தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்

அறுவடை பின் சார் செயல்முறைகள்
பொதுவாக காளான்களில் அதிக ஈரப்பதம் இருப்பதால் அறுவடை செய்த 24-48 மணி நேரத்திற்கு மேல் சாதாரண வெப்ப நிலையில் (25-3oசெ.) நல்ல முறையில் வைத்திருக்க இயலாது இன்றைய வியாபார சூழ்நிலைகளில் சில சமயங்களில் சந்தையில் காளான் விற்பனை சில எதிர்பாராத சூழ்நிலைகளினால் மந்தமாக இருந்தால் நாம் காளானைபதப்படுத்தி சந்தை விற்பனைக்கு தகுந்தவாறு விற்பனை செய்யலாம். காளானை பதப்படுத்துவதற்கு ஏராளமான முறைகள் உள்ளன. அவற்றில் முக்கியமான எளிதான முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.

குறுகிய கால இருப்பு வைக்கும் முறை

  • காளான்களை துளையிடாப் பாலித்தீன் பைகளில் 5o வெப்ப நிலையில் குளிர்சாதனப் பெட்டிகளில் இரண்டு நாட்களுக்கு பாதுகாக்கலாம்.
  • காளானை பறித்தவுடன் 0.1 சதம் சிட்ரிக் அமிலம் அல்லது 0.5 சதம் பொட்டாசியம் மெட்டாபைசல்பேட் கலந்த கரைசலில் சலந்த கரைசலில் நனைத்து ஈரம் உலர்ந்தவுடன் நிறம் மாறாமல் மூன்று நாட்களுக்கு பாதுகாக்கலாம்.
  • வெந்நீரில் (80o செ.) 2 நிமிடம் வைத்து எடுத்து காளானை 0.5 சதம் சிட்ரிக் அமில கரைசலில் 8-10 நாட்கள் வரை இருப்பு வைக்கலாம்.

நீண்ட காலச் சேமிப்பு
காளான்களை சூரிய வெப்பத்தில் உலர்த்துதல் மற்றும் உப்பு கரைசலில் பதப்படுத்தி சேமித்தல் கேனிங் மற்றும் பிளான்சிங் போன்ற முறைகளில் பதப்படுத்தி நீண்ட நாட்களுக்கு இருப்பு வைக்கலாம்.

1.சூரிய ஒளியில் உலர்த்தல்
காளான்களை சுத்தம் செய்த பின் தினசரி செய்தித் தாள் பரப்பிய இரும்பு தட்டுகளில் வைத்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தொடர்ந்து வெயிலில் உலர்த்தி, பின்பு துளையிடாத பாலிதீன் பைகளில் அடைத்து பாதகாக்கலாம். இம்மாதிரி பதப்படுத்தப்பட்ட காளன்களில் சத்துக்கள் குறைவதில்லை, மேலும் உபயோகப்படுத்துதம் சமயத்தில் வெதுவெதுப்பான நீரில் இரண்டு நிமிடம் வைத்திருந்தால் புதிதாக மலர்ந்த காளானை போல் ஆகிவிடும்.

2.இயந்திர உலா்த்தி
இயந்திர உலர்த்தி மூலம் 45-50o செல்சியஸ் வெப்பநிலையில் மூன்று நாட்களுக்கு உலர்த்தப்பட்ட காளான்களை துளையிடாத பாலிதீன் பைகளில் மூன்று மாதங்கள் வரை இருப்பு வைக்கலாம். தேவைபடும் சமயத்தில் மேற்கூறியது போல் வெந்நீரில் நனைத்து  உபயோகப்படுத்தலாம்.

3.மிதவை படுக்கை உலர்த்தி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மிதவை படுக்கை உலர்த்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயந்திரத்தில் வெப்பக் காற்று ஒரே சீராக காளான்களின் மேல் பரவுவதால் காளான்கள் ஒரே மாதிரியாக உலர்த்தப்படுகிறது. இக்கருவியில் 6 கிலோ எடையுள்ள புதிய காளான்களை 80 நிமிடத்தில் ஏறத்தாழ 0.6 கிலோ எடையுள்ள உலர்ந்த காளானாக மாற்றலாம். இந்த காளான்களை துளையிடாத பாலிதீன் பை அல்லது காற்றுபுகா டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் பொழுது உபயோகிக்கலாம்.

4.உப்பு கரைசலில் சேமித்தல்
அறுவடை செய்த காளான்களை 3-5 நிமிடங்களுக்கு கொதித்த நீரில் அமிழ்தத வேண்டும். உப்பு கரைசலில் (ஒரு கிலோ உப்பை ஒரு லிட்டர் தண்ணீர்) காளான் அமிழ்ந்திருக்கும்படி வைக்க வேண்டும். அதன்பிறகு 2 நாட்கள் கழித்து உப்புக்கரைசலில் 800 மில்லி கிராம் சிட்ரிக் அமிலம் கலக்க வேண்டும். இதில் காளான்களை 8 மணி நேரம் அமிழ்ந்திருக்கமாறு வைக்கவும். பின் இளஞ்சூடான நீரில் நன்கு கழுவியபின் சமைக்க பயன்படுத்தலாம்.

5.கேனிங் (Canning) முறையில் டப்பாக்களில் பதப்படுத்துதல்
இம்முறையில் பால்காளான்களை பதப்படுத்தலாம். காளான்களை வெட்டி 0.1 சதம் சிட்ரிக் அமிலத்தில் கழுவ வேண்டும். (10 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் சிட்ரிக் அமிலம்) ஐந்து நிமிடத்திற்குப் பின் டப்பாக்களில் அடைத்து அதில் உப்புக் கரைசலை ஊற்ற வேண்டும். பின் டப்பாவை கொதிக்கும் நீரில் வைத்து உரிய சாதனங்களைக் கொண்டு கெட்டியாக அடைக்க ணே்டுமு். இவ்வாறு தயார் செய்த டப்பாக்களை வெப்பமூட்டியில் தொற்று நீக்கம் செய்ய வேண்டும் (ஒரு சதுர சென்டிமீட்டருக்கு ஒரு கிலோ கிராம் என்ற அழுத்தத்தில் 110o செல்சியஸ் வெப்பநிலையில் தொற்று நீக்கம் செய்த டப்பாக்களை உடனடியாக நீரோட்டம் உள்ள தொட்டிகளில் குளிர வைத்து விற்பனை செய்யலாம்.

Updated on Nov 2013

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014