அரசு திட்டங்கள் & சேவைகள் :: எல்.ஐ.சி - சிறப்புத் திட்டங்கள்

விவசாய வயல்வெளி பள்ளி

தமிழ்நாட்டில் வயல்வெளி பள்ளி FFs

விவசாய வயல்வெளி பள்ளி

“நான் கேட்டால் அதை மறந்துவிடுவேன்
நான் பார்த்தால் அதை ஞாபகம் வைத்துக்கொள்வேன்
நான் கண்டுபிடித்தால் அதை வாழ்நாள் முழுவதும் 
எனது உடைமையாக்கிக் கொள்வேன்”

  • விவசாய வயல்வெளி பள்ளியானது, ஒரு வரைமுறை இல்லா கல்வி கற்கும் முறை.
  • வயல்வெளியை அடிப்படையாகக் கொண்டு ஒரு குழுவாக கற்கும் முறை
  • விவசாயிகள் தங்களது விவசாய் பிரச்சனைகளே, தாங்களே நிவர்த்திச் செய்யக்கூடிய தகுதியை / திறமையை வழங்குகிறது.
  • விவசாயிக்ள முழுமையாக ஈடுபடுத்த ஆலோசனை செய்து எல்லோரும் சேர்த்து எடுத்தல்.
FFS

அறிமுகம்

விவசாய வயல்வெளி பள்ளியானது, முதியவர்கள் கல்வி கற்கும் பள்ளியே விவசாயிகள் தங்கள் வயல்கள் பார்த்ததையும், சோதனைகள் செய்வதை வைத்து கற்றுக் கொள்ளும் கருத்தைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.  இந்த முறை, விவசாயிகள் வேறுபட்டு மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க உருவாக்கப்பட்டது.

பயிர் நடவிலிருந்து அறுவடை வரை, விவசாயிகள் குழுக்களை சார்ந்தவர்கள் வயல்களை கண்காணித்து, பயிர்ச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை தங்களுக்கு கருத்து பரிமாற்றம் செய்து கொள்வார்கள். அவர்கள் பயிரின் அடிப்படை தொடர்புகள் நன்கு புரிந்துகொள்ள நில சோதனைகள் உதவுகின்றன. (உதாரணம் பூச்சிகள் - நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையில்  ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பயிர் சேதாரம் – விளைச்சலுக்கு உள்ள தொடர்புகள்) இந்த சுழற்சியான கற்பிக்கும் முறையினால் விவசாயிகள் தாங்களாகவே தங்கள் பயிர்களை மேலாண்மை செய்யக்கூடிய தகுதியை உருவாக்குகிறது. இத்தகைய தனிச்சிறப்பு  வாய்ந்த கல்விமுறையினால், விவசாயிகள் இருந்து கற்கவும், தங்களுக்குள் எழுத்துக்களை மாறி மாற்றிக்கொள்ளும் தகுதியையும், குழுவாக இணைந்து செயல்படக்கூடி  மேம்படுத்த உதவுகிறது.

1989 ஆம் ஆண்டு இந்தோனிசியாவில், நெல்லில் பூச்சிக்கொல்லியின் உபயோகத்தைக் குறைக்க வயல்வெளி பள்ளியானது, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையைக் கடைபிடிக்க ஆரம்பிக்கப்பட்டது. திட்டமிடுபவர்கள் அதற்கு உதவுபவர்களும், இப்பள்ளி நடத்தப்பட்டது. அந்தப்பள்ளியின் முடிவைப் பார்த்து வியந்தனர். மேலும்  விரைவாக பல இடங்களுக்கு இப்பள்ளி நடத்தப்பட்டது. பின்பு, சமூகம் சார்ந்த பணிகள் மற்றும் கிராமப்புற நிகழ்ச்சிகள் திறம்பழ நடத்துவதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அதற்குபின்பு நெல்லில் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பிற்கான விவசாய வயல்வெளி பள்ளிகள் பன்னிரெண்டு ஆசியா நாடுகளில் பின்பற்றப்பட்டது. பின் காய்கறிப்பயிர்கள், பருத்தி மற்றும் இதர பயிர்களுக்கு நடத்தப்பட்டது. தொன்னூறாம் ஆண்டில்  நடுவிலிருந்து ஆகியா நாடுகளில் பெறப்பட்ட அனுபவத்தை  வைத்து உலகின் மற்ற பகுதிகளுக்கு வயல்வெளி பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டது. விவசாய வயல்வெளி பள்ளி, புதிய பயிர்களுக்கு சேர்க்கப்பட்டது. அத்துடன் அது விவசாயிகள் செயல்படுத்தவும் நிறுவனத்தின் வாயிலாகச் சொல்லி / கற்பிக்குப்படவும் ஊக்கப்படுத்தப்பட்டது. தற்போது, உலகளவில் 30 நாடுகளில்  விவசாய வயல்வெளிப் பள்ளியானது வேறுபட்ட வளர்ச்சி நிலைகளில்  நடத்தப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த பூச்சிக்கட்டுப்பாடு விவசாய வயல்வெளி பள்ளியின் மாறுபட்ட செயல்முறைகளால் அதன் முடிவுகளில் வேறுபட்ட முடிவுகள் உருவாக்கப்பட்டன. பொதுவாக குறைந்த அளவு பிரதிகளிலுள்ள திட்ட அறிக்கை அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. அப்பள்ளியின் விளைவுகள்.அந்த முறை எந்த செயல்முறைஈ எதன் மீது எவ்வளவு என்பதைப் பொறுத்து மாறுகிறது. இப்படி கிடைத்த விளைவுகள் அலுவலக அறிக்கையில், விளைவுகளின் தனிச்சிறப்புகளும்  மட்டும் வெளியிடப்படுகிறது. விரைவு ஆய்வில் ஒருங்கிணைந்த பூச்சிக்கட்டுப்பாடு மறைகள் கடைப்பிடிக்கப்பட்ட வயல்களில் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, மகசூல் லாபம் அவற்றை மற்ற வயல்களோடு ஒப்பிடப்பட்டு, அதன் நன்மைகள் மட்டும் விவசாயிகளுக்கு  செய்து காண்பிக்கப்படுகின்றது. விவசாயிகள் தாங்கள் கற்றுக்கொண்ட திறமைகளிலிருந்து எவ்வாறு ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். எவ்வாறு தூரம் அதில் தெளிவுப் பெற்று உள்ளனர் அல்லது எந்தளவு மேம்படுத்தப்பட்ட விளைவுகள் ஏற்பட்டன் என்பதையெல்லாம் மேம்படுத்தப்பட்ட ஆய்வுகளில் மதிப்பிடப்பட்டன. இவ்வாறாக விவசாய வயல்வெளிப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டன.

கோட்பாடுகள்

FFS

1. ஆரோக்கியமான பயிரை வளர்த்தல்

பயிர் முறை மற்றும் பயிர் மேலாண்மை முறைகளினால், செடிகள் பூச்சி தாக்கத்திலிருந்து சரியாகி / விடுபட்டு வளர்ப்பதும், பூச்சி மற்றும் நோய்களினால் ஏற்படும் சத்துக் குறைபாடுகளைத் தவிர்த்தும் பூச்சி நோய்களை எதிர்த்து செயல்படக்கூடிய  செடிகளுக்குள் இருக்கும் தன் ஆற்றலை மேம்படுத்தி பயிர் வளர செய்தல்.

2. பூச்சிகளின் இயற்கை எதிரிகளைக் காத்தல்

பூச்சிகளின் இயற்கை எதிரிகளைக் காத்தலே, அதுவே, உயிரியல் கட்டுப்பாடு முறைகள் (இலவமாக, பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும்) ஒட்டுண்ணிகள், பூச்சி விழுங்கிகள் மற்றும் பூஞ்சாணங்கள் போன்றவை ளமுன்பே (பூச்சிகளை கட்டுப்படும்) தற்சமயம், ஆராய்ச்சியின் படி, நுண்ணுயிர்க்கொல்லிகளும் மற்றும் நோய்களுக்கு போட்டி போடுபவையும் முக்கியமானவை என அறியப்பட்டது. ஊர்வன இயற்கை எதிரியும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளில் முக்கியமானவை.

தகுந்த அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளை (களைக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி, பூச்சிக்கொல்லி) உபயோகிப்பதாலும், இயற்கை பூச்சி எதிரிகளை காக்கலாம். நன்மை செய்யும் மண் நுண்ணுயிரிகளை, நல்ல மண்ணின் அங்ககத் தன்மை மேம்படுத்துவதில் காக்கலாம். பூச்சிகளின் இயற்கை எதிரியின்  வளங்களை காக்கவும், மேம்படுத்தவும் செய்தால், அவைகளைக் காக்கலாம். (உதாரணமாக ஆந்தை வீடு, சிலந்திக்கு மண் போர்வை, ஒட்டுண்ணிக்கு பூக்களின் மகரந்தம்) பூச்சிகளின் இயற்கை எதிரிகளைக் காக்க சில நடவடிக்கைகள் எடுத்தபின்பு, தம்மால் பெருக்கப்பட்ட / வளர்க்கப்பட்ட இயற்கை எதிரிகளை சிறப்பு சூழ்நிலைகளில்  விடலாம்.

