வனவியல் தொழில்நுட்பங்கள்


வனவியலில் புதிய தொழில்நட்பங்கள்


புதிய இரகங்கள்_ விதைக்கரணை_ தொழில்நுட்பங்கள், வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்.
காசுரினா MTP-1 புதிய இரகம் வெளியிடப்பட்டுள்ளது.
மூங்கில் (பாம்பூ)-புதிய பயிர் பெருக்க தொழில்நுட்பம்
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் செய்யப்பட்ட பிற செயல்கள்
காசுரினா ஜான்கினியானா பயிர்  பெருக்கம் , வேளாண் அறிவியல் நிலையம் , விருத்தாச்சலம்


காசுரினா MTP-1


முக்கிய அம்சங்கள்

 1. கூம்பு விரி அமைப்புடன் விரைவாக வளரக் கூடியவை.
 2. சுத்தமாக உருளை வடிவில் சீராய் நேராக வளரக் கூடிய தன்மை பகுதி.
 3. 45 முதல் 60 கோணத்தில் கிளைகள் நிமிர்ந்து வளரும் தன்மை உடையது.
 4. மிதமான காரத்தன்மை மற்றும் உவர்த்தன்மைகளை தாங்கி வளரக் கூடியது.
 5. 46% செல்லுலோஸ்
 6. உரங்கள் இடுவதற்கு (50:150:100 kg NPK/ha) பெரிதும் ஒத்துழைக்கின்றது.

பெற்றோர் : விதைக்கரணை தேர்வு மற்றும் பெருக்கம்.
சுழற்சி : 30 -36 மாதங்கள்
பருவம் : மழைக் காலங்களில் நட்டு வைத்தல்
சாகுபடி : 100 t/ ha (கட்டை)
உள்ளுர் வகைகளைகட காட்டிலும் 33% அதிகம்.
அதிகபட்ச சாகுபடி : 125 t / ha (கட்டை)
ஏற்ற பகுதிகள் :
தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக கடலோரப் பகுதிகள் மற்றும் மணல் மண் மற்றும் பிற வடிகால் வசதியுள்ள மண்கள்.

இரகம் வெளியிடுவதற்கு காரணமான விஞ்ஞானிகள்

முனைவர் K.Tபார்த்திபன் ,முனைவர் M.பரமாத்மா ,
முனைவர் K.சண்முகம் , முனைவர் N.நடராஜன்,
முனைவர் K.கிருஷ்ணவேனி மற்றும் முனைவர் M.கோவிந்த ராவ்


புதிய பயிர் பெருக்க தொழில்நுட்பம் - மூங்கில்


பல்வேறு உபயோகங்கள் கொண்ட மூங்கில் மரம் , தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் பூப் பூத்து விட்டு பின் இறந்த விடும், இதை “பார்தினோஜெனிசிஸ்” என்று  அழைப்பர். ஆகையால் விதை மற்றும் அதன் முளைப்புத் தன்மை மிகவும் குறைவாக  இருக்கும். இச்சிக்கல் , மூங்கிலை இரண்டு களிகள் கொண்ட துண்டுகளை வேர் சிகிச்சை மூலம் இன பெருக்கம் செய்வர். இத்தொழில்நுட்பத்தின் மூலம் 25 சதவிகிதற்கம் குறைவான வெற்றியையே பெற முடிந்தது. புதிய தொழில்நுட்பத்தில் களி முழுவதையும் வேர் –பிடியும் வெற்றியை  பெற்றிருக்கின்றனர்.
5-10 வருடங்கள் வளரும் பருவத்தில் முதிர்ந்த மரத்தில், ஒரு வருட வயதுள்ள களியை எடுக்கவும் . களியை எடுக்கும் பொழுது, களி மற்றும் தாய் மூங்கில் இரண்டும் சேதாரம் ஆகாமல் கவனமாக எடுக்க வேண்டும்.
பிரித்தெடுத்த குருத்தில், அரும்புள்ள கணுக்களை விட்டுவிட்டு மற்றவை எல்லாம் அகற்றி விடலாம். பின்பு குருத்தகளை நாற்றாங்கால் படுக்கையில் அரை அங்குலத்திற்கு லேசாக இருக்கும் மணலைக் கொண்டு முடி விட வேண்டும். தென்னங்க்கீற்று அல்லது கைகோல் கொண்டு நாற்றங்கால் படக்கையிற்கு நிழல் கொடுத்த பின்பு மண்ணின் கொள்திறன் அளவிற்கு நீர் விட வேண்டும். இரண்டு நாட்களுக்கொரு முறை நீர் விடுதல் கடைப் பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்கையில், ஒரு மாதத்தில் அனைத்து அரும்புகளிலிருந்தும் தண்டுகள் தலிர்த்து வரும். நீர் விடுவதை மூன்று மாதங்கள் வரை தொடரவும்.
2-3 மாதங்களில் வேர் வருவதைக் கவனிக்கலாம். வேர் பிடித்த களிகளை மணலிலிருந்து பிரித்தெடுக்கவும். வெர் பிடித்த களிகளை எவ்வித சேதாரமுமின்றி பிரித்தெடக்க நிர் விட்டு பின்பு எடக்கவும். ஒவ்வொரு வேர் பிடித்த தண்டுகளை, சிறிய கை ரம்பம் கொண்டு பிரிதிதெடுக்க வேண்டும். பிரித்தெடுத்த தண்டுகளை தனித் தனியாக பாலிதிதீன் பைகளில் நட வேண்டும்.

