வனவியல் :: அடிக்கடி கேட்கப்படும் கேள்வி
மூங்கில்
1. காகிதத் தொழில் உபயோகிக்கப்படும் சில மரங்களின் பெயரரைக் கூறுக ?
தைல மரம், குமிழ் மரம், பெருமரம், மூங்கில் மற்றும் சுபாபுல்.

2. “ஏழைகளின் மரம்” என்று எந்த மரம் அழைக்கப்படுகிறது ?
மூங்கில் மரம்.

3. மூங்கிலை பிரபலப்படுத்தும் ஒரு நிறுவனத்தின் பெயர் என்ன ?
சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு வலையமைவு.

4. மூங்கிலின் மற்றொரு பெயர் என்ன ?
பச்சை மரம்

5. மூங்கிலின் பயன்கள் யாவை ?
காகித தொழிற்சாலை, மரச்சாமான்கள், கட்டடவேளை, உணவு, மருந்து மற்றும் தீவனம்.

6. இந்தியாவில் மூங்கிலின் பரப்பளவு எவ்வளவு ?
மொத்த வனப்பகுதியில் 12.8 %  பரப்பளவு (8.96 மிலியன் ஹெக்டர்)

7. எப்பொழுது முள்ளில்லா வேங்கை அறிமுகமானது ?
1995.

8.  எவ்வளவு கொத்து ஒரு வருடத்திற்கு அறுவடையாகிறது ?
10-15  கொத்துகள்

9.  கொத்தை அறுவடை செய்வது எப்பொழுது ?
நட்டு 3 வருடங்களுக்குப் பிறகு

10.  நான்கு வருடங்களுக்குப் பிறகு மூங்கிலின் வருமானம் எவ்வளவு ?
ஒரு ஏக்கருக்கு ஒரு ஆண்டிற்கு ரூ. 20,000 – ரூ. 30,000

11.  தேசிய மூங்கில் பணித்திட்டதிற்கு எந்த அரசு ஆதரவளிக்கிறது ?
 மத்தய அரசு

12. தேசிய மூங்கில் பணித்திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

  • மூங்கிலின் பரப்பளவை விரிவாக்கம் செய்தல்
  • மூங்கிலின் சந்தை வாய்ப்புகள்
  • மூங்கிலின் உற்பத்தியையும் உற்பத்தி திறனையும் அதிகரித்தல்
  • மூங்கிலின் வேலைவாய்ப்பை கிராமங்களிலும் நகரங்களிலும் அதிகரித்தல்
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016