3. பயிர்களை தொடர்ந்து கண்காணித்தல்

பயிர்களைத் தொடர்ந்து கண்காணிதது வந்தால் தகுந்த, இடைவெளியில் / காலத்தில்,விரைவாக, நீர், மண் மற்றும் பயிர் மேலாண்மை முடிவுகள் எடுக்கமுடியும். சூழலியல்  மற்றும் பொருளாதாரத்திற்கு  ஏற்ப ஈடுப்பொருட்களை இடலாம்.

4. விவசாயிகள் வித்தகர் ஆகிவிடுவார்க்ள

விவசாயிகள், தங்கள் நிலங்களில் மண், பூச்சி மற்றும்  பயிர் மேலாண்மை செய்வதற்கு சிறந்த வித்தகர் ஆகிவிடுவார்கள். விவசாயிகள் வேளாண் சூழலியலில் உள்ள அடிப்படைகளை அறிந்து கொள்வதிலும் விரைவாக நல்ல முடிவுகள் எடுப்பதிலும் வல்லுநராகி விடுகிறார்கள். சாதாரண விதிகள் மற்றும்  வழிகாட்டுதல் கொடுத்தால், குறுகிய காலப்பலன் தான் கிடைக்கும். அவைகள் நெடு நாள் ஊரக மேம்பாடு / வளர்ச்சிக்கு  பயன் தராது.

FFS

அடிப்படை நோக்கங்கள்

ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு மேலாண்மை - உழவர் வயல்வெளி பள்ளி அல்லாதத பிற திட்டங்கள், நல்ல ஒரு கல்வியறிவை வெற்றிக்கரமாக கொடுக்கின்றன. பழங்கால கல்வி அறிவு மற்றும் கிராம அளவில் உள்ள அடிப்படை சுகாதார நிறைவுகளிலிருந்து பெருவாரியான உழவர் வயல்வெளி பள்ளி நுணுக்கங்கள்  இதைப்போன்ற பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இது ஒரு புதிய நுணுக்கம் அல்ல. ஒருங்கிணைந்த  பயிர் பாதுகாப்பு மேலாண்மை - உழவர் பள்ளியில் பங்கு  ஏற்கும் சில விவசாயிகள், அடிப்படை அறிவியல் அறிவை குழுக்களுக்கு வழங்குவதால், குறைந்த செலவில் அதிக லாபம் பெறுவதாக சொல்கிறார்கள்.

1. முதியோர்களுக்கு ஒரு வரைமுறை இல்லா கல்வி

உழவர் வயல்வெளிப் பள்ளிக்கு வரும் விவசாயிகள் நல்ல அனுபவமும் அறிவும் பெற்றிருந்தாலும் சிலவற்றைத் தவறாக பெறப்பட்டு இருப்பார்கள். உதாரணமாக இயற்கை எதிரிகள் மற்றும் பயிர்களில் எந்தப் பூச்சிகளைக் கண்டாலும், ஐயோ பூச்சித் தாக்கிவிட்டதே என்ற அச்சத்துடன் இருப்பார்கள். அவர்களுக்கு வேளாண் சூழலியல்பற்றிய அறிவையும் பயிற்சிகளையும் தருகிறது. குறிப்பாக விவசாயிகள் வயலை பார்வையிட்டவுடன். அப்பள்ளியின் உதவியாளர் இயற்கை எதிரி பற்றியோ அவை எவ்வாறு உணவு உண்ணுகின்றன என கேட்பார். விவசாயிகள் அதற்கான பதிலை வழங்குவார்கள். இல்லை விவசாயிகளுக்கான சில மாற்று கருத்து இருந்தால் அவர் அதை செயல்முறையில் விளக்கிக் கூறுவார்.

உழவர் வயல்வெளி பள்ளிக்கு வழிவகைச் செய்து கொடுப்பவர்களை,

தொழில்நுட்பத்தில் வல்லமை படைத்தவராக்குதல்.

அரசாங்க வேளாண் விரிவாக்க பணியாளர்கள், விவசாய கூட்டமைப்புகள் அல்லது அரசு சாரா தனியார் நிறுவனங்கள் இவற்றின் மூலம் உழவர் வயல்வெளி பள்ளியானது பொதுவாக ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் சில திறமைகள் இருந்தாலும், முக்கியமாகப் பயிர், வளர்ப்பில் திறமை வேண்டும். அநேக நாடுகளில், வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் ‘விதை முதல் விதை வரை் செடிகளை வளர்த்திருக்கமாட்டார்கள். மேலும்  அவர்களுக்கு  தன்னம்பிக்கை அதில் குறைவாகவே இருக்கும். அதன் காரணமாக, ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு திட்ட முறைக்கு அவர்களுக்கு, அடிப்படை தொழில்நுட்பத்தை ஏற்க மறுக்கிறார்கள் என்பதை உணர செய்கிறார்கள். மேலும் அவர்களுக்கு செயல் திறமை வளர்க்கவும், ஒரு குழுவாக வேலைச் செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் மூலம், விவசாய வயல்வெளிகளில் சிலது தெரியாமல் இருந்தாலும் நம் எல்லோரும் சேர்த்து கண்டுபிடிப்போம் என்ற தன்னம்பிக்கையை பள்ளி வழிவகைச் செய்வர்களுக்கு வழங்குகிறது.

3. பயிரின் வெளித்தோற்ற அமைப்பு மற்றும் காலத்தைப் பொறுத்துக் குறையும்.

உழவர் வயல்வெளி பள்ளி மற்றும் நெடுநாள் பருவ பயிற்சியும் பயிரின் வெளித்தோற்ற அமைப்பை அடிப்படையாகக் கொண்டு பயிற்சி வழங்கப்படுவதால், அதன் கற்கும் விவசாயிகள் உடனே செயல்முறைப்படுத்த முடியும். குறிப்பாக நாற்றாங்கால் பற்றியவைகளை நாற்றாங்கால் நிலையுள்ள பயிரைக் கொண்டும், உரங்கள் பற்றியதை, எப்போது உரத்தேவை அதிகமாக பயிருக்கு தேவையோ அந்நிலையில் வழங்கப்படுகிறது. பயிர் வருவம் முழுவதும் பயிற்சியே பெறும் விவசாயிகளுக்கு,வாராந்திரக் கூட்டம் எனில் நிர்வாக / பொருளாதார வசதிகளை முன்னிட்டு ஒரு வாரத்தில் 40 மணி நேரம் வாரக்கூட்டம் நடைபெறும். நல்ல ஈடுப்பயிருடன் பயிற்சிகள் நடைபெறுவதால், எப்போது  பிரச்சனைகள் ஏற்படுகிறதோ, அதற்கு கூட்டம் போட்டு தீர்வு சொல்ல முடியும். இந்தப் பயிற்சி எப்போது ஆரம்பம் படிவு என்று இருக்கும் ஆனால் அநேக இதர விரிவாக்கத் திட்டங்களில் ஆரம்பம் முடிவு இல்லாமல், இரு வாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட விசயத்தை பேசி முடிப்பார்கள். விவசாயிகள் ஒப்புக்கொண்டால், பள்ளியானது, ஒரு பருவத்தை அடுத்து பின்னும் நடக்கும் ஆனாலும் பயிர்  வெளித்தோற்ற அமைப்பு காலத்திற்கு இருந்தால் அது நல்ல திறம்பட நடைபெறும்.

கூட்டுக்கல்வி

அநேகமாக எல்லா உழவர் வயல்வெளி பள்ளி, ஒரே பொதுவாக விருப்பத்துடன் கூடிய 25 பேர்கள் சேர்ந்து, அவர்களுக்குள் கருத்துக்களை / உதவிக் கொண்டு, ஒவ்வொரும்  அனுபவமும், சக்தியையும் கொண்டு ஒரு பெரிய குழுவாக நடத்தப்படுகிறது. தனி ஒரு ஆள்,ஏதாவது ஒன்றை புதியதாக செயல்படுத்தினால் அது சமுகத்திற்கு ஏற்றதல்ல ஆனால் ஒரு குழுவின் உதவி இருந்து செய்தால் ள அது ஏற்றுக்கொள்ள கூடியதாகும். சுமாராக 25 நபர்கள் ஒரு அமைப்பாளரின் கீழ் வேலைச் செய்வது அளிது. அவர்களுக்குள் மேலும் ஐந்து ஐந்து பேராகக் கொண்ட குழுவாக இருந்து வயல்களை பார்வையிடல், ஆய்வு செய்தல், குழ விவாதம் மற்றும் ஒவ்வொருவருக்கும் பங்கேற்க ஏதுவாகும்.

