தைல மரம் கழலை குளவி –லெப்டோசைப் இன்வேசா பூச்சியின் விவரம்
- குளவி சிறிது நீலம் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்
- புழு இலையின் காம்புகளிலும், நடுநரம்பிலும் தங்கி வளரும்
வாழ்க்கை சுழற்சி -130 நாட்கள்
சேத அறிகுறி
- இலையின் காம்புகளிலும், நடுநரம்பிலும் உருளை வடிவ கழலைகள் தோன்றும்
- இலை உதிர்தல், தண்டு வாடல் மற்றும் வளரும் நுனிப்பகுதி பாதிப்படையும்.
- பாதிக்கபட்ட தண்டின் நுனிப்பகுதியும், இலையின் நடு நரம்பும் தடிமனாகி இலை உருமாறி காணப்படும்.
மேலாண்மை
- மண்புழு குளியல் நீர் 50 மி.லி. மற்றும் டி.ஏ.பி. லிட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து வேர்ப்பகுதி நன்கு நனையுமாறு ஊற்றவும்.
- மஞ்சளி நிற ஒட்டுப்பொறியை உபயோகிக்கவும்.
- இமிடோகுளோபிரிட் மருந்தை லிட்டருக்கு 1 மி.லி. என்ற அளவில் தெளிக்கவும்.
கரையான் – ஓடோனோடெர்மஸ் ஒபிசஸ்
பூச்சியின் விவரம்
- கரையான் சிறியதாகவும், மென்மையான உடலையும், பழுப்பு நிறத்தலையையும் கொண்டிருக்கும்.
சேத அறிகுறி
- கரையான் வேரினுள் நுழைந்து உட்சென்று உண்ணுகிறது.
- தாக்கப்பட்ட செடிகள் காய்ந்து விடும்.
மேலாண்மை
- தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
- குளோர்பைரிபாஸ் மருந்தை லிட்டருக்கு 2 மி.லி. என்ற அளவில் கலந்து மண்ணில் ஊற்றவும்.
|
கழலை |
|
|
குளவி |
சேத அறிகுறி |
|
கரையான |
|