பாரம்பரிய வேளாண்மை :: இந்தியாவின் விவசாய பாரம்பரியம்

விவசாய சாகுபடி முறைகள்

cultivation

பருவம் : ரிக் வேத காலத்தில், 6 பருவங்களாக பிரிக்கப்பட்டது.

கிரிஷ்மா

மே - ஜீன்

வர்சா

ஜீலை - ஆகஸ்ட்

ஹேமான்ட்

செப்டம்பர் - அக்டோபர்

சார்டு

நவம்பர் - டிசம்பர்

சிசர்

ஜனவரி - பிப்ரவரி

வசந்தகாலம்

மார்ச் - ஏப்ரல்

மேலும் குளிர் பிரதேசத்தில் 4 பருவங்களாக பிரிக்கப்பட்டது.

குளிர்காலம்

ஜனவரி - மார்ச்

வசந்தகாலம்

ஏப்ரல் - ன்

கோடைகாலம்

லை – செப்டம்பர்

மழைகாலம்

அக்டோபர் - டிசம்பர்



 

மண்:
பயிர் சாகுபடி செய்ய, மண்ணானது நல்லதாக இருக்க வேண்டும். அது பாறைகள் கற்கள் இல்லாத, களிப்பு மண் வகையுடன் சிவப்பு மற்றும் கருமண்ணாகவும், நீர்ப்பிடிப்பு தன்மையுடன், அதிக ஆழமில்லாததாகவும், குறைந்த ஆழம் கொண்டதாகவும் இல்லாமல் இருந்தால், காற்றானது நன்கு முளைத்து விடும். விரைவாக நீரை உறிஞ்சக்கூடியதாகவும், மண்புழு போன்ற உயிரினம் வாழக்கூடியதாகவும், நல்ல அங்ககப் பொருட்கள் கொண்டதாகவும் இருந்தால் நல்லமண் என காசியப்பா கூறியுள்ளார்.

விவசாய கருவிகள்
நிலத்தை அளக்க குறிப்பிட்ட நீளம் கொண்ட மூங்கில் கழிகள் பயன்படுத்தப்பட்டன. வேதகாலத்தில் விதை விதைப்பான், டிஸ்க் கலப்பை, ‘பிளேட் ஷேரோ’, நடவு கருவி, கதிர் அறுப்பான், ‘சுபா’ துற்றி போன்ற பல கருவிகள்/இயந்திரங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டன என நூல்கள் கூறுகின்றன. பழங்காலத்தில் இரட்டை மாட்டு கலப்பை பெரிதும் உழவுக்கு பயன்படுத்தப்பட்டது. கலப்பையானது முக்கியமான முதன்மையான விவசாய கருவியாக பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பொதுவாக பயன்படுத்தப்பட்ட கலப்பை ‘டேசி’ கலப்பையே பல்வேறு உபயோகத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.

விதை சேகரிப்பு மற்றும் பாதுகாத்தல்
‘மகா’ (பிப்ரவரி) மற்றும் ‘பால்குனா’ (மார்ச்) மாதத்தில் எல்லா வகை விதைகளையும் சேகரித்து, அதை விதைப்புக்கு பயன்படுத்துவதற்குமுன் சூரிய வெப்பத்தால் காய வைத்து பயன்படுத்த வேண்டும். நல்ல தரமான விதையை சேகரிக்க, பயிரிலேயே, நல்ல செடியை பார்த்து, அதிலுள்ள கதிர்களை மட்டும் தனியாக அறுவடை செய்து சேகரித்து கொள்ளலாம். விதைகளை கலந்து சேமித்தால் அதிக நஷ்டம் ஏற்படும். நல்ல ஒரே மாதிரியான விதைகளால், நல்ல மகசூல் பெறலாம்.
விதைகளை நன்கு சூரிய ஒளியில் காய வைத்தல் பல்தரப்பட்ட கலன்களின் சேமித்தல், விதைகளை மழை மற்றும் ஈரத்திலிருந்து காத்தல் மற்றும் எலி, பூனை மற்றும் முயல் தொல்லைகளிலிருந்து விதையைக் காத்தல் போன்றவற்றைப் பற்றியெல்லாம் காசியப்பா விளக்கமாகக் கூறியுள்ளார்.