5. வயல்வெளி இடம்

ஒவ்வொரு உழவர் வயல்வெளி பள்ளியும், விவசாயிகள் வாழும் பகுதியில் நடத்தப்படுவதால், அனைவரும் பள்ளியில் வாரந்தோறும் கலந்துகொண்டு, அவர்களின் படிப்பை மேற்கொள்ள முடிகிறது. அதை நடத்தும் விரிவாக்க அலுவலர்கள். பள்ளி நடக்கும் நாள் அந்தப் பகுதிக்கு பயணம் செய்து வருவார்.

6. குழுக்கள் அமைத்தல்

உழவர் வயல்வெளி பள்ளி, வசதி செய்து கொடுப்பவரின் ஒரு பணியே. அதில் பங்கேற்கும் விவசாயிகள் ஒவ்வொரு தாங்களுக்குள் உதவும் படியாக குழுக்கள் அமைந்து, பள்ளி முடிந்தபின் உதவி செய்து கொள்ளும்படியாக இருக்க ஒரு குழு அமைத்து தரவேண்டும். அப்படி இருக்க அவர்களுக்குள் ஒரு தேர்தல் நடத்தி, தலைவர், பொருளாளர், செயலாளர் தேர்வு செய்து குழுவுக்கு அடையாளம் கொடுக்கவேண்டும். அந்தப் பள்ளிக்கு, சொந்தப் பெயரில் இருக்கவேண்டுமே அன்றி அதனை அமைப்பு பெயராக இருக்கக்கூடாது.அந்தக் குழுவுக்கு, வரவு, செலவு திட்ட அறிக்கை தாங்களே வடிவமைத்துக் கொள்ளலாம். அப்படியே அவர்கள், பருவ காலத்தில் ஒரு கூட்டு நிறுவனமாக உருவாக்கி, நெடுநாள் திட்டச்செயல்கள் திட்டமிட்டு, அதற்கு ஒரு செலவு அறிக்கை தயாரித்து அதைச் செயல்படுத்த அவர்களுக்கு உள்ளோ, கிராமப்புறங்களிடமிருந்தோ அரசிடமிருந்து, அரசு சாராத நிறுவனத்திடமிருந்தோ அல்லது தேசிய வளர்ச்சி திட்டத்திடமிருந்தோ பணம் பெற்று செய்யும் படியாக குழு அமைக்க உதவவேண்டும்.

7. அடிப்படை அறிவியல்

உழவர் வயல்வெளி பள்ளியானது, வயல்களைப் பார்வையிடல், ளரு பருவ அளவு நெடுநாள் ஆராய்ச்சி செயதல், உடனடி செயல்கள் செய்தல் போன்ற அடிப்படை செயலில் முதலில் ஈடுபடவேண்டும். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் அடிப்படை நிலைகளை உணர்த்தி, அந்நிலையுடன் அவர்களின் அனுவத்தையும், தேவையையும் ஒப்பிட்டு, ஒரு திறம்பட முடிவு எடுக்க முடியும். இப்படியர்கு விவசாயிகள் தாங்களுக்குள் அடிப்படை அறிவு பெருகி, அவர்கள் தனிச்சிறப்பு கேள்விகளும் தேவைகளும் அதிகமாகி, விரிவாக்கத்திற்கு ஆராய்ச்சி திட்டத்திற்கும் நல்ல ஒரு சவாலாக இருப்பார்கள். அவர்கள் அந்தத் திட்டங்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு, அதனால் ஒரு சொல்லும்படியான மகசூலையும் லாபத்தையும், அடையலாம். அதன் மூலம் முடிவாக இதர வழிகளினால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து காக்கலாம்.

8. வயல்களைப் படித்தல்

உழவர் வயல்வெளி பள்ளி, கல்விக்காக பயன்படுத்தப்படும் வயல் சின்னதே – 1000 ச.மீ அளவும், உழவர் வயல்வெளி பள்ளிக்கு முக்கியமானதும் ஆகும். அதுவே விவசாயிகள் தங்களின் எந்த ஒரு மேலாண்மை முடிவுகளை தங்கள்சொந்த வயலில் முதலில் செய்து பார்க்கும் முன்பு அப்பள்ளி வயலில் செய்து பார்த்து புதிய முறைகளையும், கற்கலாம். அந்த வயல்களில் நிறைய  விருப்பமுள்ள ஆராய்ச்சி பகுதியான இலை உதிர்வதால் ஏற்படும் மாற்றங்களை இலை உதிர்த்தும் செய்து பார்க்கமுடியும். நமது தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப,வயல்களை வேறுபட்டு அமைக்கலாம். சில கிராமங்களில்,பொது இடத்தில் இலவசமாக செய்து பார்க்கலாம். சில கிராமங்கள்  பரிசோதனையில் குறைந்த மகசூல் பெற்றால், அதை ஈடுசெய்ய பணம் பெற்றுச் செய்யலாம். அது எப்படி இருந்தால், அந்த வயல்கள் வசதி செய்து கொடுப்பவர் மட்டும் வயலைக்காப்பதில்லை. விவசாயி குழுவை சேர்ந்த அனைவரும் சேர்ந்து பார்க்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். மேலும் இது பழங்காலத்திலிருந்து நிறைய திட்டங்களுக்கு பயன்படுத்தி வரும் சோதனை வயல் அல்ல என்பதையும் தான்  ஞாபகம் கொள்ளவேண்டும்.

உழவர் வயல்வெள்ளி முறையின் பண்புகள்

1. விவசாயி ஒரு வல்லுநர்

இந்த உழவர் வயல்வெளி பள்ள முறையினால், விவசாயிகள் செய்வதால் கற்கின்றனர். தாங்கள் கற்க விரும்பும் சாகுபடி முறைகளை தாங்களாகவே செய்து பார்த்து விற்கின்றனர். அந்த சாகுபடி முறை  ஆண்ட பயிருக்கோ, அறுவடை  / தீவனப்புல்  உற்பத்தியோ, பழவகைக்கோ அல்லது வனவியல் மரங்களாகவோ இருக்கலாம். அதில் முக்கியம் யாதெனில், தாங்களாகவே வயல்களை செய்து விற்கின்றனர். விரிவாக்கப் பணியாளர்கள் அல்லது ஆராய்ச்சி பணியாளர்களால் நடத்தப்படும் பயில் வயல் படிப்பின்றி, ஒரு ஒப்பிட்டு படிப்பை அடிப்படையாகக் கொண்டது. அப்படி செய்வதால் விவசாயிகள் அதில் வல்லுநராகி விடுவதோடு கண்டுபிடிப்பாளராகிவிடுகிறார்கள்.

2. வயலே முதல் கற்கும் கருவி

அனைத்து கற்றலும் வயலை அடிப்படையாகக் கொண்டது விவசாயிகள் சிறிய குழுக்களாக வயலில் பார்வையிட்டு புள்ளி விவரங்களைச் சேகரித்து, அதை ஆய்வு செய்து, அதன் பலனாக முடிவுகளை எடுத்து அதை மாற்ற குழு விவசாயிகள் முன்பு அறிவித்து அவர்களுடனும் கலந்துரையாடி, கேட்டு, பின் புதிய முடிவுக்கு வருகின்றனர்.

3. விரிவாக்கப் பணியாளர், வயல்வெளி பள்ளிக்கு வசதி செய்து கொடுப்பவரே அன்றி ஆசிரியர் அல்லர்.

விரிவாக்கப் பணியாளர், ஆசிரியராக இருப்பதைவிட அதிக முக்கியப் பொறுப்பு வயல்வெளி - வசதி செய்து கொடுப்பவர்களுக்கு உண்டு விவசாயி ஒருமுறை தான் என்ன செய்யவேண்டும். வயலில் எதைக் கண்காணிக்கவேண்டும் என்பதை அறிந்தால், அவர்களாகவே உதவி தேவைப்படின் வசதி செய்து கொடுப்பவரிகளிடமிருந்து பெற்று செய்து கொள்வார்கள். தாங்களே வயல்களில் சென்று, தேவையான புள்ளி விவரங்களைச்  சேகரித்து, விவாதிக்க மற்ற விவசாயிகளுக்கு கூட்டத்தின் போது தெரிவித்து விடுவார்கள் ஒரு பங்கேற்பாலராக விவாதத்தின் போது பங்கேற்று, விவசாயிகளுக்கு என்ன தேவையோ அந்த முடிவை விவசாயிகளுடன் சேர்ந்து எடுப்பார்.

4. மற்ற துறைகளின் ஒருங்கிணைப்பு

பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பபு, தோட்டக்கலை மரவளர்ப்பு, நில மேலாண்மை போன்றவைகள் ஒருங்கிணைந்து, சூழலியல் பொருளாதாமாக கழூசவியல் மற்றும் கல்வி போன்றவற்றைச் சார்ந்த  முடிவு எடுக்க முடியும். வயல்களில்  ஏற்படும் பிரச்சினை ஒருங்கிணைத்து முடிவு எடுத்தல் நல்லமது.

