முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

செங்கவர்காய் (மா -சிவப்பு )
இந்த மா இரகம் இதன் பல்வேறு குணாதிசயங்களால் சீசன் இல்லாத காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறந்ததாக கருதப்படுகிறது. இது உருண்டை வடிவம் மற்றும் சிவப்பு நிறம் கொண்டது. பழம் நார் சிறிதும் இல்லாமல் ‘கர்கண்டு’ (மிட்டாய்) சுவை உடையது. ஒரு பழத்தின் எடை 150-200 கிராமாகும். பழங்கள் ஊகாய்க்கும், குளிர்விக்க ஏற்றதல்ல ஏனெனில் இது அடர்ந்த சதை கொண்டது. பழங்கள் தோல் கடினமானதாக இருப்பதால் சில நாட்கள் வரை தாங்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பான்மையான மா இரகத்தை கோடை காலத்தில் அறுவடை செய்வர். “செங்கவர்காய்” , சோனாசி போன்ற இரகங்கள் ஜீலை வரை செய்யப்படுகிறது. மாவிற்கு மண் ஒரு பரவலானதாக இருக்க வேண்டும், ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல வடிகால் வசதியுள்ள மண், களிமண் சில பகுதிகளில் உள்ளது.  இந்த இரகம் தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் பிரபலமடையவில்லை ஏனெனில் பற்றாக்குறையான விதை, மக்கள் பல்வேறு காலநிலையால் இந்த இரகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. பாரம்பரிய விதைகள் இப்போது அழிவு நிலையில் இருப்பதால், விதைகள் ஜெர்ம்பிளாஸம் முறையில் ஆராய்ச்சி நிலையங்களில் சேமிக்கப்படுகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014