முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

அன்னாசி பழம்
அன்னாசி இரண்டு விதை முறைகளில் சாகுபடி செய்யப்படுகிறது.

  • உச்சி
  • அடிப்பகுதி

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்தில் அல்லது மேட்டுப்பாங்கான பகுதியில் நடவு செய்கின்றனர். அன்னாசியின் உச்சிபகுதியை விதையாக பயன்படுத்தினால், பயிரின் காலம் 1 ½ ஆண்டுகள் மற்றும் அடிக்கரணை பயன்படுத்தினால், பயரின் காலம் 2 வருடங்கள். 10,000 அடிக்கரணைகள் ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய தேவைப்படும். குழிகள் 1'x1'1 வரிசை பரிமாணத்தில் தோண்ட வேண்டும். ஒவ்வொரு வரிசையில் 3 அடி இடைவெளிவிட்டு ஸால் அமைக்க வேண்டும். குழி தோண்டும் போது ஒவ்வொரு குழிக்கும் இடையே உள்ள தூரம் சுமார் ½ அடி - ¾ அடி இருக்க வேண்டும். இயற்கையாகவே கொல்லிமலையில் சேறும் சகதியுமாக இருப்பதால் இந்த அமைப்பு ஒரு நல்ல வடிகாலாக இருக்கும். பொதுவாக, இந்த பாரம்பரிய இரகத்திற்கு கூடுதலாக எந்த உள்ளீடும் தேவைப்படுவதில்லை, ஆனால் மாதத்திற்கு ஒரு முறை களையெடுப்பது அவசியமாகிறது.

இப்பயிர் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது. தோரயாமாக ஜனவரி – ஜீன் 6 மாதங்களுக்கு மட்டும் சீசன் நேரங்களில் நல்ல மகசூல் கிடைக்கும். ஒவ்வொரு செடியும் 4-5 பழங்களை கொடுக்கும் மற்றும் 10 அடிகரணையையும் கொடுக்கும் இதை அடுத்த பருவத்திற்கு விதையாக பயன்படுத்தலாம். முந்தைய பயிரை அறுவடை செய்த பிறகு மீதமிருக்கும் அனைத்து கழிவுகளையும் எரித்து, அதனால் கிடைக்கும் சாம்பலை வயல் முழுவதும் பொட்டாசியம் உரமாக பயன்படுத்தலாம்.

அன்னாசி பழம் சிவப்பு அல்லது மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்திற்கு மாறுவது அன்னாசி முதிர்ச்சியடைந்ததற்கான அறிகுறியாகும். இந்நிறத்தையடைந்தவுடன் பழங்களை கையால் பறிக்கலாம். அடிக்கரணைகளை கத்தி கொண்டு நறுக்கலாம். அறுவடைக்கு பிறகு, ஒவ்வொரு செடியும் மீண்டும் மீண்டும் மகசூல் அளிக்கிறது. நடவு செய்த 3 வருடங்கள் வரை நல்ல மகசூல் கிடைக்கும் அதன் பிறகு குறையத் தொடங்கும்.

பழத்தின் அளவை பொறுத்து, ஒரு பழம் ரூ.2-5/-. அன்னாசிபழம் வாழவன்தின்னாடு (செம்மேடு) பகுதியில் காணப்பட்டாலும், கொல்லிமலையின் ஆலத்தூர், ஆரியூர் மற்றும் வேள்ப்பூர் கிராமத்தில்  அதிகளவில் பயிரிடப்படுகிறது. பாரம்பரிய அன்னாசிபழ இரகம்  அதிகளவில் நுகர்விற்காக பயன்படுத்துவது ஒரு முக்கிய தரமாக கருதப்படுகிறது. ஏனென்றால் மற்ற இரகங்கள் பழசாறு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் நுகர்விற்கு ஏற்றதாக இல்லை. திரு. A.K ராஜீ இதன் கழிவுகளை நிலத்தில் எரிப்பதால் நுண்ணுயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை மற்றும் இதை உரமாக பயன்படுத்தலாம் என்கிறார்.

அன்னாசிபழம் (அன்னாசி)- நாடன் /லோக்கல் – அனாஸ் காஸ்மஸ்
இது கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. நல்ல வடிகால் வசதியுடைய வண்டல் மண் இதன் சாகுபடிக்கு ஏற்றது. நடவு செய்த 7-8 மாதங்களுக்கு பிறகு அன்னாசி காய்க்க தொடங்கும். இது 3 மாதங்களில் முதிர்ச்சியடையும் மற்றும் ஒன்றின்று நாட்களுக்குள் சந்தைப்படுத்தலாம்.  முதிர்ச்சி அடைந்த கனிகள், ஏப்ரல் – ஜீலை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. மற்ற வகைகளை ஒப்பிடும் கோடை காலத்தில் (மே) நல்ல வேகமான வளர்ச்சி கொண்டிருக்கிறது. பழங்களை மழைக்காலத்தில் அறுவடை செய்யும் போது பழங்கள் அதிகளவில் புளிப்புச் சுவையை கொண்டிருக்கிறது. ஆரம்பகாலத்தில் பழம் சிவப்பு நிறத்திலும் பின்னர் மஞ்சள் நிறத்திற்கும் மாறுகிறது. பெரிய அளவுள்ள பழங்கள் 2 கிலோ வரை எடையிருக்கும். ஒவ்வொரு செடியிலிருந்தும் 1-1 பழங்கள் ஒரு ஆண்டிற்கு அறுவடை செய்யப்படுகிறது. மலை சரிவுகளில் நடவு செய்யும் போது, மலை சரிவுகளில் நடவு செய்யப்பட்ட செடிகளை சுற்றிலும் வாய்க்கால் அமைத்து மண் அரிப்பு தடுக்கவும் மற்றும் மழைநீரை பாதுகாக்கவும் வேண்டும். இந்த இரகத்தின் புளிப்புச் சுவை மற்றும் சிவப்பு நிற முட்கள் இதன் பாதுகாப்பு வேலியாக உள்ளது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014