5. பருவ நிலைக்கு ஏற்ற பயிற்சி

பருவநிலைக்கு ஏற்ற பயிற்சிகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக ஒரு ஆய்டு தாவதம் எனில் நிலம் தயாரிப்பு முதல் அறுவடை வரை இருக்கும். தீவனப்பயிர் சாகுபடி  எனில், கால்நடைக்கு ள எப்போது தீவனம் தட்டுப்பாடு ஏற்படுகிறதோ  அந்நேரம் எந்த அளவு எந்த தரத்தில் வேண்டும் என அறிந்து ள செயல்படவேண்டும். மர வளர்ப்பு  மற்றும் இதர கட்டுப்பாட்டு முறையான குறுஞ்செடி மற்றும் புல் ள வயல் ஓரங்களில் வளர்ப்பு தொடர்ச்சி, பல ஆண்டு செயல்தால் தான் அதன் பலன்களை அனுபவிக்க முடியும்.

6. தொடர் குழு கூட்டம்

குறிப்பிட்ட  இடைவெளியில் விவசாயிகள் கூடி விவாதிக்க வேண்டும். ஒரு ஆண்டு பயிர் எனில் ஒவ்வொரு வாரத்திற்கோ அல்லது இரு வாரத்தற்கு ஒரு முறை பல வருடத்தில் நடக்கும் மரவளர்ப்பு அல்லது இதர வளர்ப்புக்கு எப்போது எல்லாம் சிறப்பு செயல் நடக்கிறதோ அல்லது ஆண்டில் எப்போது கஷ்நிலை உள்ளதோ அப்போது கண்காணித்து, விவாதிக்கலாம்.

7. கற்கும் கருவியை கற்பவரே ஏற்படுத்துதல்

கற்பிப்பதற்கு தேவையானவற்றை விவசாயிகளே சொந்தமாக வைத்திருக்கவேண்டும். குறிப்பாக தாங்கள் வயல்களில் கண்டதை, தாங்களே வரைதல் வேண்டும். இவையெல்லாம், அப்பகுதியில்  கிடைக்கக்கூடியதும், குறைந்த செலவு உள்ளதும், தாங்களாகவே கட்டுக்குள் வைத்திருக்கக்கூடுயதும் ஆகும். விவசாயிகள் அதை  நன்கு அறிந்து அதை அவர்களே கலந்துரையாடி உருவாக்க வல்லவர்கள்.

8. குழுவின் சிறப்பு

தகவல் தொடர்பு கொள்ளுதல், குறைகள் / பிரச்சினை நிவர்த்தி செய்தல், தலைமை பொறுப்பு மற்றும் விவாத முறைகள் போன்றவை பயிற்சியில் அடங்கும். சமூக அளவில் நடக்கும் நிகழ்ச்சியை நடத்த வல்லுநராகவும், தாங்கள் கண்டுபிடித்ததை பிறருக்கு செல்லும் திறனையும் பெறுவார்கள்.

உழுவர் வயல்வெளி பள்ள செயல்படுத்த எடுக்கும் முக்கிய படிகள்

பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் :  விரிவாக்க பணியாளர்கள் / விவசாய பயிற்சியாளர்களுக்கு பயிற்சி
  : உழவர் வயல்வெளி பள்ளி செயல்முறை பயிற்சி (2-4 வாரத்தில்)
  : தொழில்நுட்ப பயிற்சி (தேவை இருப்பின்)
  : அடிப்படை வேலைகள்
  : உழவர் வயல்வெளி பள்ளி குழு உருவாக்குதல்.
  : விருந்தாளிப்பவர்களின் வயல்களை அறிதல்
  : குறைகளை / கஷ்ங்களை அறிதல்
  : 3-10 மாதங்கள் சுழற்சி
  : விவசாயிகளால் நடத்தப்படும் சோதனைகள்
  : பின்பு முடிவு எடுத்தல்
  :  பட்டங்கள் / சான்றளித்தல்.
  :  பின்னர் விவசாயிகள் செயல்களை நோக்குதல் மற்றும் ஊக்குவித்தல்
  : வியாபாரம் ஆக்குதல் மற்றும் சந்தைப்படுத்துதல்.
  : குழுக்களாக பின்னுதல் மற்றும்  கருத்துக்களை பரிமாற்றம் செய்தல்.

குறைபாடுகள் :

  • அதிக நாட்கள் நீடிக்கக்கூடாது.
  • அதிக செலவு பிடிக்கக்கூடாது.
  • விவசாய பெண்கள் பங்கேற்பு
  • வசதி செய்து கொடுப்பவர்கள் அதிக முன்னேற்பாடுகள் செய்யவேண்டும்.
  • வசதி செய்து கொடுப்பவர்களுக்கு  பயிற்சி தேவை.
  • 20-25 நபர்கள் கொண்ட விவசாய குழுக்கு சென்றடைதல்.
  • விவசாயிகளின் தேவையை வசதி செய்து கொடுப்பவர்கள் வழங்க முடியாமை.

உழவர் வயல்வெளி பள்ளயானது எப்படி அளவிடப்படுகிறது / காணப்படுகிறது

  • கிராமப்புற மேம்பாட்டில் ஒரு  மாற்றத்தை உருவாக்குகிறது.
  • விவசாயிகளில் செயல்திறனை ஊக்கப்படுத்த உதவுகிறது.
  • ஒரு குழுவாக கற்றல் மற்றும் செயல்படுத்தல் அமைப்பு
  • விவசாயிகள் கற்கும் இடம்
  • இது ஒரு முதியோர் கல்வி
  • இது ஒரு புதிய விரிவாக்க அமைப்பு / செயல்
  • உதவி செய்பவர்களை கவரும் புதிய வழி
  • வேறுபட்ட செயல்பாடு கருத்து உடையபவர்களை ஒன்றாக செய்தல்.
  • பயமுறுத்தக்கூடிய ள நோய்களை விருப்பத்துடன் நோக்குதல்.
  • தொழில்நுட்பங்கள் விவசாயிகள் எடுத்துச் செல்லும் புதிய வழி

உழவர் வயல்வெளி பள்ளி  வழிமுறைகள்

1. ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை

காலம் : 4-5 மணி நேரம்
கற்றல் : குழு பகுதியாக
பாடப்பகுதி மேலாண்மை : விவசாயிகளின் குழுக்கள்
தலைவர் : தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்.

2. விவசாய சூழலியல்         

உழவர் வயல்வெளி பள்ளியல் விவாசய சூழலியல் ஆய்வு என்பது ஒரு முக்கியப் பகுதியாகும். விவசாய, சூழலியல் ஆய்வை பயன்படுத்துவதன் நோக்ளமானது, விவசாயிகள், தொடர்ச்சியாக வயல்களை மேற்பார்வையிட்டு கற்றல், அதன் குறைபாடுகளை ஆய்வு செய்தல். வயல்களின் சாத்தியக்கூறுகளை அறிதல். பயிர் மேலாண்மை செய்ய முடிவு எடுத்து செயல்படுத்துவதை ஊக்கப்படுத்துதல் ஆகும். வயல்களில் ஆய்வு செய்து எடுத்த தகவல்கள் / அறிக்கைகளை வைத்து, விவசாயிகள் பயிர் பெருக்கம் செய்ய முடிவுகளை எடுக்கவும், விவசாய சூழலியல் ஆய்வு உதவுகிறது. உழவர் வயல்வெளிப் பள்ளியில், தொடர்ச்சியாக விவசாய சூழலியல் ஆய்வு கடைப்பிடித்தால், விவசாயிகள் (விவசாய வேலைகளை) மேற்பார்வையிடும்  போது, தாங்களாகவே, சரிபார்த்து திறனைப் பெறுகின்றனர்.

விவசாய சுழலியலின் நான்கு படிகள்

  • வயலை மேற்பார்வையிடல்
  • பயிரின் நிலைகளை ஒரு தாளில் / காகிதத்தில் குறித்தல்.
  • தங்கள் முடிவுகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தல் மற்றும் குழு பகுதியாக முடிவெடுத்தல்.
  • எல்லோரும் செயல்படுத்த மொத்தமாக வழிவகை செய்தல்.

3. சோதனைச் செய்தல்

  • அடுத்தவற்றுடன் ஒப்பிடுதல்
  • வயல்களை ஆய்தல் உதாரணம் பூச்சிச்சாலை, மண் தர அமைப்பு
  • நெடுநாள் அல்லது குறுகிய நாள் ஆய்வு.

4. குழு சிறப்புகள்

குழுக்களை செயல்படுத்துதல், ஒருங்கிணைத்து செய்தல், கூட்டாக இருத்தல், திட்டமிடுதல் போன்றவை குழுவாக இருப்பதால் மேம்படுத்த முடியும்.

5. சிறப்பு பகுதிகள்

  • இருக்கின்ற அறிவை கூட்டமுடியும்.
  • ஒவ்வொரு விவசாயிம் மற்றவர்களுடன் கூடி செயல்புரிந்து, அவர்களின் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.
  • தேவையான தகவல்களை, முடிவாகப் பெறலாம்.

மேலே

உழவர் வயல்வெளிப் பள்ளியின் காலமுறை செயல்பாடுகள்.

