முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

கொய்யா – நாட்டு  இரகம் (வெள்ளை) மற்றும் சீனிக்கொய்யா (சிவப்பு சதை)
கொய்யாவில் இரண்டு இரகம் உள்ளது. அவற்றில் ஒன்று வெள்ளை நிறம், மற்றொன்று சிவப்பு நிறம். கொய்யாவின் பாரம்பரிய இரகங்களிடையே உள்ள முக்கிய வேறுபாடுகள்

  • சுவை – மற்ற இரகங்களை காட்டிலும் பாரம்பரிய இரகங்கள் சுவை மிகுந்தவை.
  • தோல் – மற்ற இரகங்களை காட்டிலும் பாரம்பரிய இரகங்களின் தோல் மிருதுவானது, மற்றும் கடினமான தோல் சாப்பிட கடினமானதாக இருக்கும்.

பாரம்பரிய இரகங்களில், குறிப்பாக சிவப்பு கொய்யாவில் இரண்டு வகை, ஒன்று சுவை குறைவாகவும் கூரான வடிவமும் கொண்டதாக இருக்கும் மற்றும் மற்றொன்று உருண்டை வடிவத்திலும் நல்ல சுவையுடனும் இருக்கும். ஒரு கூடையில் 10-25 கிலோ பழங்கள் இருக்கும். ஒரு கூடையின் விலை ரூ.30-40/-.

கொல்லிமலையில் இன்னும் பாரம்பரிய இரகம் இருப்பதற்கான காரணங்கள்

  • அரசு இரகம் கொல்லிமலையில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற இரகமாக இல்லை.
  • பழத்தின் தோல் கடினமானதாக இருப்பதால் குறைந்த (அல்லது) சந்தை வாய்பற்ற நிலை ஏற்படுகிறது. இதனால் சாகுபடியும் குறைகிறது.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014