முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

பலா பழம்
பலா பழத்தில் ‘பருக்கன் பலா’ மற்றும் ‘கூளம் பலா’ என்ற இரண்டு வகைகள் உள்ளன. இந்த இரண்டு இரகத்திலும் இதன் முக்கிய பண்புகளால் வேறுபாடு செய்யப்படுகிறது. இந்த பாரம்பரிய இரகம் இரண்டிலும் இளம் பருவ காய்களை சமையலுக்கும் முதிர்ச்சியடைந்த காய்களை உண்ணுவதற்கு ஏற்றதாக இல்லை.
இரண்டு இரகத்திலும் உள்ள மற்றொரு வேறுபாடு, பருக்கன் பலா கத்தியின் மூலம் அறுவடை செய்யப்படுகிறது மற்றும் அதிக சந்தை விலை பெற்றிருக்கிறது, ஆனால் கூளம் பலா கையினால் அறுவடை செய்யப்படுகிறது ஆனால் இதற்கு சந்தை விலை இல்லை. இந்த வேறுபாடுகளைத் தவிர்த்து, இந்த இரண்டு இரகத்தின் சாகுபடி செய்யும் நடைமுறைகள் ஒன்றாகும்.

பொதுவாக, பிப்ரவரி – மார்ச் (மாசி) மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும், ஆகஸ்ட் – செப்டம்பர் (ஆவணி பருவம்) மாதத்தில் வளர ஆரம்பிக்கும். பெரும்பாலும் இது பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்படுகிறது, குறிப்பாக ‘நுரை பூச்சி’ இந்த பூச்சி பழம் மற்றும் இலைகளிலிருந்து நீர் துளிகள் வடிதல், இதை மழை துளி போல் தோற்றம் இருக்கும். ஒவ்வொரு மரமும் சராசரியாக 100 பழங்கள் கொண்டிருக்கும் மற்றும் ஒவ்வொரு பழமும் 75 -150 சுளைகள் கொண்டிருக்கும் ( அளவை பொறுத்து). சுளைகள் அளவு பெரியதாக இருந்தால் சுளைகள் குறைவாக இருக்கும். ஒரு பழத்தின் விலை ரூ.10-20/-

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014