முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

பாரம்பரிய ஜாதி முல்லை
ஒரு ஏக்கர் நிலத்திற்கு, 800 செடிகள் வரை நடவு செய்யலாம். வேலூர் மாவட்டத்தில் இப்பயிர் அனைத்து மண் வகைகளான செம்மண், களிமண், மற்றும் வண்டல் மண் போன்ற அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யப்படுகிறது. நிலம் தயார் செய்த பிறகு, 5x5 அடி இடைவெளியில் செடிகளை நடவு செய்ய வேண்டும்.
வரிசை நடவில் கயிறு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு செடிக்கும் பார் அமைக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். நடவு செய்த 6 மாதங்களுக்கு பிறகு பூக்க ஆரம்பிக்கும். ஜீலை மாதத்தில் கவாத்து செய்ய வேண்டும். அக்டோபர் – பிப்ரவரி மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். 5 மாதங்கள் தினமும் மகசூல் கிடைக்கும்.  ஒரு செடிக்கு மொத்த மகசூல் 100 கிலோ. சந்தை விலை ரூ.15-20/கிலோ. பூ பறிப்பதற்கான செலவு ரூ.12/கிலோ ஒரு ஏக்கருக்கான செலவு ரூ.5,000/- ஜாதி முல்லை பன்னீர் தயாரிப்பில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014