8.00-8.10 வருகை பதிவு முன்னுரை யாரெல்லாம் இருக்கிறார்களோ என்பதை அறிதல். நாம் முன்பு செய்த செயல்களை ஞாகபப்படுத்திக் கொள்ளுதல் விவசாயிகள் குழு
8.10-10.00 பயிர் சூழலியல் பயிர் சூழலியல் ஆய்வை எல்லோரும் செய்தல்  
10.00-10.30 குழுவாக திட்டமிடுதல் குழுக்களாக அனைவரம் பங்கேற்றல் குழு செயல்பாடுகளை அறிதல் / கற்றல் விவசாயிகள் குழு / வசதி செய்து கொடுப்பவர்
10.30-11.30 தனிப்பாடம் குழுக்களின் அறிவையும், திறனையும் மேம்படுத்த தனிச்சிறப்பு பாடத்தை வழங்குதல். வசதி  செய்து கொடுப்பவர்
11.30-11.40 அன்றைய செயல்களை திரும்ப சொல்லுதல் நம்முடைய சாதனைகளை / செயல்பாடுகளை மதிப்பிடுதல் வசதி செய்து கொடுப்பவர்.
11.50-11.55 வருகை பதிவு அறிவிப்பு - வராதவர்கள் ளநேரம் கடந்து வந்தவர்கள் அறிதல். விவசாயிகள் குழுக்கள்.

FFS FFS
FFS FFS

உழவர் வயல்வெளி பள்ளி படிப்பு

உழவர் வயல்வெளி பள்ளியில் கலந்து கொண்ட விவசாயிகளும், வசதி செய்து கொடுத்தவர்களையும் நினைவுப்படுத்திக் கொள்ளும் நாள். கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்.

உழவர் வயல்வெளிப் பள்ளி
பயிற்சி வழித்திட்டத்தோடு ஓர் ஒப்பீடு

விவரங்கள்/குறிப்புகள் பயிற்சி வழித்திட்டம்  உழவர் வயல்வெளிப் பள்ளி
வயல்களில் விரிவாக்கப்பணியாளர்களின் பணி இவர்களின் முக்கியப்பணியே ஆராய்ச்சி - விரிவாக்கம் அவற்றின் வாயிலாக தயாரிக்கப்பட செய்திகளை மற்றவர்களுக்கு வழங்குவதே. இதில் அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக திறம்பட்டவர்கள் தனிச்சிறப்புப்பட்டம் பெற்றவர்களே ஆனாலும் அது வயல் அளவும்  அல்ல. ஒவ்வொரு பயிற்சியாளரும் அடிப்படை தொழல்நுட்ப செயல் திறம் பெற்றவர்கள். மேலும் குழுவுக்கு பயிற்சியளிக்கவும், மேலாண்மை செய்யவும் தகுதிப்  பெற்றவர்கள் அந்தத் தகுதிகள் அனைத்தையும் பருவகால  நெடுவாள் பயிற்சி எங்கே கற்பிக்கப்படுதிறதோ அங்கு பயிற்சி மூலம் கற்றவர்கள்.
பயிற்சியாளர்களின் அனுபவம் விவசாய களப்பணியாளர்கள் தகவல் தொடர்புக்கொள்வதில் திறம் படைத்தவர்களே அன்றி, அடிப்படை விவசாயும் மற்றும் அதன் அனுபவத்தில் குறைந்தவர்களே. வயல்வெளி பள்ளி திட்டத்திற்கு எதை வழங்கிறோமோ, அதை அவர்கள் பயிர் சாகுபடி செய்து, பயிர் மேற்பார்வை செய்வதற்கும் முதிலிலேயே பயிற்சியாளர்கள் மூலம் ள பயிற்சி பெற்று அதில்  அனுபவத்தினராகி விடுவார்கள்.
செய்திகள் தொலைத் தூரத்திலுள்ள ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செய்திகைள அதற்கேற்றவாறுள்ள வயல்களில் செயதி சொல்லப்படுகிறது. எங்கு தேவையோ அந்த இடத்திற்கு பழங்கால முறைக்குப் புதிய தொழில்நுட்ப முறைகள் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது. கிராமப்புறத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகை செய்கிறது.
தொடர்பு மையம் தொடர்பு கொள்ளும் விவசாயிகள் மட்டும் பயிற்சி தரப்பட்டு மற்றறல்கள் தகவல்களை சொல்லப்படுகிறது. ஒருமித்தக் கருத்துடைய விவசாயிகளை குழுவாகக் கொண்டு, கிராமப்புறத்தில் தின அடிப்படையில் கல்வி சொல்லித்தரப்படுகிறது.
கால அளவு எங்கு தேவையோ, அங்கு தொடர்ச்சியாக இரு வாரப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அது அந்த இயற்கை வெளித்தோற்றத்தையும், அடிப்படையாகக் கொண்டது அல்ல. பயிற்சி காலம் முன்பே வரையறுக்கப்பட்டது. பொதுவாக ஒரு பருவத்தில் வார அடிப்படையில் நடக்கும். உழவர் வயல்வெளி பள்ளி பருவத்திற்கு அதிகமானதாகவும், ஆனால் ஒரு பருவத்திற்கு  குறைவதாக அல்லாமல் பயிர் வெளித் தோற்றத்தை சார்ந்தது.
கல்வி முறை முதலிலேயே சோதனை செய்யப்பட்ட புள்ளி விவரங்களையும் வயல்வெளிகளையும் கட்டி சொல்லி தருதல். சில தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு, விவசாயிகள் தாங்களே, தங்களில் சூழ்நிலை, சமூகநிலை மற்றும் பொருளாதார நிலைகளை கருத்தில்  கொண்டு முடிவு எடுத்து அதைச் செயல்படுத்தப்படுகிறார்கள்.
மதிப்பிடுதல் எவ்வளவு பணம் கொடுத்து உள்ளார்களோ எவ்வளவு செலவு ஆகி உள்ளதைக் கொண்டு மறைமுகமாக மதிப்பிடப்படுகிறது. சமூகம் அவர்களாகவே – அபாகரமான சூழ்நிலை மற்றும் ள அவர்களுக்குள் மறுசுழற்சி அளவு / டிணம் வரவு வைத்து கணக்கீட்டு செய்து, பயிற்சிக்கு முன்பு மற்றும் பின் உள்ள நிலைகளை அறிதல் / அளத்தல்.
பயிற்சி இடம் சோதனை வயல், பயிற்சி மையம், தொடர்பு விவசாயின் வீடு மட்டும் கணக்கிடப்பட்ட புள்ளி விவரங்களை நேரில் சென்று அறிவதோ, எந்த ஒரு நடப்பில் உள்ள வழிமுறைகளை / சோதனைகளை பார்ப்பதோ கிடையாது. வயல்வெளி பள்ளிகள் நடத்தப்பட்ட வயல்களை பரிமாறிக்கொண்டு அதன் முடிவுகளையும், புதிய மேலாண்மை முறைகளையும், தொடர்ந்து ஒரு பருவம் முழுவதும் கற்கலாம்.
நெடுநாள் நோக்கங்கள் உணவு உற்பத்தியை பெருக்குதல் மட்டுமே விவசாயிகளின் நிலை, குறைந்த அளிவு மற்றும் செயல்படுத்துதல் சில குறைபாடுகள் மேம்பாட்டு திட்டங்களில், விவசாயிகளின் நிலை ஒரு மேம்பாட்டை காட்டும் விவசாய குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டு, விவசாய மற்றும் சமூக  பிரச்சினைகளைத் தாங்களாகவே தாங்கள் தொழில்நுட்ப அறிவைக் கொண்டு தீர்வு காணுதல்.
ஆராய்ச்சி பரவலாக பயன்படுத்தக்கூடிய மாதிரிகளை, ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் கண்டுபிடித்தல். கிராமப்புறங்களில் அந்தக் கற்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பரிசோதனை செய்தல்.

மேலே

தமிழ்நாட்டில் உழவர் வயல்வெளி பள்ளி

உழவர் வயல்வெளி பள்ளி (Farmer field schools) என்ற வார்த்தையானது இந்தோனேசியா வார்த்தையான ‘சேகோலாக் பெண்கள்’ (Sekalah Lapagam)  என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் வயல் பள்ளி என்பதாகும். வயல்வெளிப் பள்ளியானது, விவசாயியின் வயலிலுள்ள உண்மையான கஷ்டத்தை அறிந்து, ஆராய்ந்து, அதற்கு குழு விவாதம் மூலம் தீர்வுகண்டுபிடிப்பதே. இப்பள்ளியானது, பயிர் நடவு முதல் அறுவடை வரை நடப்பதாகும். இந்த முறையில் விவசாயிகளின் நடைமுறை செயல்களோடு, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை ஒப்பிட்டு பார்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பள்ளிக்கு முன்பு மற்றும் தேர்வு நடத்தப்படும். இப்பள்ளிக்கு வசதி செய்து கொடுப்பவர், அப்பருவம் முழுவதும் அக்குழு விவசாயிகளுடன் தொடர்ந்து இருந்து நடத்துவர். பள்ளி முடிந்தவுடன் அவர்களின் வருககைக்கும், கற்கும திறனுக்கும் ஏற்றவகையில் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, உழவர் வயல்வெளி பள்ளியானது, சுவர் இல்லாத பள்ளியான வயலில், அடிப்படை வேளாண் சுற்றுச்சூழலை கற்பித்து அதனை மேலாண்மை செய்யும் திறனை தருகிறது.

