நோய் மேலாண்மை
வனப் பயிர்களில் நோய் மேலாண்மை
அல்பிசியா:

அ. இலைப் புள்ளி மற்றும் கருகல் நோய்:
செர்க்கோஸ்போரா அல்பீசியே, கொல்லீட்டோடிரைக்கம், அல்டர்னேரியா அல்டர்னேட்டா, கேம்போமேரிஸ் அல்பீசியா, பிலைக்கேட்டா செடோசா மற்றும் எப்பிக்காக்கம் ஆகிய பூஞ்சான்கள் அல்பிசியா லெப்பெக் என்கிற மரம் நாற்றாங்கால் நிலையிலிருக்கும் பொழுது அதிகமாகத் தாக்குகின்றன.
அறிகுறி:
நாற்றுகளின் முதிர்ந்த இலைகளில் சிறிய நீர் தோய்த்தவாறு மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும். பின்னர், வட்ட வடிவத்தில் பிரவுன் நிறத்திலும், விளிம்பு ஓரங்களில் மஞ்சள் நிறத்திலும்  புள்ளிகள் காணப்படும். இதனால் இலைகள் முன்னதாகவே உதிர்ந்து விடும்.  நாற்றுக்களின் குருத்துகளும் பாதிக்கப்பட்டு சேதமடைந்துவிடும். 
கட்டுப்பாட்டு முறைகள்:
கேப்டாப் (0.2%) என்கிற பூஞ்சாணக் கொல்லி கரைசலை இலை வழி செலுத்துவதன் மூலம் இந்த பூஞ்சானைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆ. இளம்பயிர் வாடல் நோய்:
இளம்பயிர் வாடல் நோயை புசேரியம் ஆக்சிஸ்போரம் என்ற பூஞ்சானால் ஏற்படுகிறது.
அறிகுறி:
கீழிருக்கும் இலைகள் முதலாவதாக மஞ்சள் நிறமாக மாறும். பின்பு உதிர்ந்து விடும். ஒரு மாதத்திற்கு மஞ்சள் நிறமானது தண்டு வரைக்கும் பரவி பின்னர் நாற்று முழுவதும் செத்து விடும். பாதிக்கப்பட்ட வேர்கள் நிறம் மாறித் தோன்றும். 
கட்டுப்பாட்டு முறைகள்:
டைத்தேன் எம். 45 (0.3%) அல்லது பெவிஸ்டின்   (0.2%) கலவையை இடுவதால் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். விதைப்படுக்கைகளை (0.2%) பெவிஸ்டின் கலவையால் நேர்த்தி செய்யும் பொழுது இந்த பூஞ்சானை வர விடாமல் தடுக்க முடியும்.   
இ. ரைசோக்டோனியா இலை வலைக்கருகல் நோய்:
இலைக் வலைக்கருகல் நோய், ரைசோக்டோனியா சொலானி என்ற பூஞ்சானால் வருகிறது. அஸ்ஸாம் மாநகரில் முதன் முதலில் இந்த நோய் தாக்கிருப்பதாக தகவல்கள் கூருகின்றன.
அறிகுறி:
இந்த நோய் அடிப்பாகத்தில் இருக்கும் இலைகளைத் தாக்கும். தாக்கிய இலைகளில் சில்வர் நிற திட்டுக்களை உண்டாக்கும். பூசன இழைகள் அருகிலிருக்கும் இலைகளிலும் இந்தத் திட்டுகளைப் பரப்பி ஒரு சிலந்தி வலையைப் போல காட்சியளிக்கும்.  மழைக் காலங்களில் இந்த நோய் மிக வேகமாக பரவும்.
கட்டுப்பாட்டு முறைகள்:
சுகாதாரம் மற்றும் கலாச்சார நடைமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். பாலித்தீன் பைகளில் நாற்றுகளை வளர்த்தல், 250 - 300 நாற்றுகளை கட்டுகளாக வைத்தல் நோய் தாக்கப்பட்ட இலைகளை எரித்து அப்புறப்படுத்துதல் ஆகிய நடைமுறைகளைக் கையாள வேண்டும். பெலெட்டான் 0.1 % எ.ஐ என்ற பூஞ்சான் கொல்லியை இலை வழி செலுத்துவதன் மூலம் சிறந்த பலன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஈ. இலை துரு  நோய்

ரேவனேலியா கிளமன்சியே என்ற பூஞ்சானால் வருகிறது. நாற்றுகளின்  சிற்றிலைகளைத் தாக்குகின்றது. நாற்றுகளின் வளர்சிதை செயற்பாட்டை அதிகமாகப் பாதித்துவிடுகிறது.
கட்டுப்பாட்டு முறைகள்:
0.2 % டைத்தேன் எம். 45 அல்லது சல்பாக்ஸ் பூஞ்சான் கொல்லியை இடுவதால் இந்த பூஞ்சானை வர விடாமல் தடுக்க முடியும்.    
உ. சிற்றிலை நோய்:
இந்த நோயை பைட்டோபிளாஸ்மா என்ற நோய்க்கிருமி தாக்குகிறது. இந்த நோய், விதைகள் முளைத்தப் பின்பு தாக்கும். வித்திலைகள் மற்றும் முதல் இரண்டு இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். பிற்பாடு, இலைகள் கொத்துகளாக மாறி, சிற்றிலைகள் ஆகிவிடும்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016