நோய் மேலாண்மை

புங்கேமியா பின்னேட்டா

குடும்பம் : லெகுமினேசியே
தமிழ் பெயர் : புங்கம்
பயன்கள்:
1. எரிபொருள் : 4600 கிலோ கலோரி / கிலோ
2. தீவனம் : ஏற்றதல்ல
3. வேறு பயன்கள் : காய்ந்த இலைகள் பூச்சி விரட்டியாக பயன்படுகின்றது. இலைகளை தழை உரமாக பயன்படுத்தலாம்.
விதைகள் சேகரிக்கும் நேரம் : மார்ச் – மே
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை : 500
முளைத்திறன் : 6 மாதங்கள் வரை
முளைப்புச் சதவிகிதம் : 80%
விதை நேர்த்தி : தேவை இல்லை
நாற்றாங்கால் தொழில்நுட்பம் :
  1. விதைகள் தாய் படுக்கையில் விதைக்கப்டுகின்றன. பின்பு நாற்றுகள் பாலிதீன் பைகளில் நடவு செய்யப்படுகின்றன.
  2. நேரடி விதைப்பு முறை பகுதியளவு வெற்றியை தரும். விதைப்புக்கு ஏற்ற காலம் மார்ச் – ஆகஸ்ட்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016