FFS

ஆசியாவில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு உலக விவசாயிகள் இடம் பெற்றுள்ளனர். நாப்பது ஆண்டுகளுக்கு முன் சிறு விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு, பசுமை புரட்சி ஆரம்பிக்கப்பட்டது. 1960 மற்றும் 1990 ஆம் ஆண்டு இடைவெளியில், சராசரி நெல் மகசூலானது, மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசன முறை, இரகம் மற்றும் இதர இடுப் பொருள்களினால் இருமடங்கானது.

1970 ஆம் ஆண்டு, பசுமை புரட்சியினால், அதிக மகசூல் பெற, உபயோகிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளால், பயிர்களுக்கு பூச்சித் தாக்குதலும், பூச்சிக் கொல்லிகளுக்கு எதிராக பூச்சியும் வாழக்கூடிய சூழ்நிலை உருவானது. அந்த நேரத்தில் நெல்லில் முக்கிய பூச்சிகளை உயிரியல் முறைப்படி கட்டுபடுத்த விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கும், அதிக பூச்சிமருந்துகளை உபயோகப்படுத்தும் விவசாயிகளுக்கும் இடையில் ஒரு இடைவெளி உருவானது. அதன்பின், பல்லாண்டுகளாக, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை ஆசியாவில் நெல் உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகளுக்கு எடுத்து செல்ல பல முயற்சிகள் நடைபெற்றன.

1980 ஆம் ஆண்டின் இறுதியில், இந்தோனேசியாவில் ‘உழவர் வயல் வெளிப் பள்ளி’ என்ற புதிய முறையில் விவசாயிகளுக்கு பயிற்சிக் கொடுக்கப்பட்டது. தீமை செய்யும் பூச்சிகளுக்கும் நன்மை செய்யும் பூச்சிகளுக்கும் இடையிலான தொடர்பினை அறியாத ஆசியா விவசாயிகளுக்கு கற்பிக்க தேவையான வயலை தேர்வு செய்வதே, பெரிய பிரச்சினை.

உழவர் வயல்வெளிப் பள்ளி மூலம் செயல்படுத்தும் திட்டங்கள், அந்த பள்ளியில் நடக்கும் பகுதியின் பிரச்சினைகளை அதற்கான காரணத்தை விவசாயத்திற்கு, ஒரு தனிப்பட்ட விவசாயி, சுற்றுச்சூழலைப் பற்றி தெரிந்ததற்கு மேலாக தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால், விவசாயிகளின் சமூகத்திற்கும் தங்களின் திறமையை வளர்த்திக் கொள்ளவும். அதை செயல்படுத்தவும் மற்றும் தங்களின் அறிவை விரிவுபடுத்தவும் தேவையாய் உள்ளது. திறமையை வளர்த்துக் கொள்ளாததே. அநேக விவசாயிகளிடமுள்ள உள்ள குறை.
இந்தோனேசியா விவசாயிகள், உழவர் வயல் வெளியிலுள்ள முறையில் கற்கும்போது, அவர்களால் முதன் முதலில், பிரச்சினை நன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டும் எனில் நிறைய புரிந்து கொள்ள வேண்டும் என அறிந்தனர். விவசாயிகள் தங்களின் பிரச்சினைகளுக்காகவே, புதிய குழு ஒருங்கிணைந்து அதற்காக திட்டமிட்டு செயல்படுத்த முனைந்தார்கள். அவர்களின் பிரச்சினைகள், வேறுபட்டதாகவும், ஆராய்சியிலிருந்து பயிற்சி வரையினதாகவும், விற்பனை மற்றும் ஆலோசனை தேவையானதாகவும் இருந்தது. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை தொழில்நுட்பம் மற்றும கல்வியை தனிப்பட்ட விவசாயிகளுக்கு சொல்லி தருவதைவிட சுமூகமாக/குழுவாக ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை செயல்படுத்தப்பட்டது.

ஆசியா நாடுகளில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை உழவர் வயல் வெளி பள்ளி மூலம் செயல்படுத்தப்பட்ட விவரங்கள் (2000 வரை).

நாடுகள் ஆரம்பித்த ஆண்டு நெல் 
உ.வ.ப
பயிற்சிபெற்ற விவசாயிகள் எண்ணிக்கை இரத 
உ.வ.ப
பயிற்சிப்பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை உழவருக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை சொல்லித்தரும் பயிற்சியாளர்கள்  பயிற்சிப் பெற்றவர்கள்
பங்களாதேஷ் 1994 5490 141470 373 9410 679
கம்போடியா 1996 670 20000 85 2500 254
சீனா 1993 1306 37877 13 390 1817
இந்தோனேசியா 1989 37429 935152 6388 159600 29522
இந்தியா 1994 6302 189683 - - -
லாவோஸ் 1997 280 7767 45 1350 -
நேபாளம் 1998 209 5915 - - -
பிலிப்பைன்ஸ் 1993 6000 180000 1200 336000 -
‚லங்கா 1995 510 9700 34 610 240
தாய்லாந்து 1998 525 12027 - - -
வியட்நாம் 1992 19876 515927 1993 55098 6178

1977 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டிலுள்ள திருச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட உழவர் வயல்வெளிப் பள்ளியின், ஊடுபயிர் சாகுபடி மூலம் பருத்தி விவசாயிகள், தங்களின் இடுப்பொருள் செலவு குறைந்ததோடு, பருத்தி பயிரில் நிலையான வருவாய் பெற உதவியது. அந்த பள்ளியில் பயிர் பருவம் முழுவதும் 23 பாடங்கள்/சந்திப்புகள் நடந்தன. விவசாயிகள் பயிர் செய்யும் பருத்திசெடியியல் 8 முதல் 10 முறை பூச்சி மருந்து தெளிப்பார்கள் ஆனால் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையில் தட்டைப்பயிறு வரம்பு பயிராக முன்னதாகப் பயிரிட்டு பூச்சியை பிடிக்கவும், ஆமணக்கு பயிரைப் பயிரிட்டு, பூச்சிகளை விழுங்கும் நன்மைச் செய்யும் பூச்சிகளை அதிகரிக்கவும், எந்த ஒரு மருந்தும் தெளிக்காமல் பருத்தி சாகுபடி செய்ய முடியும் என அறிந்தனர். விவசாயிகள், பூச்சி பிடிக்கும் பயிர்களால் நன்மைச் செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என அறிந்தனர். விவசாயிகள் பயிறு வகைப் பயிர்களில் தோன்றும் பூச்சிகளை கண்காணித்து அதற்கு மட்டும் பூச்சி மருந்து அடித்து தாக்கப்படுவதால், முக்கிய பயிரான பருத்தி பூச்சி தாக்குதல் வராமல் செய்ய முடிந்தது. மேலும், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு குறைந்ததால் பணம் மட்டும் மிஞ்சப்படுவதோடு, மருந்து அடிப்பதற்கு தேவையான நீரை பெண்கள் அதிக தொலைவிலிருந்து எடுத்து வருவது குறைந்தது. அதனால் அவர்களின் நேரமும் மிச்சமானது.

மாதிரிகள்:

நெல் உழவர் வயல்வெளி பள்ளி
பருத்தி உழவர் வயல்வெளி பள்ளி
மக்காச்சோளம் உழவர் வயல்வெளி பள்ளி
எண்ணெய் வித்துக்கள் உழவர் வயல்வெளி பள்ளி
காய்கறி பயிர்கள் உழவர் வயல்வெளி பள்ளி

நடத்தும் அமைப்புகள்

மாநில வேளாண்மை பல்கலைக்கழகம்
வேளாண் அறிவியல் மையம்
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக மையங்கள்
வேளாண்மை துறை 
இந்திய பருத்தி கார்போரெசின் 
விவசாய குழுக்கள்
அரச சாராத நிறுவனங்கள்
கூட்டமைப்புகள் மற்றும் தனியார் துறைகள்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம்
பருத்தி - உழவர் வயல்வெளி பள்ளி 
2005 - 2006 ஆம் ஆண்டில், இரண்டு பருவத்தில் 700 உழவர் வெளி பள்ளிகள் நடத்தப்பட்டன. கோயமுத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, தேனி, வேலூர், திண்டுக்கல், பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் காரிப் பருவத்தில் 300 உழவர் வயல்வெளி பள்ளியும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, விருதுநகர், சிவகங்கை ராமநாதபுரம், தஞ்சாவூர் - திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் கோடைக் காலத்தில் 400 உழவர் வயல்வெளி பள்ளியும் நடத்தப்பட்டது.

