தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தேனீ வளர்ப்பு

 • தேனீ வளர்ப்பில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.  

http://agritech.tnau.ac.in/farm_enterprises/fe_api_tnauandapiculture_clip_image003.jpg

http://agritech.tnau.ac.in/farm_enterprises/fe_api_tnauandapiculture_clip_image005.jpg

http://agritech.tnau.ac.in/farm_enterprises/fe_api_tnauandapiculture_clip_image007.jpg

த.வே.ப.க. தேனீ பூங்கா

                விவசாயிகளின் பயிற்சி

கற்பித்தல்

 • விவசாய பட்டதாரி மாணவர்களுக்கு, வணிகரீதியான தேனீ வளர்ப்பு பாடம் கற்பிக்கப்படுகிறது.
 • தேனீ பூங்கா அமைக்கப்பட்டு, சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

ஆராய்ச்சி
குறுகியகால மற்றும் நீண்டகால அர்ரய்ச்சி திட்டங்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 • தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இத்தாலியன் தேனீ வளர்ப்பதர்க்கான வாய்ப்புக்கள்
 • கொடுக்கற்ற தேனீயின் உயிரியல் மற்றும் மேலாண்மை
 • திறந்த வெளியில் தேனீக்களின் செயல்பாடுகளை அறிதல்
 • இந்திய தேனீக்களின் தலைமறைவாதல் மற்றும் திரள்மொய்த்தல்
 • பூச்சிக்கொல்லிகளினால் தேனீக்களுக்கு ஏற்படும் பாதிப்பு
 • தேனீக்களுக்கான பூ வளங்கள்

விரிவாக்கப் பயிற்சி

 • வேளாண் பூச்சியியல் துறை, பல்வேறு வகையான தேனீ வளர்ப்பு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 • தேன் கொட்டுதல் போன்றவற்றினால் ஏற்படும் பயத்தை போக்க பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இலவச பயிற்சி

 • இந்திய அரசு வழங்கும் நிதி மூலம் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு ஒரு வாரம் பயிற்சி வழங்கப்படுகிறது.
 • வருடத்திற்கு 2 - 3 பயிற்சிகள் வழங்கப்படும்.

பணம் செலுத்தி பயிற்சி பெறுதல்

 • ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி இப்பயிற்சி நடைபெறுகிறது  
 • ஒரு நாள் பயிற்சிக்கு ரூ. 150/-, உணவு மற்றும் தங்கும் வசதியை தவிர்த்து
 • தேனீ வளர்ப்பு பற்றிய கையேடு பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்

ஊக்குவிக்கும் பயிற்சி
            பயிற்சி நாட்கள்         :1-2 நாட்கள்
           கூட்டுப்பணியாளர்கள்: கிருஷி விஜயான் கேந்திரா
            பயிற்சி கட்டணம்       : இலவசம்
இதர நடவடிக்கைகள்

 • அகில இந்திய வானொலியில் தேனீ வளர்ப்பு பற்றிய நிகழ்ச்சி வழங்குதல்
 • விரிவாக்க இயக்ககத்துடன் இணைந்து தேனீ வளர்ப்பு பயிற்சி வழங்குதல்
 • தேவையின் அடிப்படையில் கல்வி
 • தனியார் தேனீ வளர்ப்பு பண்ணைகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அலோசனை வழங்குதல்

அலோசனை
கீழ்க்கண்ட பகுதிகளில், மிக குறைந்த விலையில் அலோசனை வழங்கப்படுகிறது.

 • இயற்கையான சூழலில் தேனீ கூடு கட்டுதல்
 • தேனீக்களை கொள்ளாமல் தேன் கூட்டிலிருந்து தேனீக்களை விரட்டுதல்
 • தேன் கூடு அடுக்கு விற்பனை
 • வணிகரீதியான தேனீ வளர்ப்பு தொடங்குதல்

மேலும் கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு, கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்
           பேராசிரியர் மற்றும் தலைவர்,
            வேளாண் பூச்சியியல் துறை,
            தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
            கோயம்புத்தூர் 641 003,
            தொலைபேசி: 0422-6611214, 6611414

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014