தவேப வேளாண் இணைய தளம் ::ஏற்றுமதி & இறக்குமதி

சரக்குகளை இறக்குமதி செய்ய கட்டணங்களின் பட்டியல்:
முனையம், தேக்கம் மற்றும் செயலலகக் கட்டிணங்கள்:

சரக்கு வகை கட்டணம்
பொதுவான சரக்கு ரூபாய். 3.50 / கி.கராம் குறைந்தபட்சம் ரூ.100 / ஒரு பொருளுக்கு
சிறப்பான மற்றும் விலை மதிப்புள்ள சரக்கு ரூபாய். 7.00 / கி.கராம் குறைந்தபட்சம் ரூ.200 / ஒரு பொருளுக்கு

அபராத வாடகைக் கட்டணம்:
கப்பல் (அ) விமானத்திலிருந்து வந்த பொருட்கள் அனைத்துக்கும் 5 நாட்கள் மட்டும் கட்டணம் கிடையாது. பிறகு வரும் முதல் 2 நாட்கள் 1கி.கிராமிற்கு ரூபாய் 1 எனவும், மற்றும் பொதுவான சரக்கிற்கு ரூ.2 / 1கி.கிராமிற்கு வசூளிக்கப்படும். சிறப்பு மற்றும் விலை மதிப்புள்ள சரக்கிற்கு ரூ.4 / 1கி.கிராமிற்கு வசூளிக்கப்படும். குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.250, மூ.500 மற்றும் ரூ.1000 முறையே பொது, சிறப்பு மற்றும் விலை உயர்ந்த சரக்கு கட்டணங்கள் அபராதக் கட்டணமாக வசூளிக்கப்படும்.
அபராதத் தொகை கீழ்கண்ட அட்டவணையின் மூலம் வசூளிக்கப்படும்:

வ . எண் சரக்கு வகை காலஅளவு கட்டணம் குறைந்தபட்ச கட்டணம்
1. பொது வகை சரக்குகள் சரக்கு வந்த 7ம் நாளில் இருந்து 30ம் நாள் வரை   30 நாட்களுக்கு மேல் ரூபாய்.2 / 1கி.கி 1 நாளுக்கு     ரூ.3 / 1கி.கி 1 நாளுக்கு ரூ.250
2. சிறப்பு வகை சரக்குகள் சரக்கு வந்த 7ம் நாளில் இருந்து 30ம் நாள் வரை   30 நாட்களுக்கு மேல் ரூ.4 / 1கி.கி 1 நாளுக்கு     ரூ.6 / 1கி.கி 1 நாளுக்கு ரூ.500
3. விலை மதிப்பு மிக்க சரக்குகள் சரக்கு வந்த 7ம் நாளில் இருந்து 30ம் நாள் வரை   30 நாட்களுக்கு மேல் ரூ.8 / 1கி.கி 1 நாளுக்கு     ரூ.12 / 1கி.கி 1 நாளுக்கு ரூ.1000

குறிப்பு:

  1. குறிப்பிட்ட கால அளவில் சரக்குகள் இருக்கும்வரை கட்டணம் வசூளிக்கப்படமாட்டாது. ஆனால் மேற்கூறிய அட்டவணையில் குறிப்பிட்டப்பட்ட கால அளவு மிகும்போது அதற்கேற்ற கட்டணங்கள் வசூளிக்கப்படும்.
  2. சரக்குகளைப் பிரிப்பதற்கு கட்டணங்கள் வசூளிக்கப்படுவதில்லை.
  3. உண்மை எடை (அ) மொத்த எடை இவற்றில் எவை அதிகமோ அவ்வெடைக்கு கட்டணம் வசூளிக்கப்படும்.
  4. சிறப்பு சரக்கு பெட்டகத்தில் குளிர்பதன கிடங்கு, உயிருள்ள விலங்குகள் மற்றும் அபாயகரமான பொருட்களுக்கான வசதிகள் அடங்கும்.
  5. சுங்கத்துறையில் குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும்.

பொதிகட்டுவதற்கான கட்டணம்:
பொதியைப் பிரித்து, எடையைச் சரிபார்த்து கண்காணித்து, மறுபடி தைக்கக் கட்டணம் ரூ.3 / ஒரு பொதிக்கு விதிக்கப்படுகிறது.
இதர கட்டணங்கள்:
நிறுத்துவதற்கான கட்டணங்கள்:
இரு சக்கர மோட்டார் வாகனங்கள் - ரூ.2
கார்                           - ரூ.5
டெம்போ / வேன்               - ரூ.10
லாரி / டிரக்                    - ரூ.15
அனுமதிப்பதற்கான கட்டணம்:

தினமும் வருவதற்கான அனுமதி கட்டணம் இல்லை
புகைப்பட அடையாள அனுமதி பச்சை மற்றும் சிவப்பு நிற அனுமதி அட்டைக்கு அதிகபட்சமாக ஆறு மாதமும் மற்றும் ஒரு வருடமும் அனுமதி அளிக்கப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013