FFS

2006 - 07 ஆம் ஆண்டில் கோயமுத்தூர், சேலம், பெரம்பலூர், தர்மபுரி மற்றும் வேலூர் மாவட்டங்களில், குளிர் காலத்தில் 200 உழவர் வயல் வெளி பள்ளிகளும், நாமக்கல், ஈரோடு, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும நாகப்பட்டினம் மாவட்டங்களில் 200 பள்ளியும், மொத்தம் அவ்வாண்டு 400 உழவர் வயல் வெளி பள்ளி நடத்தப்பட்டன.

உழவர் வயல் வெளிப் பள்ளியினால், விவசாயிகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் பருத்திகளுக்கு பூச்சிமருந்து அடிப்பது குறைந்ததால், சாகுபடி செலவு குறைந்தது. அங்கக இடுப்பொருள் உபயோகத்தினால், பூச்சித் தாக்குதலும் குறைந்தது. உழவர் வயல் வெளிப்பள்ளி திடலில், ஏக்கருக்கு 1-2 குவிண்டால் பருத்தி மகசூல்நெல் அதிகமாக கிடைத்தது. மேலும் சந்தை விளையும் 15-20 சதவீதம் அதிகமாக கிடைத்தது.

வேளாண்மை துறை மூலம்
விரிவுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பூச்சிக்கட்டுப்பாட்டு முறையான ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை இருக்கின்ற நல்ல கட்டுப்பாட்டு முறைகளின் கலவையே. இதன் மூலம் பூச்சிகளின் எண்ணிக்கையை பொருளாதாரச் சேத நிலைக்கு குறைவாக வைப்பதே. உழவியல், இயந்திரவியல், உயிரியல் மற்றும் பூச்சி, நோய், களை மற்றும் எலிகளைக் கட்டுப்படுத்தும் வேதியியல் முறைகள் எல்லாம் சேர்ந்ததுதான் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை ஆகும். எனவே, விவசாய அலுவலர்களுக்கு, நெல், பருத்தி, பயறு வகை மற்றும் நிலக்கடலை பயிருக்கு முழுவதுமான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை திறம்பட செயல்படுத்த, உழவர் வயல்வெளிப் பள்ளியானது ரம்பமானது.

தமிழ்நாடானது, இந்தியாவின் முதன்மை மாநிலமான, எல்லா விவசாயிகளாலும், நெல் மற்றும் பருத்திக்கு உழவர் வயல்வெளிப்பள்ளி மூலம், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை அறிந்துக் கொண்டனர். இந்த திட்டத்தின் மூலம் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதோடு, சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்பட்டு உணவில் பூச்சிக் கொல்லிகளின் கழிவு குறைக்கப்பட்டு, பூச்சிகள் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக செயல்படும் தன்மையும் குறைக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டம் (நெல்), மக்காச்சோளம் அதிக உற்பத்தி திட்டம், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி திட்டம், தேசிய பயிறு மேம்பாட்டு திட்டம், பருத்தி மினி வளர்ச்சி திட்டம் II போன்ற மத்திய அரசால் நடத்தப்படும் திட்டங்களிலும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2001 - 02 ஆம் ஆண்டில், மத்திய அரசின் நிதி உதவியால் கீழ்க்கண்ட திட்டங்கள் உழவர் வயல்வெளி பள்ளி மூலம் நடத்தப்பட்டன.

வ.எண் திட்டம் திட்டமிட்ட பள்ளிகளின் எண்ணிக்கை நடந்த எண்ணிக்கை
1. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல் விளக்கம் மற்றும் பயிற்சி (தானிய அபிவிருத்திக்கு) (எண்ணிக்கை) 1674 1386
2. பருத்தி மினி வளர்ச்சித் திட்டம் II  உழவர் வயல்வெளி பள்ளி (எண்ணிக்கை) 40 40
3. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல் விளக்கம் (ஹெக்டர்) 533 513
4. எண்ணெய் வித்து உற்பத்தி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல் விளக்கம் (ஹெக்டர்) 4000 39206

இந்த முறை 2002 - 03, ஆண்டுக்கும் தொடர்ந்து நடத்தப்பட்டது.
2004-05 ஆண்டு அரசினரால் நிதி உதவி பெற்று நடத்தப்பெறும் திட்டங்கள்

இந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளும் 2005 - 06 ஆண்டு தொடர்ந்து நடத்தப்பட்டது.

பயிறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை உழவர் வயல் வெளி பள்ளி
விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில்நுட்பத்தை செயல்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்கள் அனைத்திற்கும் 100 வயல்வெளிப்பள்ளி மூலம் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1980 ஆம் ஆண்டு இறுதியில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் மூலம், தமிழ்நாட்டில் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில்நுட்பமானது, உழவர் வயல் வெளிப்பள்ளி மூலம் வழங்கப்படுகிறது.
இந்த ஒரு பருவத்திற்கான பயிற்சி மற்றும் செயல் விளக்கமும் ஒவ்வொரு பயிற்சியிலும் 30 விவசாயிகள் பங்கேற்று அவர்களிடம் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, எல்லா கிராம மக்களும் செயல்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை எல்லாரும் அதிக அளவில் பயன்படுத்துவதால், 10,000 மெகா டன் பூச்சிக்கொல்லி மருந்தின் உபயோகம் இனி வரும் பத்தாண்டுகளுக்குள் 1300 மெகா டன்னாக குறையக்கூடும்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் திருந்திய நெல் சாகுபடி  - உழவர் வயல்வெளிப்பள்ளி
மதுரை, வேளாண் அறிவியல் மையத்தின் மூலம், நெல் உழவர் வயல் வெளிப்பள்ளியானது, திண்டியூர், மேட்டு நீர்தான், மாயாண்டிப்பட்டி மற்றும் குலமங்கலம் என்ற 4 கிராமங்களில் நடத்தப்பட்டது. பயிர் பருவம் ஆரம்பிப்பதற்கு முன்பே ஜ¤ன் - ஜ¤லை மாதத்தில் கிராமங்களில் பங்கேற்பு முறை (கிராம விவசாயிகள் அதிகாரிகள்) நடத்தப்பட்டது. விவசாயிகள், விரிவாக்கப் பணியாளர்கள், இடுபொருள் விற்பனையாளர்கள், விவசாய அறிஞர்கள், அரசு சாராத நிறுவனத்தார்கள் மற்றும் விதை சான்றளிப்புத் துறை அலுவலர்கள் அனைவரும் பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் நெல் சாகுபடி செலவு அதிகரித்ததாகவும், மகசூல் குறைவாக கிடைப்பதாகவும் அறிந்தனர். குழு விவாதம் மூலம்  அதற்கான காரணத்தை அறிந்து, அதை நிவர்த்தி செய்ய அறிஞர்களால், திருந்திய நெல் சாகுபடி  முறைமூலம், சாகுபடி செலவு குறைந்து, மகசூல் அதிகமானதாகவும் அறிந்தனர்.

FFS

விவசாயிகளின் தேவைகளை அறிந்து, திருந்திய நெல் சாகுபடி  முறை தொழில்நுட்ப பயிற்சிகள் அழிக்கப்படுகின்றன. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை மற்றும் கிள்ளிக்குளம் இருந்து அறிஞர்கள் வரவழைக்கப்பட்டு, விவசாயிகளின் சந்தேகங்கள் திருந்திய நெல் சாகுபடி  கருத்தரங்கள் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டது. தொழில்நுட்ப அறிவை விவசாயிகளுக்கு வழங்குவதோடு, அவர்கள் அத்திட்டத்தில் நம்பிக்கை கொள்ள, திருந்திய நெல் சாகுபடி  செய்த விவசாயிகளடமும் எடுத்து செல்லப்படுகின்றனர்.

அதன் பின், 75 கிலோ ஹெக்டேருக்கு தேவையான விதை நெல்லுக்கு பதிலாக 7.5 கிலோ விதை நெல்லைக் கொண்டு ‘பாய் நாற்றங்கால்’ விவசாயிகளின் நிலத்தில் செய்யப்பட்டது. சான்றளிக்கப்பட்ட விதை, உயிர் உரங்கள் போன்ற இடுப்பொருள்கள் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு, ‘கோனோ’ களையெடுப்பான் கருவி குழுவிற்கு வழங்கப்பட்டு, அவர்கள் திருந்திய நெல் சாகுபடி  முறையில் சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தப்பட்டார்கள்.

25 செ.மீ X 25 செ.மீ இடைவெளியில், கயிர் கொண்டு நேர் நடவு செய்ய அறிவுரைப்படுத்தப்பட்டது. ஆனாலும் மிகவும் இளைய நாற்றை, உபயோகப்படுத்துவதால், நடவுக்கூலி அதிகமானது. அதற்காக, நடவுக் கூலி குறைக்க தேவையான தொழில்நுட்பத்தை அறிஞர்கள் வழங்க ஈடுபடுத்தப்பட்டார்கள். அதனால் மதுரையில் உருளும் அடையாளக்குறி கருவி கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டார்கள். அதே போல், ‘கோனோ’ களையெடுக்கு கருவியை பயன்படுத்துவதிலுள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டது. திருந்திய நெல் சாகுபடி  மூலம் சாகுபடி செய்த பயிருக்கு வரவு – செலவு கணக்கிடப்பட்டது. அதன் பின், இந்த திருந்திய நெல் சாகுபடி  யானது எல்லாரும் அறிய ஒலிபரப்பப்பட்டது.

