வனவியல் தொழில்நுட்பங்கள்

தமிழகத்தின் காணுயிர் வளங்கள்

அறிமுகம்

பாதுகாக்கப்பட்ட பகுதிகள்

தாவரச் சூழல்

விலங்குச் சூழல்

பாதுகாப்பு மற்றும் மேலாண்மையின் நோக்கங்கள்

தகவமைப்பு நிகழ்வுகள்

மாற்றிடப் பாதுகாப்பு மையங்கள்

முடிவுரை


அறிமுகம்

தமிழகத்தில் ஆறில் 1 பங்கு நிலப்பகுதி காடுகள் ஆகும். இந்திய வனக் கணக்கெடுப்பு 2003ன் படி தமிழ்நாட்டில் 22643 கி.மீ2 அதாவது நிலபரப்பின் 17.41% காடுகள் உள்ளன. இதில் 2440 கி.மீ2 மிக அடர்ந்த காடுகளாகவும், 9867 கி.மீ2 ஒரளவு அடர்ந்த வனங்களாகவும், மீதமுள்ள 10636 கி.மீ 2 திறந்த அடர்த்தியற்ற வனங்களாகவும் இருக்கும். இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு காடுகள் பரப்பளவில் 13வது இடத்தில் இருக்கிறது.

மேலே


பாதுகாக்கப்பட்ட பகுதிகள்

தமிழகத்தில் ஆறில் 1 பங்கு நிலப்பகுதி காடுகள் ஆகும். இந்திய வனக் கணக்கெடுப்பு 2003ன் படி தமிழ்நாட்டில் 22643 கி.மீ2 அதாவது நிலபரப்பின் 17.41% காடுகள் உள்ளன. இதில் 2440 கி.மீ2 மிக அடர்ந்த காடுகளாகவும், 9867 கி.மீ2 ஒரளவு அடர்ந்த வனங்களாகவும், மீதமுள்ள 10636 கி.மீ 2 திறந்த அடர்த்தியற்ற வனங்களாகவும் இருக்கும். இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு காடுகள் பரப்பளவில் 13வது இடத்தில் இருக்கிறது.மேலே


தாவரச் சூழல்

இந்தியாவில் 17, 672 ஆஞ்சியோஸ்பெர்ம் இனங்கள் காணப்படுகின்றன. இதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதில் 538 வெலச்சூழல் இனங்கள், 230 சிகப்பு வண்ண இனங்கள், 1559 மூலிகைப் பயிரினங்கள் மற்றும் 260 பயிரிடப்படாத தாவரங்கள் போன்றவை அடங்கும். இந்தியாவின் 64 ஜிம்னோஸ்பெர்மி இனங்களில் 4 இனங்கள் தமிழ்நாட்டைச்சார்ந்தவை. மேலும் வெளிநாடுகளில் இருந்து 60 இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் 1022 டெரிடோஃபைட் இனங்களில் 184 இனங்களில் தமிழ்நாட்டில் 184 இனங்கள் காணப்படுகின்றன.மேலும் தமிழ்நாட்டில் பிரையோஃபைட்டுகள், லிகின், பூஞ்சான், ஆல்காக்கள் பாக்டீரியாக்கள் போன்ற பல்வேறு இனங்கள் காணப்படுகின்றன.

மேலே


விலங்குச் சூழல்

தமிழகத்தில் 165 நன்னீர் இன துடுப்பு மீன்கள், ஆம்பிலியானங்கள், 177 ரெட்டைல்கள் 454 பறவை இனங்கள் மற்றும் 187 பாலூட்டிகள் வாழ்கின்றன. வெப்பமண்டல உயிரிகளாக 36 ஆம்பிபியானங்ஸ், 63 ரெட்டைல்ங்கள், 17 பறவை, 24 பாலூட்டிகளும் காணப்படுகின்றன.