பயிர்கள்
தானியங்கள், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள், கார் பயிர்கள், காய்கறிப் பயிர்கள் மற்றும் பழ வகைகள் என பல்வேறு வகை பயிர்கள் இந்தியாவில் பயிரிடப்பட்டு வந்தனர்.

பயிர் தேர்வு
நெல் மற்றும் மற்ற தானியங்கள் முதல் தேர்வாகவும், பயிறு வகை மற்றும் இதர சிறு தானியங்கள் இரண்டாவது தேர்வாகவும், காய்கறி (பழம் உட்பட) வகை மூன்றாவது தேர்வாகவும் மற்றும் கொடி வகைகள் மற்றும் பூக்கள் நான்காவது தேர்வாகவும் பயிரிட்டனர்.

பாசுமதி அரிசி:
‘பாசுமதி’ என்ற வார்த்தையானது சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. ‘வாஸ்’ என்றால் வாசனை/மணம் மற்றும் ‘மேட் அப்’ என்றால் சுத்திகரிப்பு என்று அர்த்தம். எனவே வாஸ்மதி என்றால் வடஇந்தியாவில், நல்ல மணமுள்ள சுத்திகரிக்கப்பட்ட பொருள் என்றனர். ‘வா’ என்பது அடிக்கடி ‘பா’ என்று உச்சரிக்கப்பட்டு அதுவே பாசுமதி எனப்பட்டது. நல்ல மணமுள்ள அரிசி வகையை பாசுமதி அரிசி என்று அழைத்தனர்.

கோல்டன் அரிசி:
‘பீட்வர்னா கிரிஹி’ (மஞ்சள் அரிசி) எனப்படும் அரிசி செரிமானத்தை மேம்படுத்தும் எனவும் சமபா இரகம் ஹேமா (கோல்டன் அரிசி) எனவும் அழைக்கப்பட்டதாக காசியப்பா கூறியுள்ளார்.

நிலம் தயாரிப்பு:
ரிக் வேதகால விவசாயிகள் விதை விதைப்பிற்கு முன்பு, நிலத்தை மறுபடி மறுபடி நன்கு உழவு செய்தனர். அவ்வாறு செய்வதால், களைகளை அகற்றவும், மண்ணை பொலபொலப்பு ஆக்கவும் மற்றும் வேண்டிய அளவு கட்டிகளை உடைக்கவும் முடியும்.
ஆழ உழவு அல்லது மேல் உழவு, விதைப்பு தேவைக்கு ஏற்ப உழவு செய்தனர். உழவு செய்வதற்கு உகந்த நட்சத்திரங்களான சுவாதி, உத்திராஷ்தா, உத்திரபர்குடபதா, உத்திரபால்குனி, ரோகிணி, மிருகஷிரிசா, மூலா, பூணர்வசு, பூஜ்யா, ஷரவனா மற்றும் ஹாஸ்டா ‘சாஜ் பரஸரா’ ‘Sage Parasara’ சொல்கிறது. திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் உழவு செய்தால், நல்ல பயிர் வளர்ச்சி கிடைக்கும் என்றனர். மாதத்தின் 2,3,5,7,10,11 மற்றும 13 ஆம் நாள் உழவுக்கு உகந்தது. உழவானது ரிஷபம் (ஏப்ரல் 21), மீனம் (பிப்ரவரி 20), கன்னி (ஆகஸ்ட் 22), மிதுனம் (மே 21), தனுசு (நவம்பர் 23), விருச்சகம் (அக்டோபர் 23) போன்ற இராசிகளில் ஆரம்பிக்கலாம்.
ஒற்றை சால், வெற்றிக்கும், மூன்று சால் வளம் மற்றும் ஐந்து சால் அதிக மகசூலுக்கு ஏற்றது என்பர். கரிஷி - பரசராவில், பயிருக்கான உழவு நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

