முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

காட்டுகம்பு – பேர்ள் மில்லட்
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இந்த பாரம்பரிய கம்பு சாகுபடி செய்யப்படுகிறது, குறிப்பாக கம்மாளத்துப்பட்டி கிராமம், மணப்பாறை தாலுகாவில்  இந்த பாரம்பரிய ரகம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரகத்தை சாகுபடி செய்ய ஏற்ற பருவம் ஆடிப்பட்டமாகும் (ஜீலை-ஆகஸ்ட்). இந்த ரகம் தோட்ட நிலம் மற்றும் வறண்ட நிலத்திற்கும் ஏற்றதாக இருக்கும். இது ஒரு மானாவாரி பயிர் என்பதால், நேரடி விதைப்பு பொருத்தமானதாக இருக்கும். இதன் மொத்த சாகுபடி காலம் ஆறு மாதமாகும். ஆடி பட்டத்தில் விதைத்தால் மார்கழியில் (ஜனவரி) அறுவடை செய்யலாம். கையில் குச்சி கொண்டு கதிரடித்தல் மற்றும் கால்நடைகளை கொண்டு கதிரடித்து தானியங்களை தனியாக பிரிக்கலாம். தனியாக பிரிக்கப்பட்ட தானியத்தை தூற்றி சுத்தம் செய்து வைக்க வேண்டும். இந்த தானியங்கள் பச்சை நிறத்தில் பால் சுவையுடன் இருக்கும். பொதுவாக ஒரு ஏக்கருக்கு 600-700 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

சுத்தம் செய்த பிறகு பாரம்பரிய சேமிப்பு கலனான ‘தானிய குதிரில்’ சேமிக்கலாம்.
எப்பொழுது நமக்கு நுகர்விற்கு தேவைப்படுகிறதோ அப்பொழுது அதை மாவாக்கி பயன்படுத்தலாம். இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் ஏற்ற உணவு. இதில் கனிமங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. பொதுவாக, இத்தானியத்தை மாவாக்கி, இத்தானியத்தில் ‘கம்பங் கூழ்’  என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. மனிதர்களுக்கு இந்த உணவு காய்ச்சல், இரத்தக் கொதிப்பு மற்றும் நீரிழிவு போன்ற நோய்களை கட்டுப்படுத்தவும், கால்நடைகளுக்கு வாய் சம்மந்தப்பட்ட நோய்களை (கன்னை) கட்டுப்படுத்தும் என்று திரு.குப்பமுத்து கூறுகிறார்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014