ராமநாதபுரம் குண்டுமல்லி (மல்லிகை சாம்பாக்)
ராமநாதபுரம் குண்டுமல்லி வண்டல் மண்ணிலும் குறைந்த நீரிலும் நன்றாக வளரும், அதாவது வாரத்திற்கு 2 முறை பாசனம் செய்தால் போதுமானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்வதால் இதற்கு இப்பெயர் வந்தது. இப்பயிர் நான்கு ஆண்டுகள் வரை தாங்குகிறது, 2.5x2.5m பயிர் இடைவெளி இருக்க வேண்டும். பொதுவாக சிறு மற்றும் குறு விவசாயிகள் 20 சென்ட் அல்லது 30 சென்ட் நிலத்தில் இப்பயிரை சாகுபடி செய்கின்றனர். டிசம்பர் – ஜனவரி மழைக்காலம் என்பதால், அப்போது பூ பறிப்பு செய்வதில்லை. ஜனவரியில், அனைத்து இலைகளையும் அகற்றப்பட வேண்டும் அப்போதுதான் புது இலைகள் வளரும். பிப்ரவரி முதல் ஜீன் வரை பூ பறிப்பு செய்யப்படுகிறது குறிப்பாக பருவ காலத்தில் ஒரு நாளைக்கு 8 கிலோ மலர்கள் பறித்து ஏற்றுமதிக்காக ராமநாதபுரம் மற்றும் மதுரைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சந்தை விலை ரூ.40/-. கட்டிங்ஸ் வருடத்திற்கு 3 முறை செய்யப்படுகிறது. ஒரு முறைக்கு 15,000 கட்டிங்ஸ் செய்யப்படுகிறது. (1 கட்டிங் = ரூ.0.80 – 1). ஆட்டு எரு மட்டும் நிலத்திற்கு இட வேண்டும். ஆரம்பத்தில் செய்யப்பட்ட கட்டிங்ஸ் தென்னை ஓலைக்குள் வைக்க வேண்டும், சமீபத்தில் செய்யப்பட்ட கட்டிங்ஸ் சிறிய பசுமைக் கூடத்தில் வளர்க்க வேண்டும் (உள்ளே பிளாஸ்டிக் தாள் / வெளிபுரம் பசுமை நிற தாள்) மற்றும் பாசனம் செய்து வெப்பம் மற்றும் குளிர்ச்சி நிலையை பாதுகாக்க வேண்டும். |