மர பயிர்களுக்கான பூச்சி மேலாண்மை

குங்கிலியம்
மரத்துளைப்பான – ஹாப்லோசெராம்பிக்ஸ் ஸ்பைனிகார்னிஸ்
பூச்சியின் விவரம்

  • புழு வெள்ளை நிறத்தில் இருக்கும்
  • வண்டு பழுப்பு நிறத்தில் பெரிதாக இருக்கும்

சேத அறிகுறி

  • புழுக்கள் மரத்தைக்குடைந்து உள்ளே சென்று சேதப்படுத்துகின்றது
  • பாதிக்கப்பட்ட இடத்தில் துளை காணப்படும்
  • துளையின் நுழைவாயிலில் மரத்துகள்கள் காணப்படும்

மேலாண்மை

  • குளிர் காலத்தில் மரத்தை வெட்டவும்
  • மார்ச் மாத்த்திற்கு முன்பாக பட்டையை உரித்து சேமிக்கவும்
  • பாதிக்கப்பட்ட மரங்களை அறுத்து மரப்பலகைகளாக மாற்றவும்
  • பஞ்சை 0.5% டைகுளோர்வாஸ்(2 மி.லி./ 1 லிட்டர் தண்ணீர்) என்ற மருந்தினில் நனைத்து மரத்துளையினுள் வைத்து மேலாக களிமண்ணைப்பூசி அடைக்கவும்

மா தண்டுத்துளைப்பான் –பேட்டோசீ ரா ருஃபோமேக்கலேட்டா
பூச்சியின் விவரம்

  • புழு வெண்மை நிறமாக முன்பகுதி அகன்றும் உடல்பகுதி சிறுத்தும் காணப்படும்.
  • வண்டு சாம்பல் நிறத்தில் பெரிதாக இருக்கும். சிவப்பு நிற புள்ளிகள் முன்னிறக்கையில் காணப்படும்.

சேத அறிகுறி

  • புழுக்கள் மரத்தைக்குடைந்து உள்ளே சென்று சேதப்படுத்துகின்றது.
  • புழு துளைத்த நுழைவாயிலில் மரத்துகள்கள் காணப்படும்
  • மரக்கிளைகள் வாடிவிடும்
மரத்துளைப்பான்
புழு 

வண்டு

மா தண்டுத்துளைப்பான
புழு  வண்டு
Updated on November, 2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014