விவசாயிகள் பயிற்சி

சூரிய ஆற்றல் வேலிகள்

அறிமுகம்
சூரிய ஆற்றல் வேலிகள் எவ்வாறு வேலை செய்கிறது
சூரிய ஆற்றல் வேரியின் சிறப்புத்தன்மை
நன்மைகள்
பயன்பாடுகள்
கையாளுதல்
சூரிய வேலி அமைக்கத் தொடர்பு கொள்க

அறிமுகம்

விலங்குகள் மற்றும் தேவையற்ற மனித நடமாட்டத்தைக் குறைக்க சூரிய ஆற்றல் வேலிகள் மிகவும் பயன்படுகின்றன. பயிர்களைப் பாதுகாக்க பழைய முறைகளைக் காட்டிலும் இம்முறை அதிக பயனளிக்கிறது.

செயல்பாடு

ஏதேனும் விலங்குகள் அல்லது புதிய மனிதர்கள் வேலியினைத் தொடும்போது கூரிய சிறு வலியுடன் கூடிய அதேசமயம் பாதிப்பற்ற ஒரு அதிர்ச்சியை அடைவர். இந்த அதிர்ச்சி எந்த ஒரு உடல்சம்பந்தமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஒரு முறை இந்த அதிர்ச்சியை வாங்கிய விலங்குகள் மீண்டும் அப்பக்கம் செல்லாது. குறிப்பிட்ட காலம் இவ்வாறு கரண்ட் அல்லது ஆற்றல் ஏற்றப்பட்ட வேலி பின்பு ஆற்றல் இல்லாமலும் பாதுகாப்பு வேலியாகவே பயன்படும்.

சிறப்பம்சங்கள்

  • நல்ல வலுவான கம்பங்களை உபயோகிக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் அங்கங்கே நடப்பட்டிருக்கும் கல் கம்பங்களையும் உபயோகிக்கலாம்
  • மனிதர்களையோ, விலங்குகளையோ அவர்களை உடலளவில் பாதிப்பதில்லை
  • இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்பட்டு பயன்படுத்தப் படுகிறது
  • இந்திய அரசின் மின்னனு சோதனை மற்றும் மேம்பாட்டு மையத்தின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பயன்கள்

பழைய வேலி முறைகளுடன் ஒப்பிடும்போது இச்சூரிய வேலியில் கீழ்க்கானும் பயன்கள் கிடைக்கின்றன.

  • நில அமைப்பைப் பொறுத்து 6 – 8 மீ உயரத்திற்கு உள்ள கம்பங்களிலேயே அமைத்துக் கொள்ளலாம்
  • சுற்று கொண்ட ஒயர்களைப் பயன்படுத்தாமல், நல்ல வலுவான கம்பி ஒயர்களையே பயன்படுத்துகின்றனர்
  • இவ்வாறு வலுவான ஒயர்கள் அறுந்து விடும் என்ற பயம் ஏதும் இல்லை
  • தடுப்புகளை நமது வசதிக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். யானை போன்ற பெரிய விலங்குகளுக்கு ஏற்றவாறும், அதேசமயம் பூனை போன்ற சிறு விலங்குகள் உள்ளே சென்றுவர அனுமதிக்குமாறும் தடுப்புகளை அமைக்கலாம்
  • உலகம் முழுவதும் 165 நாடுகளில் இம்முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது
  • இது மிக பயனுள்ள முறையாகும். அனைத்து முறைகளிலும்
  • வேலியிடுதல் மற்றும் கையாளுதல் மிக எளிது
  • இது அதிக காலத்திற்கு நீடித்து உழைக்கக் கூடியது. அங்கங்கே கட் ஆனாலும் சரிசெய்து கொள்வது எளிது. அதே போன்று ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016