முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

வரிக்கை சக்கை பலா
கன்னியாகுமரி மாவட்டத்தில் காணப்படும் வண்டல் மண்ணில் இந்த இரகம் நன்றாக வளர்கிறது. இதன் சுளைகள் இறுக்கமாக காணப்படுகிறது. இது ஒரு முக்கிய பழமாகும். இந்த பழத்தில் இல்லத்தில் ஊறுகாய் செய்கின்றனர். ஒரு ஆண்டில் மரங்களில் இரண்டு பருவங்களில் பழங்கள் காய்கின்றன. ஏப்ரல் – ஜீன் மற்றும் நவம்பர் – டிசம்பர். பொதுவாக இது 7வது – 8வது ஆண்டில் பழம் தர தொடங்குகிறது. மகசூல் வீதம் 60-80 பழங்கள் /மரம். பழத்தின் எடை வீதம் 12-18 கிலோ 115-120 சுளைகள் கொண்டிருக்கும்.  சுளைகள் வெளிறிய மஞ்சள் நிறத்திலிருக்கும். மற்ற இரகங்களைக் காட்டிலும் இதன் சுளைகள் அதிக நாட்கள் வரை  இருக்கிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014