முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

முளகுமூடு  (லோக்கல் பலா)
கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு தாலுகாவில், முளகுமூடு பகுதியில் குறிப்பாக இந்த இரகம் பயிரிடப்படுகிறது, இது குறைந்த ஈரப்பதம் கொண்டது.
இது விதையாக PPI -1 (பேச்சிப்பாறை) பயன்படுத்தப்படுகிறது. இந்த இரகத்தின் பழம் நடுத்தர அளவுடன் 7-10 கிலோ எடை கொண்டது. 3-5 மாதங்கள் வயதுடைய வேர் நாற்றுகளை ஜனவரி – பிப்ரவரி மற்றும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடவு செய்வது மிகவும் வெற்றிகரமாக இருக்கும். அனைத்து வகை பலாக்களிலும் இளம் வயதில், பருப்பு வகைகளை ஊடுபயிராக பயிர் செய்யலாம் மற்றும் இதன் காய்ந்த இலைகளை மரத்தின் கீழ் பரப்பிவிடுவதன் மூலம் ஈரப்பதத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.
தாங்கி நிற்கும் வழக்கத்திற்கு “காளிஃப்ளோரஸ்” என்று பெயர். உலர்ந்த இலைகள் போன்ற புதர்களை பரப்புவதன் மூலம் எருமை போன்ற விலங்குகள் உடலை உராய்வதல் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பழ மொட்டுக்களை பாதுகாத்துக் கொள்ளலாம். முறையான வேலி இல்லாத நிலத்தில் இது ஒரு முக்கியமான அவசியமான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014