மண்புழு உரப்பண்ணை

பெயர் : வே.சேகர்  
முகவரி : வே.சேகர்
த/பெ.வேல்முருகன்,
கொடுக்கூர் கிராமம்,
விருத்தாசலம் தாலுக்கா
கடலூர் மாவட்டம் அலைபேசி எண் : 9786346901
குறு /சிறு/ பெரு விவசாயிகள் : குறு விவசாயி  

வெற்றிக்கான காரணங்கள்

மண்புழு உரம் தயாரிப்பு – சுய தொழில்

மேலாண்மை உத்திகள்

  • வேளாண் கழிவுகளை கொண்டு ஊட்டமேற்றிய  உரம் தயாரித்தல்
  • மாட்டு சாணங்களை கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் பங்கு

  • வே.சேகர் ஒரு சாதாரண கரும்பு மற்றும் நெல்  பயிரிடும் விவசாயி.
  • அவர் வேளாண் றெழவழயவட நிலையத்தில் கரும்பு சோகை மற்றும் மாட்டு சாணத்தினைக் கொண்டு ஊட்டமேற்றிய உரம் தயாரிப்பது பற்றி தொழில் முனைவோருக்கான பயிற்சி எடுத்துக் கொண்டார்.
  • அப்பயிற்சியின் போது மண்புழு உரம் உற்பத்தி  செய்யும் குடில் அமைக்கவும் சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

நிலைய பயிற்சிகள், செயல் விளக்கத்திடல்களின் பங்கு

  • விருதாச்சலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் கழிவுகள் மற்றம் ஊட்டமேற்றிய உரம் தயாரிப்பது பற்றி தொழில் முனைவோருக்கான பயிற்சி 2010 – இறுதியில் கொடுக்கப்பட்டது.
  • மண்புழு உரத்திடல் அமைத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் தேவையான பொருளாதார கட்டமைப்புகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டது.

இடுபொருட்களின் பங்கு

  • பண்ணையில் கிடைக்கும் கழிவுகளை குறிப்பாக  மாட்டு சாணங்களை கொண்டு சில்பாலின் முறையில் மண்புழு உரம் உற்பத்தி செய்வது பற்றி பயிற்சியில் விளக்கப்பட்டது.

சந்தையை பற்றி நுண் அறிவு

  • விருத்தாச்சலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட பயிற்சியில் மண்புழு உரத்தின் பயன்கள் மற்றும் அதன் சந்தை நிலவரம் பற்றி விளக்கப்பட்டது.
  • நுகர்வோருக்கு மண்புழு உரத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கவும்,மண்புழு உரத்தினை தகுந்த முறையில் உறையிலிட்டு கவர்ச்சிகரமான முறையில் விற்பனை செய்யவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

வேளாண் விஞ்ஞானிகள் / விரிவாக்க பணியாளர்களின் பங்கு

ஆரம்ப கட்டத்தில் மண்புழு உரம் தயாரிக்க உதவும் குடில் மற்றும் கட்டமைப்பு மற்றும் அதன் பின் உரம் தயாரிக்கும் தொழில்நுட்ப ஆலோசனைகளை கள வருகை மூலம் விஞ்ஞானிகள் வழங்கினார்கள். மேலும் உரம் தயாரிக்கும் குடிலை அபிவிருத்தி செய்யவும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

விளைச்சல் /ஏக்கர்

ஆண்டிற்கு 35 டன் அளவுள்ள மண்புழு உரம் தயாரிக்கின்றார்.

வேலை வாய்ப்புகள்

தினமும் 5 கூலி ஆட்கள் மண்புழு உரம் தயாரித்தலில் பயன்படுத்தி கொள்கிறார்.

தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட மாத வருமானம்

ஆண்டிற்கு மூன்று இலட்சம் தோராயமாக

பண்ணை விரிவாக்கம் பற்றிய எதிர்கால திட்டம்

  • காய்கறி கழிவுகள், மற்றும் இதர பண்ணை கழிவுகளைக் கொண்டு உரம் தயாரித்து விற்பது.
  • ஆண்டு வருமானத்தினை 20 சதம் மேலும் உயர்த்துவதற்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றார்.
  • தற்போதைய விற்பனையை பக்கத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்த திட்டமிட்டு வருகின்றார்.

பிறருக்கு எடுத்துக் கூறும் உண்மை

  • பண்ணை  கழிவுகளை கொண்டு ஊட்டமேற்றிய உரம் தயாரித்து விவசாயிகள் தனக்கு தானே பயன்படுத்திக் கொள்வதனால் உரச் செலவை மிச்சம்படுத்துவதோடு அதன் மூலம் வருமானம் பெறவும் உதவுகிறது.
பஞ்சகாவ்யா மற்றும் பல்வேறு அங்கக வேளாண்மை இடுபொருட்கள் தயாரித்தல் மூலம் லாபகரமாக விற்பனை செய்யலாம்.

தொழில்நுட்பம் சார்ந்த படங்கள்

மண்புழு உரம் தயாரிப்பு கூடம்
Updated on Feb , 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015