நன்னெறி ஆய்வக முறைகள் :: பாதுகாப்பு முறைகள்


  • அனைத்து ஆய்வுக்கூட பணியாளர்களும் ஆய்வுக் கூடத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆய்வுக்கூடத்தில் உள்ள அனைத்து கருவிகளும் நன்கு செயல்படுகின்றனதா என்பதை நன்கு அறிந்து பாதுகாக்க வேண்டும்.

  • இரசாயனப் பொருளை பயன்பாட்டிற்கு மேலாக ஆய்வுக்கூடத்தில் வைத்திருக்கக்கூடாது. பயன்படுத்த வேண்டிய இரசாயனப் பொருளைத் தவிர மீதமுள்ளதை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கவும்

  • பாதுகாப்பு காலனிகள், ஆய்வுக்கூட உடுப்பு மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகளை எப்பொழுதும் ஆய்வுக்கூடத்தினுள்ள செல்லும்போது அணியவும் ஆய்வுக்கூடத்தினுள் உண்ணுவது, குடிப்பது மற்றும் புகை பிடிப்பதை முற்றிலுமாக தடை செய்யப்பட்டது

  • பாதுகாப்பு சாதனம் மற்றும் முன்னெச்சரிக்கை நூலை சுலபமாக அறிந்து கொள்ளுமாறு வைக்க வேண்டும்

  • தீயணைக்கும் கருவி, புகைத் தொப்பி, இரசாயணம் சிந்தாமல் பாதுகாக்கம் உபகரணம், கண் துடைப்பான்கள் மற்றும் மற்ற பாதுகாப்பு சாதனங்களை பாதுகாத்து வைக்க வேண்டும

  • முதலுதவிப் பெட்டியை எப்பொழுதும் ஆய்வுக்கூடத்தில் தயாராக வைக்கவும்

  • உபயோகப்படுத்திய திரவம் இரசாயனத்தை முறையான வழியில் அப்புறப்படுத்த வேண்டும். செயல்முறையை நிதானமாகக் கடைப்பிடிக்க வேண்டும்

  • ஆய்வுக்கூடத்தில் தனிமையாக வேலை செய்யக்கூடாது

  • அங்கக திரவத்தை பயன்படுத்தும் போது, தெளிவாக இல்லையென்றால் பகுப்பாய்வு செயல்முறைகளை பார்க்க வேண்டும். ஏன்என்றால் அங்கக திரவம் கேடு விளைவிக்கக் கூடியது.

  • மின் ஆற்றல், எரிவாயு கலன் மற்றும் சூடாக்கும் கருவிகளை நிதானமாக செயல்படுத்தவும்

  • வேலை செய்யும் போது புகை மூடியை பயன்படுத்தவும் மற்றும் தண்ணீரில் அமிலத்தை காரத்தையும் சேர்க்கவும்

  • உடைந்த கண்ணாடிக் கருவியை கையால் எடுக்க முயற்சி செய்யக்கூடாது. உடைந்த கண்ணாடிக் கருவிகளை  எடுத்து அகற்றவும்

  • புதிதாக சேர்ந்த ஆய்வுக்கூட பணியாளர்களுக்கு விரமாக அறிவுரையை எடுத்துரைக்க வேண்டும்

  • ஆய்வுக்கூட பணியாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை மருத்துவப் பரிச்சையை மேற்கொள்ள வேண்டும்

  • பாதுகாப்பு செயல்முறையை ஆய்வுக்கூடத்தினுள் சுவற்றிள் ஒட்ட வேண்டும்

  • அவசர தேவையை கையாளுவதற்கு ஆய்வுக் கூட பணியாளர்களுக்கு பயிற்சிகள் தேவைப்படுகின்றது

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013