வனவியல் தொழில்நுட்பங்கள்
வனப் பயிர்களில் நோய் மேலாண்மை
டெர்மினாலியா செபுலா (கடுக்காய் மரம்):

அ. இலைத் துரு நோய்:
உரிடோ டெர்மினாலியே என்ற பூஞ்சான் இந்த இலைத் துரு நோயை வருவதற்கு காரணியாக உள்ளது.
அறிகுறி:
இந்த நோய் நவம்பர் மாதத்தில் வரும். அதகமான பாதிப்புகள் ஜனவரி மாதத்தில் ஏற்படும். பாதிக்கப்பட்ட இலைகளின் அடிப்பாகத்தில்,  மஞ்சள் கலந்த பிரவுன் நிறத்தில் கனியுடல்கள் உருவாகும். கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும்.  
கட்டுப்பாட்டு முறைகள்:
தொடக்கக் கட்டத்தில் இலைகளில் பாதிக்கப்பட்ட இடங்களை வெட்டியபிறகு, அதில் சல்பர் அடங்கிய பூஞ்சான் கொல்லியை (0.05% அ.ஐ.சல்பாக்ஸ்) இலை வழி இடுவது மட்டுமல்லாமல்  இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இடைவெளியில் மண்ணை இந்த   பூஞ்சான் கொல்லியால் நனைக்க வேண்டும். முப்பது நாட்கள் கழித்து நாற்றுகளை டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சியூடோமோனாஸ் புளோரசன்ஸ் (5 கிராம்/லிட்டர்) ஆகிய   உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடுவதால்  மிகவும் நேர்த்தியாக இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016