தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்

தேனீ வகைகள்

இந்தியத் தேனீ - ஓர் அறிமுகம்
தமிழகத்தில் வணிக ரீதியாக வளர்க்கப்படும் அடுக்குத் தேனீ இனம் இந்தியத் தேனீ இனமாகும். இவை மலைகளிலும் சமவெளிகளிலும் வாழவல்லவை. மழைவாழ் ரகத் தேனீக்களின் குணாதிசயங்கள் சமவெளி ரகத்திலிருந்து சற்று வேறுபடுகின்றன.

மழைவாழ் ரகம்

இந்தியத் தேனீயின் சிறப்பியல்புகள்

 • நாட்டுத் தேனீ இனம் என்பதனால் பலவிதச் சூழலிலும் வெற்றிகரமாக இயற்கையோடு இயைந்து வாழவல்லவை
 • இருட்டில் வாழ்பவை
 • பல அடைகளை அடுக்கடுக்காகவும் ஒன்றுக்கு ஒன்று இணையாகவும் கட்டுகின்றன
 • பொதுவாக சாந்த குணம் படைத்தவை
 • சினமுற்ற தேனீக்களைப் புகை கொண்டு எளிதாகக் கட்டுப்படுத்த இயலும்
 • கொட்டிய தேனீயில் கொடுக்கு முறிவு சில நேரங்களில் மட்டுமே ஏற்படும்
 • கொட்டினால் ஏற்படும் வலி சற்று குறைவாக இருக்கும்
 • கொடுக்கில் உள்ள முட்களின் எண்ணிக்கை குறைவாகவும் முட்கள் சிறுத்தும் இருப்பதால்  கொடுக்கு ……………………… ஏற்படாமல் தப்பித்து விடுகின்றன
 • கொட்டிய பின்னர் நேரடியாகப் பறக்காமல் சுற்றி வந்து உள் இறங்கிய கொடுக்கை விட்டு விடாமல் லாவகமாக விடுவித்துக் கொள்கின்றன
 • சட்டங்களை ஆய்வு செய்யும் பொழுது தேனீக்கள் சில நேரங்களில் அடையின் மேல் அங்குமிங்கும் ஓடும்
 • விசிறும் தேனீக்கள் இறக்கைகளைக் கொண்டு விசிறும் பொழுது வயிறு நுழைவு வழியைப் பார்த்த நிலையில் நின்று செயல்படுகின்றன
 • தேனீக் கூட்டத்தின் வளர்ச்சி சிறிய பெட்டிகளில் விரைவாக நடைபெறுகின்றது. புழு அறை பெரிதாக இருக்கும் தேன் அறைகளில் பணித் துவக்கம் தாமதமாகும்
 • கூட்டிற்குள் மகரந்த வரத்து வெகுவாகக் குறையும் பொழுது புழு வளர்ப்புப் பணி தடைப்பட்டுக் கூட்டம் ஓடி விடும்
 • இவை பாதகமான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு வாழ அடிக்கடி கூட்டை விட்டு ஓடி விடுகின்றன
 • இன விருத்திக்காக இவை அடிக்கடி குடி பெயர்ந்து செல்கின்றன. ஒரு கூட்டில் ஆண்டுக்கு 5 முதல் 6 முறை கூட்டம் பிரிதல் நடைபெறுகின்றது. இதனால் கூட்டத்தின் வலு பெரிதும் குறைகின்றது
 • ராணியற்ற கூட்டத்தில் பணித் தேனீக்களின் உடல் நிறம் சற்று கருமையாக மாறுகின்றது
 • ராணி இழப்பு நேரிட்ட கூட்டத்தில் ஒரு வாரத்தில் பணித் தேனீக்கள் முட்டையிடத் தொடங்குகின்றன
 • மதுர வரத்து காலங்களில் பழைய கறுத்த அடைகளைக் கடித்து புதுப்பிக்கின்றன
 • இவ்வாறு அடையைப் புதுப்பிக்கும் பொழுது அப்பலகையில் விழும் அடைத் துகள்கள் நீக்கப்படாது இருப்பதால் மெழுகுப் பூச்சியின் தாக்குதல் கூடுதலாகக் காணப்படும்
 • கூட்டைத் தூய்மையாக ………………………………
 • ………………………..இரை பிடிக்க நுழையும் குளவியைக் கூடித் தாக்கிக் கொன்று விடுகின்றன
 • ‘வரோவா’ உண்ணிகளைத் தாக்கியும் நீக்கியும் தங்களைக் காத்துக் கொள்ள வல்லவை
 • பச்சைக் குருவி, கருங்குருவி போன்ற பறவைகளின் பிடியில் எளிதில் சிக்காமல் லாவகமாக, வளைந்து, விழுந்து, எழுந்து, பறந்து தப்பிக்கின்றன
 • கூட்டை நெருங்கும் எதிரிகளைக் கூட்டமாகச் சேர்ந்து ஒரு சீறும் ஒலி எழுப்பி விரட்டுகின்றன
 • புழுக்கள் வைரஸ் நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன
 • உணவுச் செடிகள் குறைவாகவும், பரவலாகவும் உள்ள இடங்களிலும் இவை வாழவல்லவை
 • உணவு வரத்து குறையும் பொழுது அதற்குத் தக்கபடி தேனீக்களின் உற்பத்தியைக் குறைக்கின்றன. மேலும் அத்தகைய தருணத்தில் இடப்படும் எல்லா முட்டைகளும் தேனீக்களாக வளர்க்கப்படுவதில்லை. புரதத் தட்டுப்பாடு தோன்றும் பொழுது முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களைத் தேனீக்களே உண்டு விடுகின்றன
 • குறைவான வெளிச்சம் இருக்கும் பொழுது வழி அறிந்து புலரும் பொழுதே வெளியில் சென்று உணவு திரட்டி வருகின்றன
 • விடியலுக்கு முன் துவங்கும் உணவு திரட்டும் பணி அந்தி சாயும் நேரம் வரையிலும் தொடர்கின்றது
 • பணித் தேனீக்கள் பிசின் சேகரிப்பது இல்லை
 • பயிரில் கூடுதலாக மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகின்றன
 • பணித் தேனீக்கள் மலரின்பால் கூடுதல் விசுவாசம் காட்டுகின்றன
 • வயல்வெளித் தேனீக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று உணவு திரட்டி வருகின்றன
 • வயல் வெளித் தேனீக்கள் ஒரு மணிக்கு 25 கிலோ மீட்டர் தூரம் பறக்க வல்லவை
 • உருவில் சற்று பெரியவை
 • உடல் நிறம் சற்று கூடுதலான கருமையுடன் இருக்கும்
 • பொதுவாக இவை அடைகளை நுழைவு வழிக்கு இணையாகவும் சில நேரங்களில் குறுக்காவும் கட்டும்
 • கொட்டும் தன்மை சற்று கூடுதலாக இருக்கும்
 • கடுங்குளிரிலும் செயலாற்ற வல்லவை
 • தேன் சேகரிக்கும் ஆற்றல் சற்று கூடுதலாக இருக்கும்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014