வனவியல் தொழில்நுட்பங்கள்

காட்டுத்தீ மற்றும்  அதன் மேலாண்மையும்


அறிமுகம்

காட்டுத்தீ ஏற்படுவதற்கான காரணங்கள்

காட்டுத்தீயின் விளைவுகள்

வனத்தீயை அணைப்பதன் தேவைகள்

ஒருங்கிணைந்த வனப் பாதுகாப்பு


அறிமுகம்

காட்டுத் தீ இயற்கையின் சமச்சீரற்ற நிலையை தாவர மற்றும் விலங்கினப் பெருக்கத்தை அழிப்பதன் மூலம் ஏற்படுத்துகிறது. மரபுரீதியிலான வனத்தீயணைக்கும் முறைகள் எதுவும் வீரியமான முறையாக இல்லை.எனவே புதிய நுட்பங்களை மக்கள் மத்தியில் விழிப்புணர்வேற்ற வேண்டியது.குறிப்பாக வனப்பகுதிகளையொட்டிய வனப்பகுதிகளில் மேற்காள்வது தற்காலத்தில் அவசியத் தேவையாகிறது.

காட்டுத்தீ ஏற்படுவதற்கான காரணங்கள்

இந்திய வனங்கள் பெருமடுப்பில் வனத்தீயால் சேதமடைகின்றன.ஆக்கிரமிப்பும்,மனித மற்றும் கால்நடைப்பெருக்கமும், வனப்பொருட்களுக்கான தனிமனித சமூகத் தேவைகளும் காடுகள் அழிப்பதற்கு முதற்காரணங்கள்.வனத் தீ ஏற்படுவதற்கான காரணிகளை  இரண்டாகப் பிரிக்கலாம்.அவை சுற்றுச்சுழலியல் ரீதியானது (கட்டுப்படாதது) மற்றும் மானுட செயல்பாடு (கட்டுப்படுத்தக்கூடியது).

1.சுற்றுச்சுழலியல் ரீதியான வனத்தீ ஏற்படுத்துவதற்கான காரணங்கள்

பெருமளவில் இயற்கை காலநிலை அளவீடுகளான மிகை வெப்பம்,வேகக் காற்று மற்றும் திசை வேகம்,ஈரப்பதத்தின் அளவு, மண்ணிலும் காற்றிலும் மற்றும் வறண்டநிலை.மேலும் மூங்கில் வாரைகள் உரசல்களால்தான் பெருமளவில் காட்டுத்தீ ஏற்படுகிறது.மேலும் சுழலும் கற்கள் போன்றவை தீப்பொறிகளை ஏற்படுத்தி மிகையான இலைச் சருகுகளைப் பற்றி பெரும் வனத்தீயை உண்டுபண்ணுகின்றன.

2.மானுட செயல் ரீதியில் வனத்தீ ஏற்படுதல்

இவ்வகையில் மனித செயல்கள் மற்றும் வனவியல் மேலாண்மை குளறுபடிகள் போன்றவற்றாலும் வனத்தீ ஏற்படுகிறது.இது அதீதமாகவோ அல்லது அதீதமற்றோ இருக்கலாம்.

  • கால்நடை மேய்ப்பாளர்கள் மற்றும் வனப்பொருட்கள் சேகரிப்பாளர்கள் ஆகியோர் சிறுதீயை மேய்ச்சலை அதிகப்படுத்துவதற்காக ஏற்படுத்துகிறார்கள்.மேலும் வெண்ணெய் மரப்பூ மற்றும் பீடி இலைக்காகவும் சிறுநிலை ஏற்படுத்துகிறார்கள்.
  • தொன்மையான வழக்கமாகிய இடமாற்று வேளாண்மையின் மூலமாகவும் காடுகள் அழிக்கப்படுகின்ற (இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஒரிசா,ஆந்திரா).
  • வலிமையான காணுயிர்களை விரட்டுவதற்காகவும்
  • காடுகளின் ஒரங்களில் மனிதப் பயன்பாட்டிற்காகவும்
  • கவனக்குறைவாக பீடி மற்றும் சிகரெட் புகைத்து விட்டு அணைக்காமல் வனங்களுக்குள் வீசி விடுவதாலும் வனத் தீ ஏற்படுகிறது.

இவ்வாறு காட்டுத் தீ ஏற்படுவது மேலும் அதிகரித்துள்ளது.இதற்கு முதன்மையான காரணங்கள் மக்கள்தொகைப் பெருக்கமும். கால்நடைகள் பெருக்கமுமேயாகும். 90% வனத் தீ மனிதனால் மட்டுமே ஏற்படுகின்றது.