இந்தியாவில் அழியும் நிலையிலுள்ள பாலூட்டிகள்

இந்தியாவில் அழியும் நிலையிலுள்ள ஊர்வன உயிர்களின் பட்டியல்

மேலே


பாதுகாப்பு மற்றும் மேலாண்மையின் நோக்கங்கள்

கானுயிர்களும் காணுயிர் வாழிடங்களும் பல்லாண்டு கால பரிணாம வளர்ச்சியின் சிறப்புக் கூறுகளாகும். கானுயிர் மற்றும் கானுயிர், வாழிடங்களை பாதுகாப்பது (அ) நிர்வகிப்பது சமூக, பொருளாதார, சூழியில் ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, பொழுதுபோக்கு ரீதியாக ஆண்மிகரீதியாகவும் இன்றைய மாணுட சமுதாயம் மற்றும் இன்னும் பிறக்காத தலைமுறைக்கும் தேவையான அவசியமானதொன்றாகும். கானுயிர்கள் நீர் மற்றும் சூழலியலுடன் நேரடி மற்றும் அநீத நெருக்கம் வாய்ந்தவை. நானுயிர் வாழிடங்கள் மனித செயல்பாடு, இயற்கைச் சீற்றம் மற்றும் வேளாண்மைத் தொழில்களின் அழுத்தங்கள் பாதிய சேதங்களை அடைந்துவருகின்றன. கானுயிர் வாழிடங்களின் பாதுகாப்பு என்பது இயற்கைச் செயல்பாடுகள் (சீற்றங்கள்), வறட்சி, நீர் தட்டுப்பாடு மற்றும் பருவநிலைமாற்றம் போன்றவற்றை தடுக்கும் பெரும் பொறுப்பாகும். வற்றாத நதிகளின் ஊற்றாகவும் இயற்கைச் சமநிலைப்படுத்தியாகவும் செயல்படுகின்ற காணுயிர் வாழிடங்கள் மாணுட சமுதாயத்தின் நீர் மற்றும் உணவுத் தேவைகளை நிறைவு செய்கின்றன.

ஒரு தேசத்தின் பொருளாதாரத்தையும் வளர்ச்சியையும் உணவு மற்றும் நீர் தேவைகளையும் நிலையான பாதுகாப்புடன் உறுதி செய்வது என்பதே சூழ்நிலைப் பாதுகாப்பதில் மட்டுமே அங்கியிருக்கின்றது.சுற்றுச் சூழலியலின் கருவூலமாக தமிழ்நாடு காணுயிர் வளம் நிறைந்ததாக விளங்கி வருகிறது. இவை மருத்துவ தொழில்சாலைகளாக விளங்கும் பல்வேறு மூலிகை வளம் நிறைந்தவையாகவும் விளங்குகின்றன.ஆறுகளின் ஊற்றுக் கண்களாகவும், சிற்றருவிகள் மற்றும் ஓடைகள் மூலமாக வற்றாத நீர் மூலங்களாக (நீராதராங்களாக) தூய நீர் ஆதாரமாகவும் சிறந்து விளங்குகின்றன. இவை கார்பன் சேகரிப்பு மற்றும் கரியமில வாயுவின்  அடக்குகளாக அனைத்து உயிரினங்களையும் பயன்பாட்டாளர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.இயற்கையான நுரையீரல்களாக உயிர்வாயுவின் தோற்றுவாயாக அனைத்து உயிர்களின் சுவாசம் மற்றும் வாழ்விற்குப் பயன்படுகின்றன.