பயன்கள்

இத்தொழில்நுட்பம் எவ்வகையான வேர்-சுரபி சிகிச்சை அளிக்காமல் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால் விவசாயிகள் மற்றும் பிற உரிமையாளர்கள் கடைபிடிக்க மிகவும் சுலபமானதாக இருக்கும்.
இத்தொழில்நுட்பம், மிகக் குறைந்த விலையில் மூங்கில் வேர் பிடித்தல் அதிக அளவில் வெற்றியடைதல் மற்றும் இதற்கு பனிப்புகை அறை போன்ற வசதிகள் தேவையில்லை. எவ்வகையான தொழில் வல்லுநர்களின் உதவியும் இன்றி, விவசாயிகள் எளிதில் பின்பற்றக் கூடிய தொழில் நுட்பம்.
மிக எளிய மற்றும் தைரியமாக பெரிய அளவில் மூங்கில் இனப் பெருக்கம் செய்வதற்கு பயன்படத்தலாம், ஏனென்றால் 90 சதவிகிதத்ற்கும் மேல் வெற்றி பெற முடியும்.
இத்தொழில்நுட்பத்தில், எவ்வித இரசாயணமும் பயன்படுத்தாதால், இது ஒரு இயற்கை சார்ந்த தொழில்நுட்பமாகும். இறுதியாக கூற வேண்டுமானால், வணிக முறையில் மூங்கிலை இனப் பெருக்கம் செய்வதற்கு  இருக்கும் ஒரே  எளிமையான தொழில்நட்பம் இதுவாகும்.

பொருளியல்

செலவு
இருக்கின்ற தொழில்நுட்பத்தின் விலை (ரூ.) மேம்பாட்டுத் தொழில்நுட்பத்தின் விலை (ரூ.)
நிரந்திரமான செலவு 8089 2704
மாறு தன்மை கொண்ட செலவு 7667 7975
மொத்த செலவு 15,766 10,679
மொத்த செலவு 8750 14,000
B : C 0.56 1.31

பூர்த்தியாகாத வரவு-செலவுத் திட்டம்

வ.எண் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் (லாபம்) முந்திய தொழில்நுட்பம் (நஷ்டம்)
 1.  
கூடுதல் பலன்:
200 நாற்றுக்கள் 35/- ரூபாயிலிருந்து 7000/- ரூபாய் வரை விலையில்
-
 1.  
குறைக்கப்பட்ட விலை
ரூ. 5077/-
-


மேம்பாட்டுத் தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்படும் மொத்த  லாபம் ரூ.12,077/-

தொழில்நுட்பத்திற்கு காரணமான விஞ்ஞானிகள்

M.பரமாத்மா, A.பாலசுப்பிரமணியன், K.T.பார்த்திபன், P.‚மதி மற்றும் M.கோவிந்த ராவ்.

வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் செய்யப்பட்ட பிற செயல்கள் :

 • சைமருபா - புதிய ஒட்டுத் தொழில்நுட்பம்
 • மண் காத்து வேல்,சொர்க் மரம் - அறிமுகம்

காசுரினா ஜான்கினியானா - உறிஞ்சும் குழல்  கொண்டு பயிர் பெருக்க முறை - வேளாண் அறிவியல் நிலையம், விருத்தாசலம்.

 • விகிதம்

மண் : மணல் = 6.4
வெர்மிகுலாய்ட் : வேர் – பூசணம் = 1.1

 • ஒரு நாளுக்கு 8000 - 9000 உறிஞ்சும் குழல்
 • உறிஞ்சும் குழல் வாங்கும் செலவு - 25 பைசா. 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014