சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பாரத்தை குறைக்கும் நவீன ஹெல்மெட்

பெயர் நீதளா மிட்டு,
39/1, மாரியப்ப கோனார் தெரு, அரசன் திரையரங்கு அருகில், போத்தனூர், கோயம்புத்தூர் – 23
அலைபேசி எண் : 9894273539
பிறந்த தேதி 02.05.1952
தகுதி தோள் சுமை நீக்கும் கருவி கண்டுபிடிப்பாளர்
மின்னஞ்சல் nmittu@gmail.com

தொழில்துறைகளில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப மாற்றங்களின் மூலம், பணிகள் வேகமெடுப்பதோடு சுபலமாக்கப்பட்டும் இருக்கிறது. ஆனால் தினமும் தலையில் சுமைகள் சுமந்தே கூலி வேலை செய்தாக வேண்டிய சூழலில் இருப்பவர்களின் நிலை நமக்குப் புரியுமா? தினமும் எட்டு அல்லது பத்து மணிநேரம் பல ஆண்டுகளாக தலையில் பாரம் ஏற்றுபவர்களின் உடல் நிலையில் ஏற்படும் பலவீனமும், சுகவீனமும் எத்தனைப் பேருக்குப் புரியும். இப்பொழுது விடிவு வந்திருக்கிறது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு.மிட்டு அவர்களின் புதமையான கண்டுபடிப்பின் மூலம் சுமை சுமப்பவர்களின் பாரம் குறைந்திருக்கிறது. திரு.மிட்டு அவர்கள் தோள்களில் பொருத்திக் கொள்ளும்படியான நவீன ஹெல்மெட் ஒன்றை வடிவமைத்து இருக்கிறார். இதன் பயன் என்னவென்றால் இந்த ஹெல்மெட்டை அணிந்து கொண்டு தூக்கப்படும் சுமையின் கணம் தலையை முற்றிலும் பாதிப்பதில்லை, தாங்குவதுமில்லை. சுமையின் கணமானது சம அளவில் இருபுறமுள்ள தோள்களில் தாங்கப்படுவதால் பணி சுலபமாகவும், சுகமாகவும் மாறுகிறது.

குறிப்பாக கட்டுமானத் தொழில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு இந்த ஹெல்மெட் வரப்பிரசாதம் என்றே சொல்லாம். இவர்களைத் தவிர போர்ட்டர்கள், காய்கறி கூடைகள், மூட்டைகள் சுமப்பவர்கள், கூடையில் சுமந்தபடி தெருவில் விற்பனை செய்பவர்கள் அனைவருக்குமே இது ஆரோக்கியமான கண்டுபிடிப்பு. தோள் சுமை நீக்கும் கருவியுடன் காய்கறி விற்பனையாளர்.


இந்த நவீன ஹெல்மெட் பயன்பாடு தொடர்பாக மருத்துவர்களும் அங்கீகாரம் அளித்து வரவேற்கிறார்கள். காரணம், தொடர்ந்து தலையில் சுமையேற்றுவதன் மூலம் கழுத்து நரம்புகள், முதுகெலும்பு பலவீனமடைவதாக தெரிவிக்கிறார்கள். தலையில் ஒரே இடத்தில் குவியும் பாரம், இந்த ஹெல்மெட் உதவியால் பாரம் பரவலாக்கப்பட்டு தோள்களில் இறங்குவதால் தலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இந்த புதுமையான கண்டுபிடிப்பின் பயன்பாட்டை உணர்ந்த மணிபால் பல்கலைக் கழகம் திரு.மிட்டு அவர்களை கெளரவித்து சான்றிதழ் அளித்துள்ளது. இந்த ஹெல்மெட் பயன்படுத்தும் தொழிலாளர்கள் நீண்ட நேரம் உழைப்பை வெளிப்படுத்த முடிகிறது.

கட்டுமானத் தொழிலில் உள்ள தொழிலாளர்களின் தலையில் சிமெண்ட் மூட்டை அல்லது செங்கற்களை தலையில் வைத்து பணி செய்வார்கள். பல இடங்களில் ஏணிகளிலோ, கட்டி முடிக்கப்படாத மாடிப்படிகளிலோ தலையில் சுமையேற்றி ஏறுவார்கள். இதனால் பல விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இந்த ஹெல்மெட் உதவியால் இப்படியான விபத்துகளை தவிர்க்க முடியும். அது மட்டுமல்ல, தலையில் பாரம் இருக்கும் போது கழுத்தை 180 டிகிரி கோணத்தில் கழுத்தைத் திருப்பலாம். தலைக்கும் பாரத்துக்கும் தொடர்பில்லாமல் இருப்பதால் இரு சாத்தியமாகிறது. கட்டுநர்கள், தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள் இந்த நவீன கருவிகளை உபகரணமாக வாங்கி பயன்படுத்தலாம். தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் இக்கருவியை வாங்கி பயனடையலாம்.


தோள் சுமை நீக்கும் கருவியுடன் கட்டிட பணியாளர்கள்
நீதளா மிட்டு,
39/1, மாரியப்ப கோனார் தெரு,
அரசன் திரையரங்கு அருகில்
போத்தனூர், கோயம்புத்தூர் – 23
அலைபேசி எண் : 9894273539

Updated on Feb , 2015


 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015