வனவியல் :: அடிக்கடி கேட்கப்படும் கேள்வி
சந்தனமரம்

1. யார் வேண்டுமானாலும் தங்களது நிலத்தில் சந்தனமரம் சாகுபடி செய்யலாமா?
ஆம். வனத்துறை அலுவலகத்திலிருந்து சந்தன நாற்றுகளை விலைக்கு வாங்கலாம் ( சிட்டா, அடங்கல் எண் மற்றும் சர்வே எண்)

2. நிலத்தில் சந்தனமரத்தை நட்டபின் என்ன செய்வது?
வி.எ.ஓ வின் புத்தக நோட்டில் நட்ட சந்தனமரத்தை பதிவு செய்தபின் வருடத்திற்கு ஒருமுறை புதுபித்துக் கொள்ள வேண்டும்.

3. தண்டுத் துண்டுகள் வாங்குவதற்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?
வன எல்லை அதிகாரி

4. சந்தனமரத்தோடு எந்த விருந்துப்பயிரை நட வேண்டும்?
மரப்பயிர்களான வேம்பு, ஈட்டி மற்றும் வேங்கை.

5. சந்தனமரத்தை எங்கு விற்க வேண்டும்?
சந்தனமரத்தை சந்தனமரக் கிடங்கிற்கு அனுப்பி அங்கு ஏலத்திற்கு விடப்படும்.

6. வனத்துறையில் எவ்வளவு சதவிகிதம் சந்தனமரம் விற்பனை ஆகிறது?
20%

7. சந்தன மரத்தை எவ்வாறு விலைக்கு வாங்கி கொண்டு செல்லப் படுகிறது?
சந்தனமரமானது கிழக்குத் தொடர்ச்சி மலையில் வேலூர் மாவட்டம் தொடங்கி வடகிழக்கில் தமிழகத்தில் உள்ள  நீலகிரி மாவட்டம் வரைக்கும் உள்ள இலையுதிர் மரக்காடுகளில் காணப்படுகின்றன. அவை உயிரற்ற காய்ந்த நிலையில்தான் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு சுத்தப்படுத்தபடுகிறது. முழுமையாக சுத்தப்படுத்தப்பட்ட  சந்தனமரத்தை திருப்பூர், சேலம் மற்றும் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள கிடங்குகளுக்கு ஏலத்திற்காக விடப்படுகிறது. விற்பனையில் பங்குபெற விரும்புவர்கள் தங்களது நிறுவனத்தையோ  அல்லது தங்களின் பெயரையோ அவர்களது மாவட்ட வன அதிகாரியினிடத்தில்  பதிவு செய்ய வேண்டும்.
சந்தனமரத்தின் சில்லறை விற்பனை விலையை நிர்ணயிப்பது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் உள்ளது.

அ.  மாவட்ட வனத்துறை அதிகாரி 5 கிலோ வரைக்கும் தனி நபர்களுக்கு
ஆ. வனத்தின் பாதுகாவலர் 10 கிலோ வரைக்கும் தனி நபர்களுக்கு
100 கிலோ வரைக்கும் கோவில்களுக்கு
இ. வனத்தின் முதன்மை பாதுகாவலர் 50 கிலோ வரைக்கும் தனி நபர்களுக்கு
500 கிலோ வரைக்கும் கோவில்களுக்கு

            விற்பனை விலையை வனத்தின் முதன்மை பாதுகாவலர் நிர்ணயித்தப்பின் மற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் வருடத்திற்கு ஒரு முறை முதன்மை பாதுகாவலர் தொடர்பு கொள்வார். விலையைப் பொருத்து சில்லறை விலைக்கு சந்தனமரம் விற்பனையாகிறது.

            தனியார் நிலைத்திருந்து சந்தனமரத்தை வாங்க வேண்டுமானால் மாவட்ட வனத்துறை அதிகாரியிடம், தமிழ்நாடு சந்தனமரம் போக்குவரத்து விதிகள் 1967 படி படிவம் நான்கில் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட வனத்துறை அதிகாரி மரங்களை மேற்பார்வையிட்டு உரிமையாளரின் கருத்துக்கிணங்க ஒவ்வொரு மரத்திலும் சுத்தியலை வைத்து அடித்து அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. பிற்பாடு படிவம் ஐந்தின்படி மரங்களைக் கொண்டு செல்வதற்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றது.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016