. ஊட்டச்சத்துப் பற்றாக்குறை அறிகுறிகள் தோன்றினால் 0.5 சதவிகிதம் ஜிங்க் சல்பேட் + 1 சதவிகிதம் யூரியா கலந்து இலைவழி தெளிப்பாக 15 நாட்கள் இடைவெளியில் துத்தநாகம் பற்றாக்குறை அறிகுறிகள் மறையும் வரை அளிக்க வேண்டும்.
  4. நடவு செய்வதற்கு முன், 1 சதவிகிதம் ஜிங்க் சல்பேட் கரைசலில் நாற்றுக்களின் வேர்களை 1 நிமிடம் நன்கு நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
  மேலே செல்க