தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: தேனீ வளர்ப்பு :: கேள்வி பதில்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. தென் இந்திய சுற்றுசூழலுக்கு ஏற்ற வணிகரீதியான தேனீ வகை?
     தென் இந்திய சுற்றுசூழலுக்கு ஏற்ற தேனீ வகை இந்தியன் தேனீ அல்லது ஆசியன் தேனீ (ஏபிஸ் செரீனா இண்டிகா).  


2. தேன் கூட்டில் புகையூட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள் யாவை?
     கந்தல் துணிகள் (துணிகளால் முகத்தை மூடிக்கொள்ள) மரத்தூள், கரி, தென்னை நார், கோழி இறகுகள் அல்லது புகையை தூண்டும் பொருட்கள் அனைத்தையும் புகையூட்ட பயன்படுத்தலாம்.


3. தேன் கூடு வைக்க பொருத்தமான இடம்?  
     தேனீ வளர்ப்புக்கு பொருத்தமான இடம் ஓதம் இல்லாமல் உலர் இருக்க வேண்டும். உயர் ஒப்புஈரப்பதம், தேனீக்களின் பறத்தல் மற்றும் மலர்த்தேன் கணிதல் போன்றவற்றை பாதிக்கிறது. நீர் ஆதாரங்களை இயற்க்கை மற்றும் செயற்கையாக வழங்கவும். குளிர் பகுதிகளில் காற்று தடுப்பிகலாக சில மரங்கள் கட்டாயம் இருக்கவேண்டும். தேன் கூடுகளை வெயில் படாமல் மரத்தின் அடியிலோ அல்லது கூடாரம் அமைத்தோ வைக்கவும்.


4. மழைக்காலங்களில் கவனிக்கவேண்டியவை?

மழைக்காலங்களில்,

 1. தேனீக்கள் வளர்க்கும் தளத்தில் ஈரத்தன்மையை தவிர்க்கவும்.
 2. தேவையான வடிகால் வசதி வழங்கவும்
 3. மழையின் காரணமாக தேனீக்களின் உணவு சேகரித்தல் இயலாத சூழலில் சர்க்கரைக் கரைசலை உணவாக கொடுக்கலாம்.

5. தேனீ கூட்டினுள் எறும்பு நுழைவதை எவ்வாறு தடுக்கலாம்?

     கூடு தாங்கியின் அடியில் எறும்பு தகடு அல்லது தாங்கியில் எண்ணெய் தேய்த்தோ விரட்டலாம். எறும்பு புற்றினுள், மித்தைல் பாரத்தியான் அல்லது கார்பரையில் தூவுதல் அல்லது 0.1% குளோரிபைரிபோஸ் கரைசலை கொண்டு அழிக்கலாம்.

6. கலப்படம் செய்யப்பட்ட தேனை கண்டறிய முடியுமா?
     ஹைட்ரோமீட்டர் பயன்படுத்தி தேனின் ஒப்படர்த்தியை வைத்து கலப்படத்தின் அளவை கண்டறியலாம். தேனின் ஒப்படர்த்தி 1.25 முதல் 1.44 வரை இருந்தால் அது சுத்தமான தேன் ஆகும்.

7. கோடை காலத்தில் தேன் கூட்டை எவ்வாறு பராமரிக்க வேண்டும்?
     கோடைக்காலத்தில் ஏற்படும் கடுமையான வெப்பம் மற்றும் பஞ்சத்தை கீழ்க்கண்ட வழிமுறையாக பின்பற்றுவதன் மூலம் தேனீக்களை பாதுகாக்கலாம்.

 1. மரங்கள் அல்லது செயற்கை அமைப்புகளைக் கொண்டு போதுமான நிழல் வழங்கவும்
 2. கூட்டினில் வைக்கப்பட்டிருக்கும் சாக்குப்பை அல்லது வைக்கோல் மீது ஒரு நாளுக்கு இருமுறை நீர் தெளித்து ஒப்பு ஈரப்பததை அதிகரித்தல் மற்றும் வெப்பத்தையும் குறைக்கலாம்.
 3. தேன் குஞ்சுகளுக்கும் மற்றும் சூப்பர் அறைக்கும் இடையே காற்றோட்ட வசதியை அதிகரிக்கவும்.
 4. சர்க்கரை கரைசல், மகரந்தம் பிற்சேர்வு, மாற்றுணவு மற்றும் நீர் வழங்கவும்

8. அறுவடைச் செய்யப்படும் தேனிலுள்ள ஊட்டச்சத்து கலவை யாவை?


உட்பொருட்கள்

சதவிகிதம் (தோரயமாக)

லேவலோஸ்
டெக்ஸ்ட்ரோஸ்
சுக்ரோஸ்
டெக்ஸ்ட்ரின்ஸ்
தாதுக்கள்
நீர்
நிர்ணயிக்க இயலாதவை (நொதிகள், உயிர்ச்சத்துக்கள், நிறமிகள் போன்றவை.)

