நோய் மேலாண்மை
வனப் பயிர்களில் நோய் மேலாண்மை
அட்ரோகார்பஸ் (ஆணி மரம்):

அ. ஆல்டர்னேரியா இலைக் கருகல் நோய்:
ஒரு மாத வயதுள்ள நாற்றுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
அறிகுறி:
இந்த நோய் மே – ஜு’ன் மாதங்களில் தொடங்கி அக்டோபர் – நவம்பர் மாதங்கள் வரைக்கும் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் முதலில் இலை நுனியில் மஞ்சள் நிறமாக மாறி பிற்பாடு இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும். நாளடைவில் இலைகள் கருமையான பிரவுன் நிறத்தில் மாறி விடும்.  கடுமையாகப் பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள் உதிர்ந்து செத்து விடும். 
கட்டுப்பாட்டு முறைகள்:
பாதிக்கப்பட்ட நாறுகளை கண்டெய்னர்களில் எடுத்து  தனியாக எடுத்து வைக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் பாதிக்கப்பட்ட  இலைகளை கிள்ளி விட்டு அதில் டைத்தேன் எம் 45 (0.01% அ.ஐ) கலவையை இட வேண்டும். கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாற்றுகளை டைத்தேன் எம் 45 (0.01% அ.ஐ) கலவை அல்லது பைட்டோலான் (0.2%அ.ஐ) கலவையை வாரத்திற்கு ஒரு முறைத் தெளிக்க வேண்டும். பிற்பாடு, டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சியூடோமோனாஸ் புளோரசன்ஸ் (5 கிராம்/லிட்டர்) ஆகிய   உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடுவதால்  மிகவும் நேர்த்தியாக இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016