நன்னெறி மேலாண்மை முறைகள் :: அதிக விளைச்சலில் நன்னெறி மேலாண்மை முறைகள்

தேவைக்கதிகமான வைக்கோல் அறுவடை செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறி மேலாண்மை முறைகள்

  • மண்அரிப்பதைத் தடுக்க, நிலத்தில் தேவையான அளவுப் பயிர் கழிவுகளை (அறுவடையின்போது நீளமான தாள்) விட்டு அறுவடை செய்வதாகும்.
  • நிலத்தில் அங்ககப் பொருட்கள் அதிகம்  சேர்க்கும்  வகையில் நிலத்தில் பயிர்க்கழிவுகளை சேர்க்கவேண்டும்.
  • மண் பரிசோதனை பரிந்துரையின் படி பயிருக்கு, தேவையான அளவு உரமிடவேண்டும்.

மண் அரிப்பைத் தடுக்கத் தேவையான தாளின் உயரமும், பயிர்க் கழிவுகளின் அளவும்.

உயரமான தாள்கள், காற்று மற்றும் நீரினால் ஏற்படும் மண் அரிப்பை தடுப்பதோடு பணியை உறிந்து, ஆவியாதலைத் தடுத்து மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. உயரமான தாள்கள், மண்ணில் ஈரப்பதத்தை அதிகரிப்பதால் விதைப் படுக்கையின் தன்மையை மேம்படுத்துகிறது. ஆகையால் விதைக்கும் கருவி சிக்காமல் இருக்குமாறு நீண்ட தாள்விட்டு அறுவடை செய்யலாம்.

பொதுவாக தாளின் உயரம் விதைக்கும் கருவியின் பார் இடைவெளியும் ஒன்றாக இருக்கலாம். விதைப்புக் கருவியின் பார் இடைவெளி 8-12 அங்குலமாக இருக்கும். ஆகையால், தாளின் உயரம் 12 அங்குலம் இருக்கலாம். நான்கு வரிசை கத்திகள் உள்ள நேரடி விதைப்புக் கருவியின் மூலம் அதன் பார் இடைவெளியில் ஒன்றரை மடங்கு உயரத் தாள்களிலும் விதைக்க முடியும். புதிய நேரடி விதைப்புக் கருவிகள் மூலம் மண்ணில் சிக்காமல் விதைக்க முடியும். அநேக வருடங்களில், மேலோட்டமான விதைப்பினால் சிறந்தப் பயிர் அடர்த்தியும், சீரான பயிர் வளர்ச்சியும் காணப்படுகிறது.

மெதுவாக விதைக்கும் கருவியை இயக்கும் போது மேலோட்டமாக மண்ணைகிளரி, குறைந்த பயிர் கழிவை மண்ணில் புதைக்கும். மண்ணில் ஊன்றி நிற்கும் தாள்கள் மண் அரிப்பைத் தடுக்க மிகவும் உதவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013