     41.0
     35.0
     1.9
     1.5
     2.0
     17.0
     16.0

9. தேனீ விஷம், நன்மை விளைவிக்கும் சேர்மமா?
      ஆம், தேனீ விஷம் நன்மை விளைவிக்கும் சேர்மம் ஆகும். அது ஹிஸ்டமின், அபமின், அக்தினேஸ், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஃபார்மிக் அமிலம், ஆர்த்தோபாஸ்பாரிக் அமிலம், கந்தகம், கால்சியம், செம்பு மற்றும் மெக்னீசியம் சல்பேட் உள்ளது. தேனீ விஷம் வணிக ரீதியாக மின்சார அதிர்ச்சி மூலம் பெறப்படுகிறது. ஒரு மெல்லிஃபெறா கூட்டத்திலிருந்து 50 மி.லி. விஷம் பெறப்படுகிறது.

10. நச்சுக்களின் தாக்குதலினால் தேனீக்களில் ஏற்படும் அறிகுறிகள் என்ன?
 தேனீ நச்சுக்கள் இருப்பததை கீழ்கண்ட அறிகுறிகளின் மூலம் அறியலாம்

 • தேன் கூட்டின் நுழைவாயில் அருகே இறந்த தேனீக்கள் காணப்படும்
 • பலகையின் கீழ் பகுதி அல்லது சட்டத்தின் மேல் இறந்த தேனீக்கள் காணப்படும்
 • பாதுகாப்பு தேனீக்களை கண்டறிய இயலாமை
 • தாக்கும் மனப்பான்மை
 • தேனீக்களுக்கு இடையே சண்டை இடுதல்
 • தேனீக்கள் அருகிலுள்ள பொருட்களை மீது ஊர்ந்துகொண்டிருத்தல்
 • உணவு சேமிப்பு மற்றும் குஞ்சு பராமரித்தலில் திடீர் சரிவு ஏற்படுதல்
 • இறந்த மற்றும் காய்ந்த குஞ்சுகள் காணப்படும்
 • தேனீக்களால், மகரந்தம் மற்றும் மகரந்தத்தேன் கண்டறிதலில் தாமதம் ஏற்படுதல்
 •  தேனீக்களின் எண்ணிக்கை குறைதல்
 •  தேன் பொருட்களில் கலப்படம் ஏற்படுதல்

11. பூச்சிக்கொல்லி தாக்குதலிலிருந்து தேனீக்களை எவ்வாறு பாதுகாப்பது?  
தேனீக்களில், நச்சுக்களில் ஏற்படும் பாதிப்புக்களை சில அடிப்படை கொள்கைகள் மூலம் தவிர்க்கலாம்.

 • குறைவான பூச்சிகொல்ல்லி பயன்படுத்தப்படும் இடங்களில் தேனீகூட்டினை வளர்க்கலாம்.
 • பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படும் விதத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கவும்.
 • பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படும் சமயத்தில், சர்க்கரை கரைசலை உணவாக கொடுத்து, தேனீக்கள் இரைத்தேடுதலை குறைக்கலாம்.
 • தேவையின் அடிப்படையில் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தவும்
 • பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கு முன், தேனீ வளர்ப்பவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
 • குறைந்த நச்சுத்தன்மை கொண்ட பூச்சிகொல்லிகளை பயன்புத்தவும்
 • மாலையில், தேனீக்களின் செயல்பாடுகள் குறைந்தப்பின் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கலாம்.
 • போடி போன்ற பூச்சிக்கொல்லிகளை விட துகள்களாக, கூழ்மமாக்கியச் செறிவு போன்ற பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.
 • பூக்கள் பூக்கும் தருணத்தில், செவிமோல் போன்ற கவர்ந்திழுக்கும் பொருட்களை தவிக்கவும்.

12. தேனீ வளர்ப்பு மூலம் எவ்வளவு இலாபம் பெறலாம்?
     முதல் வருடம் தோரயமாக ரூ.14,300 நிகரலாபம் பெறலாம். பின் அடுத்தடுத்த வருடங்களில், தொடரா செலவினமின்றி வருமானம் அதிகரித்துக்கொண்டே வரும்.


13. தேனீ வளர்ப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு யாரை தொடர்பு கொள்ளலாம்?
மேலும் கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு, கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்
     பேராசிரியர் மற்றும் தலைவர்,
     வேளாண் பூச்சியியல் துறை,
     தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
     கோயம்புத்தூர் 641 003,
     தொலைபேசி: 0422-6611214, 6611414

14. தேனீக்களினால் பயிர்களின் மகசூல் அதிகரிக்குமா?
     தேனீக்களிடமிருந்து, தேன் மற்றும் தேன் மெழுகு போன்ற மிகவும் மதிப்புமிக்க பொருட்களை வழங்குவது மட்டுமல்லாமல், பயிர்களின் மகரந்த சேர்க்கைக்கும் உதவுகிறது. இது தேன் மற்றும் தேன் மெழுகு கொடுப்பதை விட 10 முதல் 20 முறை அதிக பலனை தருகிறது. ஆப்பிள்கள், குதிரை மசால் மற்றும் தீவனப்புல் போன்ற பயிர்களின் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள் மிக முக்கியமானதாகும்.    

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014