மேலே


தகவமைப்பு நிகழ்வுகள்

 1. வரம் அழிப்பு, பாலைவனமாதல் மற்றும் சேதம் ஆகியவற்றைத் தடுப்பதுடன் முழுமையான பாதுகாப்பளிக்க வேண்டும். காணுயிர் வாழிடங்கள் மற்றும் காணுயிர்களுக்கு விரைவான அதிகபட்டபாதுகாப்பளிப்பதோடு காணுயிர் (பாதுகாப்பு) சட்டம், 1972 மற்றும் தமிழக வனச்சட்டம் 1882 ஆகியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
 2. காணுயிர் பாதுகாப்பில் வனங்களையொட்டிய கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம் சுற்றுச்சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
 3. புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாட்டுக் கோளாறுகளை சரிசெய்யத் தக்க ஆய்வுகளையும் கண்காணிப்பையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
 4. கல்வி மற்றும் விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை பெருமடுப்பில் ஊடகங்கள் வாயிலாக ஏற்படுத்த வேண்டும்.
 5. குறிப்பிட்ட திட்டங்களின் வாயிலாக காணுயிர் வாழிடங்கள் மற்றும் காணுயிர் புகலிடங்களில் காட்டுத் தீ ஏற்படுவதை முழுமையாகத் தடுக்க வேண்டும்.
 6. தேவையான பகுதிகளில் காணுயிர் வாழிடங்களை அதிகப்படுத்தவும் மேம்படுத்தவும் செய்ய வேண்டும்.
 7. மனித குடியிருப்புகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மாற்றிட வேண்டும்.
 8. வளர்ப்புக் கால்நடைகளிடமிருந்து காணுயிர்களுக்கு நோய் பரவுவதை தடுக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், காணுயிர் புகலிடங்கள் மற்றும் தேசிய சோலைகளில் நோயுற்ற வளர்ப்புக் கால்நடைகள் நுழைவதைத் தடுக்க வேண்டும்.
 9. விலங்கியல் பூங்காக்கள் மற்றும் மரபுத் தோட்டங்கள் போன்ற வேற்றிட பாதுகாப்பு மையங்களை நிறுவ வேண்டும்.
 10. கல்வி மற்றும் தகவல் தொடர்பு மையங்களை நிறுவ வேண்டும்.
 11. வேலி, வாய்க்கால் மற்றும் சுவர்கள் எழுப்பி பயிர் பாதுகாப்பு அமைப்புகளை எழுப்ப வேண்டும்.
 12. காணுயிர்கள் வலசைப்போடும் வழித்தடங்களைக் கண்டறிந்து அவைகளை மீட்டேடுக்க வேண்டும்.  மேலும் தங்கு தடையற்ற நசல்தலை உறுதிப்படுத்த வேண்டும்.
 13. காணுயிர்களின் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு தக்க நிவாரண உதவிகளை உடனடியா கொடுத்துவிட வேண்டும்.
 14. சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் படி பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 25 கி.மீ. விட்ட அளவு வரை தொழிற்சாலை போன்றவற்றின் பாதிப்பு மற்றம் மாசுபடுதலை முற்றிலும் தடுக்க வேண்டும்.
 15. நில அமைப்பியல் ரீதியாக காணுயிர்கள் பாதுகாப்பிடங்களை ஒருங்கிணைப்பதுடன் கிராமமேம்பாடு, கால்நடை வளர்ப்பு  போன்றவற்றை நிலையான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.
 16. ஒவ்வொரு பாதுகாப்புப் பகுதியிலும் மேற்கொள்ளப்படும் மேலாண்மைத் திட்டங்களை உறுதி செய்ய வேண்டும்.
 17. மூலிகைத் தாவரங்கள் பாதுகாப்புப் பகுதிகளை ஏற்படுத்தி மூலிகைத் தாவரங்களின் வளத்தைப் பாதுகாக்க வேண்டும்.
 18. சுற்றலாத் திட்டங்களை காணுயிர் வாழிடங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்வது நடைமுறையில் உள்ளது. ஆனால் சுற்றுலாவுக்காக மட்டுமே காணுயிர் வாழிடங்கள் உள்ளன என்ற நிலைக்கு இட்டுச் செல்லல் கூடாது.

மாற்றிடப் பாதுகாப்பு மையங்கள்

வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா காணுயிர் பொழுதுபோக்கு, கல்வி, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இது முழுமையான பாதுகாக்கப்பட்ட பகுதியாக இல்லை.

மேலே


முடிவுரை

பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உணர்ச்சிகரமானவை. இவைகளைத் தொடுவது, பேசுவது, நுகர்வது, புகைப்பது மற்றம் தொடுவது மூலமாக அறியலாம். இவ்வனுபவங்கள் மனித வாழ்வில் மனத்தளவில் பல்வேறு முன்னேற்றங்களை ஏற்ப்படுத்தலாம்.மரபியல் ரீதியாகவே நாம் இயற்கைச் சூழியல் மண்டலங்களைப் பாதுகாப்பில் கவனம் செலுத்திய பொழுதிலும் மானுட செயல்பாடுகளால் நமது இயற்கை வளம் கடுமையாக பாதிப்படைகிறது. வனம் அழிதல், காணுயழபட வாழிடங்கள் மறைவு, துண்டாதல், வலசை போவது, தடுக்கப்படுவது மிகையான மேய்ச்சல் மற்றும் வளர்ப்புக் கால்நடைகள், வனத்தீ, வணீக ரீதியில் வேட்டையாடல் மற்றும் கொல்லுதல், போன்ற விலங்கு மனித எதிர்ப்புணர்வினால் காணுயிர்கள் பேரபாயத்தை தமிழகத்தில் சந்திக்கின்றன. காணுயிர் வளங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் மனித மேலும் இயற்கை சார்ந்த மரபியல் முக்கியத்துவத்தையும் அறிந்திருத்தல் மிகவும் அவசியமாகும்.
மானுட விலங்கு சிக்கல்களைத் தீர்ப்பதுடன் சரியான எண்ணிக்கையிலான பாலூட்டிகள் மற்றும் ஊன் உண்ணிகளின் விகிதத்தை நிர்வகித்தலிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

மேலே

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014