அரசுசாராத நிறுவனங்கின் வேளாண் அறிவியல் மையம் ‘மைரடா’
பருத்தி - உழவர் வயல்வெளிப்பள்ளி

2008 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்தில் என்காட்தோட்டம், புதுப்பாளையம், தண்ணீர்பந்தல் மற்றும் செல்லப்பாளையம் என்ற 4 கிராமத்தில் 100 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு/ கண்டறியப்பட்டு 20 வாரம் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால், விவசாயிகள் கீழ்க்கண்ட பயன்களை அடைந்தனர்.

  • பயிரின் ஒவ்வொரு நிலைக்கு ஏற்ற சரியான பயிர் மேலாண்மை முறையை விவசாயிகள் செய்தனர்.
  • விவசாயிகள் தொடர்ச்சியாக பயிரை பார்வையிட்டு, பூச்சி மற்றும் நோய் தாக்கத்தைக் கண்காணித்தனர்.
  • விவசாயிகளின் கேள்விகள்/சந்தேகங்கள். விவசாயிகள் மற்றும் உழவர் வயல்வெளிப்பள்ளிக்கு வசதி செய்துகொடுத்தவரின் சந்திப்பால் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகிறது.
  • பெரும்பாலான விவசாயிகள் பூச்சிகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளை வேறுப்படுத்திப் பார்க்க அறிந்தனர்.  மேலும் இயற்கை எதிரிகளைப் பாதுகாப்பதின் முக்கியதுவத்தை உணர ஆரம்பித்தனர்.
  • சில பாரம்பரிய தொழில்நுட்ப அறிவுச் செயல்களானது, செலவு குறைவானதும், நன்கு செயல்படக்கூடியதுமானதும் ஆனவைகள் கடைப்பிடிக்கப்பட்டன. மேலும் அவைகளே, ஒவ்வொரு உழவர் வயல் வெளிப்பள்ளியிலும் திரும்ப திரும்ப வந்தது.
  • பூச்சிக்கொல்லி பயன்படுத்தல் மற்றும பயன்படுத்தாமைகளின் சில கருத்து வேற்றுமைகள் காணப்பட்டாலும், எல்லா விவாசாயிகளாலும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையானது ஒத்துக்கொள்ளப்பட்டது.
  • குழுவாக செயல்படுதல், குழுவாக அனைவரும் பங்கேற்று முடிவுகளை அறிவித்தல், மற்றும் குழு விவாதம் முதலியன இதன் பகுதியே. அதன் முடிவினால், விவசாயிகளிடம் கூட்டுறவு/ஒற்றுமை மற்றும் குழு ஒருங்கிணைந்து மேம்படுத்தல் போன்றவை உருவாகி அவர்களுக்குள்ளே, தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்தல்/ பரப்புதல் மற்றும பரிமாற்றிக் கொள்ளும் தன்மை வளர்ந்தது.

அரசு சாராத இதர நிறுவனங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘பெஸ்ட்’ அமைப்பு
செம்மை நெல் சாகுபடி - உழவர் வயல் வெளிப்பள்ளி
‘பெஸ்ட்’ அமைப்பானது, புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் பகுதியில் செயல்படுகிறது. இது குடிசை வாழ் பகுதியை மேம்படுத்தல் மற்றும வேளாண்மையை மேம்படுத்தல் போன்ற பணிகளைச் செய்கிறது. இது ‘ஏஎம்இ’ அமைப்பின் உதவியுடன் தொழில்நுட்பத்தை பகிர்தல் மற்றும் நிதி உதவி பெறுதலுக்கு ஒரு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. அதன்படி திருந்திய நெல் சாகுபடி  குறித்து 30 நபர்களுக்கு / அலுவலர்களுக்கு 15 நாட்கள் பயிற்சி பெற்று, 15 கிராமங்களில் உழவர் வயல்வெளிப்பள்ளி நடத்தப்பட்டது. கூலி ஆள் தேவை குறைவு, இள வயது நாற்றுக்களை நடுதலால் நேரம் குறைதல் மற்றும் களையெடுப்பு குறைதல் போன்ற நன்மைகள் கிடைப்பதாக, அவர்களின் விவசாய நிலங்களைப் பார்வையிடும் போது, பெண்களிடம் உரையாடலின் மூலம் தெரிய வந்துள்ளது.

‘ஏ எம் இ’ அமைப்பு / நிறுவனம்
1982 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் வேளாண்மையில் தன்னிறைவு பெறுவதற்காக உதயமாகி, பின் 1986 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தது. நிறைய திட்டங்களைச் செயல்படுத்திய பின், இது ஒரு இந்திய அமைப்பாகி, 2002 ஆம் ஆண்டிலிருந்து தொண்டு நிறுவனத்தின் வாரியம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள சிறிய மற்றும குறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த, விவசாயத்திற்கு  மாற்றான செயல்களை உருவாக்கி, அதை செயல்படுத்த அவர்களின் திறமைகளை வளர்க்க, அவர்களின் கிராமத்திலேயே உள்ள மேம்பாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பினால் செயல்படுத்துதல், இந்த அமைப்பானது, வறண்ட நிலப் பகுதியில், தன்னிறைவை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இது கற்றுக்கொள்ளுவதால் பரிமாற்றிக் கொள்ளுதல், கூட்டு சேர்த்தல் மற்றும் வலிமைப்படுத்திக் கொள்ளுதல் போன்ற செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இந்த அமைப்பானது, தமிழ்நாட்டில் திருச்சியில், 37 ஈ.வி. ரோடு, கே.கே நகர் என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு, கோடை உழவு மற்றும் வரப்பு சரிச்செய்தல் போன்ற வேலைக்கு பின், இடுபொருள் தேவையை அறிந்து, விவசாயிகள் ஒன்றிணைந்து அனைவரும் அந்த இடுபொருள்களை வாங்கிச் செல்லும் பணியைத் துவங்கியது.

ரெம்பலூர் மாவட்டத்தில், நோச்சியம் கிராமத்தில், 12 பாடங்களாக கத்திரி - உழவர் வயல்வெளிப்பள்ளி நடத்தப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில், திருந்திய நெல் சாகுபடி  யை ஊக்கப்படுத்த பயிற்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சார்ந்த அரசு சாராத நிறுவனங்களுடன் இணைந்து திருந்திய நெல் சாகுபடியை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு/அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி, ஒசூர், தர்மபுரியிலுள்ள ‘மைரடா’, ஏலகிரியிலுள்ள ‘ஸ்சின்டி’ (SCINDCA) இணைந்து புதிய பயிற்சியான உழவர் வயல்வெளிப் பள்ளி மூலம் திருந்திய நெல் சாகுபடி  ஊக்கப்படுத்தப்பட்டது.

உழவர் வயல் வெளிப் பள்ளியின் தமிழ்நாடு அரசினுடைய தற்போதைய திட்டங்கள் 
தேசிய உணவு தன்னறிவு திட்டம்
நெல்
நாகப்பட்டினம், திருவாåர், புதுக்கோட்டை ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் நெல் தேசிய உணவு தேசிய உணவு தன்னிறைவு திட்டமானது நெல் சாகுபடி பரப்பையும் உற்பத்தி திறனையும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2007 - 08 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு புதிய கண்டுபிடிப்புகள், உழவர் வயல்வெளி பள்ளி முறையில் பயிற்சியளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 6.077 இலட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பானது 6.920 இலட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 13.51 இலட்ச மெட்ரிக் டன்னிலிருந்து 45.852 இலட்ச மெட்ரிக் டன்னாகவும் 2011 - 2012 ஆண்டில் கொண்டு வர வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுத்தப்படுகிறது.

பயிறு வகைகள்
கோயமுத்தூர், கடலூர், ஈரோடு, நாகப்பட்டினம், நாமக்கல், திருவாåர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் போன்ற 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.  இந்த திட்டத்தின் கீழ், தரமான விதை உற்பத்தி மற்றும் வழங்குதல், ஜிப்சம் வழங்குதல், நுண்ணூட்டச்சத்து வழங்குதல் தெளிப்பு நீர் பாசனம் அமைத்தல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல்விளக்கம் மற்றும் பயிற்சிகளுக்காக மானியங்கள் வழங்கப்படுகின்றன. தற்போதைய பயிறு சாகுபடி நிலப்பரப்பான 4.32 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 2011 - 12 ஆம் ஆண்டிற்கு 7.36 இலட்சம் ஹெக்டராக உயர்த்தவும், உற்பத்தியான 1.43 இலட்ச மெட்ரிக் டன்னிலிருந்து 4.78 இலட்ச மெட்ரிக் டன்னாக அதிகரிக்கவும் இத்திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உற்பத்தியை அதிகரிக்க 2 சதவீத டிஏபி கரைசலை தெளிக்கவும், நுண்ணூட்டச்சத்து இடவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013