முன்னுரை
இந்தியாவில் விவசாயம் புதியதாக தற்சமயம் ஆரம்பிக்கப்படவில்லை அது புதிய கற்கால காலமான 7500 - 6500 கி.மு ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டு வருகிறது. அக்காலத்தில் மனிதன் , காட்டு பழங்களையும் வேர்களையும் வேட்டையாடி உணவாக உண்டு வந்ததிலிருந்து நிலத்தை உழுது பயிர் செய்ய பழக ஆரம்பித்தான். பெரிய ஞானிகளின் முயற்சியினாலும், கற்றலினாலும், விவசாயம் பயனடைந்தது. அவர்களின் முயற்சியினால் பெற்ற முறைகளை, அடுத்த தலைமுறையினரால் பின்பற்றப்பட்டு வந்தன. பழைய காலத்தில் விவசாயிகள் கலப்பு பண்ணை, கலப்பு பயிர்கள், பயிர் சுழற்சி போன்ற இயற்கைக்கு தீங்கு சேர்க்காத விவசாய முறைகளைக் கடைப்பிடித்து வந்தனர். இந்தியாவில் பழங்கால விவசாயிகளின் ஆழ்ந்த அறிவினால் பழைய இந்தியா வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். அவர்களின் அனுபவங்களை, தற்போதைய புதிய தலைமுறையினர், அதன் பலன்களை அறிந்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பழைய காலத்து விவசாயிகளால் கடைப்பிடிக்கப்பட்ட விவசாய முறைகள் தற்சமயம் அங்கக வேளாண்மை என்ற புதிய முறையாக பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளது.
|
விவசாயமானது, நல்ல மண் கொண்ட மலையடிவாரப் பகுதியிலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளத்தாக்கு பகுதியில், நீரை கட்டுப்படுத்த, நிறைய ஆற்றலும், புதிய தொழில்நுட்பங்களும் தேவைப்படுவதால் அங்கு ஆரம்பம் ஆகவில்லை.
வேதகால விவசாயிகள், மண்வளம், விதை தேர்வு, விதைப்பு பருவம், அறுவடை, உரமிடுதல் போன்ற வேலைகளில் சிறிதளவு தெரிந்து கொண்டு இருந்தனர். மேலும் அவர்கள், பயிர் சுழற்சியினால், மண் வளத்தை மேம்படுத்த முடியும் எனவும் அறிவர்.
அவர்கள் 3 ஆண்டு பயிர் சுழற்சி முறையில், ஆழ் வேர் செடிகள், குறைந்த வேர் செடிகள் மற்றும் பயறு வகை பயிர்கள் இடம் பெற்று இருந்தன. கோதுமை-பட்டாணி, கரும்பு - பசுந்தாள் உரச் செடி, கோதுமை - துவரை, சோளம் போன்ற பயிர்கள் பயிர் சுழற்சியில் இடம் பெற்று வந்தன. கலப்பு பண்ணையில் பயிருடன் கால்நடை வளர்ப்பு செய்து வந்தனர். கலப்பு பயிர் முறையானது, பலதரப்பட்ட பயிர்களை கலந்து செய்வது அனுமதிக்கப்பட்டது. கோதுமையுடன் பட்டாணி மற்றும் இதர பயறு வகைகளை கலந்து பயிர் செய்தால், கோதுமையின் தழைச்சத்து தேவையை பயறு வகையினால் நிரப்பப்படுகிறது. சோளம்+துவரை+தட்டைப்பயறு, உளுந்து/பாசிப்பயிறு + Sorgham/ கம்பு, கோதுமை + பட்டாணி கோதுமை + பேய் எள் போன்ற பயிர் கலப்புகள் செய்யப்பட்டு பயிரிடப்பட்டு வந்தனர். ஆனால், பொதுவாக, தனி பயிர் முறை அங்கீகரிக்கப்படவில்லை.
|