உழவு ஆரம்பம்

-

பயிர்

பிப்ரவரி 20

-

கரும்பு

ஏப்ரல் 21

-

நெல் - (நடவுமுறை)

மே 21

-

நெல் (நேரடி விதைப்பு), மற்றும் பருத்தி, எள்

அக்டோபர் 23

-

கோதுமை, பார்லி + கடுகு

நவம்பர் 23

-

கரும்பு, மற்றும் கால்நடை தீவனப்புல் முதலியன் நெல் அறுப்புக்குப் பின்

மழை பெருகுவதற்கான மேகத்துடன் இருந்தால் உழவு ஆரம்பிக்கலாம். பரம்பு அடிக்க, வயலானது நீரால் நிரப்பப்பட்டிருந்தால் செய்யலாம்.

நடவு காலம்:
பல நாடுகளில், மழைக்காலத்தில் ஆரம்பத்தில், பயிர் நடவு ஆரம்பிக்கப்பட்டது. நீர் இருந்தால், கோடைக் காலத்திலும் பயிர் செய்யலாம் என காசியப்பா கூறியுள்ளார்.

பயிர் முறை:

பருவம்

 

பயிர்

முதல் பருவம் (பூர்வவபாத்)

:

நெல், குதிரைவாலி, எள்

இரண்டாம் பருவம் (மத்திய வபாத்)

:

உளுந்து, மாசா, சைவ்யா

கடைசி பருவம்

:

கோதுமை, பார்லி, கடுகு, பேய் எள், பயறு, குசும்பா, (Saflower), கலயா, குலுத்தா

விதை மற்றும் விதைப்பு:
பழங்கால விவசாயிகளுக்கு, நல்ல விதையின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர். அதனால், நல்ல பழுத்த பழத்திலிருந்து, நல்ல விதையை தேர்வு செய்து, நல்ல முறையில் சேமித்து, அதை விதை நேர்த்தி செய்தோ செய்யாமலோ, விதைக்க பயன்படுத்தினர்.

விதைப்போ, நடவோ செவ்வாய் (எலி தொல்லை இருக்கும்) மற்றும் சனி (பூச்சி தாக்குதல் இருக்கும்) கிழமைகளில் செய்யமாட்டார்கள். விதைப்பை 4,9 மற்றும 14 நாட்களாள தேய்பிறை நாட்களில் செய்யக்கூடாது. சூரியன் கடகராசியில் விதைகளை 45 செ.மீ அதாவது ஒரு கை இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். சூரியன் சிம்ம ராசியில் இருக்கும்போது 3/4  அடி விட்டு விதைக்க வேண்டும். இது கன்னி இராசியில் இருக்கும் போது 4 விரல் இடை வெளி விட்டு (10.2 மீ) விதைக்க வேண்டும். விதைப்புக்கு முன்  உழவு, சமன்படுத்துதல், சால் அமைத்தல் அல்லது குழி எடுத்தல் போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.

மோரில் ஊற வைத்த விதைகள் நன்கு முளைக்கும் விதைகளை, அரிசி, உளுந்து, எள் மாவுக் கொண்டு மூலாம் பூசி பின் மஞ்சள் தூள் கொண்டு புகை மூட்டம் செய்தால், விதை நன்கு முளைக்கும் என்று வாரகமிகிரார் சொல்கிறார். சுரபாலா என்பவர் செடி கொடி மற்றும மர வகை இலைகளை மூலாம் பூசப் பயன்படுத்தலாம் என்கிறார்.
விதை விதைக்க, மூங்கில் விதைப்பான் பயன்படுத்தப்பட்டது. பயிருக்கு பயிர், பாருக்கு பார் உள்ள இடைவெளியானது, விதைக்கும் காலத்தைப் பொறுத்து மாற்றம் செய்து செய்யலாம். அதாவது, தாமத விதைப்பு எனில் அதிக விதையை பயன்படுத்த வேண்டும். விதை விதைத்த பின், ஒரே மாதிரி சீராக முளைத்து வர, மரக்கட்டையைப் பயன்படுத்தி, விதைத்த பின் நிலத்தில் இழக்க வேண்டும்.

சிறுவிதைகளனான நெல்லை, குறைந்த இடத்தில் விதைப்பு செய்து பின் அந்த நாற்றை நடவு செய்யும் முறை பழங்காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நெல் நடவு முறை கி.பி 100 ஆம் ஆண்டில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் செய்யப்பட்டது.

புளிய விதைப் போன்ற கடின விதை உறையுள்ள விதைகளின் மீது, அரிசி, உளுந்து மற்றும் எள் மாவை தெளித்து, கோதுமை துகளுடன் அழகிய கறி சேர்த்தும், மஞ்சள் தூள் கொண்டு புகை மூட்டம் செய்தும் முளைப்பைப் பெறலாம். இந்த நேர்த்தியை திரும்ப திரும்ப செய்ய வேண்டும்.பருத்தி விதையை, சிவப்பு அரக்கு சாற்றை சிறப்பான முறையில் விதை நேர்த்தி செய்வதால், சிவப்பு கலர் பஞ்சைப் பெறலாம். மேலும் பருத்தி விதையை சாணியுடன் நேர்த்தி செய்வதால் இலகுவாக விதைக்கவும், விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

வராகமிகிரார், ‘ஒட்டுக்கட்டுதல் என்பது ஒரு துண்டு தண்டை வெட்டி, அதை இன்னொரு தண்டில் நுழைந்து, அப்பகுதியை களிமண், சாணிக் கொண்டு மூடி, காலை, மாலை வேளைகளில் நீர் ஊற்றி வந்தால், புதிய தளிர் கட்டப்பட்ட பகுதிக்கு மேலேயும், வேர் கட்டிய பகுதியில் தோன்றும், பின் அதை வெட்டி தனியாக கூட பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. ஒட்டு கட்டுதலானது, பிப்ரவரி - மார்ச் மாதத்தில், கிளை உருவாகும் செடியிலும், ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில், பெரிய கிளை உருவாகும் செடிகளிலும் செய்ய வேண்டும். இந்த முறையானது பலா, அசோகா, ரோஜா, ஆப்பிள், எலுமிச்சை, மாதுளை, திராட்சை மற்றம் மல்லிகைப் போன்ற பயிர்களில் செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.

கிளைகள் மற்றும் களை எடுப்பு:
நம்முடைய மூதாதையர்கள், களைகளினால் மகசூல் குறையும் என நன்கு அறிந்திருந்தனர். ‘பாஷரா’ என்பவர் நெல்லுக்கு புது முறைகளை  எடுப்பு தேவைப்படுகிறது என்கிறார். சங்க காலத்து நூல்கள், களையெடுப்பு  ஓரு முக்கியமான செயல் என்கிறார். ‘பரஷா’ விதைகளை களையில்லா விதைகளாக தேர்வு செய்ய வேண்டும் என்பது பரிந்துரைக்கின்றார்.

ஊட்டச்சத்து மேலாண்மை:
வேத காலத்து பிராமிணர்கள், பசுவின் ஐந்து பொருட்களான  பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவற்றை பயிர் மீது தெளித்தல் (பஞ்சகாவ்யா) அல்லது சுத்தமான நீரை நிலத்தின் மீது தெளித்தல் (வளி மண்டலத்தை சுத்தப்படுத்துவதற்காகவே) போன்ற துறைகளை பற்றி காசியப்பா கூறியுள்ளார்.

நீர் மேலாண்மை:
ஆறு, பெரிய ஏரி, ஆறுகளினால் நிரப்பப்படும் தொட்டி, மலை நீரோடைகளிலிருந்து நீர் சேகரிக்கும் கால்வாய் மூலம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் பெறலாம் என காசியப்பா கூறியுள்ளார். மேலும் கிணறு வெட்டி, நீரை பாசனத்திற்கு பெற்றனர். கிணறு வெட்ட ஏற்ற நேரம் மழை காலம் முடிந்த பின்பே நிலத்தடி நீர் இருப்பை, மரம் அங்கு நன்கு வளர்ந்திருப்பதைக் கொண்டு அறியலாம் என்றார். கிணற்றிலிருந்து நீர் இறைக்க ஈட்டி இயந்திரம் எனப்படும் கருவி கொண்டு, மாடு, யானை மற்றும் மனித ஆற்றலின் உதவியுடன் செய்ய முடியும் என்றார். மழைநீர் சேகரிப்பு பற்றியும் கூறியுள்ளார்.

வளர்ச்சி ஊக்கிகள்
பனி, காற்று மற்றும அதிக சூரிய ஒளி இவற்றால் மரங்களின் நோய் தாக்குதல் ஏற்படுவதாக வராகமிகிரர் கூறியுள்ளார். அந்த பாதித்த பகுதியில் ‘ விடங்கா’, நெய் மற்றும் வண்டல் மண் கொண்டு பசையாக்கி, பூசலாம்.
மரங்களில் பிஞ்சுக்காய்கள் உதிர்ந்தால், கொள்ளு, உளுந்து, பாசி பயிறு, எள் மற்றும் பார்லி முதலியவற்றை பாலுடன் கொதிக்க வைத்து, அது ஆறியவுடன், மரத்திற்கு நீருடன் கலந்து பாய்ச்சலாம். அதன்பின், மரமானது அதிகமாக பூக்கவும் காய்க்கவும் செய்யும். தூளாக்கப்பட்ட வெள்ளாட்டு எரு மற்றும் செம்பறியாட்டு எரு, எள் தூள் கோதுமை துகள்கள், மாட்டுக்கறி இவற்றை நீரில் கலந்து ஏழு இரவு வைத்திருந்து பின் தெளித்தால், மரங்கள், கொடிகள், குத்துச்செடிகளில் பூப்பதும் காய்ப்பதும் அதிகமாகும்.
எள், பசு சாணம், பார்லி மாவு, மீன் மற்றும் நீர் இவற்றை சரியான அளவு கலந்து, நல்ல உரமாக பயன்படுத்தலாம் வராகமிகிரர் கூற்றுப்படி, எள்ளை விதைத்து, பூக்கும் பருவத்தில் மண்ணில் மடக்கி உழுதால், மண் வளம் பெறும்.
பசுஞ்சாணம், எருமை சாணம், வெள்ளாட்டு எரு, செம்மறியாட்டு எரு, வெண்ணெய், எள், தேன், கொள்ளு, உளுந்து, பச்சை பயிறு, பார்லி சில செடிகளின் வேர்கள், சாம்பல், அழுகிய கறி,மாட்டுக் கறி, மற்றும் பன்றி எலும்புடைய ஊளைச்சதை போன்றவைகள் நல்ல உரமாக பயன்படுத்தலாம்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை:
விதைகளை விதைப்பதற்கு முன்பு, பால், நெய் மற்றும் சாணி இவற்றில் நேர்த்தி / கலந்து பின் விலங்குகளின் கறி அல்லது மஞ்சள் தூள் கொண்டு புகை மூட்டம் காட்டினால் நல்லது என வராகமிகிரார் கூறுகிறார். மேலும் விதை மீது தானியங்கள், பயறு வகைகள், எள், கறி கலவையை தெளித்தால் நல்லது என்கிறார்.
தானியங்களை சேமிக்கும் போது, வரும் பூச்சித் தொல்லையை தடுக்க வேப்பிலை போன்ற தாவரப்பூச்சிக் கொல்லி பண்புள்ளவைகைளப் பயன்படுத்தலாம். அதுபோல் விதைகளை சாம்பல் கொண்டு நேர்த்தி செய்து சேமித்தால், பூச்சி சேதாரம் தடுக்கப்படும். பழங்காலத்திலிருந்தே துவரை நன்கு காயவைத்து, ஈரத்தை குறைத்து சேமிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சில பூச்சி மற்றும் பூஞ்சாணங்களின் சேதாரத்திலிருந்து வெட்டப்பட்ட நடவுக்குச்சிகளை காக்க சாணி, பூண்டு பைன் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். ரோமன் எழுத்தாளர் ‘பல்லடியஸ்’ (1973) ல் புழுக்களை பூண்டை எரித்து விரட்டமுடியும் என்று கூறியுள்ளார். பழங்கால நூல்களில் மாதுளையில் விரிசல் ஏற்படுவதை தடுக்க ‘ரெசின்’ பசையை வேர்களுக்கு இடலாம் என பரிந்துரைத்துள்ளது.
ஆப்பிள் மரத்தில் பூச்சி நோய் மற்றும் விலங்குகளினால் ஏற்படும் சேதாரத்தை தடுக்க, செம்மறியாடு, பன்றி கழுதை மற்றும் மனித கழிவுகளை இடலாம்.

வெள்ளை கடுகு, கரு மிளகு, பெருங்காயம், விடங்கா, இஞ்சி, துவரை, பில்லாடா மாவு, எருமை கறி, கொம்பு இரத்த கழிவு நீர் கொண்டு புகை மூட்டம் காட்டினால், மரங்களை சேதப்படுத்தும் பூச்சிகள் நீங்கும். கொடி வகைகளில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த எண்ணெய் பிண்ணாக்குகளை நீரில் கலந்து தெளிக்கலாம். இலை உண்ணும் பூச்சிகளை கட்டுப்படுத்த, பசுமாட்டு எரு சாம்பல், செங்கல் சூளை துளை இடலாம்.
மரங்களுக்கு, சில நாட்கள், குளிர்ந்த நீர் கொண்டு நீர் பாசனம் செய்தால், வேர் மற்றும் கிளைகளில் உள்ள பூச்சிகளை நீக்கலாம். பூச்சிகளினால் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த பாலுடன் விடங்கா, எள், கோமியம், நெல், கடுகு கலந்த கலவையை தெளிக்கலாம்.
தேன், கடுகு மற்றும் லிக்ாரைஸ் முதலியன நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மையுள்ளவை. சாணம், கோமியத்துடன் கலந்தால் காயங்களை குணப்படுத்தும் தன்மையை பெறுகிறது. சாணமானது, உயிரியல் கட்டுப்பாடு காரணியாகவும் செயல்படுகிறது. பாலானது நல்ல பசைப்பொருளாகவும், பூஞ்சாணக் கட்டப்பாட்டு உயிரிபொருளாகவும் செயல்படும் தன்மையுள்ளது. இந்திய விவசாயிகள் சாணத்தை பல்வேறு வழிகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வேளாண் விஞ்ஞானிகள் அதை உரமாக பயன்படுத்துவதை தவிர மற்றவற்றை தவிர்த்து விடுகிறார்கள்.

கடுகு கரைசல் அல்லது பசை, பூஞ்சாணம், சிலந்தி நூற்புழு மற்றும் பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது. வெற்றிலைச்சுற்றி கடுகை முளைக்க வைத்தால், அதிலிருந்து ஏற்படும் வாயு, பூஞ்சாணத்திற்கு எதிர்ப்பாக இருக்கும். கால்நடை கழிவுகளை உரமாக, அதிகம் பயன்படுத்தலாம். கால்நடைகளின் சாணத்தை துவரைக்கு இட்டால் பனியினால் ஏற்படும் சேதாரம் குறையும். எருக்களையை இரண்டு முறை நிலத்தில் இடுவதால் நிலத்தின் உப்புத்தன்மை மாறும் வெற்றிலைத் தோட்டத்தில், சுத்தமாகவும், எல்லா விழும் வெற்றிலை இலைகளை அகற்றினால் நோய் பரவுவது தடுக்கப்படும் வெங்காயத்தின் சாற்றை சாணத்துடன் கலந்து வெற்றிலை தோட்டத்தில் இடுவதால், நோய் தாக்குதல் குறையும்.

அறுவடை, கதிர் அடிப்பு மற்றும் சேமிப்பு
கிருத்திகை, சித்திரை, பூஜா, ஹஸ்டா, சுவாதி, ஆர்டா, உத்திரசதா, உத்திரபடரபடா, உத்திர பல்குனி, மூலம் மற்றும் சுவர்ண நட்சத்திரங்கள் அறுவடைக்கு உகந்ததாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அறுவடையானது செடிகளை தரையோடு வெட்டுவதாலும் கதிர்களை மட்டும் தனியாக அறுப்பதாகவும் நடந்தது. கதிர் அடிப்பானது கதிர் அடிக்கும் காலத்தில் நடக்கும். தூற்றுவதற்கு ‘சுபா’ என்னும் கருவி பயன்படுத்தப்பட்டது. சுத்தமான தானியங்கள் மட்டும் சேமிப்பு கலனில் சேமிக்கப்பட்டு மற்றவை எரிக்கப்பட்டது.
கத்தி மற்றும் கொடுவாள் போன்ற கருவிகள், தானியங்களின் கதிர்களை அறுக்க பயன்படுத்தப்பட்டது. கதிர் அடிக்க மனித ஆற்றல் அல்லது எருமை மாடுகள் பயன்படுத்தப்பட்டன. உளுந்து பயிரானது குச்சிக் கொண்டு அடித்து பிரிக்கப்பட்டது. பெண்களே, கதிர் அடிப்புக்கும் சுத்தம் செய்வதற்கும் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
அறுவடையானது 4, 9, 14 ஆம் நாட்களான தேய் பிறை நாட்களில் செய்யக்கூடாது.
தானியங்களை எப்போது இடபுறத்திலிருந்து வலப்புறமாக அளக்க வேண்டும். அதாவது இடப்புறத்தில் அளந்தால் சந்தோஷமும், மகசூலும் அதிகமாகும் எனவும் வலப்புறத்தில் அளந்தால் செலவு அதிகமாகும் எனவும் கருதப்பட்டது.  3, 5 கிலோ நெல் பிடிக்கக்கூடிய அதக்கா எனக்கூடிய மரக்காலத்தில் அளக்கப்பட்டது. என ‘பரஷரா’ சொல்கிறார். கரையான், எலி மற்றும் இதர பூச்சிகளுக்கு பாதுகாப்பாக விதைகள், தானியங்கள் சேமிக்கப்பட்டது. மீனம் லக்னம், தானியங்கள் சேமிக்க நன்கு ஏற்ற நாளாக கருதப்பட்டது. ஹஸ்பா, சுவர்ணா, தனிஷ்தா, ‘சடபிசிடா’, பூஜா, பரணி, உத்திரசாதா, உத்திரபரபடா, உத்திரபல்குனி, மூலம் மற்றும் மகா நட்சத்திரங்களும் சேமிக்க உகந்த நாட்களாகும். திங்கள், வியாழன் சனி நாட்களில் சேமிக்கக்கூடாது.

அறுவடைக்கு பின்சார் பூச்சி மேலாண்மை
மக்காச்சோளம், நெல் போன்றவைகளை பெரும்பாலான விவசாயிகள் தாங்களாகவே செய்தனர். வேப்பிலை, உப்பு, சாம்பல், சூடம் போன்றவற்றை தனியாகவோ அல்லது  பூச்சிக் கலவையாகவோ தாக்குதல் வராமலிருக்க பயன்படுத்தினர். மண்ணெண்ணெய்  + சாம்பலுடன் வெங்காயம் கலந்து விதைகளை சேமிப்பது பலராலும் செய்யப்பட்டது. எலியை கட்டுப்படுத்த, நாய் மற்றும் பூனை எலி பிடிக்கவும், சாம்பல், கண்ணாடி துண்டு, முடி போன்றவற்றை வலையில் இட்டு, பூசுவதும் மலைவாழ் மக்கள் மற்றும் இதர மக்களாலும் பின்பற்றப்பட்டது.

பயிர் சாகுபடி முறை:
இந்தியாவில், ஒரு இடத்திலிருந்து மாற்றி மறு இடத்திற்கு விவசாயம் செய்யும் முறையில் கலப்பு பயிர் முறையை நிரந்தரமாக செய்யப்பட்டது. தற்போதய சூழ்நிலையில்,உலக உணவு உற்பத்தியை பெருக்குவதே. அதற்கு அறிஞர்களின் அறிவுரையும் கலப்பு விவசாயமே. அதாவது 8-35 பயிர்களை 2-2.5 ஹெக்டர் நிலத்தில் ஒரே சமயத்தில் விதைத்து, தொடர்ச்சியாக அறுவடை செய்யலாம். இதன் மூலம், சத்து குறைத்தல் தவிர்க்கப்படுகிறது. இருக்கின்ற வளங்கள், பயிர் கழிவு மறுசுழற்சி மூலம் பாதுகாக்கப்பட்டு,மண்ணும் வளம் பேணப்படுகிறது. ‘ஜபோ’ முறை சாகுபடியில் விவசாயம், வனவியல், கால்நடை, மீன் மற்றும் நீர் இருப்பை காத்தல் கால்நடை, மீன் மற்றும் நீர் இருப்பை காத்தல் செய்யப்படுகிறது. இம்முறை நாகலாந்து பின்பற்றப்படுகிறது. ‘ஜபோ’ என்றால், நிறுத்தப்பட்ட நீர் என பொருள்படுகிறது.

விலங்குகளின் எருவானது முக்கிய உரமாக பயன்படுத்தப்பட்டது. குளத்திலிருந்து, மழை இல்லாத பருவத்தில் வண்டலானது அள்ளப்பட்டு, நிலத்தில் இடப்படுகிறது. வண்டலா அடங்கி இருக்கி. விவசாயிகள், இலைகள் மற்றும் கிளைகளை நிலத்தில் இட்டு மட்க வைத்து விவசாயம் செய்கிறார்கள். அதனால், மணம் வளம் மற்றும் நலம் காக்கப்படுகிறது. பாரம்பரிய விவசாயம், நிலம், நீர் மற்றும் சத்துக்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்து பயன்படுத்தும் முறைக்கு நல்ல உதாரணம். இடம் மாறும் விவசாயம் முறையினால் மண் மற்றும் சத்து குறைபாடு/நீக்கம் ஏற்படுகிறது. ஆனால் ’ஜபோ’ விவசாயத்தில், இயற்கை வளங்கள் காக்கப்பட்டு, மண் அரிப்பு மிகவும் குறைவானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நண்பனாகவும் அமைகிறது. எந்த ஒரு விவசாயியும், கால்நடைகளின் நிலத்தின் அக்கறை செலுத்தி, அவர்களின் நிலத்தை பார்வையிட்டு, பருவநிலை பற்றி தினசரி நிகழ்வுகளை அறிந்து செய்தால், எந்த ஒரு விவசாயமும் அவர்களுக்கு பரிசாக அறுவடையில் கிடைக்கும் இல்லையெனில் நிலம் சுவர்களை விட்டு போகும். அந்த கால விவசாயத்தில் வேளாண் பயிர்களுடன், காய்கறி தோட்டம், பூ சாகுபடி, மருந்து செடி, வாசனை பயிர்கள், பழங்கள் மற்றும் வன மரங்கள் அனைத்தும் இடம் பெற்றதோடு கால்நடை வளர்ப்பு நடைபெற்றது.

தன்னிறைவு விவசாயம்:
தற்சமயத்தில், மனிதன் மற்றும் விலங்குகளின் நலமும், இதர பயன்பாடுகளின் கருத்தில் கொண்டு, சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை நோக்கி முன்னேறியுள்ளோம். அதன்படி தாவரபூச்சிக்கொல்லிகள் மற்றும் இதர பாதுகாப்பான பொருள்களை பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். இந்த முறையானது நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அவர்களின் அறிவும், அனுபவங்கள் வாழ்ந்த நல்ல சுற்றுச் சூழலும் நமக்கு அவர்களில் தீங்கில்லா விவசாய முறையை எடுத்துக் காட்டுகிறது.
தற்போதைய நவீன காலத்தில் இந்திய விவசாயத்தில் பழங்கால விவசாய அறிவை பயன்படுத்தி, தீங்கிலைக்காத, பாதுகாப்பான பூச்சிக்கொல்லிகளை உருவாக்கி பயன்படுத்துவதன்மூலம் பாதுகாப்பான மனித சமுதாயத்தை உருவாக்க முடியும்.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014