நன்னெறி ஆய்வக முறைகள் :: முன்னுரை


முன்னுரை

நன்னெறி ஆய்வக முறைகள் என்பது ஆராய்ச்சி அமைப்பு மற்றும் பிற ஆய்வகங்களில் கடைபிடிக்கப்பட்ட வேண்டிய மேலாண்மை வரைமுறைகளை உள்ளடக்கிய செய்முறைகளின் கூட்டமைப்பு, இந்த செய்முறைகள் ஆய்வக முடிவுகளின் நமபகத்தன்மையையும், உறுதித்தன்மையையும் வெளிப்படுத்துவதற்காக வரையறுக்கப்பட்டவை. இவைகள், தேசிய பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டுறவு கட்டமைப்பு தத்துவங்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்ட முறைகள்.
நன்னெறி ஆய்வக முறைகள் என்பது நன்னெறி வேளாண்மை முறைகளில் ஒன்றாகவே இருக்கக்கூடிய நன்னெறி முறைதான். நிறைய சந்தர்ப்பங்களில் நன்னெறி முறைகள் என்பது ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள நன்கு பல முறை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உபயோகத்தில் உள்ள முறைகளே நன்னெறி ஆய்வகமுறைகளில் எதுவும் தனிப்பட்ட வழி முறைகளைக் கொண்டவை அல்ல, பொதுவாக கடைபிடிக்க வேண்டிய நல்ல ஆய்வக முறைகளின் தொகுப்புதான். மற்ற நன்றெிமுறைகளுக்கும், நன்னெறி ஆய்வக முறைக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் மருந்துப் பொருட்களை சோதனை செய்ய கையாளும்போதும். விற்பனைக்குரிய வேதிப்பொருட்களின் தரம் குறித்த விசாரனை ஆய்வின் போதும் நன்னெறி ஆய்வகமுறைகள் மிகமிக கட்டாயமாக கடைபிடிக்கப்பட வேண்டும். மருந்துப்பொருள் உற்பத்தி நிறுவனங்களின் ஆய்வகங்களில் இந்த நன்னெறி ஆய்வக முறைகளின் கட்டாயப்பயன்பாடு, முறைப்படுத்தும் அரசாங்க அமைப்புகளால் கண்காணிக்கப்படுகிறது.

நன்னெறி ஆய்வக முறைகள் வரலாறு

நன்னெறி ஆய்வகமுறைகள் பற்றிய  கருத்து முதன்முதலாக 1970-களில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கண்டறியப்பட்டது. அமெரிக்க, உணவு மற்றும் மருந்து கட்டுப்பர்டடு வாரியம், புதிய மருந்துகள், உணவு சேர்பார்கள் மற்றும் வேதிப்பொருட்கள் ஏதுவாக இருந்தாலும் அவைகள் ஆய்வக பரிசோதனைக்கு உட்பட்ட பின்னரே மனிதர்களின் தேவைக்கு பயன்பாட்டிற்கு வெளியிடப்பட வேண்டும். என பரிந்துரை செய்தது. இந்த ஆய்வகப்பரிசோதனைகள் நன்கு வரையறுக்கப்பட்ட விஞ்ஞான தத்துவங்களின் அடிப்படையில், தரமான ஆய்வகங்களில் நடத்தப்பட்டால் மட்டுமே, அதன் முடிவுகள் மனித குல பயன்பாட்டிற்கு எற்ற பல நல்ல தகவல்களை அடைய உதவும் என முடிவு செய்து வலியுறுத்தியது. ஆய்வக நடைமுறைகள் பல்வேறு நிறுவனங்களில் சோதனையிடப்பட்டபோது, அவைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் 25 ஆண்டு வெளியீட்டில், ஆய்வகங்கள் உறுதியாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. பாதுகாப்பிற்கு உகந்தவையாக இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தவற்காகவே நிர்ணயம் செய்யப்பட்டன.

நன்னெறி ஆய்வகமுறைகள் வரையறை

நன்னெறி ஆய்வகமுறைகள் என்பது நன்கு வரையறுக்கப்பட்ட செயல்முறைகள் ஆய்வுக்குபயன்படும் சோதனைக் கூடங்களில் சோதனை முறைகள் திட்டமிட்டு செயல்படுத்தி, கண்காணிக்கப்ட்டு, பதிவு செய்யப்பட்டு அறிக்கையிடும் முன்பாக கடைபிடிக்கப்பட வேண்டிய ஆய்வக முறைகளே இந்த முறைகளை கடைபிடித்து சோதனையில் ஈடுபடும் ஆய்வகங்கள், ஆய்வுக்கு உட்படும் மருந்துப்பொருளோ, வேளாண் வேதிப்பொருளோ அலங்காரப் பொருளோ, உணவு சுவையூட்டியோ, தீவன உட்பொருளோ, புதுவகையான உணவுப்பொருளோ அது எதுவாக இருந்தாலும் உபயோகிப்பார்க்கும் நுகர்வோருக்கும், மூன்றாம் நபருக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன பாதிப்புகளை அது ஏற்படுத்தும் என்பதான முடிவு அறிக்கை தரும்போது, நன்னெறி ஆய்வகமுறைகளை மீது நம்பகத்தன்மை முழுமையாக இருக்கும்.

நன்னெறி ஆய்வக முறைக்கான தேவை

வேளாண் வேதிப்பொருட்கள், கால்நடை மருந்துகள், வாசனை மற்றும் உணவுப் பொருள் வண்ணமூட்டிகள், மருத்துவ சாதனங்கள் மற்றம் உபபொருட்களை் ஆய்வகங்களில் சோதனைக்கு உட்படுத்தும்போது, அவைகளின் பாதுகாப்புத்தன்மை குறித்து அறிய நன்னெறி ஆய்வக முறைகளை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது

  • மருந்துப்பொருள் உற்பத்திக்கான ஆய்வக பரிசோதனைகள்
  • வேளாண் பூச்சிக்கொல்லிகள் உற்பத்திமேம்பாடு
  • நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களின் மேம்பாடு
  • வெடிபொருட்களின் தீங்கு பற்றி சோதனைகள்
  • உணவுபொருட்களின் தரக்கட்டுப்பாடு சோதனைகள் மேற்காணும் சோதனைகளுக்கு நன்னெறி ஆய்வக முறைகள் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013