காட்டுத்தீயின் விளைவுகள்

  1. மதிப்பு மிக்க கட்டைகள் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன.
  2. நீர்பிடிப்புப் பகுதிகள் இடிக்கப்படுகின்றன.
  3. உயிர்பெருக்கமும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் வேரற்றுப் போகின்றன.
  4. காணுயிர் வாழிடங்களும் காணுயிர்களும்   இல்லாமல் போகிறது.
  5. இயற்கையான மறுதளிர்ப்பும் வன வேலிகளும் இல்லாமல் போகிறது.
  6. பூக்காள வெப்பமிடுதல்.
  7. கார்பன் படிவுச் செயல்கள் குறைவதால்,கரியமில வாயுவின் (CO2) பெருக்கமும் வளிமண்டலத்தில் நிகழ்கிறது.
  8. நுண்தட்வெப்பநிலை மாறி வாழும் உயிர்களுக்கு பாதகமானதாக மாறுகிறது.
  9. மண்ணரிப்பு  நிகழ்வதால் மண்ணின் உற்பத்தித்திறனும் உற்பத்தியும் குறைகிறது.
  10. ஓசோன் படலம் சுருக்கமடைகிறது.
  11. உடல்நலைக்குறைவுகள் நோய் பரவலை நிகழ்த்துகின்றன.
  12. பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதுடன்
  13. 300 மில்லியனுக்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழைகள் மரம் மற்றும் மரம் அல்லாத வனப்பொருட்களுக்கான வனம் சார்ந்த தேவைகளை நிராகரிக்கிறது.

வனத்தீயை அணைப்பதன் தேவைகள்

நாட்டில் வனத் தீ ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.இதற்கு வனத்தீயினை  அணைப்பதில் தகுந்த முறைகளைக் கையாள்வதை தவிர்ப்பதாகவே உள்ளது.இதற்கு தேசிய அக்கரையும் தொழில்நுட்ப,திட்டமிட்ட தீயணைப்பு நடவடிக்கைகளும் தேக்கமடைந்திருப்பதே முழுக்காரணம்.முக்கியமாக பல்வேறு விதமான தீயணைப்பு நடவடிக்கைகளான தீயணைப்பு மையங்கள், அமைச்சங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு,நிதியுதவி,மனித வள மேம்பாடு,வனத் தீ பற்றிய ஆய்வுகள்,தீ மேலாண்மை,மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் போன்றவையும் இல்லை.இதை வனத்தீயை தீவிரமான இயற்கைச் சேதமாகவும் வனத்தீயைக் கட்டுப்படுத்துவதில் மேலும் மேம்பட்ட முறைகளைக் கையாள்வதும் அவசியம்.சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம்,இந்திய நடுவன் அரசு,தேசிய வனத் தீயணைப்புத் திட்டங்கள் போன்றவை தற்போதைய தேவைகள்.பின்வருவதைப் போன்ற கூறுகளுடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தீயணைப்பு மேலாண்மைத் திட்டங்கள் அறிமுகப்படுத்துவது அவசியம்.

  1. மனித செயல்பாடுகளால் நிகழும் காட்டுத்தீயை தடுக்க வனம் குறித்த கல்வியும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதோடு, முல்லைப்புல்பரப்புத் திட்டம்,பொறியியல் பணிகள்,மக்கள் பங்கேற்பு கல்வி ஆகியவையும் சேர்க்கப்பட வேண்டும்.

மக்கள் பங்கேற்பின் ஊடக இணைந்த வனத்தீ தடுப்பு மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும்.

  1.  வனத்தீயை ஏற்படுவதை கண்காணிக்க ஒருங்கிணைந்து அறிவிப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.மேலும் ஆர்வமுள்ள கண்காணிப்பாளர்கள்,தகவல் தொடர்பு மையங்களையும் நிருவ வேண்டும்.சிறந்த வனத்தீ மேலாண்மை மற்றும் நிர்வாகம்,தேசிய தீ ஆபத்து அளவிடுத் திட்டம் மற்றும் வனத்தீ முன்னறிவிப்பு திட்டம் ஆகியவை நமது தேசத்தில் மேற்கொள்ள  வேண்டும்.

3.அதிவேக தடுப்பு முறைகள்
4.வீரியமான நடவடிக்கைகள்
5.வன எரிபொருள் மாற்றுத் திட்டங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்தல்
6.தீ எதிர்ப்பு ஆதாரங்கள்
மேற்கண்டவை தீயணைப்பு மேலாண்மையில் முக்கிய பங்காற்றுபவை.சிறப்பு மையங்கள் ஆராய்ச்சி,பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஏற்படுத்தப் படவேண்டும்.

ஒருங்கிணைந்த வனப் பாதுகாப்பு

1. வனத்தடுப்பு கருதுகோள்களாக வனத்தீ தடுப்பு மற்றும் தமிழக வனங்களை பாதுகாக்க திட்டங்களை வலிமைப்படுத்த வேண்டும். இந்நடவடிக்கைப் பணிகளாக தீ பரவும் பாதைத் தடுப்பு, ஒன்றிணைந்த வன மேலாண்மை குழுமம்,நீர் ஆதாரங்கள் ஏற்படுத்துதல், வாகனங்களைப் பெறுதல்,தகவல் தொடர்ப்பு சாதனங்கள் மற்றும் தீயணைப்புக் கருவிகள் ஆகியவை பெருமளவில் கொள்ளவு செய்ய வேண்டும்.
2. 2002-2003 ஆண்டுகளில்  இத்திட்டம் ரூபாய் ஒரு கோடியில் நிறுவப்பட்டது.2003-2004ல் ரூ.371.08 லட்சமாக உயர்ந்தது.
3. வனத்தடுப்பாளர்களான வனஆய்வாளர்,காப்பாளர்,கண்காணிப்பாளர் மற்றும் வனத்தீ கண்காணிப்பாளர் ஆகிய ஆறு நிலையங்களில் கண்காணிக்கிறார்கள்.இவர்களுக்கு வாக்கி-டாக்கி தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014