விதைக்கரனை வனவியல்
மரங்களுக்கான  திசு வளர்ப்பு நுட்பங்கள்

நுண் பெருக்கத்தில் வரும் நிலைகள்:
நுண் பெருக்கத்தில் வரும் கட்டங்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது.

அ) வளர்பருவ நிலை :
வளர்ப்பு ஊடகத்தில் இடப்படும் செடி பாகத்தைத் தேர்ந்தேடுத்தல், செடி பாகத்தில் மாசுப் பட்டால் நாற்று நடுவதற்கு முன் மற்றும் வளர்ப்புகளின் நிலை ஆகியன முக்கியமான காரணிகளாக இந்த கட்டத்தில் அமைகிறது. வளர்ப்பு அறையில் 25±2° C  வெப்பநிலையிலும்  16 மணி நேரம் ஒளிப் பருவ நிலையிலும்  8  மணி நேரம் இருளிலும் வைத்திருக்க வேண்டும். 4 -8  வாரங்கள் இந்த கட்டத்தில் இருக்கும்.
ஆ) பலதிடல் நிலை :
நடும் கட்டத்திற்க்கு சிறு நாற்றுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது இந்த கட்டத்தில் நடக்கும். இந்த சிறு நாற்றுகளை சிறிய துண்டுகளாக வெட்டி தனி ஊடகங்களில் வளர்க்க வேண்டும். சைடோகைனின் பலதிடலிற்கு உபயோகிக்கப் படுகிறது.
இ. நாற்று நடுவதற்கு முன் இருக்கும் நிலை:
இந்த கட்டத்தில், செடித்துண்டுகளை இயற்கையான சூழலில் வளர்க்க வேண்டும். ஏராளமான வேர்களை உருவாக்குவதுதான், இந்தக் கட்டத்தில் நடக்கக் கூடிய ஒன்றாகும். சைடோகைனின் அடர்த்தியை குறைத்து, ஆக்ஸின் அடர்த்தியை அதிகமாக்க வேண்டும். மேலும் கரிமமற்ற உப்பின் அளவைக் குறைத்து பொலோரோக்லூசினாலின் அளவை அதிகரிப்பதன் மூலம் வேர்கள் நன்றாக வளரும்.
ஈ. நாற்று நடுதல் நிலை: 
இந்த கட்டத்தில் வளர்ந்த நாற்றுகள் வளர்ப்பறையிலிருந்து பசுமைக் குடில் சுற்றுச்சூழலுக்கு கொண்டுசெல்லப் படுகிறது. வளர்ப்பறையிலிருந்து பசுமைக்குடிலுக்கு வந்த நாற்றுகள் நன்கு உய்த்திருக்க வேண்டும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016