தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்

காளான் வளர்ச்சி அறை மற்றும் உற்பத்தி செய்யும் இடத்தை கிருமி நீக்கம் செய்தல்

ஈத்தைல் ஆல்கஹால், மெர்குரிக் குளோரைடு, சோடியம் ஹைப்போகுளோரைட், ப்னால்கள், அயோடின், பார்மலின், பொட்டாசியம் பெர்மாங்னேட் போன்ற பல வேதிப் பொருட்கள் உற்பத்தி செய்யும் இடத்தின் மேற்பரப்பு கிருமி நீக்கம் செய்யப் பயன்படுத்துகிறது. கிருமி நீக்கம் செய்யப் பயன்படுத்துகிறது. கிருமி நீக்கம் செய்ய வேண்டிய பொருட்களின் தன்மை, அளவுகளைப் பொறுத்து, கிருமி நீக்கம் செய்யும் கால அளவு வேறுபடுகிறது. ஈத்தைல் ஆல்கஹால் 50% அடர்த்தியில் பயன்படுத்தப்படுகிறது. மெர்குரிக் குளோரைடு மற்றும் சோடியம் ஹைப்போகுளோரைட் 0.1% அடர்த்தியில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் பார்பலின் 1:2 விகிதத்தில் கலந்து வளர்ச்சி ஊடக அறை (அ) காளான் வளர்ப்பு அறைகளை புகையூட்டம் செய்ய வேண்டும். புகையூட்டம் செய்தவுடன் அறைகளை 24 மணி நேரத்திற்கு இறுக்கமாக மூடி, பின் திறக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013