வனவியல் தொழில்நுட்பங்கள்
வனப் பயிர்களில் நோய் மேலாண்மை
சிசூ மரத்தில் காணப்படும் நோய்கள்:

டால்பெர்ஜியா சிசூ மரத்தை நிறைய நோய்கள் தாக்குகின்றன. அவையாவன:

அ. இலைப் புள்ளி நோய்:
செர்க்கோஸ்போரா சிசூ, கொல்லேட்டோக்லீயம் சிசூ, பில்லாக்லோரா டால்பெர்ஜியே, பில்லாக்லோரா ஸ்பிஸ்ஸா, பில்லோஸ்டிக்கா சிசூ, மைக்கோஸ்பேரல்லா டால்பெர்ஜியே, மைரோதீசிகம் ரொட்டியம் மற்றும் ஆல்டர்னேரியா ஆல்டர்னேட்டா ஆகிய பூஞ்சான்கள் இலைப் புள்ளி நோயை உண்டாக்குகிறது.
அறிகுறி:
செர்கோஸ்போரா சிசூ இலைகளின் அடிப்பகுதியில் தாக்கும். இலைகளின் அடிப்பகுதியில் மஞ்சள் கலந்த பச்சை நிறம் காணப்படும்.
கொல்லேட்டோக்லீயம் சிசூ நிறைய இழப் புள்ளிகளை உருவாக்கும்.
பில்லாக்லோரா டால்பெர்ஜியே இலைகளின் மேல் பகுதியை பாதிக்கும். கருப்பு நிறத்தில் பலபலப்பாகத் தோன்றும்.
பில்லாக்லோரா ஸ்பிஸ்ஸா இலைகளைத் தாக்கும். இலைகளில் அடர்த்தியான கருமையான புள்ளிகள் தோன்றும்.
பில்லோஸ்டிக்கா சிசூ முறையற்ற அமைப்பில்லாத பிரவுன் புள்ளிகளை உண்டாக்கும். கரு இல்லாத விதைக் குடுவைகள் இலைகளின் அடிப்பாகத்தில் உண்டாகும்.
மைரோதீசிகம் ரொட்டியம் சிசூ நாற்றுகளின் இலைகளில் புள்ளிகளை உண்டாக்கும். ஜூன் – ஜூலை மாதங்களில் இந்த நோய் காணப்படும். இலைப்புள்ளிகள் பிரவுன் நிறத்தில் காணப்படும். பிற்பாடு இலைகளில் துளைகள் ஏற்படும்.  
ஆ. இலைக் கருகல் நோய்:
ரைசோக்டோனியா சொலானி,  சிசூ மரங்களில் இலை வலை நோயை ஏற்படுத்தும்.
அறிகுறி:
சிவப்பு கலந்த பழுப்பு நிற திட்டுகள் இலை ஓரங்களில் காணப்படும். பூசன இழைகள் அருகிலிருக்கும் இலைகளிலும் இந்தத் திட்டுகளைப் பரப்பி ஒரு சிலந்தி வலையைப் போல காட்சியளிக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
சுகாதாரம் மற்றும் கலாச்சார நடைமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். பெவிஸ்டின் 0.1 % எ.ஐ என்ற பூஞ்சான் கொல்லியைப் பயன்படுத்துவதால் சிறந்த பலன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இ. சாம்பல் நோய்:
பில்லாக்டினியா டால்பெர்ஜியா என்ற பூஞ்சானால் இந்த நோய் ஏற்படுகிறது.
அறிகுறி:
இந்த பூஞ்சான் மஞ்சள் நிறத்தில் அடர்த்தியான  பூசண இழைகளை, இலைகளின் அடிப்பகுதியில் உருவாக்கும்.
கட்டுப்பாட்டு முறைகள்:
சல்பர் இருக்கும் பூஞ்சான் கொல்லி அல்லது பேக்கர், மார்டீசன் மற்றும் காலிக்ஸின் ஆகியவை இந்த மரத்திற்கு இடுவதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்.
ஈ. துரு நோய்:
மரவலியா அக்ரோவா என்ற நோய்க்கிருமி இந்த மர நாற்றுகளைத் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறி:
இந்த நோய் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் இலைகளிலும் இளந்தளிர்களிலும் தாக்குகின்றன. தாக்கப்பட்ட நாற்றுகள் காய்ந்து பிற்பாடு செத்து விடும். மருதோன்று துரு நோய் வித்துக்கள் மஞ்சள் நிறத்தில் இலைகளின் அடிப்பகுதியில் காணப்படும். பாதிக்கப்பட்ட நாற்றுகள் உருவிழந்து வளர்ச்சியின்றி காணப்படும்.
கட்டுப்பாட்டு முறைகள்:
பேலிட்டான் 0.08% இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இடைவெளியில் இலைவழி இடுவதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016