| இறக்குமதி ஓர்  முன்னுரை
             ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் மற்றும்  வியாபாரிகள் இறக்குமதி வணிகமும் ஆரம்பிப்பதே முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஏற்றுமதி  வணிகம் போலவே, இறக்குமதி வணிகமும் அதிக இலாபம் தரக்கூடிய வணிகமாகும். இறக்குமதியாளர்  சரியான வழிமுறையை பின்பற்றினால் அதிக லாபம் பெறலாம். எப்படியிருந்தாலும், இறக்குமதி  வணிகத்தின் நீண்ட கால வெற்றி மற்றும் லாபகரம், இறக்குமதியாளரின் சர்வதேச சந்தை மற்றும்  அயல்நாட்டு சந்தையை அலசிப்பார்க்கும் அறிவு மற்றும் புரிந்து கொள்ளுதலைப் பொறுத்தே  அமையும்.  இந்தியாவில்  இறக்குமதி
 இந்தியாவில் அதிகரித்துக்  கொண்டிருக்கும் மத்திய ஊதியம் பெறக்கூடிய பயனாளிகள் மற்றும் அவர்கள் பலதரப்பட்ட பொருட்களுக்காக  செலவிடும் அளவும் அதிகரிப்பதால், இறக்குமதி வணிகத்திற்கு அதிக அளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 இந்தியாவின்  முக்கியமான இறக்குமதிகள்:தானியங்கள், உணவு எண்ணெய்கள், இயந்திரங்கள்,  உரங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள்.
 இறக்குமதியாகும் மொத்த இறக்குமதிகள்  187.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். உணவு எண்ணெய்கள்,  சர்க்கரை, காகிதம் மற்றும் காகிதக் கூழ், ரப்பர்,  இரும்பு மற்றும் தகரம் இந்தியாவின் இறக்குமதிகள் ஆகும்.
 இறக்குமதி  வணிகத்தை நிர்வகிக்கும் அமைப்புகள்: 
                    வணிக மற்றும் தொழிற்சாலை அமைச்சகம்அயல் நாட்டு வணிக பொது இயக்குநரகம்மத்திய சுங்கவரி துறை   இறக்குமதி  வணிகத்துறை ஆரம்பிப்பதற்கான முன்நடவடிக்கைகள்:பண்டக  சந்தையைத் தேர்வு செய்தல்
             இறக்குமதி செய்வதற்கு முன் பண்டக சந்தையை  தேர்வு செய்வது மிக முக்கியமானது. ஆய்வு செய்யும் போது பெறப்பட்ட பண்டக சந்தை தரவு  மற்றும் தகவல்களைக் கொண்டு பண்டக சந்தை அறிக்கை தயார் செய்ய வேண்டும். சரியான சந்தையை  தேர்ந்தெடுக்க பின்வரும் கேள்விகளுக்கு  பதிலளிக்கும்  வகையில் இருக்க வேண்டும்.  
                    இறக்குமதியாளர் இறக்குமதி செய்யும் பொருளை  உள்நாட்டு சந்தையில் விற்க முடியுமா?இறக்குமதி செய்யப்பட்ட பொருள் லாபகரமானதா?  மற்றும் நல்ல முறையில் விற்பனையாகுமா?இறக்குமதி செய்யப்பட்ட பொருள்  உள்நாட்டு சந்தையில் போட்டியை ஏற்படுத்துமா?   இறக்குமதியாளர்  இறக்குமதி செய்யப்போகும்  பொருள் உண்மையிலேயே  லாபம் தரக்கூடியதாக இருந்தால் மட்டுமே, மேற்கொண்டு அதில் ஈடுபடவேண்டும். இறக்குமதியாளர்  இறக்குமதி செய்யலாம் என்று தீர்மானித்த பின்னரே, இறக்குமதி வணிகத்திட்டத்தை உருவாக்க  வேண்டும். இறக்குமதி திட்டத்தை செய்யும் போது, இந்தியாவின் இறக்குமதியாளர் அயல்நாட்டு  வணிக கொள்கை, வழிமுறைகள் 2004 – 09 ல்  குறிப்பிட்டுள்ள  அரசின் கொள்கைகள் மற்றும் வழிமுறைகள், நெறிமுறைகளை அலசி பார்த்து தீர்மானிக்க வேண்டும்.
 இறக்குமதியாளர்  ஐ.டி.சி – ஹெச்.எஸ் வகைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள ஏற்றுமதி அட்டவனையில் உள்ள பொருட்களை  இறக்குமதி செய்வதால் இறக்குமதியாளர் இந்தியாவில் இறக்குமதி செய்ய சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.ஐ.டி.சி  – ஹெச்.எஸ் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய இறக்குமதி பற்றிய அனைத்து  வழிமுறைகளும், விதிமுறைகளும்  ஐ.டி.சி பிரிவு1-ல்  குறிப்பிடப்பட்டுள்ளது.
 தடை  செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி இல்லை. ஆனால் குறிப்பிட்ட பொருட்களை  மட்டும் இந்திய அரசு, வணிக அமைச்சகத்தால் பெறப்பட்ட சிறப்பு அனுமதி மூலமே இறக்குமதி  செய்ய முடியும்.  இந்தியாவின்  மாநில வணிக நிறுவனம்:சில  பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அரசால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனம்  மூலமே இறக்குமதி செய்ய முடியும். அந்த வகையில் இந்தியாவின் மாநில வணிக நிறுவனம் தேவையான  பொருட்களை உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படும் போதும், விலை நிலவரத்தை ஒரே மாதிரி வைத்துக்  கொள்ளவும் பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய உதவுகிறது.
 மாநில  வணிக நிறுவனம் குறித்த நேரத்தில், குறித்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்வதே இதன்  முக்கிய நோக்கமாகும். இந்த முறையில் இந்த நிறுவனம் இறக்குமதி பொருட்களை கையாளுவதும்,  மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்டும், 40 வருட அனுபவத்துடனும் செயல்படுகிறது. இந்த நிறுவனம்  வனஸ்பதி, உணவு எண்ணெய்கள், பருப்புகள், ஹைட்ரோ – கார்பன்கள், உலோகங்கள், கனிமங்கள்  மற்றும் உரங்களை இறக்குமதி செய்கிறது. இறக்குமதி  வணிகத்திற்கான விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் 
                    ஏற்றுமதி இறக்குமதி கொள்கை (1997 –  2002)வழிமுறைகளின் கையேடு எஸ்.ஐ.ஓ.என்ஐ.டி.சி – ஹெச்.எஸ் குறியீடுகள் இந்திய  அரசின் கீழ் இயங்கும் வணிக அமைச்சகம் அளித்த வெளியீடுகளில் இறக்குமதி செய்யும் பொருட்கள்  மற்றும் இறக்குமதியாளர்களுக்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் தரப்பட்டுள்ளன. 
                    ஏற்றுமதி  இறக்குமதி கொள்கை,1997 – 2002. 31.03.1999 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
                    வழிமுறைகளின்  கையேடுதரமான  பொருட்களின் விதிகள், 1997 – 2002 ஐ.டி.சி  – ஹெச்.எஸ் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களின் வகைப்பாடு |