முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

சிட்டன் சாமை
சிட்டன் சாமை என்ற இந்த ரகம் பாரம்பரியமாக வேலூர் மாவட்டம் ஆலங்காயம், ஜவ்வாது மலை கிராமத்தில் பயிரிடப்படுகிறது. சாமை  ஜீன் – ஆகஸ்ட் மாதங்களில் பயிரிடப்படுகிறது.  நிலம் நன்றாக உழுது, விதை கையினால் நேரடியாக தூவி விதைக்க வேண்டும்.  ஒரு ஏக்கர் நிலத்திற்கு 12 கிலோ விதைகள் தேவைப்படும். பயிரின் காலம் 90 நாட்கள்.  ஒரு களையெடுப்பு விதைத்த பிறகு 30 நாட்களில் செய்ய வேண்டும். களையெடுப்பிற்கு 10 வேலையாட்கள் தேவைப்படுவர்.  ஒரு ஏக்கர் களையெடுப்பிற்கு ஆண் வேலையாட்களாக இருந்தால் ஒரு நபருக்கு ரூ.70/நாள், பெண் வேலையாட்களாக இருந்தால் ரூ.30/நாள். பயிர் 90 நாட்களுக்கு பிறகு அறுவடைக்கு வரும். பயிர் அரிவாள் கொண்டு அறுவடை செய்யப்படும். தானியங்கள் கதிரடித்து தனியாக பிரிக்கப்பட வேண்டும்.  ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து வைக்கோல் மகசூல் 800 கிலோ.  சாமையின் சந்தை விலை ரூ.10-12/கிலோ.
சிறப்பு பண்புகள்

  • மற்ற இரகங்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த மணம் மற்றும் சுவை கொண்டது.

  • மற்ற இரகங்களை ஒப்பிடும் போது 4-5 வருடங்கள் கூடுதலாக  சேமிக்கலாம்.

  • இவை பிஸ்கட் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014