தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்

தேனீ வளர்ப்பு

தேனீ வளர்ப்பு ஊக்குவிப்பு


தொழிலாளர் பெயர் 

திருமதி. மஞ்சுளா பார்த்திபன்  

கிராமம்

கொலபலூர்

தொகுதி

:

கோபிசெட்டிபாளையம்

மாவட்டம்

:

ஈரோடு மாவட்டம் (தமிழ்நாடு)

தொலைபேசி எண்

:

09488022395, 09442171818

என் பெயர் மஞ்சுளா , வயது 35, விவசாய குடுமபத்துபெண், எனது கணவர் பெயர் திரு. பார்த்திபன், அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றுகிறார். எங்களின் விவசாய நிலத்தில் கால்நடைகளின் உரங்களைக் கொண்டு இயற்க்கை முறை மேலாண்மையை செயல்படுத்தி வருகிறோம். எனினும் தேனீ வளர்ப்பு, எங்கள் விவியாசாயத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் தேனீ வளர்ப்பு, ஒரு தனிப்பட்ட ஆர்வத்தை கொண்டுள்ளது.

http://agritech.tnau.ac.in/farm_enterprises/new_image/apiculture_bee.png

2010 –ம் ஆண்டில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மைராடா கிருஷி விஜ்யான் கேந்திரா நடத்திய பயிற்சி மூலம் அறிமுகம் கிடைத்தது. பின்னர் தேனீ வளர்ப்புக்கு தேவையான உபரி பொருட்களையும் வழங்கினர். இத்தொழிலில் வளர்ச்சி பெற என் கணவர் எனக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தார். என் ஆர்வத்தை கண்டு, கடந்த 3 வருடங்களாக ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மைராடா KVK பயிற்ச்சிகளில் நான் சிறப்பு விரிவுரையாளராக பயிர்ச்சியளித்துள்ளேன். இதில் மூன்று வகையான அணுகுமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

தேனீ வளர்ப்பிர்க்கான பொருளாதாரம் – பகுதி 1: செலவினம்

1

30 தேனீ பெட்டிகள் (ரூ.650/பெட்டி) 

:

ரூ.19,500.00

2

30 கிலோ. சர்க்கரை

:

ரூ.  1,200.00

3

பேக்கிங் மற்றும் போக்குவரத்து

:

ரூ.  5,000.00

4

தேன் பிரிப்பான்

:

ரூ.  2,000.00

 

 

 

------------------
ரூ.27,700.00
---------------

வருமானம்: 


1

1 பெட்டியிலிருந்து 7 கிலோ (பெட்டிகள்/வருடம்)

:

210 கிலோ தேன்

2

1 கிலோ தேன் @ ரூ.300 என்றால் 210 கிலோவிற்கு

:

ரூ.63,000.00

3

நிகர வருமானம்

:

ரூ.33,300.00

தேனீ வளர்ப்பிர்க்கான பொருளாதாரம் - பகுதி 2:

  • 150 தேனீ பெட்டிகளை, பூக்கள் பூக்கும் பருவத்தில் இருக்கும் பப்பாளி, பலா, சப்போட்டா, கொத்தமல்லி மற்றும் வெப்பிலை போன்ற தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேன் சேகரிக்கப்படுகிறது.  மேலும் இதனை அருகிலுள்ள மாநிலமான கேரளாவிற்கு கொண்டுசென்று, பப்பாளி, பலா, சப்போட்டா, கொத்தமல்லி மற்றும் வெப்பிலை தேன் போன்ற பெயர்களில் விற்பனை செய்யலாம். ஒரு வருடத்திற்கு அதிகபட்சம் 4 மாதத்திற்கு 150 பெட்டிகளிலிருந்து 100 கிலோ தேன் பெறலாம். ஒரு கிலோ தேன் ரூ.260 – ற்க்கு விற்கப்படுகிறது.

பகுதி- 3:

  • தேன் கூடுகளை ஒரு கொள்கலனினுள் வைத்து தேனீ வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதாகும். இதன் மூலம் ஒரு வருடத்திற்கு ரூபாய் 1 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.

மைராடா KVK-வின் ஆலோசனைகள்:

  • எங்கள் கட்டுபடுகளின் கீழ் உள்ள தேனீ வளர்ப்பவர்களிடமிருந்து பெறப்பட்டு தேன் “மஞ்சரி சுத்த தேன்” என்ற வர்த்தக பெயரில் FSSAI (Food Safety Standard Act) சான்றிதல் மற்றும் பஞ்சாயத்து உரிமம் பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்டுகிறது. மேலும் அக்மார்க் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளோம். மேலும் எண்களின் தேன் பயன்பாட்டை பன்முகப்படுத்த, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய், தேன் கலந்து செய்யப்பட்ட பிஸ்கட் மற்றும் சிற்றுண்டி போன்ற தேன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
  • தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெறும் கண்காட்சிகள் மூலம் கிடைக்கப்படும் தொடர்புகள் மூலம் எங்களின் தொழில் நிலையான தன்மையை அடைந்துள்ளது.
  • என் மகன் ஜவாகர் ராஜா (எட்டாம் வகுப்பு), தன்னார்வத்தோடு இத்தொழிலில் ஈடுபட்டு, “சூரிய சக்தியில் இயங்கும் மெழுகு பிரித்தான்” கருவியை வடிவமைத்து “இளம் விஞ்ஞானி” என்ற பட்டத்தை 2013-ம் ஆண்டு வழங்கினர். 
http://agritech.tnau.ac.in/farm_enterprises/new_image/apiculture_bee1.png
  • இப்போது, நாங்கள் எங்கள் தொழிலினால் எண்களின் சொந்த வளர்ச்சி மட்டுமல்லாமல் வளம்குன்றா விவசாயம் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுகிறது என நம